Language Selection

சமர் - 16 : 08 -1995
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாம் கருக்கலைப்பு தொடர்பான பிரச்சனையில் சமரில் இருந்து ஒருவரை வெளியேற்றியதுடன், இது சூடுபிடித்து பல சஞ்சிகையில் கருத்துக்களாக தொடர்ந்து வெளிவந்தன.

நாம் இப்பிரச்சனை மீது ஓர் அரசியல் முடிபை அடைந்த நிலையில் இதன் மீதான தொடர்ச்சியான கருத்துக்கைளை முன்வைத்து வந்தோம். நாம் எழுப்பிய கேள்விகளை சம்பந்தப்பட்ட நபரோ , அல்லது இவ் விவாதத்தில் ஈடுபட்ட எவருமே எமக்கு பதிலளிக்க முடியாது போய் இருந்தனர். இருந்த போதும் இதில் நாம் ஏதோ ஒரு தவறைக் கொண்டுள்ளோம் என்ற உள்ளுணர்வு காரணமாக எமக்குள் தொடர்ச்சியான தேடலையும், தனிநபர்களுக்கிடையிலான கடித மூலமான விவாதங்களையும் இது விரிவுபடுத்தியது. இதன் போது எமது தவறு எமக்கு சரியாகச் சுட்டிக் காட்டப்பட்டது.

 

கரு அழிப்பு என்பது ஒரு பெண்ணின் விடுதலையின் ஒரு பகுதி என்ற கோஷம் ஒரு குட்டிபூர்சுவா வர்க்கக் கோரிக்கையாகும். இருந்த போதும் இதில் ஒரு ஜனநாயக கோரிக்கையும் உள்ளடக்கி இருந்ததை நாம் காணத் தவறியிருந்தோம். இதை நடைமுறைகளுடன் விளக்குவதாயின்:


எப்படி ஒரு தேசியம் முதலாளித்துவக் கோரிக்கையாக உள்ளதோ, அதே நேரம் , அதில் ஜனநாயகக் கோரிக்கை உள்ளதோ அது போன்றதே இதுவும். இது போன்று பலநூறு விடயங்களை முன்வைக்க முடியும். கோரிக்கைகளாக உள்ளவைகள் எல்லாம் பாட்டாளிகளின் குறிக்கோள் அல்ல. ஆனால் அதிலுள்ள ஜனநாயகக் கோரிக்கையை ஆதரிக்கவும் , குரல் கொடுக்கவும் செய்கின்றனர். இது தெளிவான விமர்சனத்துடன் அமைந்தவைகளே ஆகும். இந்த வகையில் ஒரு அழிப்பில் இருந்த ஜனநாயகக் கோரிக்கையை நாம் கடந்த காலத்தில் காணத் தவறியது என்பது மட்டும் எமது சுயவிமர்சனத்துக்கு உட்பட்டதாகும்.

 

கரு அழிப்பு தொடர்பாக வெளியில் வந்த விமர்சனங்கள், எமது தொடர்ச்சியான கேள்விகளை விவாதிப்பதைத் தவிர்த்தே வெளிவந்திருந்தன. ஆனால் நாம் அதில் தான் முடிவை வந்தடைந்தோம். இவர்களின் விவாதங்கள்:


• கரு அழிப்பு என்பது ஒரு பாட்டாளி வர்க்க கோரிக்கை என்றனர்.


• கரு அழிப்பு ஒரு பெண் விடுதலைக் கோரிக்கை என்றனர்.


• கரு என்பது ஒரு குழந்தைக்கான உயிர் என்பது ஒன்று இல்லை என்றனர். அதாவது இயங்கியலின் தொடர்ச்சியை மறுத்தனர்.


• இதை பெண் விடுதலையுடன் முடிச்சி போடுவதன் மூலம் குடும்ப அலகை , தனிநபர் பொருளாதார நலனுக்கு இசைவாக, குடும்ப அலகை நிராகரிக்கும் போக்கு முனைப்பு பெற்றது.


• கரு அழிப்பின் சீரழிவு வடிவங்களையோ , பெண்ணுக்கு எதிராக கரு அழிப்பு நடந்த போது அது பற்றி மௌனத்துடன் இருந்து விடும் போக்கு.


இது போன்று பல காரணங்கள் எம்மால் சரியான பக்கத்தை அடைவதற்கு தடையாக இருந்தன. இது பற்றி விவாதித்த பலரும் இது தொடர்பான தேடலை நடத்த தயாரற்று இருந்ததை காண முடிகிறது. பெண் விடுதலை தொடர்ச்சியாக மார்க்சியம் கண்டும் காணாமல் விட்டது என்ற வாதமும் இன்று இவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் லெனின் எழுதிய ‘மகளிர் விடுதபை; பற்றி’ என்ற புத்தகத்தில் பெண் விடுதலையின் பால் விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் கரு அழிப்புப் பற்றிய பகுதியும் உண்டு. (இவைகள் சமரிடம் இருப்பின் அடுத்த இதழ்களில் பிரசுரிப்போம்.)

 

இதைப் பலர் படிக்க வில்லை. அல்லது படித்தவர்கள் மறைத்துள்ளனர். ஏனெனில் இது ஒரு குட்டி பூர்சுவாக் கோரிக்கை என்பதை லெனின் மிகத் தெளிவாக அம்பலப்படுத்துவதால் ஆகும்.

 

இது ஒரு பெண்ணின் விடுதலைக்கு வழிவகுக்கப் போவதில்லை. இந்த வகையில் சமர் சரியாகவே விவாதித்தும் இருந்தது. இன்று பிரான்சில் இரண்டு இலட்சம் சிசுக்கள் வருடம் அழிக்கப்படுகிறது. இன்று சீனா, இந்தியா, மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் பெண் குழந்தை என்றால் அழிக்கும் போக்கு வளர்த்து வருகின்றது. இது சீரழிக்கும், பெண்ணுக்கு எதிராகவுமே செல்கின்றது.

 

இன்று கரு அழிப்பின் எல்லா அடிப்படையும், அதைச் செய்வது பெண்ணாக இருந்தாலும் அது ஆணாதிக்க கோரிக்கைக்கு உட்பட்டே நடக்கிறது என்பதை நாம் நிராகரிக்கவே முடியாது.

 

சொர்க்கத்தில் தற்கொலை


USA யில் 12 % மான ‘ரீன்ஏச்’ வயதினர் தற்கொலை செய்வதற்கு மிகவும் அருகில் இருந்து வருகின்றார்கள். 60 மூ மானவர்கள தற்கொலை செய்தவர்களின் நண்பர்களாக இருக்கின்றனர் என அமெரிக்க ஆய்வுகள் கூறுகின்றன. இவை சிறப்பாக கோடை காலங்களில் அதிகரிக்கிறது எனவும், இக்காலத்தில் ‘ரீன்ஏச்’ வயதினர் வேலை இல்லாமமையாலும், உயர்கல்வி தயாரிப்பு நெருக்கடிகளினாலும் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் என அமெரிக்க புயுடுடுருP நிறுவனம் கூறியுள்ளது.