Language Selection

பு.மா.இ.மு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


இந்தக் கோழைக்களுக்கு லெனின் சரியான பதிலடி கொடுத்தார். புரட்சியில் தொழிலாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே அதற்கு வழிகாட்ட முடியும் என்றும் சான்றுகளுடன் நிரூபித்தார். தொழிலாளர்களின் மனக்கலக்கத்தைப் போக்கினார். மீண்டும் அவர்களை அணிதிரட்டினார்.

இதே நேரத்தில் ஏகாதிபத்திய நாடுகள் உலகப்போருக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தன. பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா முதலிய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைத் தம் அடிமையாக (காலனியாக) வைத்திருந்தன. இந்த நாடு பிடிக்கும் போட்டியில் தாமதமாக குதித்தன ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, துருக்கி முதலிய நாடுகள். இவை பழைய ஏகாதிபத்தியங்களிடம் உலகைப் பிரித்து தமது பங்கைக் கொடுக்குமாறு கேட்டன. இக்கோரிக்கை மறுக்கப்பட்டது உலகை ஏற்கெனவே கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிரிட்டன், அமெரிக்கா, பிரான்சு ஒருபுறமும், புதிதாக கொள்ளையடிக்கப் புறப்பட்ட ஜெர்மனி முதலான நாடுகள் மறுபுறமாக 1914-ஆம் வருடம் போரில் ஈடுபட்டன. இதுவே முதல் உலகப் போரானது. இதில் ரசியா, பிரிட்டனை ஆதரித்து ஜெர்மனிக்கு எதிராகப் போரில் குதித்தது.