Language Selection

பு.மா.இ.மு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அன்புமணி, விஜய்க்கு எதிரானவராச்சே! ரசிகர் மன்றம் & சினிமா போன்றவைகளுக்கு எதிர்க்கிறவராச்சே! அவரை போய் விஜயுடன் சேர்த்து தலைப்பிட்டு உள்ளீர்களே என கேள்வி எழுகிறதா!

இரண்டு பேருக்கும் சம்பந்தம் இருக்கிறது. அதுதான் கோக்க கோலா.
கோக் என்பது ஏதோ ஒரு குளிர்பானம் நிறுவனம் என நினைப்பவர்கள் இன்னும் இருப்பதால் முதலில் கோக்க கோலா என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம். 

coke-vijay

120 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த அமெரிக்க குளிர்பான நிறுவனம், இன்று 200 நாடுகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் செய்து வருகிறது.

தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நாட்டை விற்பனை செய்யும் நாசகார கொள்கையினை 1990 களில் ‘ரிப்பன் வெட்டி’ மன்மோகன் சிங் தொடங்கிவைந்த போது இந்தியாவில் கோக்க கோலா நுழைந்தது. கோல்ட் ஸ்பார்ட்லிருந்து சிறுசிறு குளிர்பான நிறுவனங்கள் வரை அனைத்தையும் அழித்து பல ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வினை பறித்தது.

கேரளா- பிளாச்சிமடா, உத்தரபிரதேசம்-வாரணாசி, ராஜஸ்தான்-காலாதரா, மகாராட்டிரம் - தானே என இந்தியாவெங்கும் கால் பதித்து நிலந்தடி நீரை உறிஞ்சி அந்த பகுதிகளை பாலைவனமாக்கியது.

ஒரு லிட்டர் கோக் தயாரிக்க கோக் வெறியேற்றும் ஏழு லிட்டர் கழிவு நீரில் ஒவ்வொரு லிட்டர் கழிவு நீரும் மேலும் எட்டு லிட்டர் நீரை மாசுபடுத்தக்கூடியவை என்றால் கோக்கின் நச்சுதன்மை எவ்வளவு இருக்கும் என கணக்கிட்டு கொள்ளுங்கள்.

தமிழகத்திலும் தாமிரபரணி, பவானி , சோழவரம் என ஆற்றுபடுகைகளை உறிஞ்சி வருகிறது.

நம்மிடம் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை ரூ 15 க்கு மேல் விற்கும்  கோக்க கோலவிற்கு ஒரு லிட்டர் தண்ணீரை ஒண்ணே கால் பைசாவிற்கு வழங்கி வருகின்றனர் இந்திய  ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள்.

கோக்கின் புதிய அடியாளாக விஜய் நியமனம்!

இப்படிபட்ட கோக் என்ற பன்னாட்டு குளிர்பான நிறுவனத்தின் புதிய துதுராக (அடியாளாக) விஜய் நியமிக்கபட்டு உள்ளார். தனது கழிசடை புகழை வைத்து இளைஞர்களை, மாணவர்களை கோக் மூத்திர சுவைக்கு அடிமைகளாக மாற்றும் பொறுப்பை விஜய் ஏற்றுக்கொண்டுள்ளார்.
 
கோக்கிற்கு பாய் விரித்த அன்புமணி!

அதே கோக்க கோலாவிற்காக கோக்கின் விஷத்தன்மையினை 2006ல் தில்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் 2வது முறையாக ஆய்வு செய்து அம்பலப்படுத்தியபோது 

அதனை ஏற்க முடியாது என கோக்கின் வீழ்ச்சியினை தடுத்து நிறுத்தியவர் அன்புமணி ராமதாஸ்.

விஜய் என்ற கழிசடை மக்களுக்கு நேரிடையாக அமெரிக்க மூத்திரத்தை குடிக்க சொல்கிறான்.

அன்புமணி அதன் பின்னணி இருந்து கோக்கிற்கு சேவை செய்கிறான். நடிகர்களை எதிர்ப்பது என்பது மாற்று அரசியல் என சொல்லி இன்று ஓட்டுப்பொறுக்கும் நிலையினால் என்பதை இவர்களின் பின்னணியின் மூலம் அறியலாம்.

போலி ஜனநாயகம்!

கோக் மற்றும் ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு, தரகு முதலாளிகளின் நலன்களுக்காகதான் இந்த அரசு உள்ளது. அரசுன்னா ஜெயா மாமி, கருணாநிதி தாத்தா அல்ல.  அதாவது கோர்ட், போலீசு, சிறைச்சாலை முதலியன.

அதனால் தான் தாமிரபரணி கோக் ஆலைக்கு எதிராக போராட்டத்தினை நாம் நடத்திய போது கோக்கிற்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை போலீசு ஏற்று அவன் (கோக்) தான் எங்கள் எஜமான் என வெளிப்படையாக அறிவித்தது. இப்படிப்பட்ட அரசு அம்பலமாகாமல் அதனை மூடிமறைத்து மக்களாட்சி போல ‘சோ’ காட்டுபவர்கள் தான் ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள்.

இதில் கோக் போன்ற ஆளும் வர்க்கத்திடம், அடக்குமுறை இல்லாமல் அடிமைகளாக மக்களை மாற்றுவது தான் விஜய் போன்ற கழிசடைகளின் வேலை.