Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை பார்க்கும் அல்லது அத்துறையில் படித்து வரும் இந்திய இளைஞர்களின் கனவு, அமெரிக்காவுக்குப் போய் எப்படியாவது பச்சை அட்டை (எணூஞுஞுண இச்ணூஞீ) வாங்கி, அமெரிக்காவிலேயே "செட்டிலாகி'' விட வேண்டும் என்பதுதான். இயற்கையின் பிழையால், இந்திய நாட்டில் பிறக்க நேர்ந்து விட்ட அமெரிக்க மோகிகளின் மனசாட்சியை, இந்தக் கதை உலுக்க முடிந்தால், அது நமது "அதிருஷ்டம்'தான்!

 


 

இது, கற்பனைக் கதையல்ல; அமெரிக்காவின் பச்சை அட்டையைப் பெறும் முயற்சியில் தோற்றுப் போனதோடு, அதில் தனது உயிரையும் இழந்துவிட்ட ஹியு லு நாக் என்ற சீன இளைஞனின் உண்மைக் கதை இது.

 

கள்ளத் தோணி மூலம் அமெரிக்காவிற்குள் நுழைந்து, அந்நாட்டிலுள்ள "வியர்வைக் கடைகளில்'' நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு, ஏதாவதொரு பொந்தில் தூங்கி எழுந்து வாழ்க்கையை ஓட்டும் ஆசியக் கொத்தடிமை தொழிலாளி போன்றவர் அல்ல, ஹியு லு நாக்.

 

அவர் கணினிப் பொறியாளர். நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற "எம்பயர் ஸ்டேட்'' அடுக்கு மாடிக் கட்டிடத்தில்தான் அவரது அலுவலகம் உள்ளது; அவரது வீடு குவின்ஸில் உள்ளது. அவரது மனைவி அமெரிக்கக் குடிமகள். இத்துணை பின்புலம் இருந்தும் ஏறத்தாழ 16 ஆண்டுகள் ஹியு லு நாக் அமெரிக்காவிலேயே வசித்து வந்த பின்பும், அவருக்கு, சட்டபூர்வமாக நிரந்தரமாக அமெரிக்காவில் குடியிருக்கும் உரிமையினை அளிக்கும் பச்சை அட்டை கிடைக்கவில்லை.

 

ஹியு லு நாக்கிற்கு அமெரிக்காவின் பச்சை அட்டை கிடைக்கவில்லை என்பது நமது விவாதப் பொருள் அல்ல; அமெரிக்க அரசு, தனது நாட்டுச் சட்டப்படி நாக்கிற்குப் பச்சை அட்டை தர மறுத்ததும் நமக்குப் பொருட்டல்ல. நாக் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருந்து வருகிறார் எனக் குற்றஞ் சுமத்தி, அவரை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றும் முன், அமெரிக்க அரசு அவரை சிறையில் அடைத்து நடத்திய விதம்தான் நமது கவனத்துக்குரியது. அவரது மரணம், தனி மனிதனின் உரிமைகளைப் பாதுகாக்கும் தளபதியாகத் தன்னைப் பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவின் போலித்தனத்தை மீண்டும் ஒருமுறை தோலுரித்துக் காட்டிவிட்டது.

 

ஹியு லு நாக், 16 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்த காலத்தில், தலைமறைவு வாழ்க்கை நடத்தவில்லை. அவர், 1992இல் தனது 16 ஆவது வயதில் சுற்றுலா விசா மூலம், ஹாங்காங்கில் இருந்து அமெரிக்காவிற்கு வந்தார். சுற்றுலா விசா காலாவதியாகிப் போன பிறகு, தனக்கு அரசியல் அடைக்கலம் தர வேண்டும் எனக் கோரி விண்ணப்பித்தார், ஹியு. அக்கோரிக்கை பரிசீலனையில் இருந்த சமயத்தில், அமெரிக்காவில் தங்கி வேலை செய்யும் அனுமதி அவருக்கு அளிக்கப்பட்டது.

 

அரசியல் அடைக்கலம் கோரும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகும், அவரை உடனடியாக அமெரிக்காவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையினை அமெரிக்க அரசு எடுக்கவில்லை. இதனிடையே அவரது குடியேற்றம் தொடர்பான விசாரணைக்காக குடியேற்ற நீதிமன்றத்துக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு அவரது முகவரிக்கு அனுப்பப்படாமல், ஏதோவொரு ஊர்பேர் தெரியாத முகவரிக்கு அனுப்பப்பட்டது. இதனால், ஹியு லு நாக் நீதிமன்றத்துக்கு வர முடியாமல் போனது. இதனையே காரணமாகக் காட்டி, அவரை உடனடியாக அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என குடியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்த பிறகும், அதிகாரிகள் நாக்கைத் தேடி வரவில்லை.

 

இந்தப் பிரச்சினைகளுக்கு நடுவிலேயே, ஹியு லு நாக், கணினிப் பொறியியல் படிப்பை முடித்தார்; வேலை தேடிக் கொண்டார்; அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் ஆனார்.

 

நாக்கின் மனைவி, அவருக்குப் பச்சை அட்டை வாங்கிக் கொடுக்கத் தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து வந்தார். இம்முயற்சியின் பலனாக, குடியேற்றம் தொடர்பான நேர்முகத் தேர்வுக்கு நாக் நேரில் வர வேண்டும் என அழைக்கப்பட்டார். தனது கனவு கைக்கூடும் நாள் நெருங்கிவிட்ட மகிழ்ச்சியில் ஜூலை 18, 2007 அன்று நேர்முகத் தேர்வுக்குச் சென்ற நாக்கிற்கு, ஏமாற்றம் மட்டுமல்ல, திடுக்கிட வைக்கும் அதிர்ச்சியும் காத்திருந்தது. அமெரிக்கக் குடியேற்ற நீதிமன்றம் 2001இல் போட்ட உத்தரவைக் காட்டி, நாக்கைக் கைது செய்து, அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப் போவதாக குடியேற்ற அதிகாரிகள் அறிவித்தார்கள். நீதிமன்றத் தீர்ப்புப் பற்றித் தனக்கு எதுவுமே தெரியாது என்ற உண்மையை நாக் நிரூபித்த பிறகும்கூட, நாக்கின் குடியேற்றப் பிரச்சினை மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

 

ஜூலை 2007இல் சிறைச்சாலைக்கு இழுத்துச் செல்லப்பட்ட நாக், அதுதான் தனது சமாதியாக அமையப் போகிறது என்பதைக் கற்பனைக் கூட செய்து பார்த்திருக்க மாட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஒன்பதாவது மாதத்தில் ஏப்ரல் 2008இல் நாக்கிற்கு தாங்கிக் கொள்ள முடியாத முதுகு வலி ஏற்பட்டது. சிறைச்சாலை அதிகாரிகள் கொடுத்த வலி நிவாரண மாத்திரைகளுக்கு, அந்த நோய் கட்டுப்பட மறுத்தது. அடுத்த ஒருசில நாட்களிலேயே அவரால் நிமிரவோ, நிற்கவோ, நடக்கவோ முடியாமல் போனது. நாக், தனக்குச் சக்கர நாற்காலி வேண்டும் எனக் கோரியதை, வெள்ளை அதிகார வர்க்கம் ஏளனமாக அலட்சியப்படுத்தியது; தனது சொந்த செலவில் மருத்துவம் பார்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற நாக்கின் கோரிக்கை, எவ்விதமான பரிசீலனையும் இன்றி நிராகரிக்கப்பட்டது. நோயின் வேதனை தாளாமல் அவர் துடிதுடித்ததை அதிகார வர்க்கம் நாடகமாடுவதாகப் பழி போட்டது.

 

"நாக்கின் உடல்நிலை குறித்து அலுவலக ரீதியான விசாரணை நடந்து வருகிறது'' என்ற நொண்டிச் சாக்கைக் கூறி, உண்மையை மூடி மறைத்தது அதிகார வர்க்கம். நாக்கின் உறவினர்கள், "நாக்கின் முதுகுத் தண்டில் காயமோ, எலும்பு முறிவோ ஏற்பட்டிருக்கலாம்'' என்ற சந்தேகத்தை எழுப்பிய பொழுது, அதிகார வர்க்கமோ, "இது சாதாரண முதுகுவலிதான்'' என அலட்சியமாகப் பதில் அளித்தனர்.

 

நாக்கின் வழக்குரைஞர் ஆண்டி வோங், அவரைச் சந்தித்து உரையாட ஜூலை 26, 2008 அன்று தடுப்பு முகாமிற்கு வந்தபொழுது, நாக்கோ எழுந்து நின்று ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத நிலையில், படுத்த படுக்கையாகக் கிடந்தார். வெள்ளை அதிகாரிகள் நாக்கிற்குச் சக்கர நாற்காலி தர மறுத்துவிட்டதால், நாக் தனது வழக்குரைஞரைச் சந்திக்க முடியாமல் போனது. நிலைமை மோசமாகிவிட்டதைப் புரிந்து கொண்ட வழக்குரைஞர் ஆண்டி வோங், நாக்கை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனக் கோரி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

 

இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஜூலை 30, 2008 அன்று குடியேற்ற அதிகாரிகள் நாக்கை டொனால்ட் டபிள்யு வியாட் தடுப்புக் காவல் கூடத்தில் இருந்து ஹார்ட் ஃபோர்டு தடுப்புக் காவல் கூடத்திற்கு "அழைத்து'ச் சென்று விட்டு, அதேநாளில் மீண்டும் வியாட் தடுப்புக் காவல் கூடத்திற்குக் கூட்டி வந்து அடைத்தனர். நகரக் கூட முடியாத நிலையில் படுத்த படுக்கையாகக் கிடந்த நாக்கை, தரதரவென்று இழுத்துச் சென்று வேனில் ஏற்றியதாகவும்; இதனால் நாக்கின் கைகால்களில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

நோயாளியான நாக்கை ஒரேநாளில் இப்படி அங்கும் இங்குமாக அலைக்கழித்ததற்கான காரணத்தைக் குடியேற்ற அதிகாரிகளால் கூற முடியவில்லை. "நாக் உடல் நலத்தோடுதான் இருக்கிறார் எனக் காட்டி, ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்வதற்காகவே, நாக்கைக் குடியேற்ற அதிகாரிகள் "அழைத்துச் சென்றதாக' நாக்கின் வழக்குரைஞர்கள் நீதிபதியின் முன் வெள்ளை அதிகாரிகளின் குரூர புத்தியை அம்பலப்படுத்தினர். மேலும், ஹார்ட் ஃபோர்டைச் சேர்ந்த குடியேற்ற அதிகாரிகள், "வெளியேற்றத்துக்கு எதிரான எல்லா வழக்குகளையும் நாக் திரும்பப் பெற்றுக் கொண்டு மறு பேச்சில்லாமல் அமெரிக்காவில் இருந்து வெளியேறி விட வேண்டும்'' என நாக்கை மிரட்டியதும் அம்பலமானது.

 

ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, குடியேற்ற அதிகாரிகளின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கக் கூட முன் வரவில்லை; "நாக்கிற்குத் தேவைப்படும் சிகிச்சையை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என மொன்னையான தீர்ப்பைக் கூறி வழக்கை முடித்தார்.

 

இத்தீர்ப்பையடுத்து, ஆகஸ்டு, 2008 அன்று, ஹியு லு நாக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாக்கின் நுரையீரல், எலும்புகள், ஈரல் ஆகிய முக்கிய உறுப்புகளைப் புற்று நோய் அரித்திருப்பதும்; அவருடைய முதுகுத் தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதும் மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டது. நாக், மருத்துவமனையில் தன்னை வந்து சந்தித்த தனது மனைவி ஜாவோவிடம் "நான் அதிக நாள் உயிர் வாழ மாட்டேன்'' எனக் கூறியிருக்கிறார். அதுவே அவர்களின் கடைசி சந்திப்பாகவும், அதுவே அவரின் கடைசி வார்த்தையாகவும் ஆகிப் போனது. சிகிச்சைப் பலன் அளிக்காமல், ஆகஸ்டு 5 அன்று ஹியு லு நாக், அமெரிக்காவை விட்டு மட்டுமின்றி, இந்த உலகத்தை விட்டும் வெளியேறிப் போனார்.

 

நாக்கைப் புற்றுநோய் தாக்கியதற்கு அமெரிக்க அரசைக் குற்றஞ் சுமத்த முடியாது. ஆனால், அந்த நோய் மிகத் துரிதமாக, மூன்றே மாதங்களுக்குள் அவரது உடலைச் செல்லரித்து, அவரது உயிரைப் பறித்ததற்கு அமெரிக்க அரசின் அலட்சியப் போக்குதான் காரணம். ஜூலை 2007இல் நாக்கை கைது செய்தவுடனேயோ, அல்லது 2001இல் நாக்கை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தீர்ப்பு வந்தவுடனேயோ, அமெரிக்க அரசு நாக்கை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றியிருந்தால் நாக் இன்று சீனாவிலோ, அல்லது ஹாங்காங்கிலோ உயிர் வாழ்ந்திருக்கக் கூடும். அமெரிக்க அரசு, நாக்கிற்குப் பச்சை அட்டை தர மறுத்தது மட்டுமல்ல, அவர் உயிர் வாழும் உரிமையினையும் சேர்த்தே பறித்து விட்டது என்பதே உண்மை.

 

நாக்கைப் போல, பல்வேறு ஏழை நாடுகளைச் சேர்ந்த மூன்று இலட்சம் தொழிலாளர்கள் குடியேற்றத் தடுப்புக் காவல் முகாம்களில் அடைபட்டுக் கிடப்பதும்; அவர்களுக்கு மருத்துவ வசதிகள் உள்ளிட்டு, அடிப்படையான மனித உரிமைகள் மறுக்கப்படுவதும் நாக்கின் அகால மரணம் அம்பலப்படுத்தி விட்டது.

 

நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள எலிசபெத் தடுப்புக் காவல் முகாமில் அடைக்கப்பட்டிருந்த கினியா நாட்டைச் சேர்ந்த 52 வயதான பௌபகர் பா என்ற தையல் தொழிலாளிக்கு மண்டையோட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதனால் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டது. எனினும், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்காமல், 13 மணி நேரத்துக்கும் மேலாக அவரைத் தனிமைச் சிறையில் அடைத்து வைத்ததால், அத்தொழிலாளி இறந்து போனதை "நியூயார்க் டைம்ஸ்'' ஏடு அம்பலப்படுத்தியது.

 

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த எல்சால்வடார் நாட்டைச் சேர்ந்த 36 வயதான ஃபிரான்சிஸ்கோ காஸ் தனேடா என்ற தொழிலாளி புற்று நோயால் அமெரிக்காவிலேயே மரணமடைந்தார். அவரின் அகால மரணத்திற்கு, உரிய சிகிச்சை அளிக்க முன்வராத அதிகாரிகளின் அலட்சியப் போக்குத்தான் காரணம் என கலிபோர்னியா மாநில அரசே ஒப்புக் கொண்டுள்ளது.

 

அமெரிக்க டாலர் ஏழை நாடுகளில் மூலதனமாக நுழைவதற்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என மிரட்டும் அமெரிக்கா, ஏழை நாட்டுத் தொழிலாளர்கள் அமெரிக்காவினுள் நுழைந்து வேலை தேடுவதைத் தடுப்பதற்கு ஆயிரத்தெட்டு தடைகளை விதிக்கிறது. அமெரிக்காவின் இந்த இரட்டை அளவுகோல்தான், ஹியு லு நாக், பௌபகர் பா, ஃபிரான்சிஸ்கோ காஸ்தனேடா போன்ற ஏழை நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின், ஊழியர்களின் மரணத்திற்கும்; மூன்று இலட்சம் பேர் தடுப்பு முகாம்களில் எவ்வித உரிமையும் இன்றி வதைக்கப்படுவதற்கும் காரணம். 

· ரஹீம்

 

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது