Language Selection

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
lankasri.comகொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கும் ஆபத்து குறைவு என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பால் குடிப்பவர்கள் மற்றும் பால் குடிக்காதவர்கள் என ஐந்தாயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

45 வயது முதல் 85 வயதுக்குள்பட்டவர்களிடம் குறிப்பிட்ட காலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் ஒரு டம்ளர் அளவு கொழுப்பு நீக்கப்பட்ட பால் அருந்தி வந்தவர்களின் இதய செயல்பாடு மற்றும் சிறுநீரக செயல்பாடு சீராக இருந்ததாம். இதே போல் தானிய வகைகள், காய்கனிகள், பழங்கள் ஆகியவையும் ஆரோக்கியமான இதயத்துக்கு 20 சதவீதம் உதவுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தினமும் பாலும், பழமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் அண்டாது என்று அடித்து கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1214633316&archive=&start_from=&ucat=2&