Language Selection

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இயற்கைக்கு எதிராய் இன்றைய வாழ்கை. தூங்கும் நேரத்தில் வேலை, வேலை(பகல்) நேரத்தில் தூக்கம், அமர்ந்த இடத்திலேயே பணி, போக்குவரவிற்கு சொகுசு வாகனங்கள், பொழுது போக்கிற்கு தொலைகாட்சி, கணனி என்று உடற்பயிற்சி இன்மை,உண்ணும் உணவில் இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளின் தாக்கம், அதிக மாசுபாடுள்ள நகர வாழ்கை இவையணைத்தும் இன்றய தலைமுறையின் உடல்நிலயை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக கண்கள். பொதுவாக கம்யூட்டரில் பணி புரிவோர்களுக்கு கண் வலியுடன் தலைவலியும் நாளடைவில் வருகின்றது. குறிப்பாக மாலை நேரங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.இது நோய் அன்று மாறிவரும் தொழில் நுட்பத்தாலும் ஊன்றி மானிட்டரை பார்ப்பதாலும் ஏற்படும் கோளாறு. அதே போன்று இரு சக்கர வாகனங்களில் கண்ணாடியின்றி பயணம் செய்தால் கண்களில் தூசுகள் படிந்து கண் வலி ஏற்படும். இதனை ஒரு எளிய குவளை(கோவை பகுதியில் பிரபலம்) கொண்டு சரி செய்து கொள்ளலாம்.

 

 




சுத்தமான குளிர்ந்த நீரை அருகே உள்ள குவளையில் ஊற்றி அதில் படம் 2 காட்டிய படி நீரினுள் கண்களை நன்கு சுழற்றி ஒரு நிமிடம் வரை வைத்து பின் மறு கண்ணிற்கும் அதை போல் செய்ய ரத்தவோட்டம் நன்கு ஏற்பட்டு இந்த வலிகளிலிருந்து தப்பிக்கலாம். சிலர் குளிர்ந்த நீருடன் எலுமிச்சம் பழ சாறு 2 - 5 சொட்டு விட்டு கண்களை கழுவுவதும் உண்டு. புதிதாக செய்பவர்கள் (எலுமிச்சம் சாறு)கவனத்துடன் செய்யவேண்டும். காரணம் கண் எரிச்சல் முதலில் ஏற்பட்டு பின்பு குளிர்ச்சி ஏற்படும்.ஒவ்வாமை ஏற்படுகிறதா? என பார்த்து செய்யவும். மற்றபடி குளிர்ந்த நீரில் அணைவரும் செய்யலாம். கண்கள் ஒளி பெறும். நிறைய நண்பர்கள் பயனடைந்துள்ளனர். இவை "கதர் கடைகளில்" கிடைக்கின்றது. உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகளுடன் பயனுள்ள இதனையும் அளியுங்கள்.