Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
02_2007_pj.jpg

விவசாயிகளின் விளைநிலங்களைப் பறித்துச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி வரும் மே.வங்க "இடதுசாரி' அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், 6 விவசாயிகள் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இதை மூடிமறைத்து மம்தா கட்சியினரின் வன்முறை நக்சல்பாரிகளின் வெறியாட்டம் என்று கோயபல்சை

 விஞ்சும் அண்டப்புளுகை அவிழ்த்துவிட்டு, ஏகாதிபத்திய அடியாளாகச் சீரழிந்துவிட்ட சி.பி.எம். கட்சியினர் தமது பத்திரிகைகளில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்குப் பக்கமேளம் வாசித்துக் கொண்டு தமிழகத்தில் ஆங்காங்கே சி.பி.எம். கட்சியினர், மே.வங்கத்தின் தொழில்வளர்ச்சியை சீர்குலைப்பதாகப் போராடும் மக்களையும் எதிர்க்கட்சிகளையும் குற்றம் சாட்டி எதிர்ப்பிரச்சாரம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், இச்சமூக பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தியும், விவசாயிகளின் விளைநிலங்களைப் பறித்து நாட்டை மீண்டும் காலனியாக்கவரும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை விரட்டியடிக்க உழைக்கும் மக்களை அறைகூவியும் சாத்தூர் பு.ஜ.தொ.மு. எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தோழர் இராசு தலைமையில் 18.1.07 அன்று மாலை சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டே, மே.வங்கத்தில் அதைத் தீவிரமாகச் செயல்படுத்திவரும் சி.பி.எம். கட்சியின் துரோகத்தையும் அதன் சமூக பாசிசப் போக்கையும் அம்பலப்படுத்தி முன்னணியாளர்கள் உரையாற்றினர். வர்க்க உணர்வுள்ள சி.பி.எம். அணிகள் துரோகத் தலைமையைத் தூக்கியெறிந்து விட்டு, புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு மறுகாலனியாக்கத்துக்கு எதிராகப் போராட முன்வருமாறு இந்த ஆர்ப்பாட்டம் அறைகூவியது. சிறப்புப் பொருளாதார மண்டலத்தால் ஏற்படும் பேரழிவுகளையும், மறுகாலனியாக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் சி.பி.எம். துரோகிகளைத் தனிமைப்படுத்தி முறியடிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்திய இந்த ஆர்ப்பாட்டம் உழைக்கும் மக்களுக்கும் சி.பி.எம். அணிகளுக்கும் விரிந்த பார்வையை அளிப்பதாக அமைந்தது.


பு.ஜ. செய்தியாளர்,

சாத்தூர்.