Language Selection

புதிய ஜனநாயகம் 2008

 "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணமேடையில் வை'' என்பதைப் போல நடந்து கொள்கிறது, அமெரிக்க மேலாதிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமையான மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசு. நாடு மீளமுடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாதவாறு ஜூன் மூன்றாம் வாரம் பணவீக்கம் பதினொரு சதவீதத்துக்கும் மேலே எகிறி விட்டது. இதனால் அடிப்படைத் தேவைகளான உணவு தானியங்கள், விவசாய இடுபொருட்கள் முதல் இரும்பு, சிமெண்ட் மற்றும் பெட்ரோலிய எரிசக்திப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் நாளும் எகிறிக் கொண்டே போகிறது.

 மைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆறாவது ஊதியக் குழு, தனது பரிந்துரைகளை மைய அரசிடம் அளித்திருக்கிறது. அரசு ஊழியர் சங்கங்கள் ஊதியக் குழுவின் அறிக்கையை, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குச் சாதகமான, ஒருதலைப்பட்சமான அறிக்கை எனக் குற்றஞ்சுமத்தியுள்ளன. 

 சி.பி.எம். கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ.வான கோவிந்தசாமி, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளி. திருப்பூரில் முதலாளிகள் வசிக்கும் அமர்ஜோதி கார்டன் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் கட்டியுள்ள கோடீசுவரர். ""பாட்டாளிகளின் தோழர்'' என்று இவரை சி.பி.எம். கட்சியினர் சித்தரித்தாலும், கோடீசுவர கோவிந்தசாமியின் வர்க்கப் பாசம் எப்போதுமே முதலாளிகள் பக்கம்தான். 

 மறுகாலனியாக்கச் சூழலில், தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் எவ்வாறு நசுக்கப்பட்டு வருகின்றன என்பதை ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் தொடரும் கொத்தடிமைத்தனமே நிரூபித்துக் காட்டுகிறது. ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 460 பேரும், தற்காலிக  ஒப்பந்த  பயிற்சித் தொழிலாளர்கள் என ஏறத்தாழ 3000 பேரும் வேலை செய்கின்றனர். 240 நாட்கள் வேலை செய்தால் அத்தொழிலாளியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று சட்டம் இருந்தாலும், ஆலை நிர்வாகம் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எந்த உரிமையும் சலுகையுமின்றி மூன்றாண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்து நிர்வாகம் நற்சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே தற்காலிக  பயிற்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களோ, எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதோடு, காண்டிராக்டர்களின் கொடிய சுரண்டலுக்கும் ஆளாகி நிற்கிறார்கள். 

 அண்டை நாடான நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் தலைமையில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் முடிந்து, புதிய இடைக்கால அரசை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான திசையில் அந்நாடு அமைதியான முறையில் பயணிப்பதாகத் தோன்றினாலும், அந்நாட்டில் கொந்தளிப்பான அரசியல் போராட்டங்கள் தொடர்கின்றன.

 கடந்த ஜூன் 4ஆம் தேதி பள்ளி கல்வித் துறையின் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இருப்பினும், கட்டடம் கட்ட, நாற்காலி வாங்க, புதிய ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்க, துப்புரவுப் பணிக்காக, 11ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி குரூப் மாற்றித்தர  எனப் பெற்றோர்ஆசிரியர் கழகத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 2 ஆயிரம், 3 ஆயிரம் என்று ஏழை எளிய மாணவர்களிடம் கட்டாயக் கட்டணக் கொள்ளை தொடர்கின்றது. 

 ஒரிசாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த தின்கியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமம் பட்னா. இரும்பு உற்பத்தி நிறுவனங்களிலேயே உலகில் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமான போஸ்கோ, 48 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அங்கு ஓர் இரும்புத் தொழிற்சாலையையும், ஒரு துறைமுகத்தையும் கட்டத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்குள்ள மிகவும் வளமான கடற்கரைப் பகுதி நிலங்களை ஆக்கிரமிக்க அந்த நிறுவனம் முயற்சித்து வருகிறது.


 தலைமுறை தலைமுறையாக பட்னாவில் வாழ்ந்து வரும் மக்கள்,  தங்களது சொந்த நிலத்தை விட்டே விரட்டியடித்து, தங்களது வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இந்தத் திட்டத்தை  எதிர்த்து, தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒரிசா மாநில அரசுடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, மையமாநில அரசுகளின் உதவியுடன் அப்பகுதியில் நிலங்களை அபகரிக்க போஸ்கோ நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளாகப் பல தகிடுதத்தங்களைச் செய்த போதும், அக்கிராம மக்களின் உறுதியான போராட்டத்தின் காரணமாக, அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

 சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், ஆவணப் படத் தயாரிப்பாளரும், குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுள் ஒருவருமான அஜய் தாச்சப்புள்ளி கங்காதரன் என்பவர், மே மாதம் 5ஆம் தேதி, சட்டீஸ்கர் மாநில சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது அரசுத் துரோகக் குற்றச்சாட்டும்; தடை செய்யப்பட்டுள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்டு)  உடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்திய ஆளும் வர்க்கம் மனித உரிமைகளை மயிரளவிற்குக் கூட மதிப்பதில்லை என்பதற்கு இந்தக் கைது இன்னுமொரு எடுத்துக்காட்டு.

பொதுவாக இடுகாடுகளில் எந்தவொரு கல்லறையுமே, புதைக்கப்பட்டவர்களின் பெயர், பிறந்த தேதி, இறந்த தேதியுடன்தான் காணப்படும்; அல்லது அந்தக் கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பது யார் என்ற விவரமாவது உறவினர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், ஆயிரக்கணக்கான பிணங்கள் வெறுமனே எண்களை மட்டும் அடையாளமாகக் கொண்டு புதைக்கப்பட்டு வரும் கொடுமை காஷ்மீரில் நடந்து வருகிறது.


 காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் ரெகிபோரா கிராமத்தின் இடுகாட்டில்தான் இவ்வாறு எண்கள் மட்டுமே கல்லறைகளின் அடையாளமாக உள்ளன. கல்லறைகளில் புதைக்கப்பட்டிருப்பது யார் யார் என்பது அந்தக் கிராமத்தில் இருப்பவர்களுக்கோ தெரியாது. "தியாகிகளின் கல்லறை' என்று அழைக்கப்படும் இந்த இடுகாட்டில் ஜூன் 26, 1995 அன்று நான்கு ""எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின்'' பிணங்களைப் போலீசார் புதைக்கக் கொண்டு வந்ததிலிருந்து இது நடைமுறையில் உள்ளது. இன்று வரை ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் "பாகிஸ்தான் பயங்கரவாதிகள்' என்ற பெயரில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டு,  இங்கு புதைக்கப்பட்டிருக்கின்றனர்.

 ஒன்றின் கீழ் ஒன்றாக அல்லது ஒன்றின் மேல் ஒன்றாகப் பல படி வரிசை சாதிய அடுக்குகளை கொண்ட இந்திய சமூக அமைப்பில், ஒரு குறிப்பிட்ட சாதி சில சாதிகளுக்குக் கீழான சாதியாக இருந்தாலும், வேறு சில சாதிகளுக்கு மேலான சாதியாகவும் இருக்கிறது. அதாவது, பல சாதிகள் கீழ் சாதிகள் என்று வரையறுத்து வைக்கப்பட்டிருந்தபோதும், அவற்றிற்கு கீழாகப் பல சாதிகள் வைக்கப்பட்டிருப்பதால் அச்சாதிகள் பெருமைப்பட்டுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

 ஆபாச சினிமாப் பாடல்கள் ஒலிபெருக்கிகளில் எங்கும் எதிரொலிக்க, அனைத்துலகப் பாட்டாளி வர்க்க போராட்ட நாளான மே நாளை, இன்னுமொரு கேளிக்கை நாளாக்கிப் போலி கம்யூனிஸ்டுகளும் ஓட்டுப் பொறுக்கிகளும் கூத்தடித்துக் கொண்டிருந்த நிலையில், ""பன்னாட்டுக் கம்பெனிகளையும் அம்பானி  டாடா  பிர்லாக்களையும் அடித்து வீழ்த்துவோம்! தனியார்மயம்  தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்! உயரும் விலைவாசியை வீழ்த்த வேறு வழி இல்லை; இல்லவே இல்லை!'' என்ற முழக்கத்துடன் ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் மறுகாலனியாதிக்க எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்ட நாளாக மே நாளைக் கடைபிடித்தன.

 தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்துத் தமிழக முதல்வர் மு.கருணாநிதி வெளியிட்டு வரும் அறிக்கைகள், தமிழகத்தில் மாபெரும் தொழிற்புரட்சி நடந்து வருவதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவினுள் நுழையும் பன்னாட்டு நிறுவனங்கள், விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கும் மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழகம் இருப்பதும்; கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில், தமிழகம் முன்னணியில் இருப்பதும் என்னவோ உண்மைதான். எனினும், இந்திய மாநிலங்களிலேயே, வேலை வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் வேலை செய்யும் திறன் படைத்தோரில் ஏறத்தாழ 10 சதவீதம் பேர் வேலை வாய்ப்பற்று இருப்பதாகவும்; தேசிய சராசரியைவிட இது அதிகம் என்றும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

 இந்தியப் பெருமுதலாளிகள் கோடிகோடியாய்ச் செல்வத்தைக் குவித்து, உலகப் பெருமுதலாளிகளின் தர வரிசையில் முக்கிய இடத்தைப் பிடிக்குமளவுக்கு முன்னேறி விட்டார்கள்; ஆசியாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவி அம்பானி சாதனை படைத்துள்ளார்; பிரிட்டனின் எஃகு ஆலையை டாடா கைப்பற்றி விட்டார்; இந்தியப் பெருமுதலாளிகளின் இந்த அபார வளர்ச்சிக்குக் காரணம் தனியார்மயம்  தாராளமயம்; அரசின் தலையீடுகள்  கட்டுப்பாடுகள் இல்லாமலிருந்தால் தனியார் முதலாளிகள் தமது தொழில் திறமையால் பெருமளவு முன்னேறிச் சாதிக்க முடியும்; தொழிலும் வர்த்தகமும் விரிவடைந்து இந்திய நாடு வல்லரசாக ஒளிரும்  இப்படி முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளும் பத்திரிகைகளும் அரசின் தலையீடற்ற தனியார்மயத்தை வியந்து துதிபாடுகின்றன.

 வாக்காளர்கள் ஓட்டுப் போடவிடாமல் அடித்து விரட்டப்பட்டு, குண்டர்கள் கள்ள ஓட்டுப் போட்டனர். வாக்குச் சாவடிகள் சூறையாடப்பட்டன. குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, கொலைகள், இதுவரை கண்டிராத வன்முறைகள் — இவையெல்லாம் அண்மையில் நடந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலின் போது நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்கள் அல்ல. நாடாளுன்ற  சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை கட்டிக் காக்கப் போராடி வருவதாகக் கூறிக் கொள்ளும் சி.பி.எம். கட்சி ஆளும் மே.வங்கத்தில், கடந்த மே மாதத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலின் போது நிகழ்ந்த வன்முறை வெறியாட்டங்கள்தான் இவை. இந்த வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள், வலதுசாரி பிற்போக்கு காங்கிரசுபாரதிய ஜனதாதிரிணாமுல் காங்கிரசு கட்சியினர் அல்ல. மக்களுக்கான கட்சியாக மார்தட்டிக் கொள்ளும் "இடதுசாரி' சி.பி.எம். கட்சிக் குண்டர்கள்தான் மக்களுக்கு எதிராக இந்த வன்முறை வெறியாட்டங்களை நடத்தியுள்ளனர்.

 துள்ளித் திரியும் வயதில் பள்ளிக்குச் சென்றும், ஒத்த வயதினருடன் ஆடிப்பாடியும், கோலி, பம்பரம் விளையாடிக் கொண்டும் இருக்க வேண்டிய சிறுவர்கள் பலரின் இளமை, அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, அரை சாண் வயிற்றுக்காகக் குப்பை பொறுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


 சென்னை மாநகர் ஒரு நாளைக்குக் கழித்துத் தள்ளும் 3500 டன் குப்பைகளைத் தாங்கிக் கொண்டு ஊருக்கு வடக்கே கொடுங்கையூரும், தெற்கே பெருங்குடியும் குப்பை மலைகளாய் உயர்ந்து கொண்டே செல்கின்றன. அன்றாடச் சாப்பாட்டுக்காக இந்தக் குப்பைக் குவியலைக் கிளறி, அதில் கிடைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், உலோகத் துண்டுகளைப் பொறுக்கி வாழும் நிலையில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இருக்கின்றனர்.

 இந்திய பாதுகாப்புத் துறை, கடந்த மே7ஆம் தேதியன்று அக்னி3 என்ற ஏவுகணையை விண்ணில் ஏவிப் பரிசோதனை நடத்திய முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, அக்னி3 ஏவுகணை அடுத்த ஆண்டிற்குள் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்தியாவிடம் ஏற்கெனவே உள்ள அக்னி1 மற்றும் அக்னி2 ஏவுகணைகளைவிட, அக்னி3 ஏவுகணை அதிகத் தொலைவு ஏறத்தாழ 3,500 கி.மீ.சுற்றளவில் உள்ள இலக்குகளைச் சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த மூன்று வகையான ஏவுகணைகளுமே அணுகுண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. முதலிரண்டு ஏவுகணைகளைக் கொண்டு பாகிஸ்தானின் உள்பகுதிகளைக் கூடத் தாக்க முடியுமென்றால், அக்னி3 ஏவுகணையோ சீனாவைக் குறி வைக்கிறது.

குற்றவாளியே நீதி வழங்கும் பொறுப்பில் இருந்தால் என்ன நடக்கும்? அந்தத் திருப்பணியை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மிக நேர்த்தியாகச் செய்து வருகிறார். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முசுலீம் படுகொலை கலவரத்தை விசாரிக்க, மோடி நானாவதி கமிசனை அமைத்தார். அப்படுகொலை நடந்து முடிந்து ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டபிறகும், அந்த கமிசன் விசாரணை என்ற பெயரில் மாவு அரைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அக்கமிசனைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான கே.ஜி. ஷா என்பவர் சமீபத்தில் இறந்து போய்விட்டார்.

 கடந்த மே மாத மத்தியில், கர்நாடக எல்லையை ஒட்டியுள்ள ஓசூர் பகுதியில் நடந்துள்ள விஷச் சாராயச் சாவுகள் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. 18.5.08 அன்று பின்னமங்கலம் கிராமத்தில் மட்டும் 9 பேர் மாண்டு போயுள்ளனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டத்திலுள்ள பல கிராமங்களில் அடுத்தடுத்த நாட்களில் சாராயச் சாவுகள் அதிகரித்து மொத்தத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். கணவனை இழந்த மனைவி, பெற்றோரை இழந்த குழந்தைகள், மகனை இழந்த தாய் என இவ்வட்டாரம் மாளாத் துயரத்தில் விம்மிக் கொண்டிருக்கிறது. ஓசூரை அடுத்த கர்நாடக எல்லைப் பகுதிகளிலும் விஷச் சாராயத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை 170ஐத் தாண்டி விட்டது.

 நக்சல்பாரி புரட்சிகர அமைப்பான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)ஐச் சேர்ந்த தோழர் நவீன், தமிழகப் போலீசாரால் கடந்த ஏப்ரல் 19 அன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் கொல்லப்பட்டார். ""ஏப்ரல் 19 அன்று, கொடைக்கானல் அருகேயுள்ள வடகவுஞ்சியில், அதிரடிப் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்; அப்பொழுது அந்த வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஏழெட்டு பேர் கொண்ட நக்சலைட்டு குழுவினர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். அதிரடிப் படையினர் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் திருப்பிச் சுட்டனர். ஒருமணி நேரம் நடந்த இம்மோதலில், நவீன் பிரசாத் கொல்லப்பட, மற்ற ஏழு நக்சலைட்டுகள் தப்பியோடி விட்டனர்'' என இக்கொலை பற்றி போலீசார் சொன்ன திரைக்கதையையே, கிளிப் பிள்ளை போல அனைத்துப் பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டுள்ளன.

கோடை வெய்யில் தமிழக மக்களை வறுத்தெடுத்துக் கொண்டிருக்க, அதையும் விஞ்சும் வகையில் அனலைக் கக்கி தி.மு.க. அரசுக்கு எதிராக அறிக்கைப் போர் நடத்தி வருகிறார், பா.ம.க. நிறுவனர் இராமதாசு.


 விமான நிலைய விரிவாக்கம், துணை நகரங்கள் அமைப்பது, முல்லைப் பெரியாறு  காவிரி  பாலாறு விவகாரங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் கொள்ளை, சில்லறை வணிகத்தில் ஏகபோக நிறுவனங்களின் நுழைவு முதலானவற்றுக்கு எதிராக அவ்வப்போது அறிக்கை விடுத்து, முதல்வர் கருணாநிதியுடன் லாவணி நடத்திக் கொண்டிருந்த அவர், இப்போது சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகவும் தமிழக அரசின் தொழிற்கொள்கைக்கு எதிராகவும் சீறுகிறார். கடந்த மே மாதத் தொடக்கத்திலிருந்து அடுத்தடுத்து அறிக்கைகள் விடுத்து, அடுத்த கட்டப் போரைத் தொடங்கி விட்டார்.