முன்பக்கம்

உலாவுவோர்

We have 154 guests online

உலாவியோர்

Content View Hits : 4893078
Visits [+/-]
Today:
Yesterday:
Day before yesterday:
335
2474
2577

-103
This week:
Last week:
Week before last week:
16815
11797
11230

+567

அண்மைய பின்னூட்டங்கள்

ஞாயிறு, 01 ஆவணி 2010

இன்றைய பக்கங்கள்

 

பி.இரயாகரன் :- புதியவை

தோழர்களின் போராட்டக் களத்தில் நான் - அருந்ததி ராய் PDF Print E-mail
அரசியல்_சமூகம் - விருந்தினர்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Saturday, 31 July 2010 16:42

சொற்களை வீணாக்காத, தட்டச்சுச் செய்யப்பட்டு உறையில் இடப்பட்ட அக்கடிதம் என் வீட்டின் முன் கதவுக்குக் கீழேயுள்ள சிறுசந்து வழியே வீட்டினுள் தள்ளப்பட்டிருந்தது. இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர்களுடனான என் சந்திப்பு அக்கடிதத்தில் உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதற்காக நான் பல மாதங்கள் பொறுமையாகக் காத்திருந்தேன். எங்கள் சந்திப்புக்கென இரண்டு நாட்களில் நான்கு நேரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்நான்கில் ஏதாவதொன்றில் சத்தீசுகட் மாநிலம் தாந்தெவாடா நகரில் உள்ள தாந்தேசுவரி அம்மன் கோவிலில் நான் இருக்கவேண்டும்.

Last Updated on Saturday, 31 July 2010 16:49
 
மகிந்த சிந்தனை முன்னெடுக்கும் குண்டர்கள், ஊடகவியல் மீது தாக்குதல் PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Saturday, 31 July 2010 12:58

தன்னுடன் இல்லாத எவருக்கும் ஜனநாயகம் கிடையாது. இதுதான் இலங்கையின் சட்ட ஆட்சி சொல்லும் மிகத் தெளிவான செய்தி. யார் மகிந்தவை தொழ மறுக்கின்றனரோ, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்;. இதுதான் மகிந்தவின் சிந்தனை. இப்படித்தான் புத்தனின் சிந்தனைக்கு, மகிந்த சிந்தனை இன்று புது விளக்கம் கொடுக்கின்றது.

தமிழர் பிரச்சனை முதல் ஊடகவியல் சுதந்திரம் வரை, கொடுமையும் கொடூரமும் நிறைந்த தங்கள் சிந்தனைகள் மூலம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றனர்.     

Last Updated on Saturday, 31 July 2010 12:59
 
உயிர் வலிக்கும் கணங்கள் - வன்னியிலிருந்து கண்மணி PDF Print E-mail
அரசியல்_சமூகம் - கண்மணி
பதிவேற்றியது தமிழரங்கம்   
Friday, 30 July 2010 20:47

வன்னி மனித அவலத்தின் உச்சம் அரங்கேறிய காலம் அரசியல் பாதுகாப்பு வலயம் என காலத்துக்கு காலம் அறிவிக்கப்படும் பகுதிகளை நோக்கி மக்கள் இடம்பெயர்வார்கள். பின்புதான் தெரியும் அது பாதுகாப்பு வலயம் அல்ல உயிர்கொல்லும் வலயம் என்று. இவ்வாறு நாங்களும் அக்கராயனில் இருந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து இறுதியாக அம்பலவன் பொக்கணை என்னும் ஊரில் இடைக்காடு என்னும் இடத்தில் குடியிருந்தோம். அங்கும் எறிகணைகளும் துப்பாக்கிவேட்டுச் சத்தங்களும் மக்கள் நடமாட்டம் பார்க்காது வீழ்ந்து உயிர்களை காவு கொண்டது. பலர் இரத்தவெள்ளத்தில் கிடந்து துடித்தார்கள். ஏராளமானோர் பதுங்கு குழிக்குள்ளேயே வாழ்க்கையை நடத்தினர். ஒருவேளை உணவிற்கே பட்டினியால் வாடி தவித்து கஞ்சி கொடுக்கும் இடங்களை தேடி அலைந்தனர். அப்போது இடம்பெற்ற இச் சம்பவம் என் உயிர் உள்ளவரை மறக்கமுடியாது.

Last Updated on Friday, 30 July 2010 20:51
 
வெண்மணிச் சரிதம் PDF Print E-mail
புதிய கலாச்சாரம் - 2010
பதிவேற்றியது தமிழரங்கம்   
Thursday, 29 July 2010 17:29

அரவம் திரியவும் அஞ்சிடும் முன்பனி
கறவை மாடும் கண்திறவா அதிகாலை
சேவல் கூவும் முன்னே
பண்ணையின் கொம்பூதும்.
மடையின் கை நீரள்ளி முகம் கழுவி
வயலுக்கு ஓட வேண்டும்
கூலி விவசாயி.

Last Updated on Thursday, 29 July 2010 17:33
 
புலிப் பாசிசத்தின் தோற்றுவாய் (வதை முகாமில் நான் : பாகம் - 12) PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Wednesday, 28 July 2010 07:22

புலி ஒரு பாசிச இயக்கமாக, அதுவே ஒரு அரசியல் சக்தியாக இருந்ததை பலர் புரிந்து கொள்ள மறுக்கும் போதே, தொடர்ச்சியான தவறுகள் இழைக்கப்பட்டது. புலிகளை வெறும் குட்டிப+ர்சுவா வர்க்க இயக்கமாகவும், தேசிய பூர்சுவா வர்க்க நலனை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கருதினர். புலிப் பாசிசத்தின் அடிப்படையை காணத் தவறியதன் மூலம், சரியான அரசியல் வழி தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பாசிசத்துக்கு துணைபோனார்கள். உண்மையில் புலிகளின் பாசிசத்துக்கு எதிரான அணியை துல்லியமாக தனித் தனியாக ஆராய்ந்தால், பாசிசத்தை நிலை நாட்டுவதில் தோல்வி பெற்ற மற்றொரு பாசிச பண்பியலை அடிப்படையைக் கொண்ட உதிரி நபர்களும், குழுக்களும் காணப்படுகின்றனர். புலிப் பாசிசத்தை சரியாக அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள தவறியதன் விளைவு, எதிர் தரப்பையும் புரிந்து கொள்வதை நிராகரிப்பதன் மூலம் போராட்டமே அழிந்தது. அரசியல் ரீதியான தவறான மதிப்பீடு, அரசியல் ரீதியான பாசிச கண்ணோட்டத்தையே நட்பு சக்தியாக அனுசரிக்க கோரியது.

Last Updated on Wednesday, 28 July 2010 07:25
 
தோலர்ன்ன்ன்னா¡¡¡¡¡¡¡¡ சும்மா அதிருதுல்ல PDF Print E-mail
அரசியல்_சமூகம் - கலகம்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Tuesday, 27 July 2010 18:22

அது மிகப்பெரிய தொழில் நகரம். தொழிற்சாலைகள் வரிசையாய் தீப்பெட்டிகள் அடுக்கி வைத்தாற் போல் அழகாக தொடர்ச்சியாக அமைந்திருந்தன. அந்த நிறுவனம் கொஞ்சம் பெரியதுதான், நீங்கள் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு பெரியதல்ல. சுமர் 2000 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். தொழிற்சாலை என்றாலே தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்றாலே சச்சரவு என்றிருக்கும் பல லட்சக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு இதுவொன்றும் விதிவிலக்கல்ல. பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆலைக்கு செல்லும் ரோடு அது வளைந்து வளைந்து பார்ப்பதற்கு அரிவாள்போலவே இருக்கும்.

Last Updated on Tuesday, 27 July 2010 19:47
 
புலிப் பாசிசத்தின் தோற்றமும் என்பது வரலாற்று நீட்சி (வதை முகாமில் நான் : பாகம் - 11) PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Tuesday, 27 July 2010 07:30

புலிகள் எப்படி ஒரு பாசிச இயக்கமாக உருவனார்கள் எனப் பார்ப்போம். முதலில் இதை நாம் வரலாற்று கூறில் இருந்து குறிப்பாக பார்ப்போம்;. சண் தலைமையிலான இடதுசாரி இயக்கம் முன்னிறுத்திய வர்க்கப் போராட்டமும், வடக்கில் நடத்திய சாதிப் போராட்டங்களும், தமிழ் வலது பிரிவின் பொது அரசியலை நெருக்கடியாகியது. தமிழ் தேசியத்தை முன்வைத்து வந்த வலது பிரிவுகளான நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு வர்க்க நலன்களுக்கு, இது பலத்த அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதே போன்று இலங்கை அளவில் தொடர்ச்சியாக பல குழுக்கள் சார்ந்த இடதுசாரி போராட்டங்கள், சுரண்டும் வர்க்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதை முறியடிக்கவே வலது பிரிவுகள் இனம் கடந்து, இன மோதலை உருவாக்கினர். இலங்கையில் 1960க்கு பிந்திய பத்தாண்டின் இறுதியில் நடந்த வர்க்கப் போராட்டங்கள், வலது பிரிவை ஒற்றுமைப்படுத்தியது. அமைதியான வழியில் இனப்பிரச்சனையை தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

Last Updated on Tuesday, 27 July 2010 07:32
 
இரத்தம் நக்கும் தீபச்செல்வன் PDF Print E-mail
அரசியல்_சமூகம் - சிறி
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 26 July 2010 10:40

எங்கள் ஈரற்குலைகளை

அறுத்தவர் இரத்தம் தருவார்.

அதையுன் பேனாவுள் நிரப்பு.

உனக்கென்ன தமிழுக்கா பஞ்சம்

நெஞ்சை உலுக்கும்

வார்த்தைகள் பொறுக்கு

கவிதைகள் தொகுக்க

கைவிரல் சொடுக்கி

இரக்கம் அவர்க்கு வரும்வரை

சிவப்பாய்

எழுது! எழுது!!

 

Last Updated on Monday, 26 July 2010 13:34
 
பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள் (வதை முகாமில் நான் : பாகம் - 09) PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Sunday, 25 July 2010 07:08

எனது மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை என்ற இந்தக் குறிப்பை 2001 இல் எழுதிய போது பின்வரும் குறிப்பை நான் எழுதியிருந்தேன். புலிகளின் பாசிசம் பற்றி எழுதியுள்ளது தொடர்பாக பலர் ஆச்சரியமடையாலாம். ஆரம்ப சமர் இதழ்களை படிக்காதவர்கள், மற்றும் என்னை மண்ணில் தெரியாதவர்களுக்கு இது புதிய விடையமாக இருப்பது தவிர்க்க முடியாது என்று குறிபிட்டு எழுதியிருந்தேன். ஆனால் பின்னால் மாறிய சூழலை கையில் எடுத்து, புலிப் பாசித்தை பற்றி விரிவாக எழுதினோம். இந்த நினைவுகள் எழுதிய காலத்தில், பாசிசம் பற்றி பெரிதாக எழுதுவது தவிர்க்கப்பட்டது. இந்த குறிப்பு, அன்றைய சூழலை எடுத்துக் காட்ட இன்று உதவுகின்றது.

Last Updated on Sunday, 25 July 2010 08:35
 
ஈவிரக்கமற்ற கொலைகாரத்தனம் தலைமைத்துவத்தை வழங்க, அது தேசியமாகியது (வதை முகாமில் நான் : பாகம் - 15) PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Saturday, 31 July 2010 06:01

புலிகளின் தேசியத்தின் முன், நான் செய்த குற்றம் என்ன? தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கோரி போராடியது தான். இதனால் இந்த மக்களைக் கண்டு அஞ்சிய புலிக் கோழைகள், இனம் தெரியாத நபர்களாக மாறினர். இந்த கோழைகள் வேஷத்தில் தான், புலிகள் என்னைக் கடத்தினர். இரகசியமாக செய்த இந்த கடத்தலை உரிமை கோரததுடன், தாம் அதைச் செய்யவில்லை என்று உலகின் முன் சத்தியம் செய்தனர். தமக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்றனர். தாம் இது போன்ற நடவடிக்கைகளில், ஒரு நாளும் ஈடுபடுவதில்லை என்றனர்.

Last Updated on Saturday, 31 July 2010 06:04
 
சுயநிர்ணயம் என்பது மனித உரிமையைக் கோருவதாகும் (வதை முகாமில் நான் : பாகம் - 14) PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Friday, 30 July 2010 05:51

இயற்கையில் இருந்து நாம் நுகரும் பொருட்களை, மனிதனின் உழைப்பே உருவாக்கின்றது. உழைப்பு இயற்கை மீது நிகழ்கின்றது. இப்படி உழைத்து உருவாக்கிய பொருட்கள் மீது, மனிதன் ஆளுமை செலுத்த தவறிய ஒரு உலகில் நாம் வாழ்கின்றோம்;. மாறாக பொருட்கள் மனிதன் மேல் ஆளுமை செலுத்துகின்றது. தன் கையால் உருவாக்கிய பொருட்களின் அடிமையாகிய பரிதாபம், மனித சமுதாயத்தை மீள முடியாத அடிமைத்தனத்தில் தள்ளியுள்ளது.

Last Updated on Friday, 30 July 2010 05:54
 
கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம் (வதை முகாமில் நான் : பாகம் - 13) PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது பி.இரயாகரன்   
Thursday, 29 July 2010 06:05

அரசியல் ரீதியாக மக்களுக்கு எதிரான அரசியல் நிலையை இயக்கங்கள் உருவாக்கியதற்கு, இலங்கை இனவாத பாசிச அரசை நாம் நேரடியாக குற்றம் சாட்டமுடியாது. மாறாக போராடும் அமைப்புகளின் வர்க்கம் சார்ந்த, மக்கள் விரோதத் தன்மையே இதன் பிரதான அடிப்படையாகவும், மூல வேராகவும் இருந்துள்ளது. இன ஒடுக்குமுறையை பேரினவாத பாசிச அரசு தமிழ் மக்கள் மீது திணித்து அவர்களை அடக்கிய போது, அதற்கு எதிரான போராட்டம் இயல்பாகவும் இயற்கையாகவும் மனித உரிமைக்கானதாக எழுந்தது.

Last Updated on Thursday, 29 July 2010 06:10
 
உமாமகேஸ்வரன் விசுவாசிகள் போன்று நடிக்கக் கோரினர், நடித்தோம் (புளட்டில் நான் பகுதி – 17) PDF Print E-mail
அரசியல்_சமூகம் - சீலன்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Tuesday, 27 July 2010 20:37

அராஜகத்தின் மொத்த உருவமாக விளங்கிய புளட் தனது போலி "மார்க்சிய" சித்தாந்த வாய்ச்சவாடால், பல படுகொலைகளுக்கு நியாயம் கற்பித்தது. இவ்வாறு நியாயம் கற்பித்த போதும், தளத்தில் வேலை செய்த பல தோழர்கள் ஒதுங்கினர். இவர்கள் ஒதுங்கிய போதும், விடுதலைப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கவில்லை. புளட்டில் வேலை செய்தவர்கள் ஒதுங்கியது, முதலாவதாக சுழிபுரம் படுகொலையுடன் தான். இவர்கள் ஒதுங்கி சும்மா இருக்கவில்லை. மாறாக புளட்டின் பின்தளத்தில் நடந்த உட்படுகொலைகளை மையமாக வைத்து, பலர் தம்மால் முடிந்த அளவிற்கு புளட்டுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், பலரை துப்பாக்கிக் கரங்கள் துரத்தின. இந்த வகையில் பல தோழர்கள் நேரிடையான எனக்கு தெரிந்த சுகந்தன், அவருடன் வேலை செய்த பரந்தாமன், சுகன் போன்றோரோடு பல்கலைக்கழக மட்டத்தில் விமலேஸ்வரன், தர்மலிங்கம், நந்தா, வனிதா, கலா, ஹப்பி போன்றோர்களும் ஜ.பி, பிரசாத், ஜீவன், குருபரன், கவிராஜ் போன்ற ரெசோ மாணவர் மற்றும் மக்கள் அமைப்பினரும் புளட்டுக்கு எதிரான பிரச்சாரத்தை நம்பிக்கையான தோழர்கள் மட்டத்திலும் மக்களமைப்புக்கள் மாணவ தோழர்கள், மாற்று இயக்கங்களிலிருந்த தமது சொந்த இயக்க அராஜகத்தை எதிர்த்து நின்ற மாற்றியக்க தோழர்களோடு இணைந்து மக்கள் மத்தியில் நேரிடையாகவும் ரெசோ அமைப்புக்குள்ளிருந்தவாறே அவ் அமைப்புக்குள்ளும் பிரச்சாரம் செய்தனர்.

Last Updated on Tuesday, 27 July 2010 20:59
 
தோழர்.ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் அமைதி பேச்சுவார்த்தையின் கோரமுகமும் ! – மொழியாக்கம் - ப.நற்றமிழன். PDF Print E-mail
அரசியல்_சமூகம் - விருந்தினர்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Tuesday, 27 July 2010 18:10

சுவாமி.அக்னிவேஷ் கடந்த மே,2010லிருந்து இந்திய அரசிற்கும், மாவோயிசுட்டுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி வருபவர்.இது வரை இரண்டு தரப்புகளும் இரண்டு கடிதங்களை இவர் மூலம் அனுப்பி உள்ளனர். சூன் 26 அன்று இவர் அரசு தரப்பிலிருந்து வந்த மூன்றாவது கடிதத்தை மாவோயிசுட்டுகளின் தலைமைக்குழுவில் உள்ள சேருகுரி இராஜ்குமார் என்ற ஆசாத்திடம் கொடுத்து விட்டு, அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார். அக்னிவேஷ் கூறுகையில் “நான் அவர்களிடம் (மாவோயிசுட்டுகளிடம்) இருந்து அமைதி பேச்சு வார்த்தை துவங்குவதற்கான தேதியை எதிர்பார்த்து காத்திருந்தேன்”. ஆனால் அவருக்கு வந்த செய்தியோ வேறு. மாவோயிசுட்டு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்திவரும் ஆசாத் ஆந்திராவின் காட்டுப் பகுதியில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதே அந்த செய்தி.

Last Updated on Tuesday, 27 July 2010 18:14
 
மீண்டும் ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 22) PDF Print E-mail
அரசியல்_சமூகம் - ஐயர்
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 26 July 2010 18:11

ஆதரவாளர்கள் தமது முயற்சியை கைவிடவில்லை. லண்டனிலிருந்து வந்திருந்த ராஜா மற்றும் குலம் ஆகியோர் இணைவுக்கான புதிய திட்டங்களோடு எமது உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கின்றனர். பிரபாகரன் குழுவிலிருந்த உறுப்பினர்களையும் பலதடவை தனித்தனியாகச் சந்திக்கின்றனர். இடைவிடாத இவர்களின் முயற்சியின் பலனாக அனைத்து உறுப்பினர்களும் சந்த்தித்து உள்ளக வாக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று முடிவாகிறது. பிரபாகரன், நாகராஜா, பேபிசுப்பிரமணியம், நான் உட்பட ஏனைய அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான திகதியும் குறிக்கப்பட்டுவிட்டது.

Last Updated on Monday, 26 July 2010 18:16
 
புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல (வதை முகாமில் நான் : பாகம் - 10) PDF Print E-mail
பி.இரயாகரன் - சமர் - 2010
பதிவேற்றியது தமிழரங்கம்   
Monday, 26 July 2010 07:33

புலிகள் தமது தேசியமாக, பாசிசத்தையே ஆணையில் வைத்தனர். பேரினவாதத்துடன் சண்டை செய்வதாக கூறிக்கொண்டு, மக்களை ஓடுக்கினர். மக்களையும், உலகத்தையும் எமாற்ற பொய்யும் புரட்டும் மூலதனமாகியது. எதிரியைப் பற்றி வாய் கிழிய கூறிக் கொள்வதன் மூலம், ஜனநாயகத்தை பறித்தெடுத்தனர். மாற்றுச் சிந்தனையை முன் வைத்து, தேசத்தின் அடிப்படையான தேசிய பொருளாதார நலன்களைப் பற்றி பேசும் போது, அவர்களை நாட்டுபற்றயற்ற துரோகி என முத்திரை குத்தினர். ஜெர்மனிய நாசிகளைப் போல், தாம் அல்லாத அனைவரையும் கொன்று அழித்தனர். புலித் தலைவர்கள் தாம் விரும்பியதை எல்லாம் செய்தார்கள் என்றால், கிட்டலர் போல் பாசிச கட்டமைப்பை தமிழ் மக்கள் மேல் நிறுவிய ஒரு சர்வாதிகார நிலையில் தான் அது சாத்தியமானது.

Last Updated on Monday, 26 July 2010 07:38
 
More Articles...
«StartPrev12345NextEnd»

Page 1 of 5

ஆங்கிலம் தமிழ்மொழி மூலமாக

Tamil 10 top blogs
TamilNotes
Top Tamil Blogs by Tamilers

Tamil Top Blogs

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Copyright © 2010 தமிழரங்கம். All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.
 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி- செய்திகளின் தொகுப்பு

< August 2010 >
Mo Tu We Th Fr Sa Su
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          
Banner