Language Selection

புதிய ஜனநாயகம் 2008

PJ_2008_1.jpg

கோதுமைக்குத் தரப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை, ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,000/ என உயர்த்தி நிர்ணயித்திருக்கும் மைய அரசு, நெல் விலையை நிர்ணயிப்பதில் மாற்றந்தாய் மனப்போக்குடன் நடந்து கொண்டுள்ளது. 199495 ஆண்டு வரை, நெல்லுக்கும் கோதுமைக்குமான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதில் எவ்வித வேறுபாடும் இருந்தது கிடையாது. அதன்பிறகு, அவற்றின் ஆதரவு விலைகளை நிர்ணயிப்பதில் வேறுபாடு காட்டப்படுவது தொடங்கி, இன்று இந்த விலை வேறுபாடு ரூ. 255/ ஆக அதிகரித்து விட்டது.

PJ_2008_1.jpg

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப்புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சுற்றுப் போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள், தமிழக முதல்வரும் மருத்துவத்துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாகத் தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.

PJ_2008_1.jpg

டயர் உற்பத்தியில் கடந்த 43 ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாக இயங்கி வந்த, சென்னையிலுள்ள எம்.ஆர்.எஃப் கம்பெனி கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதலாக சட்டவிரோதமாக கதவடைப்பு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கும் மேலும் 5 கிளைகளின் உருவாக்கத்திற்கும் அயராது பாடுபட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களோ இன்று வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர்.

PJ_2008_1.jpg கொலைகள், நாளும் தொடரும் படுகொலைகள். ஒருவரல்ல, இருவரல்ல; ஆண்டுக்கு ஏறத்தாழ 22,327 தாழ்த்தப்பட்டோர் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இது, ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கை அல்ல. நாடெங்கும் பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்றும்போது நச்சுவாயு தாக்கி, மூச்சுத் திணறி மாண்டு போகும் துப்புரவுத் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்டோரின் எண்ணிக்கைதான் இது.

PJ_2008_1.jpg

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. மற்றும் பிற இந்துத்துவ பாசிச சக்திகள், இந்து மதவெறியனும் காட்டுமிராண்டியுமான நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டன. குஜராத்தைக் கவ்விய பாசிச இருள் தன் பிடியை மேலும் இறுக்கியிருக்கிறது. 2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதன் பிறகு நடத்தப்பட்ட மாநிலம் தழுவிய முசுலீம்கள் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை பாசிச வக்கிரங்களோடும்