Language Selection

புதிய ஜனநாயகம் 2007

sep_2007.jpg

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள அகரம் என்கிற குலதீபமங்கலம் கிராமத்திலுள்ளது தர்மராஜா திரௌபதையம்மன் கோவில். அரசுக்குச் சொந்தமான இப்பொதுக்கோவிலில் வழிபடச் சென்ற தாழ்த்தப்பட்ட மக்களைத் தடுத்து தாக்கி வெறியாட்டம் போட்டுள்ளனர், வன்னியர் உடையார் சாதிவெறியர்கள்.

sep_2007.jpg

உத்தரப் பிரதேசத்தில் பார்ப்பனர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு மாயாவதி ஆட்சியைப் பிடித்து சிறிது காலம்தான் ஆகியுள்ளது. அதற்குள்ளாகவே இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. தலித் ஒருவர் ஆளுவதனாலேயே தலித் மக்கள் வாழ்வில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற பிரச்சாரம் பொய்த்துப் போயுள்ளதோடு, தலித் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற பார்ப்பன சாதி வெறியர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியே துணைபோகும் கொடுமையும் அங்கு நடந்தேறியுள்ளது.

sep_2007.jpg

ஓசூரை அடுத்துள்ள கெலமங்கலம், பைரமங்கலம், குண்டுமாரனப்பள்ளி, ஒன்னல்வாடி, அஞ்செட்டிப் பள்ளி, சனமாவு, அக்கொண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களின் விளைநிலங்களைப் பறித்து 3640 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் ஜி.எம்.ஆர். குழுமம் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இம்மண்டலத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

sep_2007.jpg

"கல்லூரி நிர்வாகம் "பறக்கும் படை' என்ற பெயரில் ஒரு குண்டர் படையை வைத்திருக்கிறது. போராடும் மாணவர்களை "டார்க் ரூம்' எனப்படும் கொட்டடியில் அடைத்து வைத்து ஆபாச வசவுகளுடன் காட்டுமிராண்டித்தனமாக அக்குண்டர்கள் அடிப்பார்கள்'' என்று கடந்த 2006ஆம் ஆண்டில் ஜேப்பியாரின் சத்யபாமா நிகர்நிலைப்பல்கலைகழக மாணவர்கள் முகத்தைக் கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்ததையும்,

sep_2007.jpg

தூத்துக்குடி மாவட்டத்தில் 2500 கோடி ரூபாயில் டைட்டானியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் டாடா நிறுவனம் 2007, ஜூன் 28ஆம் தேதியன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஏற்கெனவே 2002ஆம் ஆண்டிலேயே அன்றைய அ.தி.மு.க. அரசாங்கத்திற்கும் டாடா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

sep_2007.jpg

"அடுத்த தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு'' என்ற தலைப்பில் ""புதிய ஜனநாயகம்'' ஆகஸ்டு இதழில் அட்டைப்படச் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நல்ல வரவேற்பு இருந்தது. ""பாரபட்சமின்றி'' அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி வரும் ""புதிய ஜனநாயகம்'', பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் இராமதாசின் சந்தர்ப்பவாத, மோசடி அரசியலை உரிய நேரத்தில் உரிய வகையில் அம்பலப்படுத்தியிருப்பதாகப் பலரும் வரவேற்றுள்ளனர்.

sep_2007.jpg

"ஒரு இந்து ஏதாவது செய்து விட்டால் விசாரணைக் கமிசன் அமைக்கப்படுகிறது; ஆனால், ஒரு முசுலீம் ஏதாவது செய்துவிட்டால், அவன் தூக்கில் போடப்படுகிறான்.''

 

— மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜாகீர் உசைனுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், அத்தண்டனை குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கருத்து இது.

sep_2007.jpg

சில்லறை வணிகத்தில் நுழைந்து நாடெங்கும் நாலு கோடிக்கும் மேலான உழைக்கும் மக்களின் வாழ்வைப் பறிக்க வந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. முதலான ஆளும் வர்க்கக் கட்சிகள் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் ரிலையன்சுக்கு எதிராக வீரவசனம் பேசிக் கொண்டே, ரிலையன்சு கடைகளுக்குக் குத்துவிளக்கேற்றி திறப்பு விழா நடத்துபவர்களைத் துரோகிகள் என்பதா, அல்லது மக்களின் எதிரிகள் என்பதா?

இவர்கள் வேறு யாருமல்ல, ரிலையன்சுக்கு எதிராக வீரதீரமாக வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சியினர்தான் கடந்த ஜூலை மாதத்தில், கேரளத்தில் இந்த அயோக்கியத்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.

 

கொச்சி நகரத் துணைமேயரும், சி.பி.எம். கட்சியின் எர்ணாகுளம் மாவட்டக் கமிட்டி உறுப்பினருமான சி.கே. மணிசங்கர், லெமக்காரா எனுமிடத்தில் ரிலையன்ஸ் பிரஷ் காய்கறிக் கடையைத் தொடங்கி வைத்து, தமது கட்சியின் துரோகத்தனத்தை அம்மாநிலமெங்கும் பறைசாற்றியுள்ளார். துணை மேயரே இந்த வேகத்தில் செல்லும்போது சி.பி.எம். கட்சியின் கொச்சி எம்.எல்.ஏ. சும்மாயிருப்பாரா? மாநிலக் கமிட்டி உறுப்பினரும் கொச்சியின் எம்.எல்.ஏ.வுமான தினேஷ் மணி, தேவாரா எனுமிடத்தில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டைத் திறந்து வைத்து அசத்தியுள்ளார்.

 

சில்லறை வணிகத்தில் நுழைந்துள்ள ரிலையன்சுக்கு எதிராக சி.பி.எம். கட்சி வீரவசனம் பேசி வரும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி அரசு, ரிலையன்சை அனுமதிப்பது ஏன்? அதிலும் சி.பி.எம். பிரமுகர்களே கடையைத் திறந்து வைக்கிறார்கள் என்றால், சி.பி.எம். கட்சி ரிலையன்சை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்று கேட்டு கேரள மாநிலமெங்கும் மக்கள் காறி உமிழத் தொடங்கியதும் சி.பி.எம். கட்சித் தலைமை பீதியடைந்தது. தனது துரோகத்தனத்தை மறைக்க, இப்பிரமுகர்களிடம் ரிலையன்ஸ் கடை திறப்பு பற்றி விளக்கம் கோரும் நாடகமாடியது.

 

இதைத் தொடர்ந்து இப்பிரமுகர்கள் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டனர். தங்களது நெருங்கிய நண்பர்களின் வற்புறுத்தலால் ரிலையன்ஸ் கடைகளைத் திறந்து வைத்ததாக விளக்கம் அளித்தனர்.

 

இப்"பாட்டாளி' வர்க்கப் பிரமுகர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் முதலாளித்துவவாதிகள்தான் என்பதையும், நாளை இந்த "நண்பர்கள்' வற்புறுத்தினால் உழைக்கும் மக்களுக்கு எதிராக எதையும் செய்யத் துணியும் துரோகிகள்தான் இப்பிரமுகர்கள் என்பதையும், இவர்களது தன்னிலை விளக்கமே நிரூபித்துக் காட்டியது. ஆனாலும் இப்பிரமுகர்கள்மீது கட்சித் தலைமை பாரதூரமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயரளவுக்கு எடுத்த நடவடிக்கையிலும் இரட்டை அளவுகோல்களைப் பின்பற்றியுள்ளது.

 

எர்ணாகுளம் மாவட்டக் கமிட்டி மணிசங்கரின் விளக்கத்தைப் பரிசீலித்து, அவருக்கு "எச்சரிக்கை' விடுப்பதாக அறிவித்தது. இம்மாவட்டக் கமிட்டி, கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான கோஷ்டியின் ஆதிக்கத்தில் உள்ளது.

 

மறுபுறம், தினேஷ்மணியின் விளக்கத்தை மாநிலக் கமிட்டி பரிசீலித்து, அவரை மன்னிப்பதாக அறிவித்துள்ளது. மாநிலக் கமிட்டியோ, மாநிலச் செயலாளர் பினாரயி விஜயன் தலைமையிலான கோஷ்டியின் ஆதிக்கத்தில் உள்ளது. அச்சுதானந்தன் கோஷ்டியிலிருந்து விலகி விஜயன் கோஷ்டிக்கு தினேஷ் மணி வந்துள்ளதால், அவருக்குச் சாதகமாக இந்த "நடவடிக்கையை' மாநிலக் கமிட்டி எடுத்துள்ளது.

 

ஒரே வகையிலான துரோகத்துக்கு, மாவட்டக் கமிட்டியில் எச்சரிக்கை; மாநிலக் கமிட்டியில் மன்னிப்பு என இரட்டை அளவுகோல்களுடன் சி.பி.எம். கட்சி எடுத்துள்ள இந்நடவடிக்கைகளைப் பார்த்து கேரள மக்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். கட்சியின் கொள்கைபடி தாங்கள் செயல்படுவதாகவும், ஆனால் விஜயன் கோஷ்டி சமரசப் பாதையில் செல்வதாகவும் புலம்பும் அச்சு கோஷ்டி, இந்த இரட்டை அளவுகோல் விவகாரத்தை வைத்து உட்கட்சித் தேர்தலில் ஆதாயமடைய முயற்சிக்கிறது. துரோகிகளுக்கிடையே கோஷ்டிச் சண்டை புழுத்து நாறும் அதேநேரத்தில், ரிலையன்ஸ் நிறுவனமோ புதிய பேரங்காடிகளைத் திறந்து, சில்லறை வியாபாரிகளின் வாழ்வைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது.


· அழகு

sep_2007.jpg

ஆகஸ்ட்15: போலி சுதந்திரத்தின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஆட்சியாளர்களும் ஓட்டுப் பொறுக்கிகளும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், 1947இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அதிகார மாற்றம்தான் என்பதை விளக்கியும், அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் நாட்டை அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் துரோகத்தனத்தைத் திரைகிழித்தும், மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராட உழைக்கும் மக்களை அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரம் சுவரொட்டிகள் மூலம் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.

sep_2007.jpg

இந்தியா அமெரிக்கா இடையே, அணுசக்தி கூட்டுறவு மற்றும் வர்த்தகம் தொடர்பாக கையெழுத்தாகியுள்ள ""123 ஒப்பந்தம்'', காங்கிரசின் அமெரிக்க அடிமைத்தனத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை; அந்த ""அடியாருக்கு அடியாராக''ப் போலி கம்யூனிஸ்டுகள் செயல்படுவதையும் நாறடித்து விட்டது.

sep_2007.jpg

மிகவும் அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான அணுகுமுறை என்று காட்டிக் கொண்டு இந்தியப் போலி கம்யூனிஸ்டுகள் பின்பற்றி வரும் நடைமுறை, எப்போதும் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராகவும் நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைப்பதாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும்தான் பயன்பட்டு வந்திருக்கிறது. இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுப்பது என்ற பெயரில் காங்கிரசின் சிறுபான்மை ஆட்சியை உண்மையில் நிபந்தனையற்ற முறையில் போலி கம்யூனிஸ்டுகள் ஆதரித்து வருகின்றனர்.எனவேதான் ஆரம்பம் முதலே போலி கம்யூனிஸ்டுகளுக்கு உடன்பாடே இல்லாத பல்வேறு விசயங்களுக்கும்

sep_2007.jpgநாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாக வேண்டுமா? அதற்கு அன்னிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு! வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? அதற்கும் அன்னிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு! தொழில் நுட்பம், தரமான உற்பத்திப் பொருட்கள், உயரிய சேவை, நிர்வாகத் திறன், ஏற்றுமதிக்கான வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என அனைத்திற்கும் ஒரே சர்வரோக நிவாரணியாகச் சித்தரிக்கப்படுகிறது அன்னிய நேரடி முதலீடு.

aug_2007.jpg

தனது மகன் சுரேஷின் பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தைக் கட்ட முடியாமல் போனதால், பெரம்பலூர் மாவட்டம் வளவெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் கடந்த மாதம் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். தனது மகனின் படிப்புச் செலவிற்காக ஏற்கெனவே ஒரு இலட்ச ரூபாய் வரையில் வெளியே கடன் வாங்கிவிட்ட பன்னீர் செல்வம், இந்த ஆண்டிற்கான கட்டணத்தைக் கட்டுவதற்கு அரசு வங்கிகள்

aug_2007.jpgகொள்வதற்குப் பல சமூகக் காரணங்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால், காசுமீரிலோ இவற்றையெல்லாம்விட, இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளால் விசாரணை, தேடுதல் வேட்டை என்ற பெயரில் பொதுமக்கள் அவமானப்படுத்தப்படுவதுதான் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ""எல்லை கடந்த மருத்துவர்கள் சங்கம்'' என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு எடுத்த ஓர் ஆய்வில், ""இந்த அவமானப்படுத்துதல் தங்களின் மன அமைதியைக் குலைத்து விடுவதாக'' காசுமீர் மக்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

aug_2007.jpg

உடலெங்கும் காயங்கள்; சீழ்பிடித்து புரையோடிவிட்ட தீப்புண்கள், அழுக்கடைந்து கிழிந்து தொங்கும் ஆடைகள், துயரத்தை நெஞ்சிலே தாங்கி உருக்குலைந்து நிற்கும் தொழிலாளர்கள்... சீனாவின் செங்கற்சூளைகள்நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டுள்ள இக்கொத்தடிமைகளைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

aug_2007.jpg

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திலுள்ள சிகரல அள்ளி கிராமத்தைச் சேர்ந்த 90 தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர், வசிக்க வீடின்றி ஓடைகளின் கரையோரங்களில் குடிசை போட்டு வாழ்ந்து வந்த நிலையில், 1980ஆம் ஆண்டு இம்மக்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டப்படி, சின்னப்பொண்ணு என்பவரது நிலத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தி, உரிய தொகையையும் அளித்துள்ளது.

aug_2007.jpg

மரங்களை எளிதில் வெட்டி வீழ்த்த உதவும் கருவியான கோடரியின் காம்பும் மரத்தால்தான் ஆனது என்பது எத்தனை பெரிய சோகம்! தனது சொந்த இனத்தையே எதிரியிடம் காட்டிக் கொடுக்கும் நபர்களையும் கோடரிக்காம்பு என்றுதான் அழைக்கிறார்கள். அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், நமக்குக் கோடரிக் காம்பைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகிறது.

aug_2007.jpg

தேசாபிமானி. கேரள சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு. இடதுவலது என்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாகப் பிரிவதற்கு முன்பு, அது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடாக வெளிவந்து கொண்டிருந்தது. 1947ஆம் ஆண்டில் தேசாபிமானி நாளேட்டுக்காக கம்யூனிஸ்டுகள் நிதி திரட்டியபோது, கோழிக்கோடு மாவட்டம் சொம்பாலா கிராமத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளரும் எழுதப் படிக்கத் தெரியாத

aug_2007.jpg

தாழ்த்தப்பட்ட சாதியினர் பழங்குடியினர் மீதான (வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு நாடு முழுவதும் இம்மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைக்கப்படும் வன்கொடுமைச் சம்பவங்களில் மிகமிக முக்கியமானவற்றையும் வகைமாதிரிகளையும் பின்வருமாறு தொகுக்க முடியும்.

aug_2007.jpg

பாலஸ்தீன மக்கள் நடத்திவரும் சுயநிர்ணய உரிமைப் போர், மேலும் ஒரு பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) ஓர் அங்கமான ஃபதா இயக்கத்திற்கும், முசுலீம் அடிப்படைவாத அமைப்பான ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக நடந்து வந்த பதவி அதிகாரச் சண்டை, உள்நாட்டுப் போராக மாறக் கூடிய சூழல் உருவாகி இருப்பதுதான் இப்பின்னடைவுக்கான காரணம்.