பி.இரயாகரன் - சமர்

ச ரிநிகர்: 112 - 113 இல், இராதிகா குமாரசாமி என்பவர் "பெண்புலிகளும் பெண்விடுதலைப் பிரச்சினைகளும்" என்ற தலைப்பிலான தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. இந்தக் கருத்துக்களை மறுதலித்துக் பல கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன.

மேலும் படிக்க: பெண்ணின் போராடும் உரிமை பெண்ணின் உயிரைக் காட்டிலும் அடிப்படையானது.

செ ல்வி திருச்சந்திரன் எழுதிய "தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலைநோக்கு" என்ற நூல் பல்வேறு கடந்த காலத் தரவுகளை உள்ளடக்கி உள்ளது. பெண் சார்ந்து வந்த நூல்களில் இது ஒரு குறிப்பிடத்தக்க தரவு ஆய்வு நூலாகும். இந்த ஆய்வு மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டு செய்யவில்லை. மாறாக அதை முடிந்த முடிவுகளாக எடுக்கக் கூடாது என்பதன் ஊடாகவே நூல் உட்புகுகின்றது.

மேலும் படிக்க: மார்க்சியப் பெண்ணியத்தின் மீது சந்தேகத்தை விதைக்கும் ஆணாதிக்கத்தின் போக்கு குறித்து

ச ரிநிகர் 123-இல், "கோணேஸ்வரிகள்" என்று தலைப்பிட்டு கலா என்பவர் ஒரு கவிதை எழுதியிருந்தார். இக்கவிதையைத் தொட்டு பல விமர்சனங்களைச் சரிநிகர் எதிர் கொண்டு சிலவற்றை வெளியிட்டு இருந்தனர்.

மேலும் படிக்க: ஆணாதிக்கத்தை எதிர்த்து எழுந்த வர்க்கக் கவிதை

பெ ண்களின் சுவடுகளில்..." என்ற சாந்தி சச்சிதானந்தம் எழுதிய நூல் பல மானிடவியல் ஆய்வாளர்களின் ஆய்வுகளை உள்ளடக்கி உள்ளது. தமிழில் வந்துள்ள பெண்ணியம் சார்ந்த நூல்களில் மிகவும் முக்கியமான பெண்ணின் வரலாறு பற்றிய நூலாகும்.

மேலும் படிக்க: பெண்களின் சுவடுகளில்... என்னும் பெண்களின் வரலாற்றைப் பற்றிய நூல் மீதான விமர்சனம்

"சமுதாய மாற்றம் என்பது பெண்விடுதலையில்லாமல் சாத்தியமில்லை"  என்று லெனின் பிரகடனம் செய்தார். மார்க்சியத்தின் உள்ளார்ந்த உயிர்மூச்சைக் கழுத்தைப் பிடித்தே நெரித்துக் கொல்ல முனையும் மார்க்சிய விரோதிகள் பல திரிபுகளையும், வரலாற்று இயங்கியல் புரட்டுகளையும் கையாளுகின்றனர்.


"அன்புள்ள டாக்டர் மார்க்சுக்கு.." என்ற தலைப்பில் மார்க்சின் அன்றைய காலக்கட்டத்தை ஒட்டிய வடிவில் இன்று ஷீலா ரௌபாத்தம் என்பவர் எழுதிய கடிதம், அன்றைய வரலாற்று நிலைமையை மறுத்தபடி, இன்றைய வரலாற்று நிலைமையுடன் எழும் மார்க்சிய எதிர்ப்பில் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: ஆணாதிக்கத்தை மார்க்சியம் பாதுகாக்கின்றதா?

எங்கும் எதிலும் ஒரு பிழைப்புத்தனம். அரசியல் என்பதே நக்குத்தனமாகிவிட்டது. (தமிழ்) மக்களின் பிரச்சனைகளை இனம் காணுதல் அருவருப்புக்குரிய ஒன்றாகிவிட்டது. மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளின் அடிப்படையில் இயங்குதல், அதற்காக குரல் கொடுத்தல், என அனைத்தையும் மறுத்து இயங்குவதே அரசியலாகிவிட்டது. இப்படி குரூரமாகி நிற்பவர்கள், மனித அவலங்கள் மீது நீந்தி நீச்சலடிக்கின்றனர்.

மேலும் படிக்க: மனித அவலங்களை அரசியலாக்குகின்றனர்

1. பரிசியன் பிரான்சின் செய்திப் பத்திரிக்கை
2. Femmes, le mauvais gener?

3. le FIGARO பிரான்சில் வெளிவரும் வலதுசாரி பத்திரிக்கை
4. சிறைபற்றிய ஆவணப்படம் (Documentary) பிரான்ஸ் தொலைக்காட்சி: M6 ஒலிபரப்பிய தேதி: 10.10.1999
5. உயிரோடு உலாவ இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் சுற்றுச் சூழலும் வந்தனா சிவா
6. புதிய ஜனநாயகம் இந்திய புரட்சிகர மார்க்சிய ஆதரவு அரசியல் பத்திரிக்கை
7. பிராமணமதம் ஜோசப் இடமருகு
8. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் ஏங்கெல்ஸ்

மேலும் படிக்க: மேற்கோள் குறிப்புகள் - ஆணாதிக்கமும் சமூக ஒடுக்குமுறைகளும்

உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் 1.2 கோடி ஆண்கள், இளம் குழந்தைகளைப் பாலியல் ரீதியாக அணுகுகின்றனர்.31 யுனிசேவ் விடுத்த அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் 10 இலட்சம் ஆண் - பெண் குழந்தைகள் (16.5.2000)42 பாலியல் சந்தையில் பாலியல் தேவைக்காக மூலதனமாக்கப் படுகின்றனர். 1970 முதல் 1990 வரையிலான காலத்தில் விபச்சாரச் சந்தையில் மூன்று கோடி பெண்கள் முதலீடாக்கப்பட்டுள்ளனர். 10 இலட்சம் பெண்கள் ஒவ்வொரு வருடமும் பாலியல் முதலீட்டில், புதிதாக மூலதனமாக்கப்படுகின்றனர். இது பல்வேறு துறை சார்ந்தும், குறிப்பாக உல்லாசப் பயணத்துறை சார்ந்து விரிவாகின்றது.

மேலும் படிக்க: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்

அமெரிக்காவில் 1995-இல், 50,000 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 8,000 குழந்தைகள் உள்நாட்டில் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். டைம் பத்திரிகை செய்தியின் படி 25 வருடங்களில் 1,40,000 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டுள்ளனர். இது சுவீடனில் 32,000-ஆகவும், ஹாலந்தில் 18,000-ஆகவும், ஜெர்மனியில் 15,000-ஆகவும், டென்மார்க்கில் 11,000-ஆகவும் இருக்கின்றது.31 தத்தெடுப்பு நாகரிகத்தின் பண்பாட்டில் அதிகரிப்பது பொதுப் பண்பாடாகின்றது.

மேலும் படிக்க: தத்தெடுப்புகள்

''அலிகளின் பதிலடி" என்ற தலைப்பில், கட்டாயக் காயடிப்பு பற்றிய கட்டுரையில் ஆணுறுப்பை வெட்டி, பின் அவர்களை ஏலத்துக்கு விடுகின்றனர். ஒருமுறை கையைத் தட்டினால் 1,000 ரூபாய் என்ற வகையில் ஏலம் போகும். உத்திரப்பிரதேசத்திலுள்ள ஈடா மாகாணத்தில் தான் இவை அரங்கேறுகின்றது. 15,000 அலிகள் உள்ள தில்லியில் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைகளை எதிர்ப்போரை மாஃபியாக் கும்பல் பொலிஸ் கூட்டுடன் சேர்த்து கொன்று போட்டுவிடுகின்றனர். திருமணம் செய்தோர், செய்யாதோர் என வருடாவருடம் 1,000 பேரைக் கட்டாய அலிகளாக உருவாக்கி ஏலம் விடுகின்றனர். இவர்களைப் பாலியல் வக்கிரத்துக்கும், திருடவும் பலாத்காரமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். (6.5.1994)34

 

மேலும் படிக்க: அலிகள்

1970-இல், 2 கோடியே 14 இலட்சம் குடும்பங்கள் இருந்த அமெரிக்காவில் இன்று 4 கோடியே 58 இலட்சம் குடும்பங்கள் உள்ளன. அமெரிக்காவில் திருமணம் ஆகாத பெண்களின் எண்ணிக்கை 1970-ஐ விட இன்று எட்டு மடங்காக அதிகரித்துள்ளது. இன்று திருமணம் செய்யாது 50 இலட்சம் பெண்கள் வாழ்கின்றனர். அதாவது 25 சதவீதம் பெண்கள் திருமணம் செய்யாமல் உள்ளனர். இப்படி வாழ்வோரில் 36 சதவீதம் பேருக்கு 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளது. 10 சதவீதம் பெண்கள் விவாகரத்துக்குப் பின் மீளத் திருமணம் செய்கின்றனர்.55


பிரான்சில் திருமணத்துக்கு வெளியில் குழந்தை பிறப்பை கீழ்க்கண்ட வரைபடத்தில் பார்ப்போம். (338-1996)43

 

மேலும் படிக்க: திருமணங்களுக்கு வெளியில் வாழ்தலும்- குழந்தைகளின் பிறப்புகளும்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More