பி.இரயாகரன் - சமர்

நான்
அழுவதற்கு வரவில்லை – அவர்கள்
விழுந்த இடத்தில்
இன்னும்
உயிரோடு இருப்பவர்களே!
உங்களிடம் பேசத்தான்…
உங்களை நோக்கியும்
என்னை நோக்கியும்

மேலும் படிக்க: நான் தண்டணை கோருகிறேன் - பாப்லோ நெருடா

1990 ஜுன் பிரச்சினைகளுக்குப் பிறகு முல்லைத்தீவில் வந்து குவிந்த அகதிகளுக்காக வழமைபோல பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்களிடம் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினர். இந்த நிவாரண பொருட்களை LTTE தன்னுடைய பெயரில் மட்டுமே வழங்க வேண்டும் என்று கேட்டது. எரி பொருள் வாகனப் போக்குவரத்து போன்ற விடயங்கள் LTTE இல் மட்டுமே தங்கியிருக்க வேண்டியிருந்ததால் மாணவர்கள் இதற்கு விருப்பமின்றிச் சம்மதிக்க வேண்டியிருந்தது. இந்தக் காலகட்டத்தில் தங்களால் தலைமை தாங்கி நடத்தப்படுகின்ற இந்தப் போராட்டத்திற்கு எல்லோரும் ஆதரவு தர வேண்டும் என்று LTTE பொது அழைப்பு விட்டது. இது தொடர்பாக நடு நிலையான விமர்சன அறிக்கையொன்றை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பத்திரிகைகளுக்குக் கொடுத்தது. ROOTE என்ற LTTE கட்டுப்பாட்டிலுள்ள அமைப்பு ஒன்றிலிருந்த சிலர் இந்த அறிக்கை தொடர்பாக மாணவர்களுடன் பேசினர். இந்தப் பேச்சுக்களின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பத்திரிகைக்குக் கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க: மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை இல.6 இலிருந்து

இதழ் ஒன்றில் தூண்டிலின் 3வது நிலை பற்றி நாம்… என் பகுதியில் 3வது நிலைக்கான கோரிக்கைகள் சிலவற்றை முன் வைத்திருந்தோம். அத்துடன் இம்மூன்றாவது நிலையானது எமது மண்ணில் உருவாக முடியாதென்பதால் வெளிநாடுகளில் உள்ள நாம் இம் மூன்றாவது நிலையினை உருவாக்குவதற்கு ஒன்றிணைவது பற்றிக் கேட்டிருந்தோம்.

மேலும் படிக்க: 3 வது நிலை பற்றி …..

சமர் இதழ் ஒன்றிற்கும் இதழ் இரண்டிற்குமிடையே நீண்ட இடைவெளி. இடையே கொக்கட்டிச்சோலையில் குருதிவெள்ளம் நூற்றுக்கணக்கில் மனித உயிர்களைப் பலிகொடுத்தபோது இதயம் இரும்பால் அறையப்படடது. ரஞ்சன் விஜேரத்தினா இறந்துபோனான். “நேர்மையான அரசியல்வாதி”, “ஜனநாயகத்தின் பாதுகாவலன்” என்று வாழ்த்துப் பாடிய கொழும்பு தமிழ் துரோகக் கும்பல்கள் ஒவ்வொரு தமிழனையும் வெட்கித் தலைகுனிய வைத்தன. ராஜீவ்காந்தி கொலை! இதே புகழுரைகள். ஈழம் மறுபடியும் சிரித்துக்கொண்டே அழுதது. தென்னிந்தியாவில் நிறையத் தமிழர்களைக் காணவில்லை. தேடப்பட்டார்கள்! சாகவில்லை@ கொல்லப்பட்டார்கள்! கொழும்பில் குண்டு வெடித்தது இதே நிலை! ஆனையிறவில் ஆயிரக்கணக்கில் பிணக்குவியல்கள் ஒருகாலத்தில் உப்பு விளைந்த நிலம் இன்றைக்கு பிணங்களை விளைவித்துக் கொண்டது. நல்ல இயற்கை உரம் இனிமேல் புற்களும் விளையும்! எமது தாய்நிலம் சுடுகாடு. எமது கலாச்சாரம் கொலைக்கலாச்சாரம், எமது தேசிய தொழில் கடத்தல் மிரட்டல், கொலை, கொள்ளை!

மேலும் படிக்க: உங்களுடன் சமர் - சதித் திட்டமா?

உட்பிரிவுகள்

Load More