பி.இரயாகரன் - சமர்

முன்னெப்போதும் இல்லாதவாறு உலகம் முழுவதும் போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும். அழிவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. நாகரீகம் வளர்ந்து விட்டதாகப் பறைசாற்றப்படுகின்ற இந்த நூற்றாண்டில் மனிதம் செத்துப் போய் பிண வாடை வீசுகின்றது. நிறவெறியர்கள், இனவெறியர்கள், மதவெறியர்கள் என்று வேட்டைக் கும்பல்கள் தமது கோரப்பற்களை மனித குலத்தின் மீது பதிக்க ஆரம்பித்து விட்டன. ஒவ்வொருவரின் மனதிலும் பயம், ஏக்கம், ஆதங்கம்! நாளைய எதிர்காலம் பற்றிய கேள்விக்குறி! மனித குலம் தனது விடுதலைக்கான ஒரு வழியைத் தேடிக் கொள்ள வேண்டிய அவசரத் தேவையை இவை உணர்த்தி நிற்கின்றன. இந்த வழி என்ன? மனிதகுல விடுதலைக்கான தத்துவம் என்ன? சமதர்மம் நிலவியதாகக் கூறப்பட்ட சோவியத் யூனியன் சிதறிச் சின்னாபின்னமாகிப் போய்விட்டது. வியட்நாம், சீனா, கியூபா, நிக்கரகுவா இப்படி எதுவுமே நம்பிக்கையற்றுப் போய்விட்டன. இந்த தோல்விகளுக்கான காரணம் என்ன? நாளை நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? நிச்சயம் இவை தொடர்பான ஆய்வுகள் தேவை. அதுவும் செய்திகளைக் கூடியளவு சேகரித்துக். கொள்ளக் கூடிய ஜரோப்பியச் சூழல் ஒன்றில் வாழ்கின்ற ஒவ்வொரு சமூகப் பற்றுள்ள மனிதனதும் கடமையாகும். இது தொடர்பான ஆய்விற்கு ஒரு வழியைத் திறந்து விடும் நோக்கிலேயே இந்தக் கட்டுரை அமைகின்றது. மாறாக இது ஒரு ஆய்வு அல்ல.

 

மனிதர்கள் வரலாற்றைப் படைப்பதில்லை வரலாறே மனிதர்களைப் படைக்கின்றது. ஆனால் வரலாற்றின் குறித்த கட்டங்களில் ஒரு தனி மனிதனுக்கு ஒரு எல்லை வரையான பாத்திரம் இருந்ததுண்டு. இந்த வகையில் ரஷ்சிய புரட்சி வரலாற்றில் லெனின், ஸ்டாலின், ட்ரொஸ்கி ஆகிய நபர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் சோவியத் ய+னியனின் புரட்சிக்குப் பிந்திய ஆய்வை எங்கிருந்து தெ;hடங்குவது? என்று கேட்டால், ஸ்டாலினிருந்தே தொடங்குவது உகந்தது. ஸ்டாலினைப ;பற்றியதும், ஸ்டாலின் காலகட்டம் பற்றியதுமான விமர்சனம் என்பது இந்த ஆய்விற்கான வழியைத் திறந்து வைக்கும் என நம்புகிறோம்.

 

ஸ்டாலின் தொடர்பாக இரண்டு வகையான போக்குகள் பொதுவாக நிலவுகின்றன.

(1) கண்மூடித் தனமான ஸ்டாலின் வழிபாடு.

(2) ஸ்டாலினை முற்றாக நிராகரித்தல்.

இந்த இரண்டு வகையான போக்கும் அடிப்படையாக தவறானவையாகும். முதலாவதாக ஸ்டாலினின் மீது எந்த தவறும் இல்லை. அப்படி தவறு செய்திருந்தாலும் அது தவிர்க்க முடியாததும், பாதிப்பற்றதுமான தவறு என்று சொல்லப்படுவது தாராளவாத வகைப்பட்டதாகும். ஸ்டாலின் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பதவியை ஏற்ற காலத்திலிருந்தே ஸ்டாலின் மீதான தவறுகள் கம்யூஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாலும் குறிப்பாக லெனினாலும் விமர்சிக்கப்படவையாகும். 1898 இல் இருந்து கட்சி உறுப்பினரான ஸ்டாலின் 1912 போல்ஷ்விக் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரானார். தேசிய இன விவகாரங்களிலும், இராணுவ விவகாரங்களிலும் முக்கிய பங்கு வகித்தவர். தேசிய இனப்பிரச்சனை தொடர்பான தத்துவார்த்தக் கட்டுரை எழுதியதன் மூலம் கட்சியினாலும் லெனினாலும் வெகுவான பாராட்டைப் பெற்றார். தேசிய இன விவகாரக் கமிஸாராக 1917 இல் இருந்து 1923 வரை இருந்தவர். 1922 இல் கட்சியின் மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளராக இருந்தவர். ஸ்டாலின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றதிலிருந்து 1924 இல் லெனின் இறந்து போகும் வரை, லெனினால் நடைமுறைப் பிரச்சனைகளிற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 1953 இல் ஸ்டாலின் இறந்து போன பிறகு ரஷ்யக் கம்யூஸ்ட் கட்சியானது முழுமையாகத் திரிபுவாதத்தில் மூழ்கிப்போனது. ஸ்டாலினுக்குப் பிறகு தலைமையை ஏற்றுக் கொண்ட குருஷேவ்வும் அவருடைய கும்பலும் புரட்சிக் காலத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களல்ல. புரட்சிக் காலத்தில் கட்சியின் முக்கிய பங்கு வகித்த புகாரின், பியத்கோவ் போன்ற இன்னும் பல தலைவர்கள் ஸ்டாலின் மறைவுக்கு முன்னரே கட்சி விரோதச் செயல்களிற்காக கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். இவையெல்லாம் சடுதியாக நிகழ்ந்த திடீர் நிகழ்ச்சிகளல்ல. ஸ்டாலினின் பங்கும் இதில் கருத்தில் கொள்ளப்பட்ட வேண்டியதே!

 

ஸ்டாலினிடம் இருந்த தத்துவார்த்தத் தவறு என்ற பக்கத்தில் தேசியவாதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது என்பதே பொதுவாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சில தடவைகள் விமர்சித்துள்ளது. ஆனால் அன்றைய சர்வதேசிய நிலைமைகளும், தேசிய நிலைமைகளும் இவ்வகையான தேசியவாதத்தின் தேவையை அதிகப்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. மேலும் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாகவும், தேசிய சிறுபான்மை இனங்களின் பிரச்சனை தொடர்பாகவும் ஸ்டாலினின் தத்துவார்த்த தவறுகள் குறித்துக் சுட்டிக் காட்டப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளில் ஸ்டாலினினது நிலை லெனினாலும் கம்யூனிஸ்ட் கட்சியாலும் முன்னமே அங்கீகரிக்கப்பட்டது என்பதும், 1917 இல் இருந்து ஸ்டாலின் தேசிய இன விவகாரங்களுக்கான கமிசாராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய இனப்பிரச்சனையில் ஸ்டாலினின் தத்துவம் தர்க்கரீதியானதும், வரலாற்றுரீதியான அணுகுமுறையுடன் கூடியதுமாகும். இதனை விமர்சிக்க முற்படுகிறவர்கள் எவருமே தேசிய இனங்களுக்கான புதிய தத்துவார்த்த கருத்துக்கள் எதையும் இது வரையில் முன்வைத்ததில்லை.

 

மனிதம் "சுவிஸ்லாந்திலிருந்து வெளிவரும் பத்திரிகை. தனது கட்டுரை ஒன்றில் உடைந்து நொருங்கியிருக்கும் சோவியத் குடியரசுக்கிடையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கோர்பச்செவ் ஈடுபட்டுள்ளார். இந்த புதிய ஒப்பந்தம், குடியரசுகளுக்கிடையில் முழுமையான சுதந்திரத்தை அங்கீகரிக்கின்றது. அதேசமயம், பொருளாதார மேம்பாடு, உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான ஒரு ஜக்கியத்தை வலியுறுத்துகின்றது. இந்த அடிப்படையில் பத்துக் குடியரசுக்களை இணைக்கும் முயற்சியில் கோர்பச்செவ் இறங்கியுள்ளார். இந்த முயற்சி வெற்றி பெறுமாயின், தேசிய இனப் பிரச்சனைக்கு சிறப்பான தீhர்வொன்றை எட்டிய முதல் நாடாக சோவியத் யூனியன் திகழும். ஆனால் இன்று வலுத்து வரும் நெருக்கடிகள் கோர்பச்சேவின் புதிய யூனியனை கட்டிக்காக்குமா என்பது சிந்தனைக்குரியது." என குறிப்பிட்டுள்ளது.

 

தேசிய இனப் பிரச்சனையில் ஒரு தேசிய இனம் தான் சுதந்திரமாகப் பிரிந்து போவதும் சேர்ந்து வாழ்வதும் என்பது அந்த நாட்டின் குறித்த சூழ்நிலைகளிலே தங்கியுள்ளது. எனினும், பொதுவாக ஒடுக்கப்படுகின்ற தேசிய இனம், தனது தேசியத்தை ஏகாதிபத்திய ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்வதை முன்னிறுத்தும் போதே அது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவும். தேவையானதாகவும் அமையும். ஆனால் தனது மூலதனச் சுரண்டலை நோக்கமாகக் கொண்டு ஒரு ஏகாதிபத்தியம் தேசிய இனப் பிரச்சனையைப் பயன்படுத்துமாயின் அது அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். ஆனால் சோவியத் யூனியனில் இந்தப் பிரச்சனை ஏகாதிபத்திய நலன்களின் அடிப்படையிலேயே தொடர்ந்தும் கையாளப்படுகிறது. எனவே இவ் வகைப்பட்ட தீர்வானது தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வில் புதிய குழப்பங்களை ஏற்படுத்தும். ஆனால் நடைமுறைப் பிரச்சனைகளில் ஸ்டாலின் கடைப்பிடித்த போக்கானது , ஸ்டாலின் மறைவுக்குப் பின் கட்சியைத் திரிபுவாத நிலைக்குக் கொண்டு செல்வதிலும், ஒரு அதிகாரக் கூட்டம் வளர்வதிலும் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது.

 

ஸ்டாலினது நடைமுறைத் தவறுகள் தொடர்பாக லெனின் விமர்சனங்களை முன்வைக்கும் போது, ஸ்டாலினை விட அதிக சகிப்புத்தன்மையும், அதிக விசுவாசமும், தோழர்கள் பால் அதிக பரிவுணர்வும், குறைவான தான்தோன்றிப் போக்கும் உடையவரான ஒரு பொதுச் செயலாளரை கம்யூனிஸ்ட் கட்சி பெற வேண்டும் என்றார்.

 

1922 மார்கழி 24ம் திகதி கடிதத்துடன் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

 

ஸ்டாலின் பெரிதும் முரட்டுச் சுபாவமுடையவராய் இருக்கிறார். இந்தக் குறைபாடு நம் மத்தியிலும் கம்யூனிஸ்டுகளாகிய நம்மிடையிலான விவகாரங்களிலும் சகித்துக் கொள்ளக் கூடியதே என்றாலும் பொதுச் செயலாளராய் இருக்கும் ஒருவரிடம் சகிக்க முடியாததாகி விடுகிறது. எனவே தான் ஸ்டாலினை அந்தப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு அவருக்குப் பதில் வேறொருவரை நியமிப்பதற்கான வழி குறித்துத் தோழர்கள் சிந்திக்க வேண்டுமென்று நான் யோசனை கூறுகிறேன். இந்த வேறொருவர் ஏனைய எல்லாவிதத்திலும் தோழர் ஸ்டாலினிடமிருந்து, ஒரேயொரு அனுகூலமுடையவராய் இருப்பதில் மட்டுமே- அதாவது, அதிகச் சகிப்புத் தன்மையும், அதிக விசுவாசமும், தோழர்கள் பால் அதிக நன்னயப் பாங்கும் அதிக பரிவுணர்வும், குறைவான தான்தோன்றிப் போக்கும், இன்ன பிறவும் உடையவராய் இருப்பதில் மட்டுமே வேறுபடுகிறவராக இருத்தல் வேண்டும். இந்த விவரம் கவனியாது ஒதுக்கப்பட வேண்டிய சிறு விவரமாகத் தோன்றலாம். ஆனால் பிளவுக்கு எதிரான காப்பு நடவடிக்கைகளின் கண்ணோட்டத்திலும், ஸ்டாலினுக்கும் திரோஸ்கிக்கும் இடையிலான உறவுநிலை குறித்து மேலே நான் எழுதியதன் கண்ணோட்டத்திலும் இது சிறு விவரமல்ல, தீர்மானகரமான முக்கியத்துவம் பெறக் கூடிய சிறு விவரமாகும். (லெனின்)

இந்த நோக்கு நிலையிலிருந்து நிலைப்பாடுப் பிரச்சனையில் ஸ்டாலினையும் திரோத்ஸ்கியையும் போன்ற மத்தியக் கமிட்டி உறுப்பினர்களே பிரதான காரணக் கூறுகளாய் இருப்பதாய் நான் நினைக்கிறேன். பிளவு ஏற்படும்படியான அபாயத்தில் பெரும் பகுதி இவர்கள் இடையிலான உறவுகளிருந்தே எழுகிறதென்று நினைக்கிறேன். இந்த பிளவு தவிர்க்கபடக் கூடியதே. ஏனைய பலவற்றுடன் கூட மத்திய கமிட்டி உறுப்பினர்களது எண்ணிக்கையை 50 அல்லது 100 ஆக அதிகமாக்குவதானது என் அபிப்பிராயத்தில். இந்த நோக்கம் ஈடேற உதவியாய் இருக்கும். தோழர் ஸ்டாலின் பொதுச்செயலாளராகி விட்டதால் அவர் கையில் வரம்பு கடந்த அதிகாரம் குவிந்திருக்கிறது. இந்த அதிகாரத்தை எப்போதும் அவர் போதுமான எச்சரிக்கை உணர்வுடன் பயன்படுத்தக் கூடியவரா என்பது குறித்து நான் உறுதியாக சொல்வதற்கில்லை. மறுபுறத்தில், தோழர் திரோத்ஸ்கி தனிப்பட வேறுபடுத்திக் காட்டப்படுவது போக்குவரவு மக்கள் கமிசராகம் பற்றிய பிரச்சனையில், மத்திய கமிட்டியை எதிர்த்து அவர் நடத்திய போராட்டம் நிருபித்திருப்பது போல்-- உன்னதச் செயலாற்றலால் மட்டுமல்ல. தற்போதைய மத்திய கமிட்டியில் தனிபட்ட முறையில் அவரே யாவரிலும் வல்லமை வாய்ந்தவர் எனலாம். ஆனால் அவர் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார், பணியில் முழுக்க முழுக்க நிர்வாகத் தன்மையதான தரப்பில் அளவு மீறி மூழ்கிவிடுகிறவராகவும் தம்மைக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

தற்போதைய மத்தியக் கமிட்டியின் இரண்டு சிறந்த தலைவர்களது இவ்விரு இயல்புகளும் மனமறியாத முறையில் பிளவுக்கு இட்டு சென்று விட முடியும். நம் கட்சி இதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிடில், இந்தப் பிளவு எதிர்பாராத விதத்தில் வந்து நேரலாம். ஸ்டாலினது அவசரமும் மற்றும் தூய நிர்வாகத்துடனான அவரது மோகமும் பகிரங்கமான "சோஷலிஸ்டு--தேசியவாதத்தினை|| எதிர்த்த அவரது வன்மமும் சேர்ந்து இங்கு பேராபத்தான ஒரு பாத்திரத்தை வகித்துள்ளன என்று நான் கருதுகிறேன். அரசியலில் வன்மம் பொதுவாக மிகவும் இழிந்ததான பாத்திரமே வகிக்கிறது. மத்திய கமிட்டியின் இளம் உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், புஹாரினையும் பியத்தகோவையும் பற்றிச் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். என் கருத்துப்படி அவர்கள்(யாவரிலும் இளையவர்களில்) தலைசிறந்தவர்கள். அவர்கள் குறித்து, பின்வருவதை மனதில் கொண்டாக வேண்டும். புஹாரின் கட்சியின் மதிப்பு மிக்க ஒரு பிரதான தத்துவார்த்தி மட்டுமன்றி, கட்சி அனைத்தின் அபிமானத்துக்கு உரியவராய் நியாயமாகவே கருதப்பபடுகிறவரும் ஆவாh. ஆனால் அவரது தத்துவார்த்தக் கருத்தோட்டங்களைப் பெரிய நிபந்தனை வரையறைகளுக்கு உட்பட்டே முழு அளவுக்கு மார்க்ஸிய கருத்தோட்டங்களாக வகைப்படுத்த முடியும், ஏனெனில் பண்டித புலமைவாதம் வாய்ந்த ஏதோ ஒன்று அவரிடம் காணப்படுகிறது (இயக்கவியலை அவர் எந்நாளும் அதைப் பூரணமாக உணர்ந்தவரல்ல என்று நினைக்கிறேன்). வி.இ. லெனின்

ஸ்டாலினது இவ்வாறான தான் தோன்றிப் போக்குகள், கம்யூனிஸ்ட் கட்சியின் பல முக்கியமான, உணர்வு பூர்வமான போராளிகளைப் பலி கொண்டதோடு மட்டுமன்றி, ஸ்டாலின் மறைவுக்குபின் குருஷேவ் தலைமையிலான திரிபுவாதக் கும்பல் வளர்ந்து இக்கும்பல் கைகளில் ஆட்சியதிகாரம் சென்றடைந்தது. இது சடுதியாக நிகழ்ந்த திடீர் நிகழ்ச்சியல்ல. ஸ்டாலினது நீண்டகாலத் தலைமைத்துவத்தின் ஒரு விளைவே!

 

ஆனால் இந்த சந்தர்ப்பங்களில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய உள்நாட்டு எதிர்ப்புரட்சி யுத்தங்களும், ஏகாதிபத்திய நாடுகளின் தாக்குதல்களும், சோவியத் சந்தித்திருந்த மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியும் ஸ்டாலினது இந்தப் போக்கை மேலும் ஊக்கப்படுத்தியது எனலாம். இது தவிர, இதற்கான பொறுப்பு ஸ்டாலின் என்ற தனி நபரை மட்டுமல்ல மொத்தக் கம்யூஸ்ட் கட்சியையுமே சார்ந்ததாகும். மறுபுறத்தில் உலகப்பாட்டாளி வர்க்கத்திற்கு ஸ்டாலின் ஆற்றிய சேவையும், ஸ்டாலினது தத்துவங்களும், இரண்டாம் உலகப்போருக்கு முற்பட்ட காலப்பகுதியில், ஏகாதிபத்தியங்களை விட 100 ஆண்டுகள் பின் தங்கியிருந்த சோவியத் தொழில் துறை, கிட்டத்தட்டக் குறுகிய காலத்தில், ஏகாதிபத்தியங்களுடன் போட்டி போடுகின்ற அளவுக்கு வளர்ந்தது. முப்பதிற்;குப் பிந்திய கால கட்டங்களில் சோவியத்தின் தொழில்துறை, ஏகாதிபத்தியங்கள் திகைக்கும் அளவிற்கு வளர்ந்தது.

 

உலகத்தில் முதன் முதலாக ஒரு நாட்டில் மார்க்ஸிசத்தின் பொதுவான தத்துவங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன சமூகத்தில் இருந்த பகை முரண்பாடுகள் அழிக்கப்பட்டு சோஷலிசம் கருக்கட்டத் தொடங்கியிருந்தது. இந்த நிலையில் உலகம் மறுபடி ஒரு அழிவைச் சந்தித்தது. இராண்டாம் உலக யுத்தம் அரங்கேறியது. இந்த நிலையில் 2 அவுன்ஸ் பாணை மட்டுமே உணவாக உட்கொண்டிருந்த சோவியத் மக்களின் மிகப் பெரும் தியாக யுத்தம், ஸ்டாலின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியால் நடத்தப்பட்டது. இந்த மக்களின் அளப்பொரும் தியாகங்களினால் மட்டுமே உலகம் அழிவின் விளிம்பிலிருந்து இழுத்தெடுக்கபட்டது. இந்தக் கட்டத்தில் சோவியத் பொருளாதாரம் இராணுவமயமானதாக்கப்பட்டது. நாட்டின் அனைத்துச் செயற்பாடுகளும் இராணுவத் தன்மை கொண்டதாக்கப்பட்டது. தேசத்தின் ஒழுங்கமைப்பு முழுவதுமே ஒரு இராணுவ ஒழுங்கமைப்புக்கு ஒத்திருந்தது. இந்த நிலையில் கட்சி, அனைத்தையும் நிர்வகிக்கும் ஒரு அமைப்பாக மாற்றப்பட்டது. இதனால் கட்சியையும் நாட்டையும் நிர்வகித்த ஸ்டாலினது கைகளில் மொத்த அதிகாரங்களும் குவிந்து போனது. இந்த நிலையில் லெனினால் முன்னமே விமர்சிக்கப்பட்ட ஸ்டாலினின் தான்தோன்றித்தனமான போக்குகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இதில் இரண்டு முக்கியமான பாதிப்புகள் நிகழ்ந்திருக்கலாம்.

 

(1) கட்சியினதும் தேசத்தினதும் நிர்வாக ஒழுங்கமைப்பு.

(2)பாட்டாளி வர்க்க சர்வதேசியத்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்தும்.

 

முதலாவதாக, கட்சியின் இந்த இராணுவத் தன்மையான ஒழுங்கமைப்பு எந்த அளவுக்கு முக்கியமானதென்பது ஆய்வுக்குரியதே! இரண்டாவதாக சோவியத்தில் புரட்சியின் வளர்ச்சிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, கிழக்கு ஜரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் உருவாகியிருந்த புரட்சிகர சூழலை வளர்த்தெடுப்பதற்க்கு ஏன் கொடுக்கப்படவில்லை அல்லது எந்தளவிற்கு கொடுக்கப்பட்டது என்பதும் ஆய்விற்குரியதே!

 

இவ்வாறான தவறுகளை விமர்சிக்கிறோம் என்பதற்காக, ஸ்டாலினின் மாபெரும் தத்துவங்களையும் உலக மக்களுக்கு ஸ்டாலின் ஆற்றிய சேவைகளையும் மறுக்கின்றோம் என்று அர்த்தப்படுத்தக் கூடாது. இவை தவிர சோவியத்தில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கு ஒத்த அதன் கலாச்சார மாற்றங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட சமூகத்தின் அரசியல் பொருளாதார நிலைமைகளின் பிரதிபலிப்பே, ஆனால் கலாச்சாரம், சமூகத்தின் அரசியல், பொருளாதார நிலைமைகளின் மீது பெரும் செல்வாக்கு வகிக்கிறது. (மாவோ)

நாம் ஒதுக்கி அப்புறப்படுத்த விரும்பும் பழைய கலாச்சாரம், நமது நாட்டின் பழைய அரசியல் பொருளாதார அமைப்பில் இருந்து தனித்துப் பிரிக்க முடியாது என்பதும், நாம் உருவாக்க முனையும் புதிய கலாச்சாரமானது புதிய அரசியல், புதியபொருளாதாரம் ஆகியவற்றிடமிருந்து தனித்து பிரிக்க முடியாது எனபதும் மிகத் தெளிவாகும். பழைய அரசியலும், பழைய பொருளாதாரமுமே பழைய கலாச்சாரத்தின் அடிப்படையாகும். அதே போல் புதிய அரசியலும் புதிய பொருளாதாரமுமே புதிய கலாச்சாரத்தின் அடிப்படையாகும்.(மாவோ)

 

மூன்றாம் உலக நாடுகளில் நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பு நிலவிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்திலேயே அங்கு ஏகாதிபத்தியங்களால் முதலாளித்துவம் திணிக்கப்பட்டது. அப்போது முதலாளித்துவம் தனக்கே உரித்தான சில முற்போக்கு அம்சங்களையும் சேர்த்தே கொண்டுவந்தது. எல்லோருக்கும் தொழில் வாய்ப்பு, எல்லோருக்கும் கல்வி, விரும்புபவர் விரும்பிய உடையை அணிதல், விரும்பிய இடத்தில் விரும்பியவர் வாழுதல் என்ற கோஷங்களை முன் நிறுத்தியது. குறிப்பிட்ட சாதியினருக்குக் குறித்த தொழில், குறித்த மேலானோருக்கு மட்டும் கல்வி என்று ஒழுங்கமைக்கப்பட்ட சமூக அமைப்பானது இந்த ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க சுரண்டலுடன் கூடவே வந்த முற்போக்கான அம்சங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தது. உயர்த்தப்பட்டோர் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் உருவாகியிருந்த தேவைகளின் அடிப்படையில் சமனான கல்விவாய்ப்புக்களை எல்லா மட்டத்திலிருந்தோரும் பயன்படுத்தினர். ஒரளவு திறமை அடிப்படையிலான தொழில் வாய்ப்புகள் உருவாகின. ஆனால் மீண்டும் பணம் படைத்தோரிடமே அதிகாரங்கள் குவிந்திருந்தன. தீர்மானிக்கும் சக்தியாக அவர்களே விளங்கினார்கள். இதனால் முன்னைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் பிழையான பகுதிகள் அழியாமலும், முதாலாளித்துவத்தின் சில பகுதிகளைச் சேர்த்துக்கொண்டதுமான ஒரு கூழான புதிய சமூக அமைப்பு ஒன்று உருவாகியது. இது முற்றிலுமான நிலப் பிரபுத்துவக் கலாச்சார அம்சங்களைக் கொண்டதாகவோ இருக்கவில்லை. புரட்சிக்கு முந்திய சோவியத்ய+னியன் முற்றாக முதலாளித்துவம் வளர்ச்சியடையாத, முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நிலையில் இருந்த ஒரு நாடாக இருந்தது. எனவே அது முதலாளித்துவத்தின் முற்போக்கான அம்சங்களைக் கூட அது வரை கண்டிருக்கவில்லை. நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தில் இருந்து முற்றாக விடுபட்டிருக்கவில்லை. இந்த நிலையில் தான் சோவியத்தில் சோஷலிசப் புரட்சி அரங்கேறியது. இந்த சோஷலிசப் புரட்சி ஏற்படுத்திய அரசியல், பொருளாதார சமூக மாற்றத்திற்கு ஒத்ததான கலாச்சார மாற்றமும் சோவியத்தில் எந்த அளவிற்கு முக்கியத்துவப்படுத்தப்பட்டது என்பதையும் கருத்தில் கொண்டே சோவியத்தின் தோல்வி சம்மந்தமான ஒரு ஆய்வை பூரணப்படுத்த முடியும். முற்றாக முதலாளித்துவம் வளர்ச்சியடையாத சூழலில் முதலாளித்துவக் கலாச்சாரத்தின் முற்போக்கான அம்சங்களைக் கூடக் கண்டிராத ஒரு மக்கள் கூட்டம் கம்யூனிசக் கலாச்சாரத்தை நோக்கி வளர்த்;தெடுக்கும் போது தோன்றக் கூடிய இந்த பிரச்சனைகளை நடந்து முடிந்த சில தர்க்கங்கள் கலாச்சார வெளிப்பாடுகளுக்கூடாக நாம் காணமுடியும். பெருவீத சாகுபடிக்கு எதிரான விவசாயிகளின் தப்பெண்ணம் இன்றும் கூட நீடிக்கின்றது. பெரிய பண்ணை இருக்குமானால் அவன் ஒரு பண்ணையாளனாகவே மறுபடியும் ஆகிவிட முடியும் என்று கருதுகிறான். ஆனால் பெருவீத சாகுபடி முறை பற்றிய விவசாயியின் கருத்து ஒருவித பகைமை உணர்ச்சியுடனும் நிலப்பிரபுக்கள் எவ்வாறு மக்களை ஒடுக்கினார்கள் என்பதின் நினைவுகளோடும் பந்தமுடையது. அந்த உணர்வு இன்னும் நீடிக்கின்றது. அது மறைந்து விடவில்லை இங்கு நிலைமையின் மெய்யியல்பு காரணமாகவே பலவந்த முறைகளால் எதையும் சாதிக்க முடியாது என்ற உண்மைக் குறிப்பாயும் அடிப்படையாகவும் கொண்டு நாம் செயற்படவேண்டும். (லெனின்)

 

இவ்வாறான மனநிலைகள் லெனின் காலத்திலிருந்தே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன. இவை தவிர ஸ்டாலின் காலத்தில் தடை செய்யப்பட்ட ஒபெரா நாடகப்பாணியிலான இசைகளிலும் அக்கால கட்டங்களில் உள்ள ரஷ்சிய திரைப்படங்கள் சிலவற்றிலும் பெண்கள் தொடர்பானதும் குடும்பம் தொடர்பானதும் எனப் பல கலாசாரப் பிரச்சனைகள் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் லெனின் காலத்தில் மூச்சுவிடும் நேரம் என்று வர்ணிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. முதலாளித்துவம் முற்றாக வளர்ச்சியடையாத ஒரு சமூகத்தில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான வளர்ச்சியின் மட்டத்தில் வித்தியாசம் இருக்கும். முதலாளித்துவ சந்தையை நோக்கி இறுக்கமாகப் பிணைக்கப்படும் போது இந்த வித்தியாசங்கள் அகற்றப்படும். இவ்வாறான முதலாளித்துவம் வளர்ச்சியடையாத சூழலில், இந்த வளர்ச்சி மட்ட வித்தியாசங்களை அகற்றும் ஒரு இடைக்காலமாக முதலாளித்துவச் சந்தையின் சில பகுதிகளைத் தொடர்ந்து பேணுதல் என்ற கொள்கை முன்வைக்கப்பட்டது. இதன் தாக்கங்களும் இதன் பிறகு ஸ்டாலினால் முன்வைக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளும் ஆய்விற்குரியனவே!

 

ஸ்டாலின் மறைவிற்குப் பின்னைய திரிபுவாத கட்சிகள் பற்றியும், அதன் தவறான போக்குகள் பற்றியும், சீனக் கம்யூஸ்ட் கட்சி ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைத்திருந்த போதிலும், சோவியத்தின் இந்தத் திடீர் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்து இருக்கக் கூடும் என்பது பற்றி சரியான ஒரு ஆய்வு முன் வைக்கப்படவில்லை. உபரி தானிய சுவீகரிப்பிற்குப் பதிலாகப் பண்ட வடிவிலான வரியை அறவிடுவது என்ற நடவடிக்கையைப் பின்பற்றிய போது லெனின் பின்வறுமாறு கூறுகின்றார் உலகப் புரட்சி தயக்கமடைவதன் காரணமாக ரஷ்சியாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நீடித்துப் பேணி வைத்திருப்பது சாத்தியமல்ல. இதை நாம் தெளிவாக உணர வேண்டும்.

 

இவ்வாறான ஒரு சாத்தியமல்லாத தன்மையை வெற்றி கொள்வதற்காகவே, உபரித் தானியத்தை சுவீகரிப்பதற்குப் பதிலாக, தனிப்பட்ட பரிவர்த்தனையை அனுமதிக்கின்ற பண்ட வடிவிலான வரிவிதிப்பு முறையை அரசு ஏற்படுத்திற்று. இது ஒரு இடைக்கட்ட நடவடிக்கையாகவே கைக்கொள்ளப்பட்டது. விவசாயிகளில் பெரும் பகுதியினரான நடுத்தர விவசாயிகளைத் திருப்தி செய்ய வேண்டும் என்று கூறுகிற இந்த அறிக்கை கட்டற்ற பரிவர்த்தனையை அனுமதிப்பதை நியாப்படுத்துகின்றது. மேலும் இது பற்றிக் கூறுகையில், உபரி சுவீகரிப்பு என்பது எல்லா உபரிகளையும் பறிமுதல் செய்தலையும் கட்டாய அரசு ஏகபோகம் நிலைநாட்டப் படுவதையும் உணர்த்துகிறது. நாம் வேறு வழியில் எதையும் செய்ய முடியாது. நமது தேவை மிகவும் மிகுதியானது. தத்துவார்த்த முறையில் கூறினால் சோஷலிசத்தின் நலன்களில் நோக்கு நிலையிலிருந்து அரசு, ஏகபோகம் ஆகச் சிறந்த இன்றியமையாத அமைப்பு முறையல்ல என்கிறது. இங்கே உலகப் புரட்சி மேலும் தாமதமடைந்தும் லெனினுக்குப் பிந்திய பொருளாதாரக் கொள்கைகளில் அரசு ஏகபோகத்தை அதிகளவு வளர்க்குமளவிற்கு இருந்த பரிவர்த்தனை முறை விநியோக முறை சார்ந்த குறைபாடுகள் தொடர்பான பிரச்சனைகளையும் சோவியத் தொடர்பான ஆய்வில் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

1991 ஆண்டு ஆவணி 19ம் திகதியில் இருந்து 61 மணித்தியாலங்கள் மட்டுமே நீடித்த இந்த திடீர் சதி முயற்சி சோவியத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்க முடியாத ஒன்றாகும். சோவியத்தில் கோர்பச்செவ் ஏற்படுத்திய மாற்றத்திற்கு எதிரான மறுபடி கட்சி சார்ந்த ஒரு சில நபர்களின் சர்வாதிகாரத்தை ஏற்படுத்த முயன்ற குழுவே இச்சதி முயற்சியின் சூத்திரதாரிகளாவர். ஆனால் இன்றைய நிலையில் சோவியத்தின் உருக்குலைந்த ஏகாதிபத்தியத் தன்மை வாய்ந்த அரசு தனது இருப்பை நிலைநிறுத்த முடியாமல் போனது இயல்பானதே. இன்றைக்கு சோவியத்தின் பெரும் பகுதி சந்தைகளை அமெரிக்காவும் ஜப்பானும் ஜெர்மனியும் போட்டிபோட்டுக் கொண்டு ஆக்கிரமித்து விட்டன.

 

இன்றைக்கு உலகில் பெரிய பங்குச் சந்தையை யப்பானே கொண்டுள்ளது. உலகின் பெரிய எட்டு வங்கிகளில் ஏழு யப்பானுடையதாகும். உலகில் 100 முன்னணி வங்கிகளில் 25 வங்கிகள் யப்பானுடையதாகும். சோவியத்தின் மூன்றாம் உலக நாடுகளிற்கான ஆயுத வினியோகத்தில் பெரும் பகுதியை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. யப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்த உக்கிரமான பொருளாதாரப் போட்டிக்குள் சோவியத் யூனியன் அடியுண்டு போனதின் ஓரு தவிர்க்க முடியாத விளைவு தான் இன்றைய சோவியத்யூனியன். இதன் வெளிப்பாடுதான் பெரஸ்ர ரொய்காவும், கிளாஸ்னோவ்வும். ஜக்கிய ஜரோப்பாவும் கூட ஜப்பானுடைய இந்த வளர்ச்சி இனிமேலும் பல வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளையும் சோவியத்தின் வறுமை நிலைக்கு தள்ளி விடலாம்.

 

லெனின் தலைமையிலான கட்சி ஜேர்மனியுடன் ஒப்பந்தம் செய்வதை எதிர்த்த ட்ரொஸ்கி குழுவினரும் வேறு குழுக்களும் இது உலகப்புரட்சிக்குச் செய்யும் துரோகமென முழங்கினர். இது குறித்து லெனின் விளக்குகையில் உலகில் சோஷலிசப் புரட்சி சாத்தியாகுமெனில் முதலில் ரஷ்சியா பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறார். ரஷ்சியா தோல்வியடையுமாயின் அது உலகப்பாட்டாளி வர்க்கத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையீனத்தைத் தோற்றுவிக்கும் என்றார். ஆனால் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர் ரஷ்சியா தோல்வியடைந்துவிட்டது. அது கோர்பச்செவ் காலத்தில் நடந்தது அல்ல. எனவே இன்றைக்கு இது குறித்து நம்பிக்கை இழப்பவர்கள் வரலாறு குறித்து நம்பிக்கையற்றவர்களாக இருக்க முடியும்.

 

ஆனால் இன்றைக்கு இத் தோல்வி குறித்து ரஷ்யா உள்ளேயே ஆக்கபூர்வமான கருத்து விவாதங்களும் நம்பிக்கை தரும் முன்னறிவிப்புகளும் ரஷ்யாவினுள் இருந்தே வெளிவருகின்றன. இன்றைக்குப் பொருளாதார நெருக்கடிக்கு கோர்பச்செவ்வைக் காரணம் காட்டி யெல்ரினைத் தூக்கி நிறுத்தும் முதலாளித்துவப் பச்சோந்திகளின் நாடகங்கள் நீண்ட காலத்திற்கு நிலைக்க முடியாத அளவிற்கு ரஷ்யாவினுள் பொருளாதார நெருக்கடிகள் வளர்ந்து விட்டன. பெரஸ்ரொய்க்காவிற்குப் பிறகு ர்;ஷ்யாவின் சந்து பொந்துகளெல்லாம் திறக்கப்பட்ட அமெரிக்கச் சாப்பாட்டுகடையான (Mc Donalds) இல் இன்னும் நீண்ட காலத்திற்குப் பணம் படைத்தவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்க முடியாது.

 

ரஷ்ய மக்கள் அங்கிருந்த அரசுகளிற்கு எதிராகவே கோஷம் எழுப்புகின்றார்கள். கம்யூனிச சித்தாந்தத்திற்கு எதிராக அல்ல. லெனின் சிலைகள் ரஸ்யாவில் உடைக்கப்பட்ட பிறகு லெனினின் பூதவுடலும் அழிக்கப்படலாம் என்ற பயத்தில் முண்டியடித்துக் கொண்டு அஞ்சலி செலுத்தச் சென்ற மக்கள் கூட்டம் தான் கோர்பச்செவ்வை விடுவிக்கவும் செய்தது.

 

எப்போது உடைபடுமென ஒரு உடைபடாமல் கிடந்த லெனின் சிலையைச் சுற்றிப் பத்திரிகையாளர்கள் காவல் நின்ற போது, காரில் வந்திறங்கிய ஒரு பெண் அந்த சிலைக்கு மலர்களைத் தூவிவிட்டு ரஷ்யர்கள் துரோகிகள் அல்லர் என்று ஒரு சொற்பொழிவையே ஆற்றிய போது அந்த மக்கள் கூட்டம் மௌனமாக கலைந்து சென்றது.

 

இரண்டாவது மாநிலமான உக்ரேயின் மாநிலத்தின் முதல்வர் இந்த ஆட்சி ஜார் ஆட்சிக்கு ஒத்ததே என கூறி அறிக்கை விடுத்தார்.

 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி காட்டரின் ஆலோசகர் சிமின நியூபிளசெயிகன் சதி பற்றி குறிப்பிடுகையில் சோவியத்தில் மாநிலங்கள் பிரிகின்றன கோர்பச்சொவ்வின் ஆட்சி அழியப்போகின்றது. ரஷ்ய சம்மேளனத் தலைவர் பெரிஸ் யெல்ஸ்ரினின் செல்வாக்கு அதிகரிக்கிறது சோவியத் யூனியன் அழியப்போகிறது. விரைவில் புரட்சி ஒன்றை எதிர்பார்க்கலாம். அது மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று அச்சம் தெரிவிக்கின்றார்.

 

கோடிக்கணக்கான கட்சி ஊழியர்களையும் ஒரு சோஷலிச வரலாற்றுப் பாரம்பரியத்தையும் கொண்ட மக்கள் கூட்டத்தை சோவியத் யூனியன் கொண்டுள்ளது. திரிபுவாதிகளின் திரிபுகள் எல்லாம் பொருளாதார நெருக்கடிகளைக் கொண்டு வந்து விட்டது. இந்த நிலையில் சோவியத்தில் மறுபடி ஒரு புரட்சிக்கான முன்னறிவிப்புகள் கேட்கின்றன. இது வெகு தொலைவில் இல்லையென்றே நம்பலாம்.

 

இந்த நிலையில் சமூக உணர்வுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் ஸ்தாபனங்களும் சோவியத் யூனியன் சம்மந்தமாக ஆய்வொன்றை தீவிரத்துடன் மேறகொள்வது மிகவும் அவசியமானது. அதுவும் செய்திகளைக் கூடியளவு சேகரித்துக் கொள்ளக் கூடிய ஜரோப்பிய சூழலில் வாழ்கின்ற நாம் இதனை எமது எதிர்கால சமூகத்திற்கு வழங்குவது மிகவும் பயனுள்ளதாக அமையும். ஜரோப்பாவில் இருந்து வெளிவருகின்ற அரசியல் சஞ்சிகைகள் இந்தப் பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டால் நாளைய புதிய சமுதாயத்துக்கு கவிதைகளையும் சிறுகதைகளையும் விட மேலும் வலுவுள்ளதாக அமையும் என நம்புகின்றோம்.

 

 

குடும்ப ஆட்சி, தனிமனித சர்வாதிகாரம் ஆட்சி வடிவங்களாக பல நாடுகளில் நடந்தன. நடக்கின்றன. இதில் நமது நாடும் விதி விலக்கல்ல. இச் சர்வாதிகாரிகள் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளைக் கூட அளிக்க மறுப்பதால் இங்கே வர்க்க சார்பின்றி மக்கள் போராட வேண்டிய நிர்ப்பந்தம் இயல்பாகிறது. இச் சூழ்நிலையின் முரண்பாட்டை தெளிவான நெறிப்படுத்தலினூடாக அரசை நோக்கிப் போராடும்படி மக்களை வழி நடத்த தேச விடுதலைக் கட்சிகள் காத்திருப்பதும், சூழ்நிலையைப் பயன்படுத்தி இக் கட்சிகள் தேசத்தின் விடுதலையில் கணிசமான முன்னேற்றம் அடைகின்றனர் அல்லது அடுத்த கட்ட நகர்வுக்கு அனுபவத்தைப் பெறுகின்றனர் என்பதைப் பல நாடுகளின் வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது.

 

நமது தேசத்தைப் பொறுத்தவரையில் தேச விடுதலை பற்றிய நோக்குள்ள முனைப்புக்கள் ஆங்காங்கே உதிரியாயிருப்பது நமக்குத் தெரிகின்ற போதிலும், தற்போதைய அரசுக்குள்ளும், பாராளுமன்றத்திலும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டால் வெளிவந்து கொண்டிருக்கும் கொலைகளையும், தேசத்துரோகத்தையும், சர்வாதிகாரத்தின் உச்சநிலை ஆட்சியையும், நாட்டின் கடைசிக் குடிமகனும் ஆளும் கும்பல் பற்றி அறிந்து கொண்ட இவ்வேளையில், இவ் முரண்பாட்டைப் பயன்படுத்த எந்தவொரு தேச விடுதலை ஸ்தாபனமும் இல்லாதிருப்பதை விடுதலையை நேசிக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளும் உணரவேண்டிய நேரமிது.

 

இலங்கையில் தொடர்ச்சியான சிங்களப் பேரினவாத ஆட்சியால் இன முரண்பாடு கூர்மையடைந்துள்ள இவ்வேளையில் ஜனாதிபதி ஆட்சி முறைக்கெதிராகவும், பிரேமதாஸா மீதான அரசியல் குற்றப் பட்டியலையும் சி.சு.க, ல.ச.ச.க, ம.ஐ.மு, .ஐ.சோ.மு, ஈ.ம.வி.மு, இ.தொ.கா. ஆகிய கட்சிகளோடு இணைந்து ஐ.தே.க யின் முக்கிய தலைவர்களான காமினி திசநாயக்கா, அத்துலத்முதலி ஆகியோர் உட்பட46 ஐ.தே.க உறுப்பினர்களும் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் சமர்ப்பித்ததற்கான அரசியல் பின்னணியை ஆராய்வது அவசியமானதே.

 

ஜே.ஆர். ஜனாதிபதியாக இருந்த போது கட்சிக்குள்ளும் பராளுமன்றத்திலும் இரண்டு சம எண்ணிக்கையுள்ள குழுக்கள் ஜே.ஆர் இற்கும் பிரேமதாஸாவுக்கும் இருந்தது. பிரேமாவுக்கு அப்போது நாட்டின் தலைவர் என்னும் பதவி இல்லாமலிருந்த போதிலும், நடுத்தர வர்க்கத்தையும், அதற்கு கீழ்ப்பட்டவரையும் கவரும் தன்மை கொண்ட சிங்களமொழி பேச்சுவன்மையும் தனது வளர்ச்சிக்காக அவர் உழைத்த சளையாத சாகச உழைப்புமேயாகும்.

 

இதன் நிமித்தம் ஜே.ஆர். அரசில் பிரதமர் பதவியும், பின்னர் ஜனாதிபதி வேட்பாளராகவும் ஜே.ஆர் உம் கட்சியும் விரும்பியோ விரும்பாமலோ அனுமதிக்க வேண்டியேற்பட்டது என்றால் அது மிகையாகாது. (பிரேமதாஸாவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜே.ஆர். தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஐ.தே.க. வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டதாகவும், பிரேமதாஸா என்னும் பெயரை உச்சரிக்காமலே அதிருப்தியைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.) கட்சியில் அரைவாசிப்பேரும் ஜே.ஆரும் தனக்கு நேர் எதிராக முன்கூட்டியே இயங்குவதை அறிந்து கொண்ட பிரேமதாஸா, பாராளுமன்றத் தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடத்துவது என்னும் இழுபறியில் ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்து, அனைத்து அதிருப்தியாளர்களையும் தனது வெற்றிக்காக உழைக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தினார் என்பது சரியானதே. ஜே.ஆர் குழுவில் இருந்த லலித், காமினி ஆகியோருக்கும் பிரோமதாஸாவுக்கும் குழுநிலைவாத முரண்பாடு இருந்தபோதும் குறைந்த பட்சம் பிரதமர் பதவியையாவது எட்டிப் பிடித்தால் அடுத்த கட்டம் நாட்டின் தலைவர் பதவிக்குத் தாவிவிடலாம் என்று காத்திருந்தோர் மிகவும் ஏமாந்து போயினர். ஜே.ஆர், பிரேமா ஆகியோரின் சிங்களப் பேரினவாத, மேற்கத்தைய பொருளாதார ஆட்சி அமைப்பு முறையில் சகல உடன்பாடுகளும் உள்ள லலித் குழு, அதிகாரத்தில் பங்கோ, எதிர்கால வாரிசு என்னும் இடமோ, கிடைக்காததால், பாராளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் தேவை, ஜனாதிபதி ஆட்சி முறையின் கீழ் அதிகாரம் ஒரு தனிமனிதனிடம் போய் விடுகிறது, இங்கே ஜனநாயகம் இல்லை, சர்வாதிகாரம் நடக்கின்றது என்று சந்தர்ப்பவாதத் தனத்தோடு கூச்சலிடுவது மக்களின் அழிவு பற்றி அறிந்து கொள்ளாத கேலி அரசியலாகும். இலங்கையில் சிங்கள அரசியல் தலைமைகள் அனைத்தும் அரசு மாற்றம், தேர்தல் பிரச்சாரம், புரட்சி, கட்சியின் தலைமை மாற்றம், எதுவாக இருந்தாலும் இனவாதம் பேசிச் சாதிப்பது மரபுவழிச் செயல் போன்றே பேசிச் சாதித்துள்ளனர். இதே வழிமுறையை நழுவவிடாது லலித் குழுவினரும் இப்போது அதிகாரப் போட்டிக்குப் பயன்படுத்துவது இவர்களின் அரசியல் மரபாக இருந்த போதிலும் தொடர்ந்தும் இனங்களுக்கிடையிலான விரிசலையும் தேசிய இனங்களின் உரிமைகட்கெதிராகவும் எடுக்கும் நடவடிக்கையாக அனைத்து மக்களும் இவர்களை இனம் காணவேண்டும்.

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகார வரம்புகளைத் தீர்மானிப்பதில் ஜே.ஆர் தன்னோடு ஏற்படுத்திக் கொண்ட குழுவில் பிரோமதாஸா, லலித், கமினி ஆகியோரை இச் சூழ்நிலையில் குறிபிடத் தக்கவர்களாகக் கருதலாம். ஜே.ஆர் தலைமையில் நடந்த பௌத்த சிங்களப் பேரினவாத அரசில் அதிமுக்கியமாக சுயநிர்ணய உரிமை கோரும் தமிழ் தேசிய இனத்தை ஒடுக்கக் கூடிய சட்டங்களும் தொழிலாளர்கட்கும், பத்திரிகையாளர், எதிர்க்கருத்துள்ளோரை ஒடுக்கும் சட்டங்களும்(6வது திருத்தச்சட்டம்) இயற்றப்பட்டதோடு, இவர்கட்கெதிராக அரச இயந்திரமும் படைகளும் முடுக்கி விடப்பட்டன. வேலை நிறுத்தம் செய்யும் உரிமை ரத்து(ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் செய்ததால் 40,000 பேர் வேலை இழந்தனர்) அப்பாவித் தமிழ் மக்கள் மீது குண்டு வீசித் தாக்கி பல்லாயிரம் பேரைக்கொன்றொழித்தமை, தமிழ்ப் பிரதேசங்கள் மீது திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தியபோதெல்லாம் பாராளுமன்றத்தில் எந்தவித விவாதங்களோ சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயமான முடிபுகளை அறியாமல் ஜனாதிபதி செயலகம் காலால் இட்டபணியை தலையால் செய்து முடித்த குழுவினர் தான் தற்போது ஜனநாயகத்துக்காக இனவாதம் பேசுகின்றனர் என்பதை நாம் உணர வேண்டும்.

 

அதன் பின் வந்த பிரேமதாஸாவின் தலைமையின் கீழும் தெற்கில் பல்லாயிரம் இளைஞர்கள் பழைய ரயர்கட்கு இரையாகிய போதும் (எம்.பி) சரத்முத்தட்டுகம படுகொலை செய்யப்பட்டபோதும், ரிச்சர்ட் டீ சொய்சா கொலை செய்யப்பட்ட போதும், பிரேமதாஸாவின் வேண்டுதலுக்காக விடுதலைப் புலிகள் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்றோரை கொலை செய்த போதும், ரோகண விஜவீர, உபதிஸ்ச கமநாயக்கா போன்றோரைக் கொலை செய்த போதும், விஜய குமாரணதுங்க கொலை செய்யப்பட்ட போதும. இவ் ஆளும் கும்பல் கருத்தொருமித்தவர்களாகவே இருந்தனர். பாராளுமன்ற ஆட்சி அமைப்பில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் கருத்துக்கள் கணிசமான அளவு செயல் வடிவம் பெறாமல் போன போதும் முக்கியமான விடயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி அமைப்பு முறை, சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாசைகளை பூரணமாக நிராகரிக்கும் தனி மனித பலம் கொண்டவை என்பதில் லலித் குழு உட்ப்பட அனைத்து ஆட்சியாளர்கட்கும் மறைமுகமான திருப்தி அப்போது இருந்ததை நாம் மறந்து விடலாகாது.

 

சிறுபான்மைத் தேசிய இனங்களின் எதுவித நலனையும் கவனத்திற் கொள்ளாது இனவாதிகள் தொடர்ந்தும் இனவாதத்தையே பேசும் போதும் ஈ.ம.பு.வி.மு. யினர் தொடர்ந்தும் தங்கள் இந்திய எஜமானர்களின் கட்டளைப்படியே நடந்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. பிரேமதாஸா மீதான அரசியல் குற்றப் பட்டியலை விவாதத்திற்கெடுத்து நிச்சயம் விவாதிக்கப் போவதாகச் சூழுரைத்த சபாநாயகர் மொகமட், சட்டமா அதிபரின் ஆலோசனை தன்னைக் கட்டுப்படுத்தப் போவதில்லை என்று ஜனாதிபதிக்கு மூன்று கடிதங்களையும் அனுப்பி உறுதியளித்தார்.

 

பிரேமதாஸாவின் அதிரடி அரசியல் நடவடிக்கையின் வெள்ளோட்டமாகத் தொண்டமானைத் தூதனுப்பியவுடன், சபாநாயகருக்கு அரசியமைப்பும், பாராளுமன்ற ஒழுங்கு முறையும் மறந்து உயிர் பற்றிய பயம் வந்துவிட்டது போலும்......... சட்டமா அதிபரின் ஆலோசனையை ஏற்று மனு காலாவதியாகிவிட்டதாக அறிவித்துள்ளார். அரசியல் அமைப்புச் சட்டம், பாராளுமன்ற மரபு அனைத்தையும் பிரேமதாஸா தன் முன் மண்டியிட வைத்துள்ளார் என்பது சரியானதே.

 

பிரேமதாஸாவின் மனித உரிமை மீறல், அரசியல் குற்ற நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம், படுகொலைகள், லஞ்ச ஊழல் ஆகியவை அனைத்தும் அம்பலத்திற்க்கு வந்துள்ள இவ்வேளையில், இந்த அதிருப்தி நிலையை வென்றெடுத்து தனது பதவியையும் அரசையும் நிலைக்க வைக்க, தமிழ் மக்கள் மீதும் குடாநாட்டின் மீதும் உக்கிரமான இராணுவத் தாக்குதலில் ஈடுபட்ள்ளார்.

 

இந்த நடவடிக்கையால் ஏற்படும் அப்பாவி தமிழ் மக்களின் கொலைகளைக் கண்டு சிங்கள மக்கள் திருப்தியடைவார்களானால் அவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதோடு பிரேமதாஸாவின் அரசும் நீடிக்கும்.

 

ஒரு மாபெரும் சர்வாதிகாரி நமது நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் மக்கள் முற்று முழுதாக அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.

 

கடுமையான போர்ச் சூழலில் வாழும் இன்றைய தமிழ் மக்களின் வாழ்நிலையில் இருந்து ஒப்பிட்டு ரீதியாகப் பார்க்கும் போது, சிங்கள மக்கள் ஓரளவு அமைதியாக சூழ்நிலையில் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம். இதைத் தமிழர்கள் வாழும் போர்ச் சூழலில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார அழிப்புக்களை கவனத்தில் கொள்ளாது, இனவாத இராணுவத்தினாலும், பாசிச இயக்கங்களாலும் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ்மக்களினதும் போராளிகளினதும், மொத்த எண்ணிக்கையிலும் பார்க்க ஒப்பிட்டளவில் இருமடங்கு சிங்கள இளைஞர்களை பிரேமதாஸா அரசு குறுகிய காலத்துக்குள் கொன்றொழித்ததை நாம் அனைவரும் அறிவோம். இது எப்படி நடந்தது. இவ்வளவு மனித உயிர்களையும் எதிர்யுத்தம் புரியாமலே பலி கொடுக்க வேண்டிய பிற்போக்குத்தனமான ஏற்பாட்டிற்கு காரணமாயிருந்த சக்திகளின் அரசியல் பின்னணி என்ன என்பதை ஆராய்வதை சற்று ஒதுக்கிவைத்து நோக்குமிடத்து, அரசின் ஓடுக்குமுறைக்கெதிரான போர்க் குணாம்சம் கொண்ட அனைத்து சக்திகளையும் அழிப்பதில் ஆளும் வர்க்கம் கட்சி பேதமின்றி ஒருமித்திருந்ததை நிருபிக்க அச் சூழ்நிலையில் அனைத்துக் கட்சியின் சலனமற்ற மௌனம் ஒரு சான்று. சூழ்நிலைக்கேற்றவாறு கதை சொல்லும் பிரேமதாஸா நிலபிரபுத்துவ சமுகம், வர்க்க முரண்பாடுகள் பற்றியெல்லாம் பேசத் தொடங்கி இருப்பதை நோக்கிமிடத்து இலங்கை மக்களை வெறும் கால்நடைகளாக எண்ணுகின்றனர் போலும்.

 

தற்போது பாராளுமன்றத்திலும் வெளியேயும் உள்ள அனைத்துப் பிற்போக்குக் கட்சிகளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தங்கள் வர்க்கநலன் கருதியும், குழு நலனுக்காகவும் உழைக்கும் மக்களை காட்டிக் கொடுத்து வந்துள்ளதோடு இன முரண்பாடுகளையும் கொதிநிலையில் வைத்திருப்பதை விரும்புகிறது.

 

ஆகவே, இன முரண்பாடுகளுக்கு மூலக் காரணியாயுள்ள அனைத்து அம்சங்களையும் உழைக்கும் மக்களைக் கூறுபோடவும் வர்க்க ரீதியான ஒருமைப்பாடு ஏற்படாமலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்க்காகவே பயன்படுத்துகின்றனர். ஆகவே, தமிழ் மக்களின் தேசவிடுதலைப் பாதையில் ஏற்பட்டிருக்கும் சீரழிவுச் சூழ்நிலையையும், அன்னிய சக்திகளின் தலையீட்டையும், சிங்கள முற்போக்கு சக்திகளும் உழைக்கும் மக்களும் தமிழ் மக்களின் தோல்வியாகப் பார்க்காது சமூக பொருளாதார அரசியல் நோக்கோடு அணுக வேண்டும். அப்போதே ஒடுக்குமுறைக்குகெதிரான இப் போராட்டத்தில் அனைத்துப் பாஸிசத்தையும் வென்று உழைக்கும் மக்களுக்காகிய தமிழீழத்தின் அடித்தளத்திலே முழு இலங்கையின் உழைக்கும் மக்களுக்காகிய விடுதலையை வெல்ல முடியும் என்று கூறக் கூடிய காலகட்டத்தில் நாமுள்ளோம். இந்நாள் வரும் வரை இவ் ஆட்சியாளர்களின் அரசியல் நாடகங்களை நாம் பார்த்தேயாகவேண்டும்.

 

இனவாத அரசு, சீனச் சோசலிச அரசின் ஆயுதத் துணை கொண்டு விடுதலை கோரும் தமிழ் மக்களை அழிக்கும் இக் காலத்தில் பீக்கிங்கில் உள்ள தங்கள் எஜமானர்களைத் தட்டிக்கேட்க வக்கற்ற புதிய ஜனநாயகக் கட்சினர், கொழும்பிலே(சீன சார்பு) கம்யூனிஸ்சக் கூடாரம் அடித்து விட்டு, ஜக்கிய முன்னணி அமைத்து ஸ்ரீ.ல.சு.கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரம் செய்யும் இவர்கள், தற்போது நடந்த பாராளுமன்றப் புரட்சியைக் கண்டு குதூகலித்திருக்க கூடும்! ஆனால் ஒடுக்கப்பட்ட உழைக்கும் வர்க்கமல்ல.

 

 

(சமர் 1 இல் ‘தேச விடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை விவாதத்திற்கு முன் வைத்திருந்தோம். இது தொடர்பாக ஆரோக்கியமான கருத்து விவாதங்கள் எதுவும் நேரடியாக எமக்கு முன்வைக்கப்படவில்லை! ஆனால் ‘தூண்டில்’ ‘மனிதம்’ ஆகியவற்றில் வௌ;வேறு நோக்கு நிலைகளிலிருந்து கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. சமரன் வெளியீடான கட்டுரை ஒன்றை அடுத்த காலடி என்ற பெயரில் லண்டனிலிருந்து வெளியிட்டிருந்தனர். இவற்றைத் தொட்டு நாம் எமது கருத்துக்களை முன் வைக்கிறோம்)

மேலும் படிக்க: தேசவிடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும்

எங்கள் குழந்தைகளை
வளர்ந்தவர்களாக்கிவிடும்.


ஒரு சிறிய குருவியினுடையதைப் போன்ற
அவர்களின் அழகிய காலையின்
பாதைகளின் குறுக்காய்
வீசப்படும் ஒவ்வொரு குருதிதோய்ந்த
முகமற்ற மனித உடலும்

மேலும் படிக்க: சிவரமணியின் கவிதைகள்

ரஷ்யாவின் அரண்மனைப் புரட்சி தோற்றதும் கம்ய+னிசத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் உலகெங்கும் தலைதூக்கியுள்ளன. முதலாளித்துவ அறிஞர்களும் - அறிவு ஜீவிகளும் - பத்திரிகையாளர்களும் முதுலாளித்துவ ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும், சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தையும் தூக்கிப் பிடித்து ‘சர்வரோக நிவாரணி’ என்கிறார்கள்@ “அணையா  ஜோதி” என்கிறார்கள். “சோசலிச பொருளாதார கட்டுமானம் தோற்றுவிட்டது@ காலாவதியாகி விட்டது” என ரஷ்யாவையும் “முதலாளித்துவ சுதந்திர சந்தைப் பொருளாதாரம்தான் நிலையானது@ பிரச்சினையில்லாமல் முன்னேறக் கூடியது” பிரச்சினையில்லாமல் முன்னேறக் கூடியது” என மேலை நாடுகளையும் குறிப்பாக அமெரிக்காவையும் கை காட்டி உரத்துக் கூச்சலிடுகிறார்கள்.


ரஷ்யாவில் கடந்த 35 ஆண்டுகளாக இருந்தது சோசலிச பொருளாதாரமும்  அல்ல@ சோசலிச விஞ்ஞானம் தோல்வியடையாது என்பதும் ஒருபுறம் இருக்கட்டும். இன்று அவர்கள் தூக்கிப் பிடிக்கும் முதலாளித்துவ சுதந்திர சந்தைப் பொருளாதாரம் எப்படிப்பட்டது? நிலையானதா? நீடித்ததா? அமெரிக்காவின் பொரளாதார நிலையைப் பார்த்தாலே இதற்குரிய பதில் கிடைத்து விடுகிறது.

அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றிருப்பதற்கு அதன் வங்கித்துறையே ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 2200 கோடி டாலர் சொத்துடைய 28 அமெரிக்க வங்கிகள் லாபமின்றி இயங்குகின்றன. 4300 கோடி ‘டாலர்’ சொத்துடைய 45 வங்கிகள் மூலதன விகிதாசாரப்படி 39மூ நட்டத்தில் இயங்குகின்றன. 92,600 கோடி டாலர் சொத்துடைய 150 வங்கிகள் 5மூ வரைநட்டமடைந்து செயல்படுகின்றன. 70,000 கோடி ‘டாலர்’ சொத்துடைய 15 பெரிய வங்கிகளில், 13 வங்கிகள் நடத்திலிருப்பதோடு அதன் சொத்து மதிப்பு குறைந்து கடன் அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய குடியரசின் இன்சூரன்ஸ் முதலீட்டு கம்பெனி ((FDIC) மோசமான நிதி நிலையிலேயே இயங்கி வருகிறது. இன்று FDIC 700 கோடி டாலரை செலவு செய்து 221 வங்கிகளை இழுத்து மூடிக் கொண்டுள்ளது.

உலகப் போலீசுக்காரனாக விளங்கும் அமெரிக்காவின் ராணுவச் செலவு, மேலும் மேலும் ப+தாரகராமாகிக் கொண்டிருக்கிறது. ‘நேட்டோ’ ராணுவ ஒப்பந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்கா பிற 15 நாடுகளின் மொத்த ராணுவச் செலவைக் காட்டிலும் 40 சதவிகிதம் அதிகம் செலவழிக்கிறது. இதை பிறநாடுகள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு ராணுவத்தைப் பலப்படுத்;துவது – பாதுகாப்புப் பற்றி அதிகம் கவலைப்படாமல் உற்பத்தியில் கவனம் செலுத்தி வளர்ந்து வருகின்றன. அமெரிக்காவின் உற்பத்தித் துறையோ மேலும் மேலும் சுருங்கிக் கொண்டிருக்கிறது.

அறிவியல் - தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முன்னணியில் இருந்த அமெரிக்கா இன்று பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. அதிநவீன தொழில் நுட்ப பொருள் உற்பத்தியே – புதிய கண்டுபிடிப்புகளே இன்றைய அனைத்தையும் தீர்மானிக்கும் காரணியாக மாறி வருகிறது. இதில் ஜப்பான் இன்று ஆதிக்கம் பெற்றுள்ளது. அதி நவீன தொழில்நுட்ப பொருள் உற்பத்திக்கு அடிப்படை தேவையான சிலிகான் துண்டை ஜப்பான்தான் பெருமளவு தயாரிக்கிறது. உலக சந்தையில் சிலிகான் துண்டு வர்த்தகத்தை 48.6 சதவிகிதத்தை ஜப்பான் கட்டுப்படுத்துகிறது. அமெரிக்காவோ 38.8 சதவிகிதத்தையே கட்டுப்படுத்துகிறது. இத்துறையில் ஜப்பான் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் இருப்பதால் இன்று அமெரிக்கா புதிய வகை விஞ்ஞான முன்னேற்றத்திற்காக ஜப்பானிடம் கையேந்தி நிற்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உற்பத்தி பெருமளவிற்கு அந்நிய நாடுகளையே குறிப்பாக ஜப்பான், ஜெர்மனை சார்ந்திருக்கிறது.

உலகளவில் மூலதனத்தைக் கொட்டி அந்நிய நாடுகளைச் சுரண்டி மேலாதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்காவின் பொருளாதாரம் படுகுழியில் விழுந்துள்ளதற்கு இன்னொரு காரணம் அமெரிக்காவை அந்நியநாடுகள் குறிப்பாக ஜப்பான், ஜெர்மன் சுரண்டி விடுகின்றன. அமெரிக்காவின் உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை (ரியல் எஸ்டேட்) கருவ+ல கடனீட்டுப் பத்திரங்கள் ஆகியவற்றை அந்நிய மூலதனம் பெருமளவிற்கு தன்வசப்படுத்திக் கொண்டுள்ளன. அந்நிய மூலதனத்தால் அமெரிக்காவின் கடன், வட்டி, பற்றாக்குறை அதிகரிப்பதுடன் லாபம் பெருமளவிற்கு வெளியேறுகின்றது. 1987-ல் அமெரிக்கா அந்நிய நாடுகளில் வைத்திருந்த மூலதனம் 117 கோடி டாலர் 1 ஆனால், அதே ஆண்டில் அமெரிக்காவில் 154 கோடி டாலர் மூலதனம் அந்நிய கம்பெனிகளின் கட்டுப்பாட்டிலிருந்தன. இந்நிலை வருடந்தோறும் வளர்ந்து கொண்டுதான் உள்ளது.

அமெரிக்கா பட்ஜெட்டில் பற்றாக்குறை ஆண்டுதோறும் கட்டுங்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை ஈடுகட்ட கருவ+ல கடனீட்டுப் பத்திரங்களை அமெரிக்கா வெளியிடுகிறது. 1980-ன் தொடக்கத்தில் நடப்பு கணக்கில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட இதுபோன்று கருவ+ல கடனீட்டுப் பத்திரங்களை வெளியிட்ட அமெரிக்கா, நாளடைவில் அதாவது 1980-ன் மத்தியில் மூலதனத்திலேயே பற்றாக்குறை ஏற்பட்டு கடனீட்டுப் பத்திரங்களை வெளியிட்டது. 1988-ன் கணக்குப்படி 17மூ கடனீட்டுப் பத்திரங்களையும் 12மூ உற்பத்திக்குரிய சொத்தையும் அந்நிய மூலதனம் கைவசப்படுத்தியிருந்தது. இந்த விகிதாசாரம் மேலும் மேலும் வளர்ந்தன் விளைவாக இன்று அமெரிக்காவின் பொருளாதாரத்தையும் மூலதன சந்தையையும், அந்நிய மூலதனம் கட்டுப்படுத்துகிறது. “அந்நிய மூலதனத்தின் விருப்பப்படி ஆடும் பிணைக் கைதியாகிவிட்டது. அமெரிக்கப் பொளாதாரம்! இந்நிலை தொடரந்தால் பங்கு சந்தையில் கடுமையான மோதலை தூண்டிவிடும் “என்கிறார், அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணர் இ.பிரட் பெர்ஸ்டன்.

அமெரிக்காவின் வர்த்தகத்திலும் அந்நிய கம்பெனிகளே செல்வாக்கு செலுத்துகின்றன. அமெரிக்க கம்பெனிகளைக் காட்டிலும் அமெரிக்காவில் உள்ள அந்நிய கம்பனிகள் கச்சாப் பொருட்களை அதிகம் இறக்குமதி செய்கின்றன. அந்நிய கம்பெனிகள் கச்சாப் பொருட்கள் அதிகம் இறக்குமதி செய்கின்றன. அந்நிய கம்பெனிகள் தமது லாபத்தில் 80 சதவிகிதத்தை அமெரிக்காவிலிருந்து தமது தாய்க் கம்பெனிகளுக்கு கடத்துகின்றன. அமெரிக்காவின் வியாபார – வர்த்தக பற்றாக்குறைக்கு பாதியளவு காரணம், இந்த அந்நியக் கம்பெனிகளின் இறக்குமதியே ஆகும். இதேபோல் அமெரிக்காவின் ஏற்மதியும் படுவீழ்ச்சியை சந்தித்துள்ளது. அந்நிய நாடுகளைச் சுரண்டுவதன் மூலமே தனது பொருளாதாரத்தின் நாடியை பிடித்து வைத்திருக்கிறது.  1985-ன் கணக்குப்படியே அந்நிய நாடுகளிலுள்ள அமெரிக்க பன்னாட்டு தொழிற் கழகங்களின் எற்றுமதி அளவு 70,400 கோடி டாலர் அதே பொழுதில் அமெரிக்கா, 21,600 கோடி டாலர் அளவே தன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்தது!

அமெரிக்காவின் கச்சாப் பொருள் உற்பத்தியும் சுருங்கிப் போய் அந்நிய நாடுகளை சார்ந்திருக்கிற நிலையை எய்திவிட்டது. இன்று அமெரிக்கா வியாபார சாதனங்கள், மின் மற்றும் மின்னணு சாதனங்கள், அறிவியல் உபகரணங்கள், விவசாயக் கருவிகள் முதலியவற்றை ஏற்றுமதி செய்வதைவிட அதிக அளவு இறக்குமதி செய்கிறது. நாட்டின் தேவை ஒருபுறம் விரிந்து கொண்டே போவதும், மறுபுறம் பொருள் உற்பத்தியளவு சுருங்கிக் கொண்டே போதும் நீண்டு கொண்டே போவதைக் கண்டு செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறது அமெரிக்கா. 1979-ல் 600 கோடி டாலர் அளவிற்கு வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்த அமெரிக்கா. 1987-ல் 200 கோடி டாலர் அளவே தயாரித்தது. அதே சமயம் தேவை எதிர்மறையாக இருந்தது.

இவையின்றி அமெரிக்காவின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்குரிய அரசு ஒதுக்கீட்டையும் குறைத்துக் கொண்டே வருகிறார்கள் ஆட்சியாளர்கள். 1980-லிருந்து 88-க்குள் கல்விக்கென ஒதுக்கிய நிதியை 63மூ குறைத்துவிட்டது.அமெரிக்க அரசு 1981-88-க்குள் வீட்டு வசதி துறைக்கு உரிய தொகையில் 81மூ வெட்டிவிட்டது. சுற்றுப்புறச் சூழலுக்கு செலவழித்த தொகையை பத்தாண்டுகளில் (1978-88) பாதியாக்கிவிட்டது. இதேபோல் தொடர்ந்து உற்பத்தியை குறைப்பதாலும், ஆலைகள் இழுத்து மூடுவதாலும் தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் குறைத்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் சமூக உறவு, குடும்ப உறவு, தனிமனித ஒழுக்கம் மூதலான அனைத்தும் சீரழிந்து கிடப்பதை உலகமே அறியும்!.

அமெரிக்காவில் முன்னேற்ற பாதையில் இருப்பது ஆயுத உற்பத்தியும் போதைப் பொருள் விற்பனையும்தான்@ அமெரிக்காவில் பொருள் உற்பத்தி – வர்த்தகத்தின் மூலதனத்தைக் காட்டிலும் ஆயுத உற்பத்தியும் மற்றும் போதைப் பொருள் விற்பனையில் புரளும் மூலதனம் அதிகரித்து விடுமோ என அவர்களே (?) அஞ்சுகிறார்கள். அமெரிக்காவிலுள்ள வங்கிகள் பல போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், கள்ளப் பணக்கடத்தல் முதலானவற்றிற்கே ரகசியமாக முன்னுரிமை கொடுது;து சேவை புரிகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்காவின் பொருளாதாரம் இராணுவ – ஆயதப் பொருளாதாரமாகவும், ய+கப் பொருளாதாரமாகவும் - சூதாட்டப் பொருளாதாரமாகவும் மாறிவிட்டது. முதலாளித்துவ கட்டமைப்புக்கே உட்படாமல் - முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளின் கற்பனைக்கே எட்டாமல் தன்னை அன்னியப்படுத்தி நிற்கின்றது. முதலாளித்துவ சுதந்திர சந்தைப் பொருளாதாரம் இப்படி 1960 வாக்கில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டபோது அமெரிக்கா ஆட்சியாளர்கள் எற்கனவே வகுத்தஅமைப்பை மறு ஒழுங்கு செய்ய வேண்டி நேர்ந்தது. அதாவது ‘ய+கப் பொருளாதாரம்’ திட்டமிடப்பட்ட பொருள் உற்பத்திக்கு நேரெதிரான அராஜகமான சூடாட்ட முறையாகும். அன்று பொருள் உற்பத்தியை பெருமளவில் முடக்கி எண்ணற்ற தொழிலாளர்களை வீதியில் வீசினார்கள். ‘ய+க மூலதனத்திற்கு அகலக் கதவு திறந்துவிட்டார்கள். பங்குச்சந்தை சூதாட்டமும், போதைப் பொருள் வியாபாரமும் ஆயுதக் கடத்தலும் பெருகியது. இன்று இவை அமெரிக்கப் பொருளாதாரத்தை ஆட்டுவிக்கும்போய்களாக மாறிவிட்டன.

இப்படி மரணப் படுக்கையில் வீழ்ந்து மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா! அமெரிக்காவின் ஆதிக்க வெறி பிடித்து அலைந்தது. பிற நாட்டின் உள்நாட்டுப் விவகாரங்களிலும் அத்துமீறி தலையிட்டது. தலையாட்டாத ஆட்சியாளர்களின் தலைகளையெல்லாம் பல சதிகளை செய்து வெட்டி வீழ்த்தியது. பல நாடுகளில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தியது. இதற்காக யாரையும் பயன்படுத்த தயங்கவில்லை. அனைத்து ஒழுங்கு முறைகளையும் மீறியது. பல நாடுகளின் கிரிமினல் கும்பலுக்கும் பிரிவினை சக்திகளுக்கும் தனது அடிவருடி குழுக்களுக்கும் ரகசியமாக ஆயுதங்களைக் கொடுத்து தூண்டிவிட்டது. தமது ஆதிக்கத்திற்கு எதிராக போராடுபவர்களிடையே போதைப் பொருள் - ஆபாசக் கலாசாரத்தைப் பரப்பி அடிமைகளாக்கியது. உலகையே தனது விரல் நுனியில் நிறுத்தி பார்ப்பதற்காக “புதிய உலக ஒழுங்கமைப்பு” திட்டத்தைப் போட்டுக் கொண்டு ராணுவத்திற்கும், விண்வெளிப் போருக்குமென ரசகியமான பணத்தைக் கொட்டியது.

இன்று இவையெல்லாம் சேர்ந்து அமெரிக்காவையே திருப்பித் தாக்குகின்றன@ அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணிகளாகி விட்டன. இது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விதி! தானே தனக்கு படுகுழுp தோன்றிக் கொள்வதை முதுலாளித்துவ பிரச்சாரகர்கள் என்னதான் கூச்சல் போட்டாலும் தடுக்க முடியாது. ராசு

ரசிய கம்ய+னிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசில் ஸ்டாலின் மீது வைக்கப்பட்ட விமர்சனம்,கொள்கை மற்றும் முறை ஆகிய இரண்டிலும் தவறானது.

மேலும் படிக்க: மாபெரும் விவாதத்தில் இருந்து….

“ரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம்” என்ற இந்நூல் ரசிய புரட்சி பற்றியும் அதில் ஸ்டாலின் பங்கு பற்றியும் மறு மதிப்பீடு செய்வதற்கான தூண்டுகோலாக உள்ளது. இக் கண்ணோட்டத்திலிருந்து இந்தக் குறிப்புரைகளைப் பயனுள்ள வகையில் படிக்கலாம். ஆனால், இக்குறிப்புரைகளை ஒரு வரலாற்று ரீதியான ஆய்வு என்ற முறையிலோ அல்லது ஸ்டாலினுடைய வரலாற்று ரீதியான பாத்திரத்தைப் பற்றிய விமர்சன ரீதியான மதிப்பீடு என்ற முறையிலோ மாவோ எழுதவில்லை. மாவோவின் உண்மையான நோக்கம் ரசிய அனுபவங்களின் பல்வேறு அம்சங்களை ஆய்வுசெய்வதன் வாயிலாகப் பெறப்படும் படிப்பனைகளினூடே சீனப்புரட்சி எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளை ஆய்வு செய்வதேயாகும்.

மேலும் படிக்க: ஸ்டாலினும் ரசிய புரட்சியும்

சிறீலங்கா இனவாத அரசு தமிழ்தேசிய இனத்தின் மீது தனது இறுகிய கொலைக்கரங்களை நீட்டியது மட்டுமின்றி சிங்கள மக்களைக் கென்று குவித்தையும் 19.02.1991இல் கொழும்பில் கூடிய அன்னையர் முன்னணியினர் அம்பலப்படுத்தினர். இது ஒரு புறமிருக்க,


தென்கிழக்காசியப் பகுதியிலேயே ஆரோக்கியமான வெடிகுண்டு அரசியல் நடாத்தும் பாசிச விடுதலைப் புலிகள் 1991 மாசி – பங்குனி “விடுதலைப் புலிகள்” பத்திரிகையில் கொழும்பி; நடைபெற்ற அன்னையர் முன்னணியினரின் போராட்டத்திற்கு ஆரவு கொடுப்பது என்று வெளியிட்ட செய்தி எவ்வளவு அப்பட்டமானது.

சொந்த மண்ணிலேயே நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களைக் கொன்றவர்கள் இவர்கள். இது மட்டுமா? எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்கள் ஜனனாயகம் வேண்டி நின்ற முற்போக்குவாதிகள், கம்ய+னிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள் என்று எத்தனை பேரைக் கொன்றார்கள். பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

பிறந்து வளர்ந்த மண்ணை விட்டே குறிப்பிட்ட நேரத்தில் முஸ்லீம் மக்களை விரட்டியதை மறக்க முடியுமா?

தங்களால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களின் அன்னையரின் கண்ணீர் கோரிக்கை இவர்களின் கண்ணுக்குத் தெரியவில்லையா?
சிங்கள மக்கள் மேலான கொக்கிளாய், நாயாற்று படுகொலை 15 மே 1985இல் அநுராதபுரத்தில் குழந்தையிலிருந்து முதியோர்வரை 150க்கு மேற்பட்டோரை கொன்ற புலிகள்-

1987 ஆவணியில் திருகோணமலை பகுதியில் அப்பாவிச் சிங்கள மக்களை கொன்ற புலிகள்-

காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லீம்களைப் படுகொலை செய்த புலிகள்-

எத்தனையோ சிங்களக் கிராமங்களில் புகுந்து மக்களை இரவோடிரவாக சுட்டும், வெட்டியும் கொன்ற புலிகள்-

அன்னையர் முன்னணியின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பது என்பது அவர்களின் ஏமாற்றுவித்தையின் பிறிதொரு பாணியே!

இவர்களிடம் யார் கேட்பது நியாயம்? தங்களின் இருப்பை நிலைநிறுத்த நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள் புலிகள்!

எனது மயிர் பொசுங்கி விட்டது
எனது தோல் கருகிவிட்டது
எனது காதுச்சோணைகள் எரிந்துவிட்டன
இந்த ரணங்களோடுதான்
மீண்டும் எழுந்திருக்கிறேன்

மேலும் படிக்க: மீண்டும் எழுந்திருக்கையில் என்ற கவிதையில் வரும் சில வரிகள் - சண்முகம் சிவலிங்கத்தின்

எங்கு எமது தேசத்தின் அரசுக்கெதிரான போராட்டமானது ஆயுதம் தாங்கிய வன்முறைப் போராட்டமாக மாற்றமடைந்த காலத்திலிருந்தே பெண்களின் சுதந்திரம் தொடர்பாகவும் பெண்விடுதலை தொடர்பாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் குறிப்பான ஒரே நோக்கு நிலைமையிலிருந்து பலராலும் பல அமைப்புக்களாலும் பெண்விடுதலை தொடர்பாக LTTE தலைவர் வே.பிரபாகரன் கூட அறிக்கை விடுகின்ற அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க: பெண்

இலங்கையில் தீர்வு காண முடியாத பிரச்சினையாகத் தொடரும் தமிழ் தேசிய இனப்பிரிச்சினையை அதிகாரத்திலுள்ள பாசிச U.N.P பேரினவாத அரசு தமது ஆட்சியினைத் தொடர முழு மக்களையுமே மரணத்தின் விளிம்புக்குத் தள்ளியுள்ளது. இன்று தென்கிழக்காசிய நாடுகளின் நிலையும் இதுதான்.

மேலும் படிக்க: ராஜீவின் கொலை

உட்பிரிவுகள்

Load More