பி.இரயாகரன் - சமர்

 தரப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய ஆயுதப்போராட்டம் பிற்போக்கான திசை வழியில் இன்று வரை தொடருகின்றது. உண்மையில் இனவாதத் தரப்படுத்தலை எப்படி ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மாற்றி போராடியிருக்க வேண்டும் என்பதே எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும். இதுவே தமிழ் மக்களின் போராட்டத்தை சரியாக வழிநடத்தியிருக்கும். தரப்படுத்தலை எந்தவகையில் எதிர் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

மேலும் படிக்க: பிற்போக்கு தேசியத்தின் அடித்தளம்

பெ ண்ணின் சுதந்திரக் காதல், பெண்ணின் கட்டற்ற சுதந்திரம் போன்றவற்றை நான் முன்பு சமரில் (பிரான்சிலிருந்து வெளிவரும் மார்க்சியப் பத்திரிக்கை) விவாதித்திருந்தேன். இதன் பின் தற்செயலாக லெனின் இது பற்றி விவாதித்து இருப்பதைப் பார்க்க முடிந்தது. எனது கருத்து மார்க்சிய நிலையில் சரியாக இருந்ததை லெனின் விவாதம் மேலும் வலுவூட்டிய நிலையில், அதை ஒட்டி விவாதத்தை வளர்ப்பது புரிதலைத் தெளிவாக்கும் அதே நேரம், காதலின் வக்கற்ற தன்மையையும் அம்பலப்படுத்தும்.

 

மேலும் படிக்க: பெண்ணின் கட்டற்ற சுதந்திரமும், காதல் சுதந்திரமும் ஒரு விபச்சாரமே!

இன்று பெண்கள் ஜனநாயகமாக வாழ்வதாக ஒரு மாயை, ஆணாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் எல்லா ஆண்களும், பெண்கள் ஜனநாயகத்தை அனுபவிப்பதாகக் கூறும் அதேநேரம், அநேகமான பெண்களும் கூட இப்படி கருதுகின்றனர். ஆணாதிக்கக் கருத்தியல் கண்ணோட்டத்தைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனிச் சொத்துரிமையை ஆதாரமாகக் கொண்டு மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு போன்ற வடிவங்கள் ஊடாகப் புகுத்தப்பட்டு, இயல்பாக ஏற்க வைக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது.

 

மேலும் படிக்க: பெண்ணியத்தின் பின் அரங்கேறும் ஆணாதிக்கம் : உலகில் பெண்கள் நிலையும் பெண் ஒடுக்கு முறை தொடர்பாகவும்

1956 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராயின் 200 கிறிஸ்தவ மாணவனுக்கு ஒருவரும், 500 இந்து மாணவனுக்கு ஒருவரும், 1000 பௌத்த மாணவருக்கு ஒருவரும், 2000 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒருவருமாக பல்கலைக்கழக அனுமதி இருந்துள்ளது. உண்மையில் ஆதிக்க வர்க்கம் எதுவோ அது சார்ந்து, மதம், இனம், பிரதேசம், சாதி, வர்க்கம் என்ற பல்வேறு கூறுடன் தொடர்புடையதாகவே, இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி வரலாற்று ரீதியாக இருந்துள்ளது. இங்கு இதற்கு வழங்கப்பட்ட பெயர் "திறமை" என்ற கௌவரமாகும்.

 

மேலும் படிக்க: தரப்படுத்தலும் தமிழ் தேசியமும்

இன அடிப்படையிலான தரப்படுத்தல் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களின் போது, பாதிக்கப்பட்டவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை. தரப்படுத்தலை முதன்மைப்படுத்தி தொடங்கிய போராட்டம் என்பதால், இந்த தேசியம் பிற்போக்கான அரசியலால் ஆயுதபாணியாவது தவிர்க்கமுடியாததாகியது.

மேலும் படிக்க: கல்வியும் தமிழ் தேசியமும்

தமிழ் மக்களின் தேசியமும் அவர்களின் பொருளாதார வாழ்வும் திட்டமிட்டே அழிக்கப்பட்டது. இது ஒரு அரசியல் போக்காக வளர்ச்சி பெற்ற போதெல்லாம், தமிழ் தேசிய போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக அவை புறக்கணிக்கப்பட்டு இரண்டாம் தர விடையங்களாக மாறியது. இவை கோசம் போடும் ஒரு அரசியல் வடிவத்துக்கான ஒரு உத்தியாக, மேலெழுந்தவாரியாக கையாளப்பட்டது. இனவாத சிங்கள அரசு தரப்படுத்தலை இன அடிப்படையில் கல்வியில் கொண்டு வந்த போதே, தமிழ் தேசியவாதம் எழுந்தது தற் செயலானதல்ல. இதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டமும் ஒரு வடிவமாகியது.

 

மேலும் படிக்க: இளைஞர்களின் ஆயுதப் போராட்டம்

"ஒருவனுடைய அறிவு அல்லது கோட்பாடு எத்துணை உண்மை என்பதைத் தீர்மானிப்பதற்கு அவன் அது பற்றி எவ்வாறு அகவயமாக உணர்கிறான் என்பதில் தங்கியிருக்க முடியாது. ஆனால் சமூக நடைமுறையில் புறவயமான அதன் விளைவு என்ன என்பதிலேயே தங்கியிருக்க வேண்டும். நடைமுறை ரீதியான கண்ணோட்டம் தர்க்கவியல் பொருள் முதல் வாதத்தின் முதன்மையானதும் அடிப்படையானதுமான கண்ணோட்டமாகும்"

 

மேலும் படிக்க: தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சனை?

 1.கொடுத்த நாடுகள் (உதவி வழங்கும் முன்னேறிய நாடுகள்)
 2.உதவி அபிவிருத்தி அடையும் நாடுகளுக்கு (தேசிய வருமானத்தில் வீதத்தில்)
 3.மிக பின்தங்கிய நாட்டுக்கான உதவி ஒதுக்கியதில் (உதவி வீதத்தில்)
 4.மத்திய ஆபிரிக்கா
 5. மத்திய கிழக்கு-வட ஆபிரிக்கா
 6.மத்திய ஆசியா-தென் ஆசியா
 7.ஆசியா-தென் கிழக்கு நாடுகள்
 8.தென் அமெரிக்கா-கருங்கடல் நாடுகள்
 

மேலும் படிக்க: உதவியின் பெயரில் ஆக்கிரமிப்பு

book _3.jpg

தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சனை தேசிய போராட்டமாகத் தவறி, ஒரு இனவாத யுத்தமாக பரிணமித்த வரலாற்றுப் போக்கை இந்த நூல் அம்பலம் செய்கின்றது. இதன் மூலம் குறுந் தேசிய இனவாதப் போராட்டத்தை தேசிய போராட்டமாக மாற்றுவதன் தேவையை, மறுக்க முடியாத ஆதாரங்களுடன் இந்த சிறு நூலின் ஊடாக உங்கள் முன் வைக்கின்றேன்.

மேலும் படிக்க: முன்னுரை : இனவாத யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்

பி ரான்சில் 10 இலட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. (11.2.1999)40 அதாவது 60 பேருக்கு ஒரு கேமரா என்ற வீதத்தில் கண்காணிப்பைச் செய்கின்றது. இங்கு தான் சுதந்திரமான மனித நடமாட்டம், பாலியல் நடத்தை, கட்டற்ற சுதந்திரம் பற்றி புலம்புகின்றனர். இதைவிட பொலிஸ், தனியார் பாதுகாப்பு பிரிவு, உளவுப் பிரிவு, விசேட பாதுகாப்பு பிரிவுகள், இராணுவம் (பிரான்சில் சிவில் கண்காணிப்பின் போது வீதியில் பொலிசுடன் இணைந்து இராணுவம் செயல்படுகின்றது.) என்று பல்வேறு கண்காணிப்புகளுக்கு ஊடாகவே இச்சமூகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாடும் அனைத்து இடங்களும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. சொந்த வீட்டைத் (ஏழு சதுர மீற்றர் (meter)  இடத்தைத் தவிர எங்கும் கண்காணிப்பதை இந்த ஏகாதிபத்திய அமைப்பு நடைமுறைப்படுத்துகின்றது.

 

மேலும் படிக்க: ஆணாதிக்கச் சுரண்டல் கண்காணிப்பு

எ யிட்ஸ் எப்படி தோன்றியது? என்ற கேள்வி பல்வேறு ஊகங்களைத் தாண்டி இன்று மெதுவாகக் கசிந்து வரும் உண்மை ஒன்று ஏகாதிபத்திய உலகமயமாதலின் சூறையாடலை அம்பலப்படுத்துகின்றது. ஆப்பிரிக்காவில் போலியோ போன்ற நோய்களைத் தடுக்க புதிய கண்டுபிடிப்பாகக் கண்டறிந்த தடுப்பூசியொன்றே, எய்ட்சுக்கான மூலகாரணம் என்பது இரகசியமாக அம்பலமாகியுள்ளது.

மேலும் படிக்க: பாலியலூடான எயிட்ஸ் (AIDS)

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More