பி.இரயாகரன் - சமர்

நாட்டின் தேசியப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சிதைக்கவும், பாலியல் ரீதியாக எம்நாட்டு பெண்களை, குழந்தைகளை ருசிக்கவும் வரும் வெளிநாட்டவனின் நலன்களை உறுதி செய்வதுடன், சொகுசுப் பண்பாட்டை ஏகாதிபத்தியம் கோருகின்றது. 2003 முதல் 8 மாதத்தில் மூன்று லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்தனர். இது 2002யுடன் ஒப்பிடும் போது 23 சதவீதம் அதிகமாகும். சுற்றுலாப் பயணிகளின் வருகை 2002 இல் முதல் ஆறு மாதத்தில் 1.73 லட்சமாக இருந்தது. இது 2003 இல் முதல் ஆறு மாதத்தில் 2.16 லட்சமாக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: மேட்டுக்குடி வெள்ளைப் பன்றிகளின் சொகுசு சுற்றுலாக்கள்

ஏகாதிபத்திய நலன் என்பது, நாட்டை எப்படி ஒட்டுமொத்தமாக விற்பதன் மூலம், மறு காலனியாதிக்கத்தை விரைவாக ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. இலங்கையில் சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் பின்பாக, இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் மூன்று மடங்காகியது. 2003 இன் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு மூலதனம் 1,700 கோடி ரூபாவாக இருந்தது. இது 2003-இன் இறுதியில் வெளிநாட்டு முதலீடுகள் 3,000 கோடி ரூபாவாக இருக்கும் என்று, முதலாளிகளின் முதலீட்டுச் சபை அறிவித்து இருந்தது. ஆனால் அது 5000 கோடி ரூபாவைத் தாண்டியது.

 

மேலும் படிக்க: சிங்கள இனவாத அரசு திட்டமிட்ட வகையில் தேசியத்தின் அனைத்து பண்பியல் கூறுகளையும் அழிக்கின்றது

இலங்கையை ஆளும் ஆட்சிகள், பெருந் தேசிய சிங்கள இனவாதத்தால் நிறுவனப்படுத்தப் பட்டுள்ளது. இந்த இனவாத அமைப்பில் எந்தக் கட்சி பாராளுமன்ற ஜனநாயக சூதாட்டத்தில் தெரிவானாலும், அதன் அடிப்படை கட்டமைப்பு இதற்குள் தான் நிறுவப்பட்டுள்ளது என்பதை, தொடர்ச்சியாக கடந்த இரண்டு வருட அமைதி மீண்டும் மீண்டும் நிறுவுகின்றது. இந்த இனவாத அமைப்பு தமிழ் மக்களின் தேசியத்தை மட்டுமல்ல, சிங்கள மக்களின் தேசியத்தைக் கூட அழித்தொழிப்பதில், இனவாதக் கட்டமைப்பை சிறப்பாக நிலைநிறுத்துகின்றது. இந்த இனவாத அமைப்பு உலகமயமாதலை நீடித்து பாதுகாக்கும் வகையில், இலங்கையில் ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்கின்றது.

மேலும் படிக்க: அமைதி சமாதானம் என்ற பின்னணி இசையில் தேசிய நலன்கள் சூறையாடப்படுகின்றன

க டந்த இரண்டு வருடத்துக்கு மேலாக யுத்தமற்ற ஒரு அமைதி புகைந்து கொண்டிருக்கின்றது. மக்கள் விரோத நடத்தைகள் ஜனநாயகப் பூர்வமான சமூக ஒழுக்கமாகி, புதிய பரிணாமம் பெற்று வருகின்றது. இந்தச் சூழல் பலதரப்பட்ட பிரிவுகளுக்குச் சாதகமானதும், பாதகமானதுமான பல மக்கள் விரோத அம்சங்களை உருவாக்கியுள்ளது. மறுதளத்தில் நாடு அடகு வைக்கப்படுவதும், ஏலம் விடப்படுவதும் என்றும் இல்லாத வேகத்தில் நடந்து வருகின்றது. மக்கள் தமது சொந்தத் தேசிய வாழ்வியல் இருப்புகள் அனைத்தையும் வேகமாக இழந்து வருகின்றனர். உலகமயமாதல் நடைமுறைகள், இலங்கையில் கரைபுரண்டோடுகின்றது. இதுவே அமைதி மற்றும் சமாதானத்தின் தலைவிதியாகியுள்ளது.

மேலும் படிக்க: சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில்

"சமாதானமா? யுத்தமா?" என்பதை மையமான பொருளாக்கிய ஏகாதிபத்தியங்கள், விரிவாகவே களமிறங்கியுள்ளது. புலிகளுக்கும் அரசுக்கும் பின்பக்கமாக கைகளை இறுகக் கட்டபட்ட நிலையில், சமாதானம் பற்றி மூலதனம் உத்தரவுகளை இடுகின்றது. இங்கு அமைதிப் படைக்கு பதில், மூலதனமே சமாதானத்தை கடைப்பிடிக்க உத்தரவுகளை இடுகின்றது. என்றுமில்லாத வகையில், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏகாதிபத்தியத் தலையீடுகள் பெருக்கெடுத்துள்ளது. உண்மையில் யுத்தமற்ற அமைதியை மக்கள் பெற்றார்களோ இல்லையோ, மூலதனம் இதைச் சரியாகவும் சாதகமாகவும் பயன்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: சமாதானமா? யுத்தமா? இது யாருக்காக? மக்களுக்கா? மூலதனத்துக்கா? நாடகம் சோகமான முடிவை நோக்கி நகர்கின்றது

book _3.jpgஇலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து யுத்த நிறுத்தம் கடந்த இரண்டு வருடங்களாக அமுலில் உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் என்ன நடந்தது? உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியாது, சூனியம் நிலவுகின்றது. புலிகளும் அரசும் பேச்சுவார்த்தை ஊடாக நடத்திய இழுபறிகளையே, மக்களுக்குப் பொதுவாகக் காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல.

மேலும் படிக்க: முன்னுரை : ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை

ஏர் காலாண்டிதழ் (மார்ச 2003), எனது நூலின் உள்ளடகத்துக்கு வெளியில் நின்று, விமர்சனம் என்ற பெயரில் தூற்றிவிடுகின்றனர். அடிப்படையான எனது விவாத உள்ளடகத்துக்குள் நின்று விமர்சிக்க வக்கற்றுப் போகின்றனர்.

மேலும் படிக்க: "இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" பற்றிய "ஏர்" தனது விமர்சனத்தில்...

"நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசானக் கவிஞர் புதுவை இரத்தினதுரை சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி இது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முதலாவது கொள்கை அறிக்கையில் சோசலிச தமிழீழமே எமது இலட்சிய தாகம் எனப் பிரகடனம் செய்தனர்.

மேலும் படிக்க: புலிகளும் சாதீயமும்

அவதூறுகளின் அரசியல் முக்கியத்துவம் என்ற கட்டுரையில் லெனின் "அரசியல் அவதூறு பல சமயங்களில் சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும், நிர்க்கதியையும், பேடித்தனத்தையும், அவதூறு கூறுபவனின் எரிச்சலூட்டும் பேடித்தனத்தையும் மூடிமறைத்து விடுகின்றது."

மேலும் படிக்க: பிறப்பைக் குறித்து பொழியும் "தலித்" அவதூறுகள் தொடருகின்றன


"மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்", "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." என்று கோரிப் போராடினான் என்பதற்காக, விமலேஸ்வரன் 15 ஆண்டுக்கு முன்பு புலிகளால் வீதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டான்.

மேலும் படிக்க: எப்படி மக்களுக்காக போராடுவது?

"இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" பற்றிய "எக்ஸில்"  தனது விமர்சனத்தில் ....

 

"இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" என்ற எனது நூல் தொடர்பாக, கனடாவில் இருந்து ஒற்றை வரியில் மின் அஞ்லில் மூலம் கருத்து ஒன்றை மஸ்ரர் அனுப்பியிருந்தார்.

மேலும் படிக்க: மக்களை எதிரியாக்கும் தத்தம் மன விருப்பு வெறுப்புகள் விமர்சனமாகும் போது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More