புதிய கலாச்சாரம்

உலகளாவிய சந்தையைக் குறிவைத்து இயங்கும் ஹாலிவுட்டிலும் கோடம்பாக்கத்தைப் போல ஃபார்முலா கதைகள்தான் புதிய மொந்தைகளில் வெளியிடப்படும். கம்யூனிஸ்டுகள், இசுலாமியர்கள் அரேபியர்கள், வேற்றுக்கிரக ஜீவரோசிகள் போன்றவர்கள்தான் அலூப்பூட்டும் விதத்தில் திரும்பத் திரும்ப வில்லன்களாக வருவதைப் பார்த்திருப்போம்.

என்னதான் வெண்திரையில் புனைகதைகளைக் கட்டியமைத்தாலும் வாழ்க்கை என்ற பெரிய உண்மை ஒன்று இருக்கிறதே! முதலாளித்துவ பொருளாதாரம், இந்த உலக மக்களை காக்கும் அருகதையை இழந்து வருவதை அமெரிக்காவில் துவங்கி இப்போது கிரீஸ் வரையிலும் 21ஆம் நூற்றாண்டு வெளிச்சம் போட்டுக் காட்டிவருகிறது. மேற்குலகம் முழுவதும் ""முதலாளித்துவம் ஒழிக'' என்ற முழக்கம் ஐஸ்லாந்து எரிமலை புகை போல படர்ந்து வருகிறது. இப்படி மக்களின் பட்டுத் தெரிந்து கொண்ட "மூடு' மாறிவரும்போது இன்னும் எத்தனை நாள் பின்லாடனே வில்லன் பாத்திரத்தை ஏற்க முடியும்? இப்போதைய புதிய வில்லன்கள் யார்?

மேலும் படிக்க …

"பாங்கு ஊதியாச்சு போலருக்கு, தட்டி எழுப்பிவிடலாம்ல? நான் வேற நல்லா தூங்கிட்டேன்''

"எத்தனை தடவை தட்றது, சரி இன்னிக்கு ஏவாரத்துக்கு போவல போலருக்குன்னு நெனச்சேன்...

'' விலக மறுத்த கெட்டாவியை ஏவ்வ் என சத்தமாக விட்டபடி விஜயா தலைமுடியை முடிந்து கொண்டே கண் எரிச்சலோடு எழுந்தாள். பேருக்கு அவசர அவசரமாக முகத்தைக் கழுவிக்கொண்டே,

"அலுப்பை பாத்தா முடியுமா? கோடை சீசன்ல தினம் போனாதான் தவணை கட்டலாம்!

மேலும் படிக்க …

"செந்தில், இன்னைக்கு முள்ளம்பன்றி ஓவர் சூடு. விஷ் பண்ணா வழக்கமான ஒரு பிளாஸ்டிக் ஸ்மைல் கூடக்காணோம். வேகமா ரூமுக்கு போயிருக்கு.. பாத்து இருந்துக்க."

"என்னைக்குதாண்டா அவன் நார்மலா இருந்துருக்கான்? நேத்து கூட ரிசப்சனிஸ்ட குதறி எடுத்துட்டான். எந்தப்பக்கம் புடிச்சாலும் குத்திக் கொடையறாண்டா! சரியான பேரு... முள்ளம்பன்றின்னு யார்ரா வச்சது?'

மேலும் படிக்க …

அரவம் திரியவும் அஞ்சிடும் முன்பனி
கறவை மாடும் கண்திறவா அதிகாலை
சேவல் கூவும் முன்னே
பண்ணையின் கொம்பூதும்.
மடையின் கை நீரள்ளி முகம் கழுவி
வயலுக்கு ஓட வேண்டும்
கூலி விவசாயி.

மேலும் படிக்க …

இந்திராஜி கொலை செய்யப்பட்டதையொட்டி, நமது நாட்டில் சில கலவரங்கள் நடைபெற்றன. எல்லோரும் அப்பொழுது மிகவும் ஆத்திரத்தில் இருந்தனர் என்பதை நாம் அறிவோம். மொத்தத்தில் இந்தியாவே குலுங்கியது போல் இருந்தது. ஆனால், ஒரு பெரும்மரம் விழும் பொழுது பூமி அதிர்வது இயற்கையானதே!"
(ராஜீவ் காந்தி, நவம்பர் 19, 1984, தனது முதல் பொதுக்கூட்ட உரையில்)

மேலும் படிக்க …

தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம் தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகின்றது அப்பத்திரிகை. இசுலாமியர்களைத ;தீவிரவாதிகளாகச் சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆர்.எஸ்.எஸ{க்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான்.

மேலும் படிக்க …

சக்கரவர்த்திகளின் பெருமை தம்மை உலகறிய பறைசாற்றிக் கொள்வதில் தங்கியிருக்கிறது. கருணாநிதிச் சக்கரவர்த்தியின் அந்திமக் காலமிது. காந்தி, நேரு, காமராஜ் வரிசையில் தானும் இந்திய அரசியலில் காவிய நாயகனாக நிலைபெற வேண்டும் என்ற ஆசை, அவரை வெறியாய் அலைக்கழிக்கிறது. தள்ளாத வயதிலும் குத்தாட்ட நடிகைகள் முக்கால் நிர்வாணத்துடன் அவரை போற்றிப் பாடும் நிகழச்சிகள் எதையும் அவர் தவறவிட்டதில்லை. அப்படி வருடா வருடம் பாராட்டிய ஜெகத்ரட்சகனுக்கு மத்திய அமைச்சர் பதவியே கிடைத்திருக்கிறது.


குடும்பச் சொத்தையும், கட்சிச் சொத்தையும் தனது வாரிசுகள் மனம் நோகாமல் பிரித்துக் கொடுக்க வேண்டும் எனற கவலை சக்கரவர்த்தியை வாட்டாமல் இல்லை. தென் மாவட்டங்களை ஆயுள் குத்தகைக்கு எடுத்திருக்கும் மூத்த இளவரசர் கட்சியில் முக்கியப் பொறுப்பைக் கேட்கிறார். இளைய இளவரசரோ துணை முதலமைச்சரிலிருந்து, முதலமைச்சராக முடிசூடக் காத்திருக்கிறார். இளவரசி கனிமொழிக்கு வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்தானா, அமைச்சர் பதவி இல்லையா என்று இரண்டாவது பட்டத்து ராணி நெருக்குகிறார்.

பேரன் பேத்திகளெல்லாம், தொலைக்காட்சி, படத்தயாரிப்பு என்று செட்டிலாகிவிட்டனர். கூடிய விரைவில் பாகப்பிரிவினைகளை சுமுகமாக முடித்துவிட்டு தனது ஓய்வையே ஒரு வரலாற்றுப் பிரகடனமாக அறிவிப்பதற்கு செம்மொழி மாநாடு.

மற்றவர்கள் கணிப்பது போல ஈழப்படுகொலைக்குக் காரணமான கறைபடிந்த கைகளை கழுவுவதற்கு மட்டுமல்ல இந்த மாநாடு. சென்ற தேர்தலில் செல்லுபடியாகாத ஈழம் அடுத்த தேர்தலில் பேசாப் பொருளாகி விடும் என்பது சக்கரவர்த்தி அறியாததல்ல. ஆனால் தனது வரலாற்றுப் பெருமைகளை நினைவுகூர்ந்து முடித்து விட அவருக்கு ஒரு பிரம்மாண்டமான களம் தேவை. இதுவரையிலும் அவரது அரசியலுக்கு செருப்பாய் உழைத்த தமிழ், இன்று அவரது இறுதி அத்தியாயத்துக்கு சேவைசெய்வதற்கும் காத்து நிற்கிறது.

கோவையில் செம்மொழி மாநாடு என்று அறிவித்தவுடனே, முழு அரசு எந்திரமும் அங்கே சென்றுவிட்டது. எல்லா அமைச்சர்களும் ஆளுக்கொரு பணிக் குழுவின் தலைவராய் முடுக்கி விடப்பட, கோவை மாவட்ட ஆட்சியர் மாநாட்டுக்கான அதிகாரியாகவே மாறியிருக்கிறார். அடுக்கு மாடிக் குடியிருப்புகள், செப்பனிடப்படும் சாலைகள், பிரம்மாண்டமாய் மாநாட்டின் கட்டமைப்பு பணிகள் எல்லாம் முழுவீச்சில் செயல்படத் துவங்கிவிட்டன.

சுனாமி வந்து ஆண்டுகள் சில கழிந்தும் அதன் நிவாரணப் பணிகள் முடியாத நாட்டில், இம்மாநாட்டுக்கான நிர்மாணப் பணிகள் கால இலக்கோடு முடுக்கி விடப்படுகின்றன. விலைவாசி உயர்வு, கல்விக் கட்டண உயர்வு, வேலையின்மையால் கவ்வப்பட்டுள்ள மக்களை, தமிழின் பெயரால் திசைதிருப்ப பல நூறுகோடிகள் கொட்டப்படுகின்றன.

சரி, போகட்டும். சக்கரவர்த்தியின் இந்த மாநாட்டால் தமிழுக்கு என்ன கிடைக்கும்? குடும்பத் தொலைக்காட்சிகளான சன்னும், கலைஞரும் தமிழைக் கொன்றுவரும் காலத்தில், கல்விவேலை வாய்ப்பில் தமிழுக்கு இனி எப்போதும் இடமில்லை என்று தீர்ப்பெழுதப்பட்ட காலத்தில், இந்த மாநாட்டின் பயன் என்ன? கணநேர வாண வேடிக்கையின் கணிப்பைத் தவிர எஞ்சப்போவது சாம்பல் மட்டுமே.

உழைக்கும் தமிழர்கள் கிராமங்களிலிருந்து விரட்டப்பட்டு நாடோடிகளாய் நகரங்களை நோக்கிப் படையெடுக்கும் காலத்தில், வன்னித் தமிழர்கள் விடுதலையை எதிர்பார்த்து வதை முகாம்களில் கண்ணீர் விடும் காலத்தில் செம்மொழி மாநாடு என்ன செய்யும்?

சக்கரவர்த்தியின் குடும்பத் தொலைக்காட்சிகள் தவிர்க்கவியலாமல் செம்மொழி மாநாட்டை ஒளிபரப்ப வேண்டியிருக்கும் என்பதால், 24 மணிநேர குத்தாட்டக் கொடுமையிலிருந்து சில மணிநேரங்களுக்காவது தமிழனுக்கு விடுதலை கிடைக்கும் என்று ஆறுதல் கொள்ளலாம். ஆயினும் சக்கரவர்த்தியிடம் தமிழ் சிறைப்படும் அதைத் தவிர்க்கவோ தப்பிக்கவோ தமிழால் ஏலாது.

வேறு யாருக்கும் தெரியாமல், உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அந்தக் கணமே அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா? அறம், ஒழுக்கம், விழுமியங்கள் என்ற காரணங்களின் அடிப்படையில் சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய நிலையில் நீங்கள் இருந்தால், பதிலளிப்பதில் சிரமமிருக்காது.

மேலும் படிக்க …

மே 2009இல் ஈழப்பிரச்சினை தொடர்பாக புதிய ஜனநாயகம் இதழின் சார்பில் மூன்று வெளியீடுகள் கொண்டுவரப்பட்டன. தமிழக ஓட்டுக் கட்சிகள் தமது தேர்தல் சந்தர்ப்பவாதத்துக்கு ஈழப் பிரச்சினையைப் பகடைக்காயாகப் பயன்படுத்துவதையும், தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியவாதிகள் எனப்படுவோரும் புலிகளும் இந்திய மேலாதிக்கத்துக்கு ஈழப் போராட்டத்தைப் பலியிட்டிருப்பதையும், ஈழப்போராட்டம் குறித்த ஒரு மீளாய்வின் அவசியத்தையும் அந்த மூன்று வெளியீடுகளும் பேசின. இந்த வெளியீடுகளுக்கு புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பலரும் வெளிப்படுத்திய எதிர்வினை பகையுணர்வு, மவுனம்.

மேலும் படிக்க …

வாசகர்களுக்கு புவனேசுவரியைத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. விபச்சார வழக்கில் போலீசால் கைது செய்யப்பட்ட அந்த அம்மையார் சொன்னதாக சில பிரபல நடிகைகளின் பெயர்களை தினமலர் வெளியிட்டதைத் தொடர்ந்து, பத்திரிகை உலகத்துக்கு எதிராகக் கலை உலகம் கொதித்தெழுந்தது.

மேலும் படிக்க …

ஆபரேசன் கிரீன் ஹன்ட்டுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன என்று கேட்டால், இந்தக் கேள்வியே அபத்தம் என்று நீங்கள் கருதக்கூடும். ‘கிரீன் ஹன்ட்’ என்றழைக்கப்படும் இந்த நக்சல் வேட்டையைத் வழி நடத்துபவரே உள்துறை அமைச்சர் சிதம்பரம்தான் என்பதை நாம் அறியாமல் இல்லை. நாம் இங்கே குறிப்பிடுவது உயர்திணைச் சிதம்பரமான உள்துறை அமைச்சரை அல்ல, அஃறிணைச் சிதம்பரமான தில்லையை  அதாவது தீட்சிதர்களை!

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More