புதிய கலாச்சாரம்

பொருளின்றி உச்சரிக்கப்படும் சில சொற்கள் உண்டு.
எனினும் அவை பொருளற்ற சொற்களல்ல.

”இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி?” – என்ற வியப்புக்குறி
இத்தகைய ரகம்.

சாதிப்படுகொலை மதக்கலவரம்
வரதட்சணைக் கொலை உடன்கட்டையேற்றம் -
போன்ற சமூக ஒடுக்குமுறைகளானாலும்…

நரபலி… தீமிதி, சோதிடம், வாஸ்து சாத்திரம்
சாய்பாபா, சிவசங்கர் பாபா போன்ற மூட நம்பிக்கைகளானாலும்…

கல்வியறிவின்மை மருத்துவ வசதியின்மை
குடிநீர்ப் பஞ்சம் பட்டினிச்சாவு
போன்ற வர்க்கச் சுரண்டல்களானாலும்…

மரண தண்டனை துப்பாக்கிச் சூடு காவல்நிலையக் கொலை
போன்ற அரசு ஒடுக்கு முறைகளானாலும்…

இதே கேள்வி: இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி?

கேட்பவர்கள் பாதிரியார்களாகவும்
கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால்
கேள்வி நியாயம்தான்

கேட்பவர்கள் அறிவாளிகள்.
கேட்கப்படுவதோ – பாவம் நாட்காட்டி!

நாள் என் செயும்? நாட்காட்டி என் செயும்?

டிசம்பர்-31 இரவு
தனது கடைசி காகிதத்தையும் உதிர்த்த நாட்காட்டி
”யாமிருக்க பயமேன்” என்று
இரண்டு துருப்பிடித்த ஆணிகளை மட்டுமே
தனது பதிலாக நீட்டுகிறது.

2000 ஆண்டுகள் முடிந்து விட்டன, அதற்கென்ன?

தனது அநாகரிகக் கொள்ளைக்கு ’எத்தனை ஆண்டுகள்’ – என்று
எண்ண வேண்டிய ஜெயலலிதா
’இந்திய நாகரீகத்திற்கு 5000 ஆண்டு’ – என்று கணக்குச் சொல்கிறார்.

’கிளிண்டனே மீட்பன்’ என்று தேவ ஊழியஞ் செய்யும்
ஆர்.எஸ்.எஸ். அடிமைகளோ
பரிதாபத்துக்குரிய கிறிஸ்துவைக்
காலனியாதிக்கவாதியாக்குகிறார்கள்.

கலியுகத்திற்கு 501-ஆம் ஆண்டு என்று
பஞ்சாங்கத்தை நீட்டுகிறார்கள் -
அட்டையில் பார்ப்பனப் பாம்பு சீறுகிறது.

5000 ஆண்டுகளாகவே இருக்கட்டும். அதற்கென்ன?

பூச்சியங்கள் என்ன செய்யும்? பூச்சியங்களின் மாயக்கவர்ச்சியில்
கணிதம் மயங்கலாம்; வரலாறு மயங்குவதில்லை.

மனித குலத்தின் வரலாற்று நெடுஞ்சாலையில்
தப்பிப் பிழைத்த ஒரு மைல்கல் கிறிஸ்து சகாப்தம்.

சாலிவாகன சகாப்தம் விக்கிரம சகாப்தம் – எனத்
தங்கள் திருப்பெயரால் கல்லை நட்ட கோமாளிகளின்
நடுகற்களையும் காணவில்லை.

திருச்சபையின் ஆட்சியை முடித்து வைத்த மூலதனம்
ஆண்டவருக்கு வழங்கிய மானியம் ”கிறிஸ்து சகாப்தம்.”
*

கி.பி.2001 பூச்சியங்கள் கூடக்கூட
மனிதகுலத்தின் முன்னேற்றம் கூடுமெனில்
வயது கூடினால் மனிதனின் அறிவும் கூட வேண்டும்.

இருபதால் நூற்றாண்டிலா இப்படி
என்ற வியப்புக்கு விடை

அறிஞர் பெருமக்களே,
இருபதாம் நூற்றாண்டில்தான் இப்படி!

தங்கம், வெள்ளி, வைரம், இரும்பு, செம்பு, துத்தநாகம்,
யுரேனியம், கோபால்ட் – போன்ற அனைத்து உலோகங்களையும்
நெல், வாழை, கரும்பு, சோளம், காப்பி
என்றனைத்துப் பயிர்களையும் விளைவிக்கும் – சயர்*1
பிச்சைக்கார நாடு!

இவையெதுவுமில்லாத ஜப்பான் பணக்கார நாடு.
இருபதாம் நூற்றாண்டில்தான் இது சாத்தியம்.

வானம் பொய்த்த போது மனிதர்கள்
பஞ்சத்தால் செத்திருக்கிறார்கள்.

கறந்த பாலைச் சாக்கடையிலும்
விளைந்த கோதுமையைக் கடலிலும் கொட்டிவிட்டு
ஆண்டுக்கு 150 லட்சம் மனிதர்களைப்
பட்டினி போட்டுச் சாகடிப்பது இருபதாம் நூற்றாண்டில்தான்.

கொள்ளை நோய்களுக்கு மருந்து தெரியாமல்
மக்கள் மடிந்த நூற்றாண்டுகளுண்டு.
மருந்து வியாபாரிகளின் கொள்ளையால்
மக்கள் மடிவது இருபதாம் நூற்றாண்டு.

துன்பத்தால் துடிக்கும் நோயாளியின் சட்டைப் பையைத்
துழாவியிருப்பாரா ஹெராக்ளிடஸ்?*2
கையைப் பிடிக்குமுன் பையைப் பிடித்துப் பார்க்கிறார்கள்
அவரது இருபதாம் நூற்றாண்டு சீடர்கள்.
முன்னேற்றம் காலத்தால் அளவிடப்படுவதில்லை.

சிந்துவெளியின் நகர நாகரிகத்தை அழித்தனர் -
ஆரியக் காட்டுமிராண்டிகள்.
காலத்தால் பிந்தையதென்பதால்
ஆரியம் – முன்னேற்றமலல.

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளுக்குப்
பிந்தையதுதான் மனுநீதி.
பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர்தான் லூயி போனபார்ட்.*3
அக்டோபர் புரட்சிக்குப் பிந்தையதுதான்
எல்ட்சினின் ஆட்சிக் கவிழ்ப்பு.
முன்னேற்றம் ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை.
காலம்தான் முன்னேற்றத்தால் அடையாளம் இடப்படுகிறது.

இயற்கையுடன் மனிதன் கொண்ட உறவினால்
காலத்தை அடையாளமிடுவதாயின்
அன்று கற்காலம்.
இன்று கணினிக் காலம்.

மனிதனுடன் மனிதன் கொண்ட உறவினால்
அடையாளமிடவதாயின்
இது முதலாளித்துவத்தின் காலம்; ஏகபோக மூலதனத்தின் காலம்.

இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி என்று கேள்விக்குறியிடுவோர்
முதலாளித்துவச் சமூகத்திலுமா இப்படி என்று சொல்லிப் பாருங்கள்
- கேள்வியின் முரண் கேட்பவரின் நாக்கையே அறுக்கும்.

அநீதியின் திரண்ட வடிவம் மூலதனம்
பாட்டாளி வர்க்கம் உழைக்க உழைக்க,
பாற்கடலைக் கடையைக் கடைய,
மூலதனம் எனும் ஆலகால விஷம்தான் திரண்டு வருகிறது.

கடலின் அடியாழத்தில் கிடந்த அனைத்துக் கசடுகளும்
புதிய வீரியத்துடன் மிதந்து எழும்புகின்றன.

ஆப்பிரிக்கப் பழங்குடிகள்
இந்தியச் சாதிகள்
ஆப்கான் இனக்குழுக்கள்
எகிப்தி மம்மிகள்…
இறந்தகாலத்தின் ஆவிகளனைத்தும்
மூலதனத்தின் குரலில் அலறுகின்றன.

செவ்வாய் நோக்கிப் பாய்கிறது விஞ்ஞானம்.
தத்துவ ஞானமோ, நீட்சேயின் மீமனிதன்
கான்ட்டின் அறியொணாவாதம்
சங்கரனின் மாயாவாதம் – என
கி.மு-வை நோக்கித் திரும்புகிறது.

டோலி*4யைப் படைக்கிறது விஞ்ஞானம்;
மேய்ப்பவனை நாடுகிறது மெய்ஞ்ஞானம்.
எல்லா உற்பத்திச் சக்திகளும் முன்நோக்கிப் பாய்கின்றன;
உற்பத்திச் சக்திகளில் தலையாய மனிதன்
பின்னிக்கிழுக்க்ப்படுகிறான்.

2000 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்து பிறந்தார்.
25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் அவதரித்தான் -
குரங்கிலிருந்து.

கற்காலத்தின் முதல் கல்லை
மனிதன் தீட்டத் துவங்கியதோ
ஒரு லட்சம் ஆண்டுகள் முன்.
கல்லையும் மரத்தையும் செதுக்கியபோதெல்லாம்
தானும் செதுக்கப்பட்டதை அறியாமல்.
மண்ணை உழுதபோதெல்லாம்
தானும் பண்படுத்தப்பட்டதை உணராமல்,
நூற்றாண்டுகள் பல போயின.

மார்க்ஸ் வந்தார்:
”இயற்கையை மாற்றியமைத்த போதே நீயும்
மாற்றியமைக்கப்பட்டாய்.
”இயற்கையுடனான உனது உறவு மாறியபோது
சக மனிதனுடனான உனது உறவும் மாறியதே.
உன் உடலின் மீதே உரிமையின்றி அந்நியப்படுத்தப்பட்டபோது
நீ அடிமை;
நிலத்திலிருந்து அந்நியப்பட்டபோது பண்ணையடிமை.
இப்போது உன் உழைப்பிலிருந்தே
அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறாய், நீ பாட்டாளி”

”உழைப்பு – இயற்கையினால் சுமத்தப்பட்ட அவசியம்.”

”உழைப்பைச் சாபக் கேடாகவும்
ஓய்வைச் சுதந்திரமாகவும் உணர்தல்
மனிதத் தன்மையல்ல.”

”எது மிருகத் தன்மையோ அது மனிதனுக்குரியதாகியிருக்கிறது.”

”பாட்டாளி வர்க்கமே நீதான் இம்மனித குலத்தின் மீட்பன்”

”உன் பணி உலகை வியாக்கியானம் செய்வதன்று -
அதனை மாற்றியமைப்பது”
- என்று தத்துவ ஞானத்தைத் தரையிறக்கினார் மார்க்ஸ்.

சொல்லுங்கள்! மனித குலத்தின் வரலாற்றை
யாருக்குப் பின் – என்று கணக்கிடுவது பொருத்தம்?

மார்க்சுக்குப் பின் என்று கணக்கிட்டவர்கள்
சோசலிசம் படைத்தார்கள்.

கிறிஸ்துவுக்கு மறுவருகையில்லை; கிருதயுகம் எழுவதுமில்லை.

விலங்குத் தன்மையை இழந்தவன் மனிதன் -
எனக் குறிக்க வேண்டுமானால்
குரங்குக்குப் பின் என்று கணக்கிடலாம்.

மனிதத் தன்மையை உணர்ந்தவன் மனிதன் -
எனக் குறிக்க வேண்டுமானால்
மார்க்சுக்குப் பின் என்று கணக்கிடலாம்.

’21-ஆம் நூற்றாண்டிலா!’ என்ற
வியப்புக்குறியைக் கேள்விக்குறியாக்குங்கள்.

நாகரீகத்திற்குப் பின் அநாகரிகமா?
குறளுக்குப் பின் மனுநீதியா?
சோசலிசத்திற்குப் பின் முதலாளித்துவமா?
- என்று கேட்டுப் பழகுங்கள்.

மனிதர்களின் வரலாற்றை
மார்க்சுக்கு முன்
மார்க்சுக்குப் பின் – என்று
திருத்தி எழுதுவோம்.
தேவனின் வரலாற்றையும்தான்.

குறிப்பு:
1. சயர்- மத்திய ஆப்பிரிக்காவின் மிகவும் பின்தங்கிய ஏழை நாடு.
2. ஹெராக்ளிடஸ்: கிரேக்க அறிஞர்; மருத்துவ உலகின் தந்தையெனக் கருததப்படுபவர்.
3. லூயி போனபார்ட்: மன்னராட்சியை ஒழித்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தன்னையே மன்னனாக முடிசூட்டிக் கொண்ட கழிசடைப் பேர்வழி.
4. டோலி: பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் உருவாக்கிய ஆடு.

___________________________________________________________________

- மருதையன், புதிய கலாச்சாரம், ஜனவரி, 2000.

_________________________________________________

– தோழர் மருதையன்

"குடும்பத்துடன் ராம் தற்கொலை' என்றுதான் செய்தி வந்தது. மனைவிக்கு விஷம் கொடுத்ததை விட, ஒரு வயதே நிரம்பிய பிஞ்சு குழந்தைக்கும் விஷம் புகட்டியதுதான் பெரிதாக பேசப்பட்டது. இதற்கெல்லாம் "காரணம் கடன் தொல்லை' என்று மூன்றே சொற்களில் முடித்துவிட்டார்கள். ஆனால், மூன்று சொற்களுக்குள் அவனது மொத்த வாழ்க்கையையும் அடக்கிவிட முடியுமா? சென்ற வருடம் வரை அவன் நன்றாகத்தான் வாழ்ந்தான். குழந்தை பிறந்த மகிழ்ச்சியை பந்தல் போட்டு, ஊரை அழைத்து, விருந்து வைத்து கொண்டாடினான்.

 

மேலும் படிக்க …

திரைப்படம் எனும் கலை வடிவம் முகர்தலை உள்ளடக்கியதாக இருக்குமானால்  அதாவது மணம் வீசக் கூடிய ஒரு பொருளாக சினிமா இருக்குமானால்  "ஸ்லம்டாக் மில்லியனர்' போன்ற திரைப்படங்கள் ஆஸ்கார்களை வெல்ல முடியாது. ஏனெனில்,

அத்தகைய வறுமையின் முடைநாற்றம் சூடான பாப்கார்னின் நறுமணத்தோடு இணைய முடியாது.

— அருந்ததி ராய்

 

மேலும் படிக்க …

பொருளின்றி உச்சரிக்கப்படும் சில சொற்கள் உண்டு.
எனினும் அவை பொருளற்ற சொற்களல்ல.

”இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி?” – என்ற வியப்புக்குறி
இத்தகைய ரகம்.

சாதிப்படுகொலை மதக்கலவரம்
வரதட்சணைக் கொலை உடன்கட்டையேற்றம் -
போன்ற சமூக ஒடுக்குமுறைகளானாலும்…

நரபலி… தீமிதி, சோதிடம், வாஸ்து சாத்திரம்
சாய்பாபா, சிவசங்கர் பாபா போன்ற மூட நம்பிக்கைகளானாலும்…

கல்வியறிவின்மை மருத்துவ வசதியின்மை
குடிநீர்ப் பஞ்சம் பட்டினிச்சாவு
போன்ற வர்க்கச் சுரண்டல்களானாலும்…

மரண தண்டனை துப்பாக்கிச் சூடு காவல்நிலையக் கொலை
போன்ற அரசு ஒடுக்கு முறைகளானாலும்…

இதே கேள்வி: இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி?

கேட்பவர்கள் பாதிரியார்களாகவும்
கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால்
கேள்வி நியாயம்தான்

கேட்பவர்கள் அறிவாளிகள்.
கேட்கப்படுவதோ – பாவம் நாட்காட்டி!

நாள் என் செயும்? நாட்காட்டி என் செயும்?

டிசம்பர்-31 இரவு
தனது கடைசி காகிதத்தையும் உதிர்த்த நாட்காட்டி
”யாமிருக்க பயமேன்” என்று
இரண்டு துருப்பிடித்த ஆணிகளை மட்டுமே
தனது பதிலாக நீட்டுகிறது.

2000 ஆண்டுகள் முடிந்து விட்டன, அதற்கென்ன?

தனது அநாகரிகக் கொள்ளைக்கு ’எத்தனை ஆண்டுகள்’ – என்று
எண்ண வேண்டிய ஜெயலலிதா
’இந்திய நாகரீகத்திற்கு 5000 ஆண்டு’ – என்று கணக்குச் சொல்கிறார்.

’கிளிண்டனே மீட்பன்’ என்று தேவ ஊழியஞ் செய்யும்
ஆர்.எஸ்.எஸ். அடிமைகளோ
பரிதாபத்துக்குரிய கிறிஸ்துவைக்
காலனியாதிக்கவாதியாக்குகிறார்கள்.

கலியுகத்திற்கு 501-ஆம் ஆண்டு என்று
பஞ்சாங்கத்தை நீட்டுகிறார்கள் -
அட்டையில் பார்ப்பனப் பாம்பு சீறுகிறது.

5000 ஆண்டுகளாகவே இருக்கட்டும். அதற்கென்ன?

பூச்சியங்கள் என்ன செய்யும்? பூச்சியங்களின் மாயக்கவர்ச்சியில்
கணிதம் மயங்கலாம்; வரலாறு மயங்குவதில்லை.

மனித குலத்தின் வரலாற்று நெடுஞ்சாலையில்
தப்பிப் பிழைத்த ஒரு மைல்கல் கிறிஸ்து சகாப்தம்.

சாலிவாகன சகாப்தம் விக்கிரம சகாப்தம் – எனத்
தங்கள் திருப்பெயரால் கல்லை நட்ட கோமாளிகளின்
நடுகற்களையும் காணவில்லை.

திருச்சபையின் ஆட்சியை முடித்து வைத்த மூலதனம்
ஆண்டவருக்கு வழங்கிய மானியம் ”கிறிஸ்து சகாப்தம்.”
*

கி.பி.2001 பூச்சியங்கள் கூடக்கூட
மனிதகுலத்தின் முன்னேற்றம் கூடுமெனில்
வயது கூடினால் மனிதனின் அறிவும் கூட வேண்டும்.

இருபதால் நூற்றாண்டிலா இப்படி
என்ற வியப்புக்கு விடை

அறிஞர் பெருமக்களே,
இருபதாம் நூற்றாண்டில்தான் இப்படி!

தங்கம், வெள்ளி, வைரம், இரும்பு, செம்பு, துத்தநாகம்,
யுரேனியம், கோபால்ட் – போன்ற அனைத்து உலோகங்களையும்
நெல், வாழை, கரும்பு, சோளம், காப்பி
என்றனைத்துப் பயிர்களையும் விளைவிக்கும் – சயர்*1
பிச்சைக்கார நாடு!

இவையெதுவுமில்லாத ஜப்பான் பணக்கார நாடு.
இருபதாம் நூற்றாண்டில்தான் இது சாத்தியம்.

வானம் பொய்த்த போது மனிதர்கள்
பஞ்சத்தால் செத்திருக்கிறார்கள்.

கறந்த பாலைச் சாக்கடையிலும்
விளைந்த கோதுமையைக் கடலிலும் கொட்டிவிட்டு
ஆண்டுக்கு 150 லட்சம் மனிதர்களைப்
பட்டினி போட்டுச் சாகடிப்பது இருபதாம் நூற்றாண்டில்தான்.

கொள்ளை நோய்களுக்கு மருந்து தெரியாமல்
மக்கள் மடிந்த நூற்றாண்டுகளுண்டு.
மருந்து வியாபாரிகளின் கொள்ளையால்
மக்கள் மடிவது இருபதாம் நூற்றாண்டு.

துன்பத்தால் துடிக்கும் நோயாளியின் சட்டைப் பையைத்
துழாவியிருப்பாரா ஹெராக்ளிடஸ்?*2
கையைப் பிடிக்குமுன் பையைப் பிடித்துப் பார்க்கிறார்கள்
அவரது இருபதாம் நூற்றாண்டு சீடர்கள்.
முன்னேற்றம் காலத்தால் அளவிடப்படுவதில்லை.

சிந்துவெளியின் நகர நாகரிகத்தை அழித்தனர் -
ஆரியக் காட்டுமிராண்டிகள்.
காலத்தால் பிந்தையதென்பதால்
ஆரியம் – முன்னேற்றமலல.

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளுக்குப்
பிந்தையதுதான் மனுநீதி.
பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர்தான் லூயி போனபார்ட்.*3
அக்டோபர் புரட்சிக்குப் பிந்தையதுதான்
எல்ட்சினின் ஆட்சிக் கவிழ்ப்பு.
முன்னேற்றம் ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை.
காலம்தான் முன்னேற்றத்தால் அடையாளம் இடப்படுகிறது.

இயற்கையுடன் மனிதன் கொண்ட உறவினால்
காலத்தை அடையாளமிடுவதாயின்
அன்று கற்காலம்.
இன்று கணினிக் காலம்.

மனிதனுடன் மனிதன் கொண்ட உறவினால்
அடையாளமிடவதாயின்
இது முதலாளித்துவத்தின் காலம்; ஏகபோக மூலதனத்தின் காலம்.

இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி என்று கேள்விக்குறியிடுவோர்
முதலாளித்துவச் சமூகத்திலுமா இப்படி என்று சொல்லிப் பாருங்கள்
- கேள்வியின் முரண் கேட்பவரின் நாக்கையே அறுக்கும்.

அநீதியின் திரண்ட வடிவம் மூலதனம்
பாட்டாளி வர்க்கம் உழைக்க உழைக்க,
பாற்கடலைக் கடையைக் கடைய,
மூலதனம் எனும் ஆலகால விஷம்தான் திரண்டு வருகிறது.

கடலின் அடியாழத்தில் கிடந்த அனைத்துக் கசடுகளும்
புதிய வீரியத்துடன் மிதந்து எழும்புகின்றன.

ஆப்பிரிக்கப் பழங்குடிகள்
இந்தியச் சாதிகள்
ஆப்கான் இனக்குழுக்கள்
எகிப்தி மம்மிகள்…
இறந்தகாலத்தின் ஆவிகளனைத்தும்
மூலதனத்தின் குரலில் அலறுகின்றன.

செவ்வாய் நோக்கிப் பாய்கிறது விஞ்ஞானம்.
தத்துவ ஞானமோ, நீட்சேயின் மீமனிதன்
கான்ட்டின் அறியொணாவாதம்
சங்கரனின் மாயாவாதம் – என
கி.மு-வை நோக்கித் திரும்புகிறது.

டோலி*4யைப் படைக்கிறது விஞ்ஞானம்;
மேய்ப்பவனை நாடுகிறது மெய்ஞ்ஞானம்.
எல்லா உற்பத்திச் சக்திகளும் முன்நோக்கிப் பாய்கின்றன;
உற்பத்திச் சக்திகளில் தலையாய மனிதன்
பின்னிக்கிழுக்க்ப்படுகிறான்.

2000 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்து பிறந்தார்.
25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் அவதரித்தான் -
குரங்கிலிருந்து.

கற்காலத்தின் முதல் கல்லை
மனிதன் தீட்டத் துவங்கியதோ
ஒரு லட்சம் ஆண்டுகள் முன்.
கல்லையும் மரத்தையும் செதுக்கியபோதெல்லாம்
தானும் செதுக்கப்பட்டதை அறியாமல்.
மண்ணை உழுதபோதெல்லாம்
தானும் பண்படுத்தப்பட்டதை உணராமல்,
நூற்றாண்டுகள் பல போயின.

மார்க்ஸ் வந்தார்:
”இயற்கையை மாற்றியமைத்த போதே நீயும்
மாற்றியமைக்கப்பட்டாய்.
”இயற்கையுடனான உனது உறவு மாறியபோது
சக மனிதனுடனான உனது உறவும் மாறியதே.
உன் உடலின் மீதே உரிமையின்றி அந்நியப்படுத்தப்பட்டபோது
நீ அடிமை;
நிலத்திலிருந்து அந்நியப்பட்டபோது பண்ணையடிமை.
இப்போது உன் உழைப்பிலிருந்தே
அந்நியப்படுத்தப்பட்டிருக்கிறாய், நீ பாட்டாளி”

”உழைப்பு – இயற்கையினால் சுமத்தப்பட்ட அவசியம்.”

”உழைப்பைச் சாபக் கேடாகவும்
ஓய்வைச் சுதந்திரமாகவும் உணர்தல்
மனிதத் தன்மையல்ல.”

”எது மிருகத் தன்மையோ அது மனிதனுக்குரியதாகியிருக்கிறது.”

”பாட்டாளி வர்க்கமே நீதான் இம்மனித குலத்தின் மீட்பன்”

”உன் பணி உலகை வியாக்கியானம் செய்வதன்று -
அதனை மாற்றியமைப்பது”
- என்று தத்துவ ஞானத்தைத் தரையிறக்கினார் மார்க்ஸ்.

சொல்லுங்கள்! மனித குலத்தின் வரலாற்றை
யாருக்குப் பின் – என்று கணக்கிடுவது பொருத்தம்?

மார்க்சுக்குப் பின் என்று கணக்கிட்டவர்கள்
சோசலிசம் படைத்தார்கள்.

கிறிஸ்துவுக்கு மறுவருகையில்லை; கிருதயுகம் எழுவதுமில்லை.

விலங்குத் தன்மையை இழந்தவன் மனிதன் -
எனக் குறிக்க வேண்டுமானால்
குரங்குக்குப் பின் என்று கணக்கிடலாம்.

மனிதத் தன்மையை உணர்ந்தவன் மனிதன் -
எனக் குறிக்க வேண்டுமானால்
மார்க்சுக்குப் பின் என்று கணக்கிடலாம்.

’21-ஆம் நூற்றாண்டிலா!’ என்ற
வியப்புக்குறியைக் கேள்விக்குறியாக்குங்கள்.

நாகரீகத்திற்குப் பின் அநாகரிகமா?
குறளுக்குப் பின் மனுநீதியா?
சோசலிசத்திற்குப் பின் முதலாளித்துவமா?
- என்று கேட்டுப் பழகுங்கள்.

மனிதர்களின் வரலாற்றை
மார்க்சுக்கு முன்
மார்க்சுக்குப் பின் – என்று
திருத்தி எழுதுவோம்.
தேவனின் வரலாற்றையும்தான்.

குறிப்பு:
1. சயர்- மத்திய ஆப்பிரிக்காவின் மிகவும் பின்தங்கிய ஏழை நாடு.
2. ஹெராக்ளிடஸ்: கிரேக்க அறிஞர்; மருத்துவ உலகின் தந்தையெனக் கருததப்படுபவர்.
3. லூயி போனபார்ட்: மன்னராட்சியை ஒழித்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தன்னையே மன்னனாக முடிசூட்டிக் கொண்ட கழிசடைப் பேர்வழி.
4. டோலி: பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் உருவாக்கிய ஆடு.

___________________________________________________________________

- மருதையன், புதிய கலாச்சாரம், ஜனவரி, 2000.

___________________________________________________________________

உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக்  கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில்.   மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய  மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின்  பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது.

தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.

பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை  அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.

அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.

வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?

அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!

ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.

சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.

கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை  அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.

சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட  87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட  கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.

இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர்  முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன்  சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில்  நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.

ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.

நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!

ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.

சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது.  கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக  (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.

சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.

பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என  நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென  4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.

அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன.  ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று,  வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட  வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.

பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!

இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?

பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார்,  தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில்,  ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.

விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம்  அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது.  இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது.  மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.

சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக்  கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர்.  திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர்  தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.

பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள  கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’   நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.

தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.

அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.

இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர்.   வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.

ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர்.  கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள்,  மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின்சாதனை!

ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான்.  கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத்  தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை. “சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடுவோம்” என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிரட்டியபோது ‘செம்மொழிகொண்டானின்’ அரசு ‘அனைத்துத் தரப்பினரின் நலன்களும் காக்கப்படும்’ எனக் கெஞ்சியதே, ராஜராஜன் காட்டியதும் அதே வீரம்தான்.

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது.   வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில்  ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன.  பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.

பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும்,ஆண்டைகளின் ஜனநாயகமும்!

ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான்.  பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது.  ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.

பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.  அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.  250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.  இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.

வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன  நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.

பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது  தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.

மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.

சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை  ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.

வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில்  ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.

களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!

ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.

களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது.  களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.

இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த  திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.

இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்பட்டனர்.

இன்று மண்ணின் மைந்தர்களான இருளர்கள் வீடுகட்ட நிலம் கேட்டால் தடியடியால் பதில் சொல்லும் ‘ஆரூர்ச் சோழனின்’ ஆட்சி, ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களைப் ‘பொது நீக்கி’ ஹூன்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கிக் கொண்டிருக்கிறதே, அதே போன்ற ‘பொது நீக்கி’ய அரசைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் நிறுவினார்கள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாகவும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டது ‘மா’மன்னன் ராஜராஜனின் ஆட்சியில்தான். பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு, மலைகளையும் காடுகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன இன்றைய ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்கள்.

ராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.

வடக்கே மகதப் பேரரசின்  அசோகனின்  ஆட்சிக் காலத்தில் பார்ப்பன வேள்விகள் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டன. தெற்கே களப்பிரர் ஆட்சிக்காலத்திலோ பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டிருந்த தேவதானங்கள் பறிக்கப்பட்டு, நிலங்கள் பொதுவாக்கப்பட்டன.

பவுத்தமன்னர் பிருகதத்தரின் ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சி செய்து, வட இந்தியாவில் பார்ப்பன மீட்சியை உருவாக்கியவன், பார்ப்பனத் தளபதி புஷியமித்திர சுங்கன். அதேபோல தமிழகத்தில் களப்பிரரை வீழ்த்தி, ‘பொது நீக்கி’, பவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.

தமிழின் மாபெரும் படைப்புகள், புதிதாகப் படைக்கப்பட்ட பாவினங்கள், விருத்தங்கள், அறநூலின் உச்சமான திருக்குறள் என  களப்பிரர் கால இலக்கியங்கள் எண்ணற்றவை. சோழர் காலத்தில் உருவான இலக்கியங்கள் யாவை?

சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?

இன்று கருணாநிதிக்கு சூட்டப்படும் சமத்துவப் பெரியார், வாழும் வள்ளுவர் போன்ற எண்ணற்ற அடைமொழிகளைப் போலவே சோழர்களும் அடைமொழி சூடினார்கள். இன்று கருணாநிதியின் துதிபாடுவதற்காகவே நடத்தப்பட்டும் சொறியரங்குகளைப் போலவே, அன்றைய ‘மெய்க்கீர்த்தி’களும், ‘உலா’, பரணிகளும்தான் சோழர்களைச் சொறிந் தன. வருணாசிரமத்தை கடுமையாக எதிர்த்த திருக்குறளின் பொருளைத் திரிப்பதற்கு சோழர்கள் காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினார்கள். வேதங்களையும், வேள்விகளையும் கண்டித்து, பிறப்பினால் அல்ல, ஒழுக்கத்தினாலேயே மனிதனுக்கு உயர்வு வரும் என்று கற்பித்த வள்ளுவரின் குறளையே திரித்துப் பரிமேலழகர் எனும் பார்ப்பனர் ‘நால் வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் வழுவாது நிற்க’ என்று சோழர்காலத்தில்தான் உரை எழுதினார்.

சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.

சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள். சற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.

இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, கருணாநிதி அரசு.

வைதீக மதத்தை எதிர்த்து நின்ற புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2550 ஆம் ஆண்டை பத்தோடு பதினொன்றாக அனுசரித்த திமுக அரசு, பார்ப்பனதாசனான ராஜராஜனை மட்டும் கோலாகலமாகக் கொண்டாடக் காரணம், கருணாநிதி தன்னை ராஜராஜனுடன் இனம் காண்கிறார் என்பதுதான்.

சநாதன தர்மம் என்று சொன்னாலே காறித் துப்பிய காலம் ஒன்று இருந்தது. அதுதான் சுயமரியாதை இயக்கக் காலம். அந்தக் காலத்தை ‘களப்பிரர் காலத்தோடு’ ஒப்பிடலாம் என்றால், அதனை முனை மழுங்கவைக்க குல்லுகப்பட்டருடன் கூட்டு சேர்ந்த காஞ்சித்தலைவன் அண்ணா தான், பார்ப்பன மீட்சிக்கு அடிக்கொள்ளி வைத்த  நரசிம்ம பல்லவன்.  மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவிடமும் தினமலரிடமும் நல்ல பெயரெடுக்கத் துடிக்கும் ‘திருவாரூர் சோழன்’தான்,  பார்ப்பனர்களுக்கு பொற்கால ஆட்சி தந்த ராஜராஜன்.

விந்தியம் கடந்து வந்த பார்ப்பனர்களுக்கு உள்ளூரின் விளைநிலங்கள் எல்லாம் ‘வரி நீக்கி’அவன் வழங்கியதைத்தானே, தேசம் கடந்து வரும் கம்பெனிகளுக்கு ‘வரி நீக்கி’ வழங்குகிறார் கருணாநிதி.

கோவிலின் ஆணைகளை எதிர்த்தவர்களுக்கு  ‘சிவத்துரோகி’ப் பட்டம் என்றால் உலகவங்கி ஆணைகளை நிறைவேற்றும் அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இன்றோ ‘தேசத்துரோக’ வழக்கு.

பீகார் பார்ப்பனர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து வாழவைத்த ராஜராஜனின் வரலாறும், பார்ப்பனிய பாஜக வைத் தமிழகத்திற்கு இழுத்து வந்து காலூன்ற வைத்த கலைஞரின் வரலாறும் வேறுவேறா என்ன? அன்று ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட  தீண்டாச் சேரியை @பால்தானே, இன்று எழில்மிகு சென்னைக்கு வெளியே துரத்தப்படும் உழைக்கும் மக்களுக்காக இக்காலச் சோழன் ஒதுக்கும் செம்மண்சேரி?

இன்று ராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்துகின்றனர். வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர்.  பொதுவை நீக்கி பார்ப்பனதாசனாக வாழ்ந்த ராஜராஜனும் இருந்தான்.

கீதையா, பவுத்தமா? அசோகனா, சுங்கவம்சமா? களப்பிரரா, ராஜராஜனா? நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.

___________________________________________________

ஆதாரங்கள்:

  1. சதாசிவ பண்டாரத்தார்,
  2. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,
  3. மயிலை சீனி.வேங்கடசாமி,
  4. குடவாயில் பாலசுப்ரமணியம்,
  5. நா.வானமாமலை, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ்,  ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் ஆகியோரது நூல்கள் மற்றும் கட்டுரைகள்.

_______________________________________

- கதிர், புதிய கலாச்சாரம்டிசம்பர் – 2010
__________________________________

உலோகம் இல்லாதவொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? நாம் பயணிக்கும் பேருந்து அல்லது இரயில், தார்ச்சாலை அல்லது தண்டவாளங்கள், அதன் மேல் வாகனங்களை நகர்த்தும் எரிபொருள், கட்டிடங்களையும் பாலங்களையும் உயர்த்திப் பிடிக்கும் இரும்புக் கம்பிகள்…

சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விடுவதாக கற்பனை செய்து பாருங்கள்…. மொத்த உலகின் நாகரீகமும் ஒரு நான்காயிரம் ஆண்டுகள் பின்னோக்கி ஓடிவிடும். நாம் கற்களை வைத்துக் கொண்டு மிருகங்களைத் துரத்திக் கொண்டிருப்போம்.

வரலாறு நெடுக மனித உழைப்பு தனது ஒவ்வொரு கட்ட வளர்ச்சியினூடாகவும் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையைப் புரிந்து கொண்டு, அதனோடு இயைந்தும் முரண்பட்டும் மூலக்கனிவளங்களை வெட்டியெடுத்து பலவித கருவிகளை உண்டாக்கிச் சிறுகச் சிறுக உருவாகி வளர்ந்ததன் நீட்சியே இன்று நாம் காணும் விண் முட்டும் கட்டிடங்களும் தேசத்தின் குறுக்கு நெடுக்காக ஓடும் சாலைகளும் அதன் மேல் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் பறக்கும் விமானங்களும் மிதக்கும் பிரம்மாண்டமான கப்பல்களும்.

இயற்கையின் இந்தக் கொடை அதன் இயல்பின் படி அனைவருக்கும் பொதுவானதே, எந்த தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. தனிச்சொத்துடைமையின் உச்சகட்டமான முதலாளித்துவம், இயற்கையினதும் உழைப்பினதும் பலன்களை லாபமாக ஓரே இடத்தில் குவித்துக் கொள்கிறது. செங்குத்தாய் நிற்கும் முக்கோணத்தின் தலைப்பாகமாக வீற்றிருக்கும் முதலாளித்துவம், அதன் கீழ்ப்புறத்தில் தன்னையே தாங்கி நிற்கும் உழைப்பையும் இயற்கைச் செல்வங்களையும் சுரண்டியே கொழுக்கிறது.

உலகின் எங்கோவொரு மூலையிலிருக்கும் சுரங்கத்தின் ஏதோவொரு குறுகிய பொந்துக்குள் பிராணவாயுவைக் கோரி விம்மும் நுரையீரலுக்கு கந்தகத்தின் நெடியை சுவாசமாய் அளித்துக் கொண்டு இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, புற்றுநோயை சம்பளமாகவும் மரணத்தை போனசாகவும் பெற்றுக் கொண்டு ஏதோவொரு முகம் தெரியாத தொழிலாளி வெட்டியெடுத்து அனுப்பும் நிலக்கரியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் தருகின்ற வெளிச்சமே நமது இரவுகளை ஒளிரவைக்கிறது.

சீனத்து சுரங்கத் தொழிலாளி

உலகின் மொத்த மின்சாரத் தேவையில் 41% நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் சீனத்தில் இருந்து மட்டுமே 50% உற்பத்தியாகிறது (worldcoal.org). குறிப்பாக சீனம், முதலாளித்துவ நாடாக மாறியபின் ஒவ்வொரு ஆண்டும் நிலக்கரி உற்பத்தியின் வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் சுரங்க விபத்துகளின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது.

உலகளவில் அரசினால் பதிவு செய்யப்பட்ட கணக்குகளின் படியே சராசரியாக 1,200 தொழிலாளர்கள் சுரங்கங்களில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள். சர்வதேச தொழிலாளர் கழகத்தின் செய்தி ஒன்றின் படி, உலகத் தொழிலாளர்களில் சுரங்கத் தொழிலாளர்களின் சதவீதம் ஒன்று  ஆனால் மொத்த தொழிற்சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களில் சுரங்கங்களில் மட்டும் 8% மரணங்கள் நிகழ்கின்றன.  http://mmc-news.net/2010/10/15/the-dangers-of-mining-around-the-world/ . இது பதியப்பட்ட மரணங்களின் கணக்கு தான். இன்னும் எத்தனையோ மரணங்கள் சுரங்க முதலாளிகளாலும் அரசாங்கத்தாலும் மறைக்கப்படுகின்றன.

சீனத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குச் சற்று முன் நடந்த ஒரு சுரங்க விபத்தில் 34 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டு சமீபத்தில் வெளியானது http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8385950.stm

‘விபத்துகள்’ என்று சொல்லப்பட்டாலும் இவை சாராம்சத்தில் திட்டமிட்ட படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும். தமது லாபவெறிக்காக அத்தியாவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட வேண்டுமென்றே புறக்கணித்து, அதன் காரணமாக ஏற்படுத்தப்படும் சாவுகளை வேறு எந்தப் பெயரிட்டு அழைப்பது? ஆபத்துகளைத் தவிர்க்கச் செய்யப்படும் பாதுகாப்புச் செலவினங்களால் வெட்டியெடுக்கப்படும் கனிமங்களுக்கான லாபம் குறைவதால் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் மூலப்பொருட்களை சல்லிசாக அள்ளிப்போகும் புழக்கடையாக மூன்றாம் உலக நாடுகளை ஆக்கி வைத்துள்ளன.

இந்நாடுகளைச் சேர்ந்த தரகு முதலாளிகளாலும் பன்னாட்டுக் கம்பெனிகளாலும் நடத்தப்படும் சுரங்கங்கள் விலைமதிப்பற்ற கனிவளங்களை சுரண்டிச் செல்வதோடு இலவச இணைப்பாக தொழிலாளிகளின் உயிர்களையும் காவு வாங்கி விடுகின்றன. சுரங்க விபத்துகளால் மட்டுமே ஆசிய, லத்தீன் அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் வருடந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் உயிரிழக்கின்றனர். சுரங்கங்களில் வேலை செய்து பெற்ற நோயால் இறப்போரின் கணக்கு தனி.

பூமியின் அடியாழத்தில் உள்ள சுரங்கத்தில் செய்யப்படும் வேலையின் தன்மையை சமதளத்தில் செய்யப்படும் வேலையின் தன்மையோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளக் கூடாது. சுரங்கத் தொழிலில் பல்வேறு முறைகள் பின்பற்றப்பட்டாலும், பூமியின் மேற்பரப்பில்  திறந்தவெளியில் பாறைகளைப் பிளந்து பிரம்மாண்டமாக பள்ளம் தோண்டி தாதுக்களை வெட்டியெடுக்கும் முறையும் (surface mining) பூமியைக் குடைந்து வெட்டியெடுக்கும் முறையும் (Sub-surface mining) பிரதானமாக பின்பற்றப்படுகிறது.

இதில் பூமியைக் குடைந்து அமைக்கப்படும் சுரங்கங்களின் பணிச்சூழலின் தன்மை நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட அபாயங்கள் நிறைந்த ஒன்று. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத சுரங்கங்களின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விடக்கூடும். இதுவும் போக நாட்கணக்கில் சுரங்கத்தினுள் பணிபுரியும் தொழிலாளிகளுக்கான உணவு,  தண்ணீர் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான சப்ளை துண்டிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பூமியின் ஆழத்திற்குச் செல்லச் செல்ல பிராணவாயுவின் அளவு வெகுவாகக் குறைந்து விடும். மீத்தேன் போன்ற அபாயகரமான வாயுக்கள் திடீரென்று வெளிப்பட்டுவிடுவதும் அதனால் தீ விபத்துகள் ஏற்படுவதும் சாதாரணம்.

அபரிமிதமான உற்பத்தியை மிகக் குறைவான நேரத்தில் குறைவான கூலியில் சாதிப்பது என்பதில்தான் லாப அளவு நிர்ணயிக்கப்படும் என்பது முதலாளித்துவத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. எனவே பாதுகாப்பான ஆழம் என்று நிர்ணயிக்கப்பட்ட அளவையும் கடந்து பூமியைக் குடைந்து செல்லுமாறு தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்தப் பகாசுர உற்பத்தி வேகத்தின் காரணமாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் செலவு செய்து லாபத்திலிருந்து ஒரு சிறு பகுதியும் வீணாகி விடக்கூடாது என்கிற முதலாளிகளின் பேராசைக் காரணமாகவும் அடிப்படை அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட செய்யாமல் விட்டுவிடுவதாலேயே ‘விபத்துகள்’ நடக்கின்றன.

அத்தகையதொரு விபத்துதான் சமீபத்தில் சிலி நாட்டில் நடைப்பெற்றது. சுரங்கத்தின் அடியாழத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்காக சிலி அரசு மேற்கொண்ட முயற்சியையும், அதற்கு அமெரிக்காவின் நாசா துணை நின்றதையும் உலகத் தொலைக்காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பின.

சராசரியாக 1,200 தொழிலாளர்கள் சுரங்கங்களில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள்

ஆனால், இத்தகைய விபத்துகளுக்கெல்லாம் மூலகாரணமாக அமைந்தவொரு ‘பெருவிபத்தை’, 28 ஆண்டுகளுக்கு முன் இதே சிலியில் அமெரிக்க அரசு அரங்கேற்றியது. 1973ஆம் அண்டு பொதுத்தேர்தலில் சிலியின் சோசலிசக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடார் அலண்டே, அமெரிக்க முதலாளிகள் கைப்பற்றி வைத்திருந்த சிலியின் தாமிரச் சுரங்கங்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்குவதாக அறிவித்தார். இன்று தொழிலாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கருணையுடன் முன்வந்ததைப்போலக் காட்டிக் கொள்ளும் அமெரிக்க அரசு, அன்று தனது முதலாளிகளுடைய சொத்தைக் காப்பாற்றுவதற்காக சிலியில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது.

செப்டெம்பர் 11, 1973 அன்று சிலியின் அரசு வானொலியில் பிரதமர் அலண்டேயின் குரல் கம்பீரமாக ஒலித்தது. “சிலியின் பாட்டாளிகளே, சிலியின் எதிர்காலம் குறித்து எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. வேறு எவராயிருப்பினும் தேசத் துரோகிகள் வெற்றியுலா வரும் இந்நேரத்தில் அதற்குப் பணிந்து பிழைத்துப் போயிருப்பார்கள். நான் எங்கும் ஓடப்போவதில்லை. நீங்கள் ஒன்றை மறந்து விடாதீர்கள். விரைவில் இந்தச் சூழல் மாறும். ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். சிலி வாழ்க. மக்கள் வாழ்க. பாட்டாளி வர்க்கம் வாழ்க!”

சீறி வெடித்த துப்பாக்கி குண்டுகளின் பின்புலத்தில் அச்சமின்றி ஒலித்த அலண்டேயின் குரல் நசுக்கப்பட்டது. அமெரிக்க சி.ஐ.ஏவினால் ஏவி விடப்பட்ட சிலியின் இராணுவ தளபதி அகஸ்டோ பினோசே (பினோச்செட்) யின் இரத்த வெறிபிடித்த இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அலண்டே தற்கொலை செய்து கொண்டதாக இராணுவம் புளுகியது  இறுதி வரை போராடிக் களத்தில் கொல்லப்பட்டார் என்று அலண்டேயின் ஆதரவாளர்கள் அறிவித்தார்கள்.

அன்றிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை சிலி, இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் கொண்டு வரப்பட்டது. ஜெனரல் பினோசே 1980ஆம் ஆண்டு நேரடியாக ஜனாதிபதியாகத் தன்னை நியமித்துக் கொண்டான். ஏழு ஆண்டுகளுக்குள்ளாகவே சுமார் 2000 எதிர்ப்பாளர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள் என்றும் சுமார் 27000 பேர் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள் என்றும் பின்னர் பிஷப் செர்ஜியோ வேலஷ் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி 2005ம் ஆண்டு வெளியிட்ட ‘வேலஷ் அறிக்கை’ சொல்கிறது. அமெரிக்கா இந்த ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியதற்கான காரணம் சில வருடங்களிலேயே உலகிற்கு அம்பலமானது.

உலகில் உற்பத்தியாகும் தாமிரத்தில் மூன்றில் ஒரு பங்கு சிலியில் இருந்து வெட்டியெடுக்கப்படுகிறது. சிலியின் தாமிர வளத்தைக் கைப்பற்ற 1825லிருந்தே அமெரிக்காவும் பிரிட்டனும் கடுமையான போட்டியைத் துவக்கியிருந்தன. அலண்டேயின் ஆட்சிக்காலத்தில் ஏகாதிபத்திய முதலாளிகள் வசம் இருந்த தாமிரச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன.

இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சிய பினோசே, சுரங்கங்களை முற்றிலுமாக தனியார்மயமாக்காமல், அவற்றின் மேலிருந்தக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்தினார். அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த சுரங்க நிறுவனங்களிலும் தனியார் முதலாளிகள் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இப்போதைய ஜனாதிபதி செபாஸ்ட்டியன் பெனேராவின் மூத்த சகோதர் ஜோஸ் பெனேரா 1980இல் பினோசேயின் ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த போதுதான் தொழிலாளர் நலச்சட்டங்கள் உலக வங்கியின் உத்தரவிற்கிணங்க மாற்றியமைக்கப்பட்டன. இதன் காரணமாக சிலியின் மொத்த தொழிலாளர்களில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் பணி நிரந்தரமற்ற அன்றாடக் கூலிகளின் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மேலும், தொழிலாளர்களின் பணிச் சூழல் பாதுகாப்பு, விபத்து தடுப்புப் போன்றவைகளை தொழிற்சாலை முதலாளிகளின் கட்டாயமான பொறுப்பு அல்ல என்றும் இதன் காரணமாக ஏற்படும் விபத்துகளுக்கு தொழிற்சாலைகள் பொறுப்பேற்க வேண்டியதோ இல்லை நட்ட ஈடு தரவேண்டியதோ தேவையில்லை என்றும் தொழிலாளர் சட்டங்கள் மாற்றி எழுதப்பட்டன. தொழிலாளர்களின் எதிர்ப்புகளை துப்பாக்கிச் சப்தங்கள் மௌனமாக்கின. இந்தப் பின்புலத்தில் நிகழ்ந்திருப்பதுதான் சிலியில் இன்று நடந்துள்ள சுரங்க விபத்து.

சிலியின் அட்டாகாமா பகுதியின் கொப்பியாபோ நகரின் அருகே அமைந்துள்ளது சான் ஜோஸே சுரங்கம். சுமார் எழுநூறு அடி ஆழம் கொண்ட இந்தச் சுரங்கத்தில் பிரதானமாக தாமிரமும் தங்கமும் வெட்டியெடுக்கப்படுகிறது. இந்த எழுநூறடி ஆழமும் நேர்வாக்கில் அமையாமல் சுருள் வட்டப்பாதையாக அமைந்துள்ளது. 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சுரங்கம் மிகுந்த லாபகரமாக நடந்து வந்த போதிலும், சுரங்கத்தை நிர்வகித்து வந்த தனியார் நிறுவனம் சுரங்கத்தின் பாதுகாப்பு அம்சத்தைக் கண்டுகொள்ளாமல் கை கழுவியது.

2003ம் ஆண்டு தொடங்கி வரிசையாக விபத்துக்கள் நடந்து மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 2004ம் ஆண்டில் ஒருமுறையும் 2007ம் ஆண்டில் ஒருமுறையும் சுரங்கத் தொழிலாளர் சங்கம் இந்தச் சுரங்கத்தின் பாதுகாப்பு சரியில்லாததை சுட்டிக் காட்டி இதை மூடிவிட உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறையும் முதலாளிகளுக்குச் சாதகமாக வழக்கை சிலி நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.

இறுதியாக 2007ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் நிலவியல் ஆய்வாளர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இச்சுரங்கம் வேறு வழியில்லாமல் மூடப்பட்டது. சர்வதேச முன்பேர வர்த்தக சூதாடிகளின் சூதாட்டத்தால் தாமிரத்தின் விலை கூடியதும், சீனத்திற்கு தாமிர இறக்குமதித் தேவை அதிகரித்ததும் சுரங்க நிறுவன முதலாளிகளின் வாயில் எச்சில் ஊற வைத்தது. மூடப்பட்ட சுரங்கத்தின் பாதுகாப்பு அம்சங்களை இம்மியளவும் மேம்படுத்தாமல்  எம்ப்ரெஸ்ஸா மினரா சான் எஸ்டிபான் என்கிற நிறுவனம், இச்சுரங்கத்தை 2008ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் திறந்தது.

2010,ஆகஸ்ட் 5ஆம் தேதி சுரங்கத்தின் மேற்கூரையிலிருந்து பாறைகள் இடிந்து விழுந்து சுரங்கம் அடைத்துக் கொண்ட போது அதனுள்ளே 33 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். சம்பவம் நிகழ்ந்து பல மணிநேரம் கழிந்து மதியம் 2 மணியளவில்தான் சுரங்க நிர்வாகம் இது குறித்து அரசுக்குத் தெரியப்படுத்தியது. அவசரகாலத்தில் தப்பிப்பதற்கான ஏணியைக்கூட நிர்வாகம் அமைக்காததனால் சுரங்கத்தின் வெவ்வேறு பகுதிகளில் மாட்டிக் கொண்ட 33 தொழிலாளர்களும் வேறு வழியில்லாமல் உள்ளேயே இருந்த குகை போன்ற ஒரு தற்காலிக பாதுகாப்பு இடத்தில் ஒளிந்து கொண்டனர். உடனடியாக தப்பித்துச் செல்ல ஏதேனும் வழியிருக்குமா என்று தேடத் துவங்கினர்.

சுரங்கம் ஒன்றினுள் பதினேழு நாட்களாக, வெளியுலகத் தொடர்பு அற்று, மீட்கப்படுவோமா இல்லையா என்கிற நிச்சயமில்லாத ஒரு நிலையிலும், காற்றும் ஒளியும், நீரும் இல்லாத நிலையிலும் வாழ்வதற்கான நம்பிக்கையை மட்டும் உயிருடன் காப்பாற்றி வந்த அந்தப் போராட்டத்தை வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது. சொந்த அனுபவத்தில் மட்டுமே அந்தத் துன்பத்தின் முழுப் பரிமாணத்தையும் உணர்ந்து கொள்ள இயலும்.

அந்தத் தொழிலாளர்களிடையே ஓரளவு அனுபவம் கொண்ட, 40 வயதான மரியோ செபுல்வெடாவிற்கு ஆபத்து காலத்தில் தப்பித்துச் செல்வதற்கு காற்று வரும் பாதையில் மிருகத்தோலால் செய்யப்பட்ட ஏணி ஒன்று இருக்கும் என்பது தெரியும். அதில் ஏறிச் சென்று வெளியேற வழி அகப்படுமா என்று பார்க்கிறார். ஆனால், அந்த ஏணி உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்ததால் சிதைவுற்ற நிலையில் இருந்துள்ளது. அப்படியும் அதில் உயிரைப் பணயம் வைத்து ஏறிப்பார்க்கிறார்  அது 150 அடி தூரம் சென்றவுடன் முற்றிலுமாக சிதைவடைந்து கிடக்கிறது.

தலைக் கவசத்தில் இருக்கும் பாட்டரியினால் இயங்கும் விளக்கைத் தவிர்த்து வேறு வெளிச்சம் இல்லாத நிலை. இரவா பகலா என்று புரிந்துக் கொள்ள முடியாத சூழல். வெளியுலக சப்தம் ஏதும் அற்ற அந்த நிலையில் அவர்கள் தமக்குள் ஒன்றிணைந்து செயல்படுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்பதை உணர்கிறார்கள்.

தப்பிக்க மேற்கொள்ளும் எந்தவொரு செயலுக்கும் அவர்கள் தமக்குள் ஓட்டெடுப்பு நடத்தி பெரும்பான்மையானவர்கள் ஆதரித்த முடிவையே ஒருமனதாக செயல்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கியிருந்த இடத்தின் சுத்தத்தை பராமரிக்க ஒரு குழு, தப்பிக்கும் வழியைத் தேட ஒரு குழு, மீட்புக் குழு வருகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழு என்று அவர்களுக்குள் இயல்பாகவே குழுக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

தனது வர்க்க ஒற்றுமை தோற்றுவித்த தோழமையால் மரணத்தை வென்ற தொழிலாளர்கள்

92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்துக் கொண்டிருந்த நிலையிலும், வெளிக்காற்றின் சுழற்சி தடைப்பட்டிருந்த நிலையிலும் அவர்களின் உடல் வெகுவேகமாக வியர்த்தது. உடலின் நீர்ச் சத்து வெகுவேகமாக குறைந்து வந்த அந்த நிலையில் கையிருப்பில் இருந்த தண்ணீரின் அளவும் அதே வேகத்தில் குறைகிறது. தண்ணீரும் மற்ற உணவுப் பொருட்களும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கே தாக்குப் பிடிக்கும் அளவிலேயே இருந்துள்ளது. எனவே அவர்களுக்குள் இருப்பதை சமமாக பகிர்ந்து கொள்ள ரேஷன் முறை அமுல்படுத்தப்படுகிறது. பேட்டரிகள் தீர்ந்து போய் முழுமையான இருளில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்க எப்போதும் வெளிச்சத்தில் இருப்பதைத் தவிர்க்கிறார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல மீட்கப்படுவோம் என்கிற நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைகிறது. ஒருவேளை தங்கள் உடல்களாவது மீட்கப்பட்டால் குடும்பத்தாருக்குக் கிடைக்கட்டும் என்று அவரவர் தங்கள் இறுதிச் செய்தியை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். ஒருவேளை மரணம் நிச்சயம் என்பது உறுதியாகியிருந்தால் கூட அவர்களுக்கு ஒரு மனநிம்மதி ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், ஏதும் நிச்சயமற்ற நிலையில் நாட்களைக் கடத்துவதன் பின்னுள்ள உளவியல் அழுத்தம் நமது கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவொன்று. எங்காவது எப்போதாவது கேட்கும் ட்ரில் இயந்திரத்தின் ஓசை அவர்களுக்கு வாழும் நம்பிக்கையை லேசாகக் காட்டிவிட்டு நின்று விடும். சாவுக்கும் வாழ்வுக்கும் இடையிலான அந்த மெல்லிய எல்லைக் கோட்டில் அவர்கள் பதினேழு நாட்கள் அமர்ந்திருந்தனர்.

பாட்டாளி வர்க்கத்திற்கே உரிய கூட்டுணர்வு ஒன்றுதான் அவர்கள் அந்த நிலையைக் கடந்து வர கைகொடுத்த உந்து சக்தியாய் இருந்தது. எல்லா பிரார்த்தனைகளும் நம்பிக்கைகளும் தகர்ந்துப் போன அந்தச் சூழலில்  தோழமை உணர்வுதான் அவர்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது. இறுதியில் அவர்கள் அடைபட்டிருந்த இடத்தை ஆகஸ்டு 22ஆம் தேதி மீட்புப் படை அனுப்பிய ட்ரில் இயந்திரம் எட்டுகிறது. மீட்புப் படையிடம் சுரங்க நிர்வாகம் கொடுத்த வரைபடத்திற்கும் சுரங்கப் பாதைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் இருந்ததே இந்த தாமதத்திற்குக் காரணம்.

ஊடகங்கள் மூலம் சர்வதேச அளவில் பெருவாரியான மக்களின் கவனத்தையும் இந்த சம்பவம் ஈர்த்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் நாசா போன்ற நிறுவனங்களை இறக்கிய சிலி அரசு, புதிதாக சுரங்கப் பாதைகளை அறிந்து, வரைபடம் தயாரித்தே மீட்பு நடவடிக்கைக்கான திட்டத்தை உருவாக்குகிறது. அந்தச் சுரங்கத்தின் தாமிரத்தை ஏற்றுமதி செய்து எத்தனையோ லாபத்தை அள்ளிக் குவித்த அதன் முதலாளிகள், மிக அடிப்படையான வரைபடத்தைக் கூட முறையாக வைத்திருக்கவில்லை.

ஊடக வெளிச்சத்தினால் உண்டான நெருக்கடியும், நெருங்கி வரும் தேர்தலில் தோற்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு காரணமாகிவிடக்கூடாது என்கிற அச்சமும் விரட்ட, மீட்பு நடவடிக்கையை முடுக்கி விட்டார் ஜனாதிபதி செபாஸ்டியன் பினேரா. பல்வேறு மீட்பு முறைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் சிலி கப்பற்படையும் அமெரிக்க நாசாவும் வடிவமைத்த ஃபீனிக்ஸ் என்கிற கூம்பு வடிவ கேப்சூலை சுரங்கப் பாதைக்கு இணையாக பூமியைக் குடைந்து உள்ளே அனுப்பி, ஒவ்வொரு தொழிலாளியாக மீட்பது என்று முடிவு செய்கிறார்கள்.

சுரங்கத்தினுள்ளே 33 தொழிலாளர்களும் மீட்பு கேப்சூல் வருகையை தவிப்புடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள். அது வெற்றியடையுமோ இல்லையோ; வெளியே சென்று குடும்பத்தாருடன் சேர்வோமோ இல்லையோ என்று ஒரு கலவையான உணர்ச்சியலையில் இருக்கிறார்கள். அவர்கள் வெளியுலகத்தோடு தொடர்பு கொண்டு 52 நாட்களாகிறது. அவர்கள் குடும்பத்தாரும் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அக்டோபர் 12ம் தேதி நள்ளிரவு தொடங்கிய மீட்பு நடவடிக்கை, அடுத்த நாள் இரவு பத்து மணிக்கு 33வது தொழிலாளியையும் மீட்டவுடன் வெற்றிகரமாக முடிகிறது.

···

தொழிலாளர் அவலத்தில் காசு பார்க்கும் ஊடகம்

‘வாவ்… இங்கே பாருங்கள் அதிசயத்தை. ஒரு சுரங்கத்தினுள் மீட்பு கேப்ஸ்யூல் இறங்குவதைத் திரையில் காண்கிறீர்கள். இது உங்களை ஆச்சர்யப்படுத்தா விட்டால் வேறு எதுவுமே ஆச்சர்யப்படுத்தி விடமுடியாது‘ என்று சி.என்.என் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ஆண்டர்சன் கூப்பர் அலறுகிறார்.

ஒரு திரில்லர் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியைப் போல விவரித்து செய்தி ஊடகங்களில் காட்டப்பட்ட மீட்பு நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தை நூறு கோடி பேர் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துள்ளனர். இணையத்தில் நெரிசல் இருபது சதவீதம் அதிகரித்துள்ளது. உலகெங்குமிருந்து சுமார் மூவாயிரம் செய்தியாளர்கள் சுரங்கத்தின் அருகில் கூடியிருந்தனர்  பந்தியில் கை நனைக்கும் வாய்ப்பை எவரும் தவற விடத் தயாரில்லை போல. இவர்களுக்காக ஒரு திடீர் நகரமே உருவாக்கப்பட்டிருந்தது.

மிருகக்காட்சி சாலைகளில் கூண்டுகளில் அடைபட்டிருக்கும் மிருகத்தைக் காட்சிப் பொருளாக்குவது போல் சுரங்கத்தினுள் மாட்டிக் கொண்ட தொழிலாளர்களின் ஒவ்வொரு அசைவையும் காட்சியாக்கி டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக் கொண்டன முதலாளித்துவ ஊடகங்கள். உள்ளே மாட்டிக் கொண்ட தொழிலாளர்களுக்கு வெளியுலக தொடர்பு கிடைத்தவுடன் அவர்களின் நடவடிக்கையையும் விரிவாக திரையில் காட்டி காசு பார்த்த ஊடகங்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியவர்கள் பற்றி மூச்சுக்காட்டாமல் அப்படியே மூடி மறைத்தன. தொழிலாளர்கள் மீட்கப்படும் வரையில் சுரங்கத்தின் பாதுகாப்பைப் புறக்கணித்த நிர்வாகத்தையும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்ட அரசையும் ஓரளவுக்கு விமர்சித்து வந்த ஊடகங்கள், தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன் ‘விவா சிலி’ (சிலி வாழ்க) என்று மங்களம் பாடி ஒட்டுமொத்தமாக சுபம் போட்டுவிட்டனர்.

சிலியின் மீட்பு நடவடிக்கையில் பல நாடுகளது அரசாங்கங்கள், அரசு நிறுவனங்கள் இணைந்துள்ளன. தங்களது தொழில்களில் எல்லாவிதமான அரசுத் தலையீட்டையும் எதிர்க்கும் தாராளமயதாசர்கள் எவரும் இந்த ‘அரசுத்தலையீடு’ பற்றி மூச்சுவிடவில்லை. தொழிலாளிகளின் உயிரைக் காக்கும் பொறுப்பை மட்டும் அரசுகள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கருதுகின்றனர்.

நாளை இந்தச் சம்பவங்களை வைத்து ஏதாவது ஹாலிவுட் திரைப்படம் வெளியாகலாம். அதில் மீட்புப் படைத் தலைவராக  நாசா என்ஜினியராக  டாம் குரூஸ் வந்து சிலியின் தொழிலாளர்களை மீட்டுத் தரக்கூடும்.

சிலியின் சுரங்கத் தொழிலாளர்களின் நிலை உலகளவில் காட்சிப் பொருளாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில் சீனத்தில் நடந்த சுரங்க விபத்து ஒன்றில் 34 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். எதார்த்தத்தில் இன்றும் சிலியின் பெரும்பாலான சுரங்கங்கள் எவ்விதமான அடிப்படை பாதுகாப்பும் இல்லாமல்தான் இயங்கி வருகின்றன. . அவர்கள் உள்ளே மாட்டிக் கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுரங்கத்தின் உள்ளே கேமரா இறங்கப் போவதில்லை. ‘சிலியின் கதை’ ஏற்கெனவே உலகம் முழுவதும் ஓட்டப்பட்டு விட்டதால், இதை விடக் கொடிய, திகில் நிறைந்த, இதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான, புதிய ‘விபத்துகளை’ ஊடக முதலாளிகள் தேடிக்கொண்டிருப்பார்கள்.

தொழிலாளர்களோ, அதே பழைய தாமிரத்துக்காகவும், நிலக்கரிக்காகவும், முதலாளிகளின் கொள்ளை இலாபத்துக்காகவும், பாதுகாப்பற்ற சுரங்கங்களில் தமது உயிரைப் பணயம் வைத்து பூமியைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள்

____________________________________________________

தமிழரசன், புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010

கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை. முழு இடமும் தன் உருவத்தை தலைகீழாக மாற்றியிருந்தது. தங்கத்தை நம்பி வாழ்ந்த அந்த மக்கள் எங்கே போனார்கள்? என்ன ஆனார்கள்?

பாரம்பரிய தங்கநகைத் தொழிலின் அழிவு!

கோவையிலும் சரி, பொதுவாக நமது நாட்டிலும் சரி, தங்க நகை உருவாக்கம் என்பது முழுவதுமாக ஒரு நிலபிரபுத்துவ பாணியிலான உற்பத்தியாகவே இருந்துள்ளது. தங்க ஆசாரிகள், தமது வீடுகளிலேயே பட்டறைகளை அமைத்திருப்பர்; அவர்களது மொத்த குடும்பமும் சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடும். நகை தேவைப்படுவோர் தங்கத்தை (நகையாகவோ, நாணயமாகவோ) ஆசாரியிடம் கொடுத்தால் அவர் நகையாக வார்த்துத் தருவார்.

ஒரு நகையின் டிசைன்/ மாடல் போன்றவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அதில் கல்பதிப்பது, அந்த நகையில் இருக்கும் பால்ஸ், கம்பி போன்றவைகளை டிசைனுக்குத் தகுந்தவாறு நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல அம்சத்திலும் அந்த ஆசாரியே பங்குபெற்றிருப்பார்.

இவ்வகையான உற்பத்தி முறையில் ஒரு நகையை உருவாக்க அதன் வேலைப்பாடுகளின் நுணுக்கத்தைப் பொருத்து ஒருவாரமோ பத்துநாளோ ஆகலாம்.

இந்தப் பழையகால உற்பத்திமுறையில் தங்க நகை வடிவமைப்புத் தொழில் பல நூற்றாண்டுகளாக அப்படியே தேங்கி நின்றது. ஏனென்றால் நுகர்வு குறைவு. தேவைக்கதிகமாக வாங்கிப் பூட்டி வைப்பது என்பது போன்ற வழக்கங்கள் மிக மிக சில மேட்டுக்குடி குடும்பங்களிலேயே இருந்தது. மேலும் உற்பத்தி அதிகமாகி அதை சந்தையில் தள்ளியாக வேண்டும் எனும் கட்டாயமும் எழவில்லை.

புதிய தாராளவாதக் கொள்கையின் அறிமுகம் இந்த நிலையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் புதிதாக உருவாகி வந்த சேவைத்துறை ஊழியர்களுக்கும் ஐந்திலக்க சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டபடியால்ல், அத்துறைகளின் மாப்பிள்ளைமார்களுக்கும் பெற்றோர்களுக்கும் மணப்பெண் வீட்டை ரத்தம் வர கறப்பதற்கான வாய்ப்பும் கூடியது. தங்கம் ஒரு சேமிப்பு என்ற நடுத்தர வர்க்க மனோபாவத்தைக் கடந்து, அது இப்போது அந்தஸ்தின் அடையாளமாகி விட்டது.

நகை நுகர்வின் அதிகரிப்பு, அதன் உருவாக்க முறையில் மாற்றத்தை தோற்றுவித்தது. இதன் விளைவாக அத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடையேயும் தொண்ணூறுகளின் இறுதியிலிருந்து பெரும் மாற்றங்கள் உருவாகத் துவங்கின.

நகைத் தொழில் அதிகமாக நடந்து வந்த கோவையில் தொண்ணூறுகளின் இறுதியில் நகைப் பட்டரைத் தொழிலாளிகள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். முன்னொரு காலத்தில் ‘ஜே ஜே’ என்று நகைப் பட்டறைகள் நடந்து வந்த சலீவன் வீதி, குரும்பர் வீதி போன்ற பகுதிகள் எழவு விழுந்த வீடுகள் போன்று ஆனது. 98ல் இருந்து இரண்டாயிரத்திரண்டாம் ஆண்டுக்குள், நான்கே ஆண்டுகளில் சுமார் 300 நகைத் தொழிலாளிகளுக்கும் மேற்பட்டோர், நகையைக் கழுவப் பயன்படும் சயனைடைத் தின்று தற்கொலை செய்துகொண்டார்கள்.

முப்பதாயிரம் பேர்களுக்கு மேல் ஈடுபட்டிருந்த நகைத் தொழிலில் இருந்து இருபதாயிரம் பேர் காணாமல் போயினர். 2002 வாக்கில் வெறும் பத்தாயிரம் பேர் தான் ஈடுபட்டிருந்தனர். இந்த வீழ்ச்சி 98க்குப் பின்னர்தான் உணரப்பட்டது என்ற போதிலும், வீழ்ச்சிக்கான விதை அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தூவப்பட்டுவிட்டது.

தாராளமயமும், நுகர்வுக் கலாச்சாரமும் ஊட்டிய தங்க போதை!

1991இல் என்.ஆர்.ஐ இந்தியர்கள் இந்தியாவுக்குள் தங்கம் கொண்டு வருவதில் இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும் தங்கம் இறக்குமதி செய்வதில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ன. 1990ல் இருந்து 1998 காலகட்டம் வரை தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 15 சதவீதமாக வளர்ச்சியுற்றது. இது அதே காலகட்டத்தில் வளர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, எண்ணை, சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருட்களுக்கான தேவை அதிகரித்த விகிதத்தை விட, உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்த விகிதம் மிகவும் அதிகமாகும்.

இப்படி வெள்ளமென உள்நுழைந்த தங்கம், நகை உருவாக்கத் தொழிலில் மாற்றத்தைக் கோருகிறது. அதே காலகட்டத்தில் சிறிய அளவிலான நகைக் கடைகளுக்குப் போட்டியாக வட்டார அளவிலான வீச்சு கொண்ட நகை மாளிகைகள் உருவாகத் தொடங்கின. வாடிக்கையாளர்களில் ஒரு பெரும் பகுதியினர் இனிமேலும் ஆசாரிகளிடம் சென்று நாட்கணக்கில் காத்திருந்து அவர்கள் செய்து தரும் டிசைனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறத் துவங்கியது.

கடைக்குச் சென்றோமா பத்துக்கு இருபது டிசைன்களைப் பார்த்தோமா அதில் ஒன்றைப் பொறுக்கியெடுத்தோமா என்று வேலை சுளுவாகியது. இத்தகைய மாளிகைகள், தமது ஷோரூம்களில் வைத்து விற்கும் நகைகளை ஏதாவது ஒரு பட்டறையில் தங்கப் பாளங்களைக் கொடுத்து முழு நகையாக செய்து வாங்கி வந்தன.

இது நகைப் பட்டறைகளுக்கு விழுந்த முதல் அடி. தமது வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினரை கவர்ச்சிகரமான ஷோரூம்கள் கொண்ட நகை மாளிகளிடம் அவர்கள் இழந்தனர்.

நகை மாளிகைகளுக்கு இவர்கள் செய்து கொடுத்தாலும், லாபம் முன்பை விடக் குறைவு தான். ஆனாலும் ஓரளவுக்கு வேலையிழப்பை சமாளித்து வந்தவர்களுக்கு இன்னுமொரு இடி சங்கிலித்தொடர் நகை மாளிகைகளின் வரவால் ஏற்பட்டது. தனியார்மய, தாராளமயக் கொள்கைகளால் கொழுத்து விட்ட மேட்டுக்குடி வர்க்கம், வாழ்க்கைத்தரமும் சேமிப்பும் மேம்பட்ட நடுத்தர வர்க்கம், இவர்கள் அனைவரிடமும் நிலவிய பிற்போக்குத்தனமான நகை மோகமும், நகை முதலாளிகளுக்கு பொன்னானதொரு வாய்ப்பை, மெய்யாகவே தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்கியது.

நகைக்கடையை சுமக்கும் மணமகள்கள்: செல்வத்தின் செருக்கு!

நுகர்வு மோகத்துக்கான வடிகாலாகவும், அந்தஸ்தைக் காட்டிப் பீற்றிக் கொள்ளத் தோதான பகட்டாகவும், அதே நேரத்தில் எச்சரிக்கை உணர்வு மிக்க இந்திய நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பெட்டகமாகவும், லஞ்ச ஊழல் கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கும் வரி ஏய்ப்பு செய்வதற்குமான கையடக்கமான முதலீடாகவும் இருந்த தங்கம், தனிச்சிறப்பானதொரு இடத்தை சந்தையில் பிடித்தது.

ஜாய் ஆலூக்காஸ், கல்யாண் ஜுவல்லரி, ஸ்ரீ குமரன் நகை மாளிகை, ஜோ ஆலுக்காஸ்  சன்ஸ், மலபார் கோல்ட், ஆலாபட் ஜுவல்லரி, தனிஷ்க் என்று புற்றீசல் போலக் கிளம்பின சங்கிலித் தொடர் நகைக்கடைகள். இவர்களில் பலர் பாரம்பரிய நகை வியாபாரிகள் அல்ல என்பதுடன்,கார்ப்பரேட் நிறுவனங்களும், கறுப்புப் பண மாஃபியாக்களும்தான் இன்று இத்தொழிலில் கோலோச்சுகின்றனர்.

இவர்களுடைய விற்பனைக்கு ஏற்கெனவே வாடிக்கையாளர்களிடம் நிலவி வந்த தங்க மோகம் போதுமானதாக இல்லை. வாழ்த்து அட்டை வியாபாரிகளும் பரிசுப்பொருள் வியாபாரிகளும், “தந்தையர் தினம், தனயர் தினம், தமக்கையர் தினம், காதலர் தினம், காதல் கைகூடாதவர்கள் தினம்” எனப் பலவகையான தினங்களை உற்பத்தி செய்வதைப் போல நகை வியாபாரிகள் புதிய சம்பிரதாயங்களை உருவாக்கத் தொடங்கினர். ‘உயர்’சாதிகளிலிருந்து மட்டுமின்றி, பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்தும் நடுத்தர வர்க்கம் பரவலாகத் தோன்றி விட்டதால், இன்ன ஜாதிக்கு இன்ன தாலி என்றும், இன்ன ராசிக்கு இன்ன ராசிக்கல் என்றும் பரிந்துரைக்க ஜோதிட ‘வல்லுநர்களை’ பெரும் நகைக் கடைகள் அமர்த்திக் கொண்டனர்.

ஒரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் கேள்வியே பட்டிராத அக்ஷய த்ரிதியை என்ற ஒரு பண்டிகையை பரணிலிருந்து தூசு தட்டி எடுத்தனர். அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று மாறி மாறி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அட்சய திரிதியை நாளில் நகை வாங்கினால் ‘நல்லது’ என்றும் ‘ஐசுவரியம்’ பொங்கும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர்.

மேல் வர்க்கத்தாரின் மீது பிரமிப்பு கொள்ளும் அடித்தட்டு வர்க்கத்து மக்களும் கூட அந்த நாளில் “ஒரு குந்துமணி அளவுக்காவது வாங்கித்தான் வைப்போமே” என்று சிந்திக்கும் அளவுக்கு அக்ஷய த்ரிதியை ஒரு சடங்காகவே மாறிப்போனது. நல்லதோ கெட்டதோ ஒரு தேவைக்குப் பயன்படும் என்ற நியாயத்தைக் கூறிக்கொண்டு, கடன் வாங்கியாவது அந்த நாளில் தங்கத்தை வாங்குவது ஒரு பழக்கமானது. போதும் போதாதற்கு மக்களிடையே நிலவும் சினிமாக் கவர்ச்சியும் துணைக்கழைத்துக் கொள்ளப்பட்டது. துணிக்கடைகளைப் போலவே நகைக்கடைகளுக்கும் பிரபல நடிகைகள் நடிகர்கள் பிராண்டு அம்பாசிடர்களாகினர்.

கூலிகளாய் ஆக்கப்பட்ட தங்கநகை பட்டறை முதலாளிகள்!

இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் பரவலாக சிறிய யூனிட்டுகளில் நவீன இயந்திரங்கள் இடம்பெறத் துவங்கின. இதற்கிடையில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து வேலைச் சந்தையின் போட்டியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளை சங்கிலித் தொடர் நகை மாளிகைகள் தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் ஒழித்துக் கட்டின.

ஓரளவுக்கு நவீன நகை மாளிகைகளின் தாக்குதலை சமாளித்து குற்றுயிரும் குலை உயிருமாக மிஞ்சிய நகைப்பட்டறைகள் பெரும் நகைக்கடைகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்து தரும் யூனிட்டுகளாக மாறிப்போயின. மொத்தமாக அவர்களின் வாடிக்கையாளர் அடித்தளமே ஆட்டம் கண்டு நொறுங்கிப் போனது. சிறுபட்டரைகளிடம் மிச்சம் மீதியிருந்த சுயேச்சைத் தன்மையையும் முற்றாக ஒழிந்து முழுக்க முழுக்க பெரிய நகைமாளிகைகளை அண்டியிருக்கும் அத்துக் கூலிகளாக முழுமையாக மாறிப்போயினர். சிறு பட்டறை முதலாளிகள் எல்லாம் வேலை எடுத்துச் செய்யும் ஏஜென்டுகளாக மாற்றம் பெற்றனர்.

இந்தக் கால கட்டத்திற்குப் பின் ஒரே நகையை ஒரே பட்டரையில் தயாரிக்கும் பாணிக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒரு நகையில் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு பட்டறைகளில் தயாரித்து பின்னர் இன்னொரு பட்டறையில் இணைத்துக் கொள்வது என்ற பாணி உருவெடுத்தது. நாடெங்கும் பரவிக்கிடந்த தங்கநகைத் தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களில் இருந்து ஒருசில நகரங்களில் வந்து குவிந்தனர். புகழ் பெற்ற ஜெய்பூர் மாடல், பெங்காலி மாடல், கேரள காசு மாலை, மாங்கா மாலை நகைகள் கோவையில் இருந்து தயாராகிறது என்ற செய்தியின் பின்னே உள்ள நிதர்சனம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான கேரள நகைத் தொழிலாளர்களும், பெங்காலித் தொழிலாளர்களும் கோவையில் வந்து குவிந்துள்ளனர் என்பதாகும்.

சுரண்டப்படும் பல்தேசிய தொழிலாளிகள்!

இப்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் என்பது நிரந்தரமானதல்ல  மூன்றிலிருந்து நாலாயிரத்துக்குள் சம்பளம் இருக்கும்  மற்றபடி இன்செண்டிவ் அடிப்படையில் தான் வேலை செய்கிறார்கள். அதாவது இத்தனை கிராம் ஆபரண உற்பத்திக்கு இத்தனை இன்செண்டிவ் எனும் அடிப்படையில். கோவை நகரம் என்பது சென்னையை ஒப்பிடும் போது அதிகம் செலவு பிடிக்கும் நகரம். எத்தனை சிக்கனமாக வாழ்க்கை நடத்தினாலும் கூட நாலாயிரம் என்பது மாதத்தின் இருபதாவது நாளிலேயே தீர்ந்து போகும். எனவே இன்செண்டிவ் தான் தாக்குப்பிடிப்பதற்கும் ஊருக்கு ஏதோ கொஞ்சம் பணம் அனுப்புவதற்கும் இருக்கும் ஒரே வழி.

இந்தப் பட்டறைகளில் நவீன முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறை பழைய நிலபிரபுத்துவ பாணி உறவுகளோடு கைகோர்த்துக் கொண்டு, தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறது. அதாவது, 8 மணி நேரம் அல்லது குறிப்பிட்ட நேர அளவிலான வேலை என்று கிடையாது; நிலையான சம்பளமும் கிடையாது. மாறாக அட்சய திரிதியை, தீபாவளி, முகூர்த்த தினங்கள் போன்று எப்போது பரபரப்பான விற்பனை நடைபெறும் நாள் வருகிறதோ அப்போது பெரு நகைக்கடைகள் தங்கக் கட்டிகளை இது போன்ற பட்டறைகளுக்குக் கொடுத்து நகையாக வாங்குவார்கள்.

அந்த சமயத்தில் மட்டும் ஊழியர்களை கசக்கிப் பிழிவது; அதுவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தூங்காமலும், இடையில் பட்டறையை விட்டு வெளியேற தடை விதிப்பதும் (தங்கத் துணுக்குகளை நக இடுக்குகளில் மறைத்து எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற சந்தேகத்தில்) கழிவறை வரையில் கண்காணிப்பதும் என்று குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட காட்டுவதில்லை. தொழிலாளிகளும் அந்த நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு. சீசன் அல்லாத நாட்களில் சம்பளம் கிடையாது.

இப்படிப்பட்ட பட்டறைகள் பொதுவில் காற்றோட்டம் இல்லாமலும் அடைசலாகவும் தான் இருக்கும். தப்பித்தவறிக்கூட தங்கத் துகள்கள் பட்டறை முதலாளிகளுக்குத் தெரியாமல் வெளியேறுவதைத் தடுப்பதற்கே இந்த ஏற்பாடு. தொடர்ந்து உட்கார்ந்தே வேலை செய்வதால் மூலவியாதி, முதுகுவலி, தங்கம் உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களின் விளைவாய் ஆஸ்துமா போன்ற உபாதைகளோடு தான் பெரும்பாலான நகைத் தொழிலாளிகள் தமது வாழ்வை கழிக்க வேண்டியுள்ளது. சிறிய பட்டறைகளில் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருந்தாலும் அவர்களோடு சேர்ந்து சிறு முதலாளிகளும் வேலை செய்கிறார்கள்.

முதலாளித்துவ பாணி இயந்திர உற்பத்தியாய் இருப்பதால் பால்ஸ் ஒரு பட்டறை, மோதிரம் ஒரு பட்டறை, கம்மலுக்கு ஒரு பட்டறை, கல் பதிக்க, கம்பி நீட்ட என்று உதிரி உதிரியாகத் தயாராகி, கடைசியில் ஒரு பட்டறையில் இணைக்கப்படுகிறது. இதன் உடன் விளைவாக ஒரு நகைத் தொழிலாளிக்கு முழுமையான ஒரு ஆபரணத்தை உருவாக்கும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது.

டிசைன்களை உருவாக்க பட்டைய படிப்பு, கம்ப்யூட்டர் வடிவமைப்புக்கான படிப்பு என்று ஏற்பட்டதால் பாரம்பரிய தொழில் நுட்ப அறிவு முழுமையாக நிராகரிக்கப்பட்டு கிட்டத்தட்ட அழியும் தருவாயில் உள்ளது. முழுமையான ஆபரண உருவாக்கத் திறனும் நுட்பமும் கொண்ட தொழிலாளி வெறும் கம்பி இழுக்கும் வேலையோ கல்பதிக்கும் வேலையோ செய்யும்படிக்கு நிர்பந்திக்கப்படுகிறார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் குறைகூலிக்கு இது போன்ற பட்டறையில் தொழிலாளியாய்வேலைக்குச் செல்கிறார்.

சீசன் நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு எனும் நெருக்கடி காரணமாக, நாட்கணக்கில் தூக்கமில்லாமலும் ஓய்வின்றியும் இவர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது. தூக்கம் வராமல் இருக்க கனமான உணவைத் தவிர்த்தும், பிஸ்கட்டுகள் சாக்லேட்டுகள் போன்ற நொறுக்குத் தீனிகளைத் தின்று இரண்டு மூன்று நாட்கள் தாக்குப் பிடித்தும் வேலை செய்கிறார்கள் தொழிலாளர்கள். தொடர்ந்து தூங்காவிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஆனால் தண்ணீர் குடித்தாலோ அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்து போக வேண்டியிருக்கும் என்பதால் அவ்வப்போது உதடுகளை மட்டும் நனைத்துக் கொள்ள மட்டுமே தண்ணீர்.

தங்கத்தின் சூதாட்டமும், இரத்தக்கறை படிந்த வரலாறும்!

தென்னாப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் ஒரு தொழிலாளி

சென்ற ஆண்டு மட்டும் இந்தியாவில் 800 டன் தங்க நகைகள் விற்பனையாகியுள்ளது. இதில் கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பங்கு மட்டுமே அறுபது சதவீதத்திற்கும் அதிகம். உலகளவில் ஆண்டுதோறும் விற்பனையாகும் தங்கத்தில் 15% இந்தியாவில்தான் விற்பனையாகிறது. எனவே இந்தியாவை ‘தங்கத்தின் இதயம்’ என்கிறார்கள் தங்க வியாபாரிகள்.

தங்கம் இப்போது முன்பேர ஊக வணிகத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதாலும், டாலரின் வீழ்ச்சி காரணமாக பாதுகாப்பான முதலீட்டின் அடுத்த புகலிடமாகத் தங்கம் இருப்பதாலும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் அதன் விலை மூன்று நான்கு மடங்கு எகிறியுள்ளது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அபரிமிதமான  செயற்கையான விலையேற்றம் என்பது உழைக்கும் மக்களை அதன் அருகில் கூட வர முடியாமல் விரட்டியடித்துள்ளது.

பளபளக்கும் இந்த உலோகத்தின் வெளிச்சத்தில் தமது பகட்டினைக் காட்டும் சீமான்கள் இந்த வெளிச்சத்தின் கீழே இருண்டு கிடக்கும் கோடிக்கணக்கானோரின் வாழ்வை அறிந்திருக்கவே மாட்டார்கள்.

அழிந்து போன கோவை தங்க நகை தொழிலாளிகளை எண்ணியபடி காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தேன். கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையின் முன் கூட்டம் அடைத்துக் கொண்டிருந்தது. சிலர் முகமெல்லாம் சிரிப்பாக கடையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். பஞ்சடைந்த நகைத் தொழிலாளின் கண்கள் நினைவிலாடியது. இந்தப் பழைய உலகத்தின் அற்பத்தனங்கள் வைக்கும் செலவு என்பது ஊகபேர சூதாடிகள் நிர்ணயிக்கும் விலையான பவுனுக்கு பதினாறாயிரம் ரூபாய்கள் மட்டும் தானா…?

எங்கோ தென்னாப்ரிக்காவின் தங்க வயலின் பொந்துகளுக்குள் எவ்வித பாதுகாப்பு வசதிகளும் அற்று, நச்சுவாயுக்களை சுவாசித்து டன் டன்னாக பாறையை வெட்டி குந்துமணி குந்துமணியாக தங்கத்தைச் சேர்க்கும் அந்தக் கறுப்பினத் தொழிலாளியின் வியர்வைக்கும் இங்கே ஏதோவொரு சந்தினுள் ஒரு இருட்டு அறையினுள் குண்டு பல்பின் வெளிச்சத்தில் வெளியாகும் ஆஸ்துமா இருமலுக்கும் என்ன விலை வைக்க முடியும்? ஸ்பெயின் நாட்டுக் காலனியவாதிகள் கொன்றொழித்த இருபது கோடி செவ்விந்தியர்களின் ரத்தத்திலும் எண்ணி மாளாத கறுப்பின அடிமைகளின் ஏக்கப் பெருமூச்சின் வெப்பத்திலும் தோய்ந்த தங்கம் உங்கள் கழுத்தில் ஊறுகிறது.

இது அழகா, புனிதமா, ஆபாசமா?

_______________________________________________________________

- கார்க்கி, புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010

“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40 க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்து கொண்டு அதனை வணங்கினேன்.”

பாபர் மசூதிக்குள் 1949இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991இல் வெளியிட்ட தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் இது.

செப், 30, 2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூரையிலும் நிச்சயமாக அந்தக் கருங்குரங்கு இருந்திருக்க வேண்டும் என்பதை தீர்ப்பிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் குரங்குகளின் எண்ணிக்கை ஒன்றா மூன்றா என்ற தெய்வீக உண்மை, பின்னாளில் இந்த நீதிபதிகள் சுயசரிதை எழுதும்போதுதான் நமக்குத் தெரியவரும்.

“ஒரு குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தமானது” என்று தீர்மானிப்பதற்கான உரிமை மூல வழக்கில், பட்டா பத்திரம் போன்ற சான்றாதாரங்களைச் சார்ந்து நிற்காமல், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்ததாக இந்துக்கள் நம்புவதால், அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அந்த இடத்தை இராமபிரானுக்குச் சொந்தமாக்குவதாகத் தீர்ப்பளித்திருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம். ஒரு உரிமை மூல வழக்கில் மனுதாரரின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு சொத்துரிமை வழங்கமுடியுமா என்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக எழுப்பப் படும் மையமான கேள்வி. மனுதாரரின் நம்பிக்கை கிடக்கட்டும். நீதிபதியின் நம்பிக்கைதான் 1986 தீர்ப்பையே தீர்மானித்திருக்கின்றது என்பதையல்லவோ குரங்கு கதை நமக்குக் காட்டுகிறது!

அலகாபாத் தீர்ப்பு: இந்து பாசிச அரசியலுக்கு சட்டரீதியான அங்கீகாரம்!

அலகாபாத் தீர்ப்புக்கு முன் இந்துக்களின் நம்பிக்கையாக மட்டுமே இருந்த இராமஜென்மபூமி, இன்று சட்ட அங்கீகாரம் பெற்று விட்டதாகவும், இத்தீர்ப்பின் மூலம்  தேசிய ஒருமைப்பாட்டுக்குப் புதியதொரு அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார் அத்வானி. “இதுதான் இராமன் பிறந்த இடம் என்று நிரூபிக்கும் பட்சத்தில், அந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிடுவதாக வக்பு வாரியம் ஏற்கெனவே கூறியிருந்தது. இதோ இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவர்களுடைய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. வக்பு வாரியம் தனது வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும். அந்த இடத்தின் மீதான தனது கோரிக்கையைக் கைவிட வேண்டும்” என்று மிரட்டியிருக்கிறார் தொகாடியா. “அயோத்தியில் இராமனுக்கு பிரம்மாண்டமானதொரு ஆலயம் அமைக்கும் பணியில் இந்துக்களுடன் கைகோர்த்து நிற்க முஸ்லிம்கள் முன்வரவேண்டும். இரு சமூகங்களும் இணைந்து வலிமையான இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்குக் கிடைத்திருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று முஸ்லிம் சமூகத்தை இந்து தேசியத்துக்கு அடிபணிந்து விடுமாறு அறிவுரை கூறியிருக்கிறார் அசோக் சிங்கால்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்போது ஒதுக்கியிருக்கும் மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் இந்துக்களிடம் ஒப்படைத்து விடவேண்டுமாம். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாதாம். இசுலாமிய மக்களின் உள்ளத்தில் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கும் காயத்தின்மீது உப்பை வைத்துத் தேய்த்துக் கொண்டே, பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறது இந்து மதவெறிக் கும்பல். “சுமுகமான தீர்வு வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினால், நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள இயலும்” என்று பா.ஜ.க வின் கருத்தையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் காங்கிரசு கட்சியின் சத்யவிரத சதுர்வேதி. 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மசூதியை மீண்டும் கட்டித்தரவேண்டும் என்று கூறிய திமுக, இன்று இத்தீர்ப்பை விமரிசித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

“தீர்ப்பினால் மகிழ்ச்சியடைந்தோரும் சரி, ஏமாற்றமடைந்தோரும் சரி இதனைத் தெருவுக்குக் கொண்டு செல்லக்கூடாது. தீர்ப்பு யாருக்கேனும் திருப்தி அளிக்கவில்லையென்றால், அவர்கள் மேல் முறையீடு செய்யலாம்” என்றிருக்கிறார் வலது கம்யூ கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா. “நமது மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பில், பிரச்சினையைத் தீர்த்துக் கொள்தற்கான ஒரே வழி உச்ச நீதிமன்றத்தை அணுகுவதாகத்தான் இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறது மார்க்சிஸ்டு கம்யூ கட்சி. மொத்தத்தில் எந்த ஓட்டுக் கட்சியும் இத்தீர்ப்பினை அரசியல் ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ விமரிசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பின் மீதான விமரிசனங்களும்
விமரிசனங்களிலிருந்து எழும் கேள்விகளும்!

ராஜீவ் தவான், பி.வி.ராவ், பிரசாந்த் பூஷண் போன்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சச்சார் போன்ற துறைசார் வல்லுநர்கள் மற்றும் சிவில் உரிமை அமைப்புகள்தான் இத்தீர்ப்பு குறித்து கீழ்க்கண்ட விமரிசனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்:

“தந்தையைக் கொலை செய்கின்ற மகன், தந்தையின் சொத்தில் பங்கு கோரும் உரிமையை இழக்கிறான் என்பது சட்டம். இங்கோ 1992 இல் மசூதியை இடித்த குண்டர்களுக்கோ இத்தீர்ப்பு அவர்கள் கேட்டதைக் கொடுத்திருக்கிறது’’. “ 1949 இல் திருட்டுத்தனமாக இராமன் சிலையை உள்ளே வைத்ததை ஏற்றுக் கொள்ளும் நீதிமன்றம், மசூதியை அவர்களுக்கு வழங்கியதன் மூலம் அந்த திருட்டுத்தனத்தை அங்கீகரித்திருக்கிறது.” “ஒரு உரிமை மூல வழக்கில், நம்பிக்கையின் அடிப்படையில் சொத்தை வழங்க முடியாது. நம்பிக்கை என்பது பக்தனுக்கு வழிபாட்டு உரிமையைத்தான் வழங்குகிறதேயன்றி, இடத்துக்கு சொந்தம் கொண்டாடும் உரிமையை அல்ல. ஆயின் பிற மதத்தினருக்கும் இதே உரிமை வழங்கப்படுமா?” “ பாபர் காலத்தில் இந்து வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக கூறும் இத்தீர்ப்பு, நம் கண்முன்னே நடந்த மசூதி இடிப்பு குறித்து மவுனம் சாதிப்பதன் மூலம் அந்த கிரிமினல் நடவடிக்கையை நியாயப்படுத்தியிருக்கிறது.”

— இவையெல்லாம் தீர்ப்பின்மீதான இவர்களது விமரிசனங்கள்.

இவ்விமரிசனங்களிலிருந்து நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. மதச்சார்பின்மைக் கோட்பாடு குறித்த இந்திய அரசியல் சட்டத்தின் பார்வையிலிருந்து வழுவி, இந்து மதவாதப் பார்வையிலிருந்து நீதிபதிகள் இத்தீர்ப்பை வழங்கியிருப்பதுதான் இந்த அநீதிக்கு அடிப்படையா, அல்லது மதச்சார்பின்மை குறித்த இந்திய அரசியல் சட்டத்தின் பார்வையே இந்த அநீதியான தீர்ப்புக்கு இடமளிக்கிறதா?

குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்தான் என்ற நம்பிக்கையோ, அல்லது பிறந்தானா இல்லையா என்பது குறித்த ஆதாரங்கள், சாட்சியங்களோ ஒரு உரிமையியல் வழக்கின் எல்லைக்குள் வருகின்ற, நீதிமன்றம் தலையீட்டுத் தீர்ப்புக் கூறத்தக்க பிரச்சினைகளா அல்லது இப்பிரச்சினையில் அலகாபாத் நீதிமன்றம் அத்துமீறி மூக்கை நுழைத்திருக்கிறதா?

வரலாறு, மதநம்பிக்கை, அரசியல், சட்டம் என்ற வெவ்வேறு வகைப்பாடுகளின் கீழ் அணுகப்பட வேண்டிய இப்பிரச்சினையில், தனது நோக்கத்துக்கு ஏற்ப ஒன்றை மற்றொன்றோடு சேர்த்துக் குழப்பும் சதித்தனமான உத்தியை பார்ப்பன பாசிசக் கும்பல் துவக்கமுதலே கையாண்டு வருகிறது. ‘பாசிசக் கும்பலின் சதி’ என்று நாம் எதைச் சாடுகிறோமோ, அதையே சட்டபூர்வமான அடித்தளத்தின்மீது நிற்க வைத்திருப்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

அரசியல்வரலாறுமதநம்பிக்கைசட்டம்
இந்து பாசிசத்தின் கண்ணாமூச்சி ஆட்டம்!

இப்பிரச்சினையில் பார்ப்பன பாசிசக் கும்பல் கையாண்டு வரும் உத்திகளை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியம்.

13 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் திரேதா யுகத்தில் பிறந்த விஷ்ணுவின் அவதாரமே இராமன் என்று கூறி,  மத நம்பிக்கையின் அடிப்படையில் இந்துக்களைத் திரட்டியது சங்க பரிவாரம். “இராமஜென்மபூமி குறித்த தொன்மை வாய்ந்த இந்துக்களின் மதநம்பிக்கையை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தவோ, தீர்ப்பளிக்கவோ நீதிமன்றத்துக்கு அதிகாரமே கிடையாது” என்றும் வாதிட்டது.

அதே இராமனை இந்து ராஷ்டிர அரசியலின் தேசிய நாயகனாக சித்தரிக்கும் வேளையில், மொகலாயப் படையெடுப்பு, பாபர் இடித்த இராமன் கோயில், அதற்கான தொல்லியல் ஆதாரம் என்று சங்க பரிவாரம் வரலாற்றைத் துணைக்கழைத்துக் கொண்டது.

1949 ஆம் ஆண்டில், சட்டவிரோதமான முறையில் இராமன் சிலையை மசூதிக்குள் வைத்து, உரிமையியல் வழக்கு தொடுப்பதற்குத் தேவையான தாவாவை திட்டமிட்டே உருவாக்கியது. இது தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், “அந்த இராமன் சிலை, பூமியை வெடித்துக் கிளம்பிய சுயம்பு விக்கிரகம் என்று இந்துக்கள் நம்புவதால், அதற்கு வழிபாடு நடத்துவது அரசியல் சட்டரீதியாக இந்துக்களின் மத உரிமை” என்று கூறி நீதிமன்றத்தில் பூசை நடத்தும் உரிமையை நிலைநாட்டிக் கொண்டது. 1986இல் பக்தர்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையையும் நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்டது.

டிசம்பர் 1992இல் வழிபாட்டு உரிமை என்ற அடிப்படையில், பஜனை பாடும் உரிமையை உச்ச நீதிமன்றத்திடம் பெற்று, மசூதியை இடிப்பதற்கு அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொண்டது. மசூதி இடிப்பு என்ற அந்த நடவடிக்கை கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டாலும், அந்தக் கிரிமினல் நடவடிக்கையின் மூலம் மசூதியின் இடிபாடுகளின் மீது நிறுத்தி வைக்கப்பட்ட இராமன் சிலைக்கு வழிபாடு நடத்துவது தமது மத உரிமை என்று கூறி நீதிமன்றத்திடம் வழிபாட்டு உரிமையையும் பெற்றுக் கொண்டது.

மசூதி இடிக்கப்பட்டு விட்டதால், “தொல்லியல் ஆய்வு, இந்துக் கோயில் இடிக்கப்பட்டதற்கான ஆதாரம்” என்று கூறி தனது முஸ்லிம் எதிர்ப்பு இந்து தேசிய அரசியல் கண்ணோட்டத்தில் வரலாற்றைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, தொல்லியல் சான்றுகளுக்கு வியாக்கியானம் தரத்தொடங்கியது. இருந்த போதிலும், “அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் மதநம்பிக்கை, நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது” என்ற தனது அறுதியான துருப்புச் சீட்டை சங்க பரிவாரம் கீழே போட்டுவிடவில்லை.

“எந்த இராமனின் பிறப்பிடம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது” என்று சங்க பரிவாரம் வாதிடுகிறதோ, அதே இராமனின் சிலையை (ராம் லல்லா) உரிமை மூல வழக்கில் ஒரு மனுதாரராக்கி, தான் பிறந்த இடத்தைத் தனக்கு கிரயம் செய்து தருமாறு அதே நீதிமன்றத்தின் முன்னால் முறையிடச் செய்து, அலகாபாத் தீர்ப்பின் மூலம் மசூதியின் மையப்பகுதி நிலத்தையும் பெற்றுவிட்டது.

இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போதுதான், அரசியல் சட்ட உரிமை, மதநம்பிக்கை, வரலாறு, இந்துப் பாசிச அரசியல் ஆகியவற்றை வாளாகவும் கேடயமாகவும் தேவைக்கேற்ப எப்படியெல்லாம் சங்க பரிவாரம் பயன்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நாடகத்தில், சங்க பரிவாரத்தின் ஒவ்வொரு காய் நகர்த்தலுக்கும் நீதித்துறை உடந்தையாகவே இருந்து வந்திருக்கிறது. இந்து மதவெறியை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ‘மதச்சார்பற்ற’ சக்திகள், பார்ப்பன பாசிசத்தை அரசியல் ரீதியாகவும், பார்ப்பனியத்தை சித்தாந்த ரீதியாகவும் எதிர்க்கவில்லை என்பதுடன் இப்போதும் கூட “உச்சநீதிமன்றத்தை அணுகினால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைத்துவிடும்” என்று கூறி, இந்திய அரசியல் சட்டம் குறித்த பிரமையை வளர்க்கின்றனர். அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையான சில அம்சங்களைப் பரிசீலித்தோமானால், பார்ப்பனப் பாசிசத்தின் பித்தலாட்டங்கள் அனைத்துக்கும் சட்ட அங்கீகாரம் தரும் சாத்தியத்தை “மத நம்பிக்கைக்கான சுதந்திரம்” என்ற பெயரில், இந்திய அரசியல் சட்டத்தின் 25, 26ஆவது பிரிவுகள்தான் வழங்கியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

பாபர் மசூதி வழக்கின் வரலாறு!

இந்த வழக்கின் மனுதாரர்கள் மொத்தம் 28 பேர். சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, குழந்தை இராமன் விக்கிரகத்தின் (ராம் லல்லா விராஜ்மன்) சார்பில் ராமனது நெருங்கிய நண்பர் திரிலோக் நாத் பாண்டே ஆகிய மூன்று மனுதாரர்களே இதில் முக்கியமானவர்கள். இவர்களுக்கு இடையில்தான் பாபர் மசூதி வளாகம் மூன்று பங்காகப் பிரிக்கப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்விவரங்களுக்குள் செல்லுமுன் சுருக்கமாக இந்த வழக்கின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்.

1949 டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவில் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமன் சிலை வைக்கப்பட்டதுதான் இந்த உரிமை மூல வழக்கின் தொடக்கம் என்று கருதப்பட்டாலும்  இப்பிரச்சினைக்கான விதை முந்தைய நூற்றாண்டிலேயே போடப்பட்டுவிட்டது. 17ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் இன்றைய உத்தரப் பிரதேச மாநிலத்தின் எந்த ஊரிலும் ராமனுக்கு கோயில் எதுவும் இருந்ததில்லை என்றும், 1788இல் ஒரு கிறித்தவ ஜெசூட் பாதிரியார்தான் “இது இராமன் பிறந்த இடம்” என்று ஒரு குறிப்பினை போகிற போக்கில் குறிப்பிட்டு செல்கிறார் என்றும் கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர் டி.என்.ஜா. பாபர் மசூதியோ 1528ஆம் வாக்கில் கட்டப்பட்டிருக்கிறது.

1855ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக இப்பிரச்சினை இந்து தரப்பினரால் எழுப்பப்படுகிறது. அப்போது அயோத்தியை உள்ளடக்கிய பைசலாபாத் சமஸ்தானத்தின் மன்னனாக இருந்த வாஜித் அலி ஷா, பதற்றைத் தணிக்க ஒரு மூவர் குழுவை அமைக்கிறார். இந்த காலகட்டத்தில்தான் பைசலாபாத் சமஸ்தானத்தை விழுங்குவதற்கு கும்பினி ஆட்சி சதி செய்து கொண்டிருந்தது. வட இந்திய சுதந்திரப் போர் வெடிப்பதற்குக் காத்திருந்த காலம் இது. வாஜித் அலி ஷாவின் மனைவி பேகம் ஹசரத் மகல்தான் கும்பினிக்கு எதிரான போரைத் தலைமையேற்று நடத்தியவர் என்பதும், இந்தக் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க அளவில் பைசலாபாத் சமஸ்தானம் முழுவதும் இந்து முஸ்லிம் ஒற்றுமை நிலவியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பைசலாபாத் சமஸ்தானம் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் வந்தபின், 1885இல் இது தொடர்பான முதல் உரிமையியல் வழக்கை மகந்த் ரகுவர் தாஸ் என்பவர் தொடர்கிறார். அன்றைய சப் ஜட்ஜ் பண்டிட் ஹரி கிஷன் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கவே, அதனை எதிர்த்து முஸ்லிம்கள் மாவட்ட நீதிமன்றத்துக்கு முறையிடுகின்றனர். “இந்துக்கள் புனிதமானதாகக் கருதும் ஒரு இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்பது துரதிருஷ்டவசமானதுதான். எனினும் சம்பவம் நடந்து 356 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டபடியால், தற்போது இதற்கு நிவாரணம் கோருவது மிகவும் காலம் கடந்ததாகும்” என்று மகந்தின் மனுவைத் தள்ளுபடி செய்து தற்போது உள்ள நிலையே நீடிக்கவேண்டும் என்று உத்தரவிடுகிறார் மாவட்ட நீதிபதி சேமியர்ஸ்.

“இந்துக்களின் புனிதமான இடம்” என்று அவர் கருதுவதற்கான ஆவணங்கள் எதுவும் அந்த வழக்கில் தரப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி போகிறபோக்கில் சொல்லப்பட்ட கூற்றே அது. எனினும் மசூதி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்ப்பின் சாரம். உரிமையியல் வழக்குகளில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஏற்றுக் கொள்வது என்பதுதான் இந்திய அரசியல் சாசனத்தின் நிலை. அந்த வகையில் இந்திய அரசியல் சட்டத்தின்படி இந்த வழக்கு ஏற்கெனவே விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்ட ஒன்று.

1855க்குப் பின்னர் 1948இல்தான் மீண்டும் அங்கே பிரச்சினைகள் எழுகின்றன. அது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி வட இந்தியா முழுவதும் கலவரம் நடைபெற்ற காலம். 1948இல் மசூதியில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் மீது இந்து வெறியர்கள் கல்லெறிவதாக புகார்கள் வருகின்றன. அயோத்தியைச் சேர்ந்த காந்தியவாதியான அட்சய பிரம்மச்சாரி என்பவர், நகரம் முழுவதும் முஸ்லிம் மக்களை இந்துவெறியர்கள் அச்சுறுத்துவதாக லால் பகதூர் சாஸ்திரிக்கு கடிதம் எழுதுகிறார்.

அக்டோபர் 1949இல் அம்மாவட்ட ஆட்சியர், மசூதியின் ஒரு புறத்தில் கோயில் கட்டிக் கொள்ளுமாறு இந்துக்களுக்கு அனுமதி அளிக்கிறார். டிசம்பர், 22, 1949 இரவில் 50 பேர் கொண்ட கும்பல் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே சிலைகளை வைக்கிறது.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

உடனே சிலைகளை அகற்றுமாறு உ.பி முதல்வருக்கு தந்தி அடிக்கிறார் நேரு. முதல்வர் பந்த் அகற்ற மறுக்கிறார். உள்ளே வைக்கப்பட்ட சிலைகளுக்கோ யாருமே உரிமை கோரவில்லை. பிறகு 1950 இல் “சுயம்புவாகத் தோன்றியிருக்கும் ராமபிரானுக்கு வழிபாடு நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும்” என்று கோபால்சிங் விசாரத், பரமஹன்ஸ் என்ற இருவர் மனு தாக்கல் செய்கின்றனர். “சிலைகளை அங்கிருந்து அகற்றவோ, பூசை நடத்துவதைத் தடுக்கவோ கூடாது” என்று மாவட்ட நீதிபதி நாயர் (பின்னாளில் ஜனசங்க கட்சியில் சேர்ந்தவர்) இடைக்காலத்தடை பிறப்பிக்கிறார்.

மேலும் 9 ஆண்டுகள் கழித்து, 1959இல்தான் மேற்படி சொத்தின் மீது (அதாவது பாபர் மசூதி அமைந்துள்ள 1500 சதுர கெஜம் அளவிலான நிலம்) உரிமை கோரி,  நிர்மோகி அகாரா உரிமை மூல வழக்கை தொடுக்கிறது. இது அனுபவ பாத்தியதை அடிப்படையில் சொத்தின் மீது உரிமை கோரிய ஒரு சிவில் வழக்கு மட்டுமே. அந்த இடம் இராமன் பிறந்த இடம், மத நம்பிக்கை என்ற வாதங்களெல்லாம் நிர்மோகி அகாராவின் மனுவில் கிடையாது. இதற்கு எதிராக வேறு வழியில்லாமல் சன்னி வக்பு வாரியம் 1961 இல் எதிர்  மனு தாக்கல் செய்கிறது.

1980களின் பிற்பகுதியில், ஷா பானு பிரச்சினையில் முஸ்லிம்களை தாஜா செய்வதாக ராஜீவ் காந்தி மீது பாரதிய ஜனதா குற்றம் சாட்டியவுடனே இந்து வாக்குகளைக் கவர்வதற்காக, பூட்டியிருந்த மசூதியின் கதவுகளைத் திறக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டது ராஜீவ் அரசு. 1986இல், எதிர் தரப்பான சன்னி வக்பு வாரியத்துக்கே தெரியாமல், யாரோ ஒரு பக்தர் பெயரில் மனு தாக்கல் செய்யவைத்து, ராமன் சிலையை வழிபட இந்து பக்தர்களை அனுமதிக்கும் உத்தரவை ஒரு தலைப்பட்சமாகப் பிறப்பித்தார், ‘கருங்குரங்கை விழுந்து கும்பிட்ட’ நீதிபதி பாண்டே.

இதனைத் தொடர்ந்து ராம ஜென்மபூமி பிரச்சினையை அரசியல் ரீதியில் அறுவடை செய்வதற்கான இயக்கத்தை பாரதிய ஜனதா நாடெங்கும் கட்டத்தொடங்கியது. 1989இல் தேர்தலுக்கு சில நாட்கள் முன் பாபர் மசூதி வளாகத்தில் ராமன் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பூசை நடத்த சங்கபரிவாரத்தை அனுமதித்தது ராஜீவ் அரசு.

வழக்கில் மனுதாரராக நுழைக்கப்படுகிறான் இராமன்!

ஆனால் வழக்கைப் பொருத்தவரை, ‘ராமன் பிறந்த இடம் என்ற அடிப்படையில் பாபர் மசூதி நிலத்தின் மீது உரிமை கோரும் மனு’ எதுவும் 1989 வரை தாக்கல் செய்யப்படவில்லை. “வெறும் உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து இந்த இடத்தை சட்டரீதியில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த வழக்கைக் கொண்டு வருவதன் மூலம்தான் சட்டப்படியே இதனைக் கைப்பற்ற முடியும்” என்ற சூட்சுமம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தேவகி நந்தன் அகர்வாலுக்கு மட்டுமே அன்று புரிந்திருந்தது. நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனே, குழந்தை இராமனையே மனுதாரர் ஆக்கி, குழந்தை இராமனின் நெருங்கிய நண்பர், காப்பாளர் என்ற முறையில் 1989 இல் மேற்கூறிய வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார் தேவகி நந்தன் அகர்வால்.  அடுத்த சில ஆண்டுகளில் தேவகி நந்தன் அகர்வால் இறந்து விடவே, அவருக்குப் பதிலாக ‘ராமனின் நண்பனாக’ திரிலோக்நாத் பாண்டே என்பவர் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் இறுதித்தீர்ப்பு, பாபர் மசூதி வளாகத்தை மூன்றாகப் பிரித்து மூன்று மனுதாரர்களுக்கும் தரவேண்டும் என்று கூறியிருக்கிறது எனினும், சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா ஆகிய இருவரது மனுக்களும் உரிமையியல் வழக்குக்கு உரிய கால வரம்பு (Limitation Period) கடந்து தாக்கல் செய்யப்பட்டவை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. மசூதி அமைந்துள்ள இடத்தின் மீது உரிமை கோரும் ராமபிரானது மனு மட்டுமே நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்களின் அடிப்படையிலோ, அனுபோக பாத்தியதை குறித்த ஆதாரங்களின் அடிப்படையிலோ பரிசீலித்து தீர்ப்பு வழங்க வேண்டிய ஒரு உரிமை மூல வழக்கில், அவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, கடவுளின் சொத்துரிமை மற்றும் கடவுள் குறித்த இந்து பக்தனின் நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தீர்ப்பில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகள் குறித்து வேறு பல கேள்விகளை எழுப்ப இயலுமெனினும், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 (மத நம்பிக்கை தொடர்பான உரிமை), பிரிவு 26 (மத நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பான உரிமை) ஆகியவைதான் அநீதியான இந்தத் தீர்ப்புக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன. எனவே அவை குறித்து புரிந்து கொள்வது அவசியம்.

சிவில் வழக்கில் இராமன் (கடவுள்) ஒரு மனுதாரர் ஆக முடியுமா?

இந்த வழக்கில் ‘குழந்தை இராமன் சிலை’ ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். உரிமையியல் சட்ட விதி 32 இன் படி (Order 32 of the civil procedure code) இந்துக் கோயிலின் கடவுள் சிலை சட்டரீதியான ஒரு நபராகவும், நிரந்தரமான மைனராகவும் கருதப்படுகிறது. ஒரு சிலை என்ற முறையிலும் மைனர் என்ற முறையிலும் அது தானே தனக்காகப் பேசும் ஆற்றலற்றது என்பதால், ஒரு காப்பாளர், அறங்காவலர் அல்லது பக்தர் மூலமாக மற்றவர்கள் மீது வழக்கு தொடுக்கும் உரிமை கடவுள் சிலை பெற்றிருக்கிறது. அரசியல் சட்டரீதியான இந்த உரிமையை கடவுள் சிலை பெற்றிருப்பதால், அரசியல் சட்டத்துக்கு முரணாக அந்தக் கடவுள் இழைத்திருக்கக் கூடிய குற்றங்களுக்காக அந்தக் கடவுளுக்கு எதிராக சிவில் அல்லது கிரிமினல் வழக்குகளை யாரும் தொடர முடியாது. சொத்து தொடர்பான வழக்குகளை மட்டுமே கடவுளுக்கு எதிராகத் தொடரமுடியும்.

இந்திய அரசியல் சட்டம் இந்துக் கடவுளுக்கு வழங்கியிருக்கும் இந்த உரிமை இசுலாமிய, கிறித்தவ கடவுளர்களுக்கோ பிற மதக் கடவுளர்களுக்கோ கிடையாது. உலகின் வேறு எந்த நாட்டிலும் கடவுளுக்கு இப்படிப்பட்ட சட்டரீதியான உரிமை கிடையாது. கடவுளின் பெயரில் சொத்தை பதிவு செய்து விட்டு அதிகாரத்தில் இருக்கும் மன்னனோ, நிலப்பிரபுவோ, அறங்காவலரோ அதனை அனுபவிக்கும் வசதிக்காக பாரம்பரியமாக செய்யப்பட்டிருக்கும் இந்த ஏற்பாட்டை அரசியல் சட்டம் அங்கீகரித்திருக்கிறது. தில்லை நடராசனுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலத்தை நடராச தீட்சிதர் கையெழுத்துப் போட்டு விற்கும் முறைகேடுகள் இந்த ஏற்பாட்டின் மூலம்தான் சாத்தியமாகியிருக்கின்றன. “உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது, கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர், மந்திரம் பார்ப்பானுக்கு கட்டுப்பட்டது, எனவே உலகம் பார்ப்பானுக்கு கட்டுப்பட்டது” என்று கூறப்படும் சமஸ்கிருத சுலோகம் இதற்கும் பொருந்தும்.

சட்டப்பிரிவு 25 இந்துக் கடவுளுக்கு வழங்கியுள்ள இந்த தனிநபர் என்ற சட்டரீதியான அந்தஸ்தை, கார்ப்பரேஷன்களுக்கு (முதலாளித்துவ கூட்டுப்பங்கு நிறுவனங்கள்) வழங்கப்பட்டுள்ள உரிமையுடன் ஒருவகையில் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம். போபால் வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சன் மீது மட்டுமின்றி யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மீதும் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும் சட்டப்படி ஆண்டர்சனைத்தான் கைது செய்ய முடியுமேயன்றி, கார்ப்பரேஷனைக் கைது செய்ய முடியாது.

இந்துக் கடவுள் விசயத்தில், கடவுளின் குற்றத்துக்காக கடவுள் மீது மட்டுமல்ல, கடவுளின் காப்பாளர் மீதும் வழக்கு தொடர இயலாது. அதே நேரத்தில் கடவுள் சிலை நிரந்தரமான மைனர் என்ற சட்ட அந்தஸ்தைப் பெற்றிருப்பதால், உரிமையியல் வழக்கில் வக்பு வாரியத்துக்கும், நிர்மோகி ஆகாராவுக்கும் விதிக்கப்பட்டுள்ள கால வரம்பு என்பது கடவுளுக்குக் கிடையாது. இந்த அடிப்படையில்தான், 1949 இல் எழுந்த பிரச்சினைக்கு 1961 இல் தாக்கல் செய்யப்பட்ட அவர்களது மனுக்கள் காலம் கடந்தவை என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. அதே நேரத்தில் 1989 இல் இராமபிரானின் சார்பில் தேவகி நந்தன் அகர்வால் தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்துக் கடவுள் பெற்றிருக்கும் இந்த சிறப்புரிமையை அரசியல் சட்டத்தின் 25, 26 வது பிரிவுகளே வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இராமன் பிறந்த இடம் என்பதனாலேயே அது இராமனின் சொத்தாகிவிட முடியுமா? பக்தனின் வழிபாட்டு உரிமை சொத்துரிமை ஆகிவிட முடியுமா?

இத்தீர்ப்புக்கு எதிரான விமரிசனங்கள் மற்றும் கேள்விகளில் இவை இரண்டும் மிகவும் முக்கியமானவை. ‘மசூதியின் மையப்பகுதியில்தான் இராமன் பிறந்தான்’ என்று இந்துக்கள் நம்புவதாக மூன்று நீதிபதிகளுமே ஏற்றுக்கொள்கிறார்கள். அயோத்தியிலேயே சுமார் 5,6 இடங்கள் இராமன் பிறந்த இடங்களாக கருதப்பட்டு வந்தன. பாபர் மசூதிதான் இராமன் பிறந்த இடம் என்ற கருத்து இந்து பாசிஸ்டுகளால் 80 களில் தொடங்கி உருவாக்கப்பட்ட கருத்தேயன்றி, இந்துக்கள் அனைவரின் நம்பிக்கை அல்ல. இராமன் கடவுள் என்பதும் எல்லா இந்துக்களின் நம்பிக்கை அல்ல, இராவணனைக் கடவுளாக வழிபடும் இந்துக்களும் உண்டு. இந்துக்கள் மத்தியிலேயே நிலவும் இத்தகைய மாற்றுக் கருத்துகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, சங்கபரிவாரம் உருவாக்கிய கருத்தையே இந்து சமூகத்தின் தொன்மையான, அத்தியாவசியமான நம்பிக்கை என்று வழிமொழிகிறது இத்தீர்ப்பு.

ஒரு குறிப்பிட்ட மதத்தின் சாராம்சமான நம்பிக்கை எது என்று வியாக்கியானம் அளிக்கவும், அதன் அடிப்படையில் அரசியல் சட்டத்தின் 25 வது பிரிவின் கீழ் அந்த மதத்தினரின் உரிமைகளை அனுமதிக்கவுமான அதிகாரத்தை உயர்நீதி மன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியே இது இந்துக்களின் நம்பிக்கை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறுகிறது.

அது இந்துக்களின் நம்பிக்கைதான் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அத்தகைய மத நம்பிக்கையின் அடிப்படையில் மாற்றான் சொத்தின் மீது உரிமை கோரமுடியுமா என்ற கேள்விக்கு இத்தீர்ப்பு கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறது. இராமன் மட்டும்தான் கடவுள், அவன் பிறந்த பூமி என்பது ஒரு அசையாச் சொத்து என்று பார்ப்பது தவறு என்றும், இராமன் பிறந்த அந்த இடமே (பூமியே) வாயு பகவானைப் போல தன்னளவில் அங்கே விரவி நிற்கின்ற கடவுளாகும் என்று கூறி ஸ்மிருதிகளை மேற்கோள் காட்டி விளக்கம் அளிக்கிறது இத்தீர்ப்பு.

ஒரு கோயில் இடிக்கப்பட்டு விட்டாலும், அங்கே கடவுள் சிலையே இல்லாமல் போனாலும், அந்த இடம் தனது தெய்வீகத்தன்மையை இழந்து விடுவதில்லை என்றும், கோயில் இருந்த அந்த இடமே ஒரு கடவுளாகவும், வழக்காடும் உரிமை பெற்ற நபராகவும் இருக்கிறது என்று கூறுகின்றது இத்தீர்ப்பு. இதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அலகாபாத் நீதிமன்றம் மேற்கோள் காட்டுகிறது.

எனவே, இந்தத் தீர்ப்பின் படி, குறிப்பிட்ட அந்த இடத்தில் இராமன் சிலை இருந்தாலும் இல்லாமல் போனாலும் அவன் பிறந்த பூமி என்பதே சுயம்புவான கடவுளாகிவிடுகிறது. நிலம் என்ற முறையில் அது ஒரு சொத்துக்கான தன்மையைப் பெற்றிருப்பது உண்மையே என்றாலும், அந்த நிலமே கடவுளாகவும் இருப்பதால் அந்த இடத்தை (இராமனைத் தவிர) வேறு யாரும் தமது சொத்தாக ஆக்கிக் கொள்ள முடியாது. இறையாண்மை கொண்ட அரசாங்கத்துக்கே கூட அந்த நிலத்தை (கடவுளை) கையகப்படுத்தும் அதிகாரம் கிடையாது என்கிறது இந்தத் தீர்ப்பு.

கோயில் இடிக்கப்பட்டாலும் கோயிலின் கடவுள் தன்மை அகன்றுவிடுவதில்லை என்ற அடிப்படையிலும், ராம ஜென்மபூமியே கடவுளாக இருப்பதாலும், மசூதியைக் கட்டிய பின்னர்கூட அந்த இடம் பாபருடைய சொத்தாகி விட்டதாகக் கருத முடியாது; அது இராமனுடைய சொத்தாகவே இருக்கிறது என்று விளக்கமளிக்கிறது இத்தீர்ப்பு. மேலும் உரிமையியல் சட்டப்படி இந்துக் கடவுள் நிரந்தர மைனர் என்று கருதப்படுவதால், மைனரின் சொத்தை எதிர் அனுபோகத்தின் மூலம் (adverse possession) பிறர் கைப்பறிக் கொள்வது செல்லத்தக்கதல்ல என்று, உரிமையியல் சட்டத்தின் அடிப்படையிலும் இதற்கு விளக்கமளிக்கிறது அலகாபாத் தீர்ப்பு. அந்த இடத்தில் ஒரு மசூதி இருந்தது என்ற உண்மையையே நிராகரிக்கும் இந்த வாதத்துக்கும், பக்தனின் மத நம்பிக்கை வழியாக கடவுள் தன்னுடைய சொத்துரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் ஏற்பாட்டுக்கும் அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவுதான் அடித்தளமாக இருக்கிறது.

இந்து மதவெறி பாசிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி

இராம ஜென்மபூமி புனிதம் என்றால், மசூதி புனிதமில்லையா?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா?

எதார்த்தமாக சிந்திக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் எழக்கூடிய நியாயமான கேள்வி இது. எல்லாக் குடிமக்களுக்கும் சமமான மத உரிமை இருப்பதாக நாம் கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது அரசியல் சட்டம் அவ்வாறு கூறவில்லை. மதம் என்பது ஒரு தனிமனிதனின் நம்பிக்கை சார்ந்த விசயம் மட்டுமே என்று வரையறுக்கப்படும் இடத்தில்தான் இந்த உரிமை சமமானதாக இருக்க முடியும். நமது அரசியல் சட்டம் மதநிறுவனங்களின் உரிமையையும் அங்கீகரிப்பதால், தனிநபரின் மத உரிமை என்பது நிறுவனத்தின் உரிமைக்கு உட்பட்டதாகிறது.

மத உரிமைகளைப் பொருத்தவரை “ஒவ்வொருவருக்கும் அவரவர் மதக் கோட்பாட்டுக்கு ஏற்ப” என்றுதான் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 கூறுகிறது. இந்த அடிப்படையில்தான் இந்து மதத்தில் பார்ப்பனரல்லாதாரும், பெண்களும் அர்ச்சகராக முடியாமல் தடுக்கும் ஆகமவிதிகளும், இசுலாமிய ஆண்களுக்கு நிகரான உரிமைகளைப் பெண்களுக்கு மறுக்கும் ஷரியத் சட்டமும் சட்டப்பிரிவு 25இனால் நியாயப்படுத்தப் படுகின்றன.

ஒரு மதத்தின் உறுப்பினர்களுக்குள் ஏற்றத்தாழ்வை அனுமதிக்கும் இந்த சட்டப்பிரிவுதான், இரு வேறு மதத்தினருக்கு இடையிலான உரிமையிலும் ஏற்றத்தாழ்வைக் கொண்டுவருகிறது. இந்திய விமானப்படையில் பணியாற்றும் சீக்கியர்கள் தாடி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதைப் போல, தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரு முஸ்லிம் விமானப்படை அதிகாரி தொடுத்த வழக்கை  நிராகரித்த உச்சநீதிமன்றம், ஒரு சீக்கியர் தாடி வைத்துக் கொள்வது சீக்கிய மதக் கோட்பாடுகளின் படி அத்தியாவசியமானது என்றும், ஆனால், ஒரு முஸ்லீமுக்கு தாடி அத்தியாவசியம் என்று இசுலாமிய மதக் கோட்பாடுகள் கூறவில்லை என்றும் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

‘கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம், குறிப்பிட்ட இடம் இராமன் பிறந்த இடம்’ என்ற நம்பிக்கைகள் இந்து சமூகத்தின் புனிதமான, புராதனமான, அத்தியாவசியமான நம்பிக்கைகள் என்று அங்கீகரிக்கும் அலகாபாத் தீர்ப்பு, “இசுலாமியக் கோட்பாடுகளின் படியே மசூதி என்பது புனிதமானதோ, இறைவனின் இருப்பிடமோ இல்லை” என்றும் விளக்கம் கூறுகிறது. ‘தொழுகை நடத்துவதற்கான ஒரு இடம்’ என்பதற்கு மேல் மசூதிக்கு மதம் சார்ந்த புனிதத்தன்மை எதுவும் கிடையாது என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றமும் (இஸ்மாயில் பரூக்கி வழக்கு) இது குறித்து தீர்ப்பளித்துள்ளது.

இன்னும் ஒரு படி மேலே போய், இசுலாமியக் கோட்பாடுகளின் படியே ஒரு மசூதிக்குரிய இலக்கணங்கள் பாபர் மசூதிக்கு இல்லை என்பதை தனது தீர்ப்பில் விளக்குகிறார் நீதிபதி சர்மா. தனிநபரின் நம்பிக்கை, வழிபாட்டு உரிமை ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மதக் கோட்பாடுகளை முன்நிறுத்தும் இந்த அணுகுமுறைதான் அரசியல் சட்டப்பிரிவு 25 இன் சாரமாகவும் இருக்கிறது.

1949 இல் திருட்டுத்தனமாக ராமன் சிலை வைக்கப்பட்டதா இல்லையா? 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதா இல்லையா? இவை குறித்து தீர்ப்பு என்ன கூறுகிறது?

திருட்டுத்தனமாக சிலை வைக்கப்பட்டதை மூன்று நீதிபதிகளும் ஏற்கின்றனர். ஆனால் அது பற்றி தீர்ப்பு கருத்து எதுவும் கூறவில்லை. ஒரு வேளை சிலை வைக்கப்பட்டிராவிட்டாலும், இராமஜென்மபூமி என்ற அடிப்படையில், அந்த இடமே கடவுள்தான் என்பதே பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து. மசூதிக்குள் சிலை வைக்கப்பட்டதன் காரணமாக, சிலை வணக்கத்தை மறுக்கும் முஸ்லிம்கள் அங்கே தொழுகை நடத்தவில்லை. அதே நேரத்தில் அங்கே பூசைநடத்த நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. தொழுகை நடத்தவில்லை என்பதை, முஸ்லீம்களது அனுபோகத்தில் மசூதி இல்லை என்பதற்கான சான்றாக நீதிமன்றம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

1992 மசூதி இடிப்பைப் பற்றி இத்தீர்ப்பு எதுவுமே கூறவில்லை. மசூதி என்பது முஸ்லிம் மதத்தைப் பொருத்தவரை புனிதமான இடம் என்று கருதப்படுவதில்லை என்பதால், பாபர் மசூதி இடிப்பு என்பதை ஒரு வழிபாட்டுத் தலத்தை இடித்ததாக சித்தரிக்க முடியாது என்றும், சட்டவிரோதமாக ஏதோ ஒருகட்டிடம் இடிக்கப்பட்டது என்பதற்கு மேல் டிசம்பர் 6ஆம் தேதி நிகழ்வில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும், இஸ்மாயில் பரூக்கி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காட்டி சுப்பிரமணியசாமி கருத்து கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அலகாபாத் தீர்ப்பும் இந்த கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கிறது.

1949 சிலை வைப்பும்,  1992 மசூதி இடிப்பும் குற்றச்செயல்கள். குற்றத்தில் பிறந்தது எப்படி கோயில் ஆக முடியும், புனிதமானதாக முடியும்?

சட்டப்படி குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகள், மத ரீதியில் புனிதமாக்கப்பட்டிருக்கின்றன. அவை மத உரிமைகளாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. பால்ய விவாகம் என்பது சட்டப்படி குற்றம். ஆனால் பால்ய விவாகம் நடந்து முடிந்து விட்டால், அதனை நடத்தி வைத்தவர்களைத் தண்டிக்க முடியுமே அன்றி, அந்தத் திருமணம் செல்லாது என்று ஆகிவிடாது. இதுதான் சட்டத்தின் நிலை. அதே போல, மசூதியை இடித்ததும், திருட்டுத்தனமாக சிலையை வைத்ததும் குற்ற நடவடிக்கைகளே என்றபோதிலும், அவ்வாறு வைக்கப்பட்ட சிலை புனிதமற்றது ஆகிவிடுவதில்லை. பக்தர்களும் வழிபாட்டு உரிமையை இழந்து விடுவதில்லை.  சட்டவிரோதமானவை எனினும், சட்டப்பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையால் இந்த குற்றங்கள் புனிதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தொகுத்துக் கூறினால்,

1992 மசூதி இடிப்பு என்பது இந்து பாசிஸ்டுகள் நிகழ்த்திய ஒரு கிரிமினல் நடவடிக்கை. தற்போதைய தீர்ப்பு அந்த மசூதி இடிப்பை சட்டரீதியாக நியாயப்படுத்துகிறது. ஒருவேளை 1992இல் மசூதி இடிக்கப்பட்டிராவிட்டால், தற்போதைய தீர்ப்பை அமல்படுத்துவதற்காக மசூதியை இடிக்கச்சொல்லி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்திரவிட்டிருக்குமா என்றுகூட தீர்ப்பை விமரிசிக்கும் சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அரசியல் சட்டப்பிரிவு 25 இந்து பாசிஸ்டுகளின் கருத்தை அரசியல் ரீதியாக வழிமொழிகிறது. 1949இல் திருட்டு சிலைக்கு வழிபாடு நடத்த அனுமதித்தது முதல், 1992 டிசம்பர் 6 அன்று பஜனை பாட உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி வரையில் அனைத்தும் சட்டப்பிரிவு 25ந்தால்தான் நியாயப்படுத்தப்படுகின்றன.

வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், இந்து பாசிஸ்டுகள் கடப்பாரை ஏந்தும் உரிமையை வழிபாட்டுரிமை என்ற பெயரில் உத்திரவாதப்படுத்தியது சட்டப்பிரிவு 25. தற்போது மசூதி இடிப்பை நியாயப்படுத்தியிருப்பதும் சட்டப்பிரிவு 25 தான். இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளியில் நிகழ்ந்த சம்பவம்தான் மசூதி இடிப்பு.

எனவே, இனி ஒரு மசூதி இடிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், மசூதி இடிப்பின் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமானால், அலகாபாத் தீர்ப்பை முறியடிக்க வேண்டுமானால், பார்ப்பனியத்தையும், பார்ப்பன பாசிசத்தையும், எல்லா வகையான மதப் பிற்போக்குகளையும் பாதுகாத்து நிற்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26ஐ நாம் இடித்துத் தள்ள வேண்டும். தற்போதைய அரசியல் சட்டத்தின் வரம்புக்குள் நின்று பார்ப்பனியத்தையோ, பார்ப்பன பாசிசத்தையோ ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சில அம்சங்களில் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆனால் பார்ப்பனியம் மற்றும் மதப்பிற்போக்கின் ஆன்மாவைப் பாதுகாக்கும் கவசங்களாகவே மேற்கூறிய இரு சட்டப்பிரிவுகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு அதனை இன்னொருமுறை நிரூபித்திருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற உண்மையை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பையும் அளித்திருக்கிறது.

___________________________________________

- மருதையன், புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010
___________

ரத்தன் டாடாஉலகப் பெரு முதலாளிகளில் ஒருவரும் இந்தியத் தரகு முதலாளிகளில் முன்னவரும் மூத்தவருமான ரத்தன் டாடா, தன்னுடைய உயிர் வாழும் உரிமைக்கு உத்திரவாதம் கேட்டு உச்சநீதிமன்ற வளாகத்தின் மரத்தடியில் உட்கார்ந்திருக்கிறார். அதிசயம் ஆனால் உண்மை.

“இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21, இந்தியக் குடிமகனின் உயிர் வாழும் உரிமையை உத்திரவாதம் செய்கிறது. உயிர் வாழும் உரிமை என்பது ஒரு குடிமகன் தனது தனிப்பட்ட இரகசியங்களைப் பேணிக்கொள்ளும் உரிமையையும் (right to privacy) உள்ளடக்கியது.. தனிப்பட்ட உரையாடல்கள் பொது அரங்கில் அம்பலமாகாமல் தடுப்பது அரசின் பொறுப்பு” என்று முறையிட்டார் டாடாவின் வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே.

“தனிப்பட்ட உரையாடல் என்றால் என்னவென்று விளக்க முடியுமா?” என்று திடீரென்று நீதிபதி கேட்டுவிடவே, “எப்போது இரவு விருந்து அருந்தப் போகிறீர்கள், என்பன போன்ற உரையாடல்களை சொல்கிறேன்” என்று சமாளித்து விளக்கமளித்தார் டாடாவின் வக்கீல்.

இந்த பதிலைக் கேட்டு சட்ட அறிவும், ஜனநாயக உணர்வுமற்ற பாமரர்கள் வேண்டுமானால் சிரிக்கலாம். மாட்சிமை தங்கிய நீதிபதிகள் சிரிக்கவில்லை. உரையாடலைப் பதிவு செய்த மத்திய அரசுக்கும், அவற்றை வெளியிட்ட அவுட்லுக்,ஓபன் போன்ற பத்திரிகைகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். நகைக்கத்தக்கதாயினும் இதுதான் நடந்திருக்கும் உண்மை.

ரூ. 1,76,000,00,000,000 என்று உயிரற்ற பூச்சியங்களால் குறிக்கப்பட்டு வந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இரத்தமும் சதையும் கொடுத்து, வாய்க்குள் உயிரையும் ஊதி விட்டிருக்கிறார் நீரா ராடியா என்ற அதிகாரத் தரகு தேவதை. கருணாநிதி குடும்பத்துக்குள் நடக்கும் குத்துவெட்டு சீரியல்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நேயர்கள் ரசித்துக் கொண்டிருக்கும் போதே, “தன்னுடைய உயிர் வாழும் உரிமை பறிபோய் விட்டது” என்று அலறுகிறார் டாடா.

விபச்சார விடுதித் தலைவியின் டயரியிலிருந்து உதிரும் அமைச்சர்கள், நடிகைகள், தொழிலதிபர்களின் தொலைபேசி எண்களைப் போல, ராடியாவின் ஒலிநாடா பல உண்மைகளை உதிர்க்கிறது. ராஜா, கனிமொழி, மாறன், வெங்கைய நாயுடு முதலான அரசியல்வாதிகள், சோனியா, ராகுல், புத்ததேவ், மோடி, வாஜ்பாயி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பர்க்கா தத், வீர் சங்வி முதலான பத்திரிகை தூண்கள், பேஜாவர் சுவாமிகள் உள்ளிட்ட ஆன்மீகவாதிகள், கடைசியாக நீதிபதிகள்…!

இந்திய ஜனநாயகத்தின் ஏட்டு முதல் எஸ்.பி வரை அனைவரும் முச்சந்தியில் நிற்கிறார்கள். நீதிபதிகளின் தீர்ப்புகள், பத்திரிகையாளர்களின் அறச்சீற்றங்கள், எம்.பிக்களின் நாடாளுமன்ற உரைகள் அனைத்தும் டாடா, அம்பானிகளின் விருந்து மண்டபத்தில் வைத்து எழுதிக் கொடுக்கப்பட்டவை என்ற உண்மை அம்பலமாகி சந்தி சிரிக்கிறது.

இத்தகைய தனிப்பட்ட உரையாடல்கள் அம்பலமாவது இந்திய ஜனநாயகத்தின் உயிர் வாழும் உரிமையையே பறிக்கும் விபரீதமல்லவா? ஸ்பெக்ட்ரம், கோதாவரி எரிவாயு, சிங்குர் விளைநிலம், காடுகள், கனிவளங்கள் என பொதுச்சொத்துகளைக் கொள்ளயடித்துத்தான் முதலாளித்துவம் உயிர்வாழ்கிறது எனும்போது, அந்தக் கொள்ளையின் சூட்சுமங்களையும் சூத்திரங்களையும் வெளியிடுவது முதலாளித்துவத்தின் உயிர் வாழும் உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?

விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தும் அமெரிக்காவின் ‘இராஜதந்திரப் பரிமாற்றங்கள்’ உலகெங்கும் விரவியிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் உயிர் வாழும் உரிமையைப் பறித்துவிடும் என்று அலறியிருக்கிறது ஒபாமா நிர்வாகம். உண்மைகளும் கூட உலகமயமாகித்தான் இருக்கின்றன!

“உயிர் வாழும் உரிமை என்பது விலங்குகளைப் போல உயிர் தரித்திருக்கும் உரிமை அல்ல, மனித கவுரவத்துடன் வாழ்வதற்கான உரிமை” என்று குடிசை இடிப்பை எதிர்த்துத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் முன்னொரு காலத்தில் வியாக்கியானம் அளித்திருக்கிறது.

“பசி என்ற விலங்குணர்வை ஆற்றிக் கொள்வதற்கு புழுத்துப் போகும் அரிசியை ஏழைகளின் வயிற்றில் எறியக்கூடாதா?” என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் கேட்டபோது, அவ்வாறு இலவசமாகக் கொடுப்பது முதலாளித்துவ சந்தையின் உயிர்வாழும் உரிமையைப் பறிப்பதாகும் என்பதால் கொதித்தெழுந்து எதிர்த்தார் மன்மோகன் சிங். அந்த உரிமைதான் இப்போது டாடா கேட்கும் உரிமை. பூனையின் காலடியோசை எலிகளின் காதில் படாத இரகசியமாக இருக்கும் வரைதானே, பூனை பசியாற முடியும்? அந்த ‘இரகசியத்தை’ அம்பலமாக்குவது பூனையின் உயிர் வாழும் உரிமையை பறிப்பதன்றி வேறென்ன?

_____________________________________________

- புதிய கலாச்சாரம் தலையங்கம், டிசம்பர் – 2010
_____

“ஹிந்து சிக்ஸ் பிஃப்டி, தினமணி தினமலர் ஃபோர் பிஃப்டி, தினத்தந்தி த்ரீ ஃபிப்டி, விகடன், குமுதம், இந்தியாடுடே ஃபைவ் ருபீஸ்..” கடகடவென அதிகாரமாக குரல் வந்து விழ, நான் பழைய பேப்பர் வியாபாரியா?இல்லை அவர் வியாபாரியா என ஒருகணம் நிலைகுலைந்து போனார் பழைய பேப்பர் வியாபாரி.

“சார்!சார்! கொஞ்சம் நிறுத்து சார். விட்டா எங்கூட வியாபாரத்துக்கே வந்துருவ போல இருக்கு, அவ்ளோளாம் வராது சார்! எனக்குக் கிடைக்கறதே கிலோவுக்கு ஐம்பது பைசாவோ, ஒரு ரூவாயோதான்.. நீ இப்படி ரேட்டுப் போட்டா நான் பழைய பேப்பர் வியாபாரத்தையும் வுட்டுட்டு இனிமே எங்க போறதுன்னு தெரியல..”

“ஏம்ப்பா நான் என்ன தப்பாவா சொல்லிட்டேன். விவரந் தெரியாதவங்ககிட்ட நீ எப்படி வேணாலும் வியாபாரம் பண்ணிக்கோ… வீட்ல கம்ப்யூட்டர் இண்டர்நெட்டுனு வெச்சுகிட்டு நான் இது கூட தெரியாமலா இருப்பேன்.. நெட்ல பாத்தா இன்னைய ரேட்டு கரெக்டா வருது.. நான் ஒண்ணும் உன் கண்ணக் கட்டி ஏமாத்துல.. வேண்ணா பாக்குறியா.. ”

“காயலாங்கடைய பாக்கவே நேரம் பத்துல.. இதுல கம்ப்யூட்டர பாக்கணுமா.. நீ வேற சார்.. அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இப்படி லோல்படுறேன்.. வண்ணாரபேட்ட வந்து பாரு சார்.. குடோன்ல இந்தக் கம்ப்யூட்டரையெல்லாம் குடலை உருவிப் போட்டா எடைக்குக் கூட தேறல.. என்னா கம்ப்யூட்டரோ! கம்பியூட்டர விடு சார், என் வயித்தப் பாரு.. காலைலேர்ந்து வெறும் டீயிலயே மூணு சக்கர வண்டிய மிதிச்சுக்கிட்டு,மூணு நாலு மெத்தைல ஏறி பழைய பேப்பர வாரியாந்து வலி நோவுது சார். ஏமாத்திப் பொழைக்கணும்னா எனக்கு ஏன் சார் இவ்ளோ பாடு..”

“நோ..நோ.. இந்த ஆர்க்யூமெண்டே வேணாம். நாட்ல யார்தான் கஷ்டப்படல.. நான் கூடத்தான் காலைல எழுந்து சாப்பிட்டனோ, சாப்பிடலயோ டயத்துக்கு ஆபிசு ஓட வேண்டியிருக்கு.. நீ த்ரீ வீலர்னா நான் டூ வீலர்.. எல்லாருக்கும் கஷ்டந்தான்.. அதுக்காக ஒரு நியாயம் வேண்டாமா.. கட்டுப்படியானா எடு! ஒத்து வரலயா விடு.. டோண்ட் வொர்ரி!”

“இப்படிப் பேசினா எப்புடி சார்! மூணாவது மெத்தைல இருந்து வேற இவ்வளவையும் தூக்கியாந்தாச்சு, கம்ப்யூட்டர்ல அவன் ஆயிரம் போடுவான்.. காயிலாங் கடக்காரன் ஒத்துக்கணும்ல…”

“சரிசார், வேற என்ன பண்றது, நேரு சீரா போட்டுக்கலாம்.”

“என்ன நேரு சீரோ! நம்ம நாட்லயே இது ஒரு பெரிய ப்ராப்ளம்… தொழிலே இல்லேங்கறது, கொடுத்தா ஏட்டிக்குப் போட்டி பேசுவீங்க.. உன்ன சொல்லி குத்தமில்ல… ஸ்டேட் கவர்மெண்ட்டே சரியில்ல… சரி காலைல காட்டியும் வம்பு வேணாம்.. நீ மொதல்ல எடயப் போடு…”

“உங்கிட்ட நூறு ரூபா பேப்பர போடுறதுக்குல்ல நான் பத்து ரூபாய்க்கு பால் குடிக்கணும் போல இருக்கு.. ஓகே.. போடு..போடு..”

“என்னா சார்! பழைய பேப்பர்காரன்கிட்ட போயி இவ்ளோ வலி படுற, வீடு வந்து வாங்கிட்டுப் போறனே சார்… அம்பது பைசா, ஒரு ரூபா விட்டுக்கொடு சார்..”

“பாத்தியா, பேச ஆரம்பிச்சுட்ட, பேசாம எடயப் போடு! பழைய பேப்பர்னா சும்மாவா? ஐ நோ எவரிதிங்… பழைய அட்டப்பெட்டிய வெச்சுதான் அம்பானியே பணக்காரணானான் தெரியுமா? ஏதோ ஹிண்டு பேப்பர படிச்சிட்டு சும்மா வீட்ல கெடக்குற ஜடம்னு என்ன நெனச்சியா? ஐ எம் ஏ ப்ராஞ்ச் மேனேஜர் ஆஃப் சிட்டியூனியன் பேங்க்… எபவ் டொண்ட்டி ஃபைவ் இயர்ஸ் சர்வீஸ்!”

“சரளமாக கல் வந்து விழுவது போல ஆங்கிலத்தில் வார்த்தைகள் வந்து விழ.. பழைய பேப்பர் வியாபாரிக்கு எடை குழறியது… இரு சார்.. ஒரு கிலோ கல்ல எடுத்துட்டு வந்துர்றேன்,” என்று வண்டியை நோக்கி நகர்ந்தார்..

“இவனுகள சாதாரணமா நெனக்காதீங்க, இந்தத் தராசு, கல்லு எல்லாமே ஃப்ராடு.. கிலோ கணக்குல நம்மகிட்ட அடிச்சுட்டுப் போயிடுவான்! நம்ம அபார்ட்மெண்ட்டு மாதிரி எத்தன பேரு? எத்தன கிலோ அடிப்பாங்க, கணக்குப் போட்டு பாருங்க.. சும்மா நடிப்பாங்க சார்… இங்க சம்பாரிச்சு ஊர்ல போயி வட்டிக்கு விடுவான், வீடு கட்டுவான். ஒண்ணு தெரியுமா, அவன் லைஃப்ப என்ஜாய் பண்ற மாதிரி நாம கூட பண்ண முடியாது… இந்த காச வாங்கி நாம ஒண்ணும் பேங்க்ல போடப் போறது கெடயாது.. சனங்கள ஏமாத்த முடியாதுன்னு அவன் தெரிஞ்சுக்குனும் பாருங்க.. அதுக்குத்தான் கொஞ்சம் ஸ்டிரிக்டா இருக்கறது…” பக்கத்து வீட்டுக்காரரிடம் எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்..

“தோ சார்!…” பேப்பர், பத்திரிகையை வகைப்படுத்தி நிறுத்துப் போட்ட வியாபாரி, “குறிச்சுக்க சார்.. இங்கிலீசு ஆறு கிலோ, தமிழ் மூணு கிலோ, புத்தகம் நாலு கிலோ” என்று லாவகமாக மனதுக்குள்ளேயே கூட்டிக் கொண்டு எதிரில் நிற்பவரை கண்களால் எடை போட்டுக் கொண்டே சாக்குப் பைக்குள் பேப்பரை அசக்கி அசக்கி திணித்தார். கூடவே கின்லே காலி பாட்டிலை நசுக்கி உள்ளே திணித்தார்.

“என்னப்பா நீ பாட்டுக்கும் எடை போடாமயே நசுக்கிப் போடுற.. அதயும் நிறு” என்றார் பேங்க்காரர் படபடப்பாக…

“சார் அதுக்கல்லாம் எட கெடயாது சார்… மொத்தமா ஒரு ரூபா போட்டுக்க.”

“என்னப்பா, பத்து பாட்டில் போட்டுருக்கேன். ஒரு ரூபாங்கற..”

“நீ அம்பது போட்டாலும் அது தலையெழுத்து அவ்ளோதான் சார்.. காயலாங்கடைல வந்து பாரு.. உன் கம்பியூட்டரு மண்ட ஓடுக்கே அங்க மதிப்பு கெடயாது.. சும்மா ஒடச்சுதான் போடுவோம்.”

“ஏமாந்தவனா இருந்தா இன்னும் நீ அள்ளி விடுவ.. உங்கிட்ட போட்டது மொதல்ல என் தப்பு, சரி.. சரி.. பணத்தக் குடு…”

“உன்ன ஏமாத்தி நா என்ன அம்பானியா ஆகப்போறேன். ஏன் சார் நீ வேற.. பேசக்கூடாதுன்னு வேற சொல்ற.. இந்தா சார் உன் பணம் அறுபத்தேழு..”

“பாத்தியா திரும்பவும் வேலயக் காட்டுறியே, எவ்ளோ கணக்கு சரியா சொல்லு…”

“என்னா சார், உன் கண்ணயா மறைச்சுட்டேன். அறுபத்தேழு ரூபா எழுபத்தஞ்சு காசு வந்துச்சு.. சில்லறை இல்லையேன்னு நோட்டா குடுத்தேன்.. இந்தா ஒரு ரூபாயா வெச்சுக்கோ…”

“என்னமோ, நீ எனக்கு பிச்ச போடற மாதிரி சொல்ற.. நாலு தெரு அலையாம உனக்கு லம்ப்பா இங்க கெடைக்குது.. இதுல நீ சலிச்சுக்குற, இதையே கார்ல போறப்ப மவுண்ட்ரோட்ல மொத்த வியாவாரிகிட்ட போட்டேன்னு வெச்சுக்க, எனக்கு நூறு ரூவா கெடச்சிருக்கும். சரி.. சரி.. உங்கிட்ட பேசப் பேச பிரச்சனைதான், ஒரு எழுபது ரூபாயா எடு… வேஸ்ட் ஆஃப் மை டைம்.. வேஸ்ட் ஆஃப் மை எனர்ஜி, ஒண்ணு தெரிஞ்சுக்க.. என்னிக்கும் நேர்மையா வாழப் பழகு… லைஃப் கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கும்… தொழில சுத்தமா செய்யி… செய்யும் தொழிலே தெய்வமுன்னு சும்மாவா சொன்னான்..” பேசிக் கொண்டே போக பழைய பேப்பர்காரர் சடாரென எழுபது ரூவாயாக கணக்குத் தீர்த்தார்.

வேண்டாத சுமையாக சாக்குப் பையை சுமந்தவர் முணகிக் கொண்டார், “என் பைலேர்ந்து ஒரு மூணு ரூவாய புடுங்கறதுக்கு தத்துவம் வேற! அடச்சே..” ஒரு கணம் துருபிடித்த இரும்பை உதறிப் பார்ப்பது போல மௌனமாக இமைகளை உதறி பேங்க்காரரை உற்று நோக்கியவாறு நகர்ந்தார்.

“என்ன அப்படிப் பாக்கறீங்க, காசு பெருசில்ல சார்.. நம்மள ஒண்ணுந் தெரியாத முட்டாள்னு நெனக்கிறாம் பாருங்க, அதான் நானும் விடல…” ஹி..ஹி..ஹி. பக்கத்து வீட்டுக்காரரிடம் தனது சாமர்த்தியத்தைப் பகிர்ந்து கொண்டு டக் டக் கென்று மாடியேறினார் பேங்க்காரர்…

________________________________________________________________________

- சுடர்விழி, புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010

___________________________________________

இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More