புதிய கலாச்சாரம்

01_2005.jpg

ஆ என்ன மாமூ! பெரிய சாமி படா கில்லாடியா கீது! நாம இங்க முட்டி செத்துப் போய் கீறோம்... சாமீ இன்னாடான்னா.. பூ கொடுக்றேன், ஆசீர்வாதம் கொடுக்றேன்னுட்டு, ஊரான் பொண்டாட்டி, பொண்ணு, ஆயான்னு அல்லாருக்கும் ரூட் போட்டு "குஜால்' பண்ணிகீது! மேட்டரு படா சோக்காகீது பாத்தியா...?

மேலும் படிக்க …

01_2005.jpg

Rg= காஞ்சி மடம் நடத்தும் காமதுர்கா மாணவியர் விடுதியில் தங்கிப் படித்த 11 வயது ஏழைப் பார்ப்பனச் சிறுமி. இன்று அவள் வாலாஜாபேட்டை மயானத்தின் சாம்பல். கொலை செய்த பெண்களின் பிணங்களை சுவரில் வைத்துப் பூசினான் ஆட்டோ சங்கர். பிரேமானந்தாவோ தனது ஆசிரமத்திலேயே புதைத்து மாட்டிக் கொண்டான்.

மேலும் படிக்க …

சங்கரராமனைக் கொலை செய்தது ஜெயேந்திரன்தான் என்பது உண்மையே ஆனாலும், அதற்கு எப்பேர்ப்பட்ட அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தாலும் ஜெயேந்திரனைக் கைது செய்யுமாறு ஜெயலலிதா எப்படி உத்திரவிட்டிருக்க முடியும்?

 

 ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்களையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களையும் ஒரே நேரத்தில் குடைந்து வரும் கேள்வி இது.

மேலும் படிக்க …

01_2005.jpg

விரைத்துக் கிடக்கும் பிள்ளையைக் கையிலேந்தியபடி ""மயிலோ... மயிலோ'' (""என் பிள்ளை... என்பிள்ளை'') எனக் கதறுகிறாள் இந்தோனேசிய மீனவப் பெண். ""கடல் காத்தோட யம்மா... 12 வயசுப் பிள்ளை யம்மா....'' என்று உடைந்து அரற்றுகிறாள் அக்கரைப்பட்டியின் தாய்.


 மீனவன் வெல்லமுடியாத இயற்கையை யார் வெல்வது? நாற்புறமும் கடல் சூழ தன்னந்தனியே கட்டுமரத்தில் நின்றபடி நாட்கணக்கில் அவர்கள் எதிர்கொண்ட மழைகள், புயல்கள், சூறாவளிகள் எத்தனை?

மேலும் படிக்க …

01_2005.jpg

""இது தகவல் யுகம் உலகம் சுருங்கி விட்டது'' என்று அமெரிக்காவில் பிறக்க விரும்பும் எந்த வெள்ளைப் பன்றியாவது பேசினால் மலம் தோய்த்த செருப்பால் முகத்தில் இறுக்குங்கள். ""இந்தியா வல்லரசாகப் போகிறது'' என்று பேசுபவன் எவனாக இருந்தாலும் அவனை விளக்குமாறால் அறையுங்கள். மூன்று மணி நேரத்தில் வந்து சேர முடியாத சுனாமி அழிவு குறித்த தகவல்! மூன்று நாட்களுக்குப் பின்னரும் பிணங்களை அடக்கம் செய்ய முடியாத அரசு!

மேலும் படிக்க …

01_2005.jpg

"".... சங்கர மடத்திற்கும் அதன் பக்தர்களுக்கும் ஒரு வார்த்தை. மடம் இன்று சந்தி சிரிக்கிறதென்றால் அதற்குக் காரணம் மடம் நடந்து வரும் விதம்தான்.... ஜெயேந்திரரை ஓரங்கட்டிவிட்டு விஜயேந்திரரின் தலைமையில் மடம் தனது வழக்கமான போக்கில் செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தனிநபரை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகி விடாது. மடத்தை உண்மையான சமய  ஆன்மீக அமைப்பாக மாற்றுவதற்கான போராட்டத்தை அவர்கள் மேற்கொள்வதே மடத்தின்பால் அக்கறை கொண்டவர்களின் முயற்சியாக இருக்க முடியும்.

மேலும் படிக்க …

 

ஒரு காந்தியால் ஏற்பட்ட
அகிம்சையின் இரணமே ஆறவில்லை
ஆயிரம் காந்தி அமைதி ஊர்வவலமா?
பகத்சிங் படையல்லவா
பாட்டாளிவர்க்கத்திற்குத் தேவை என்றேன்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
வர்க்க ஸ்தாபனம் இல்ல தோழர்
என்றார் அந்த மார்க்சிஸ்டு கட்சி ஊழியர்.
மதவெறியை மாய்ப்போம்,
மனித நேயம் காப்போம் என்று
தட்டிக்குத் தட்டி கதை கட்டிவிட்டு
விநாயகர் சதுர்த்திக்குச் செட்டு போட்டு
இந்துவெறிக்குச் சிவப்புக் கொடி கட்டுவதுதான்
கம்யூனிசமா? என்றேன்.
தோ....ழ....ர் சி.ஐ.டி.யு வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் அழுத்தமாக.
அயல்நிதி வாங்கும் தன்னார்வக் குழுக்களுடன் சேர்ந்து
சுயநிதிக் கல்லுரி எதிர்ப்புப் பிரச்சாரமா?
மாணவர் சங்கம் உருப்படுமா என்றேன்,
மனப்பாடம் செய்தவர் போல
எஸ்.எப்.ஐ வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் திருத்தமாக.
மீன் குழம்புக்கும் விலைமாதருக்கும்
சோரம் போகிறவர்கள் தோழர்கள் என்று படமெடுக்கும்
குருதிப்புனல் கமலஹாசனுக்கும்
தேவர்மகன் பாரதிராஜாவுக்கும்
திரைப்பட விருதா என்றேன்.
த.மு.எ.ச வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் தயக்கமின்றி.
தீபாவளி, திருவண்ணாமலை தீபத்திற்குச் சிறப்பிதழும்
ஆடிக் கிருத்திகைக்கு அழைப்பிதழுமாய்
தீக்கதிர் வந்து விழுகிறதே என்றேன்.
அது என்ன வர்க்க ஸ்தாபனமா
வெகுஜன பத்திரிக்கை தோழர் என்றார்
தனித்த சிரிப்புடன்.
'நானொரு பாப்பாத்தி' என்று
கோட்டையிலேயே சொன்ன ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு மதச்சார்பற்ற...ஜனநாயக....முற்போக்கு என்றீர்களே
கனவு என்னாயிற்று என்றேன்.
தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது
என்பது போல
கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்.
இந்த முறை அந்தத் தோழர்க்காக நாம் சொல்லுவோம்
" மார்க்சிஸ்டு கட்சி (CPI(M)) என்பதே
தொழிலாளி வர்க்க அமைப்பு (ஸ்தாபனம்) அல்ல"
..
துரை.சண்முகம்
..

 

"கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தால்
கருத்துரிமை பறிபோகு" மென்று
முறுக்கிக் கொண்டு போன
கதாசிரிய நண்பனைக்
காணநேர்ந்தபோது
தயாரிப்பாளர் சொல்லச் சொல்ல
தயக்கமில்லாமல் தனது கதையை
நறுக்கிப் போடுக் கொண்டிருந்தான் அவன்.
..
"புரட்சி, போராட்டம் இதெல்லாம்
என் இளகிய இதயத்தில் - இயலாது
இயக்கத்தில் சேரமாட்டேன்" என
பழக்கத்தை முறித்துக் கொண்ட
பழைய நண்பனைப் பார்க்கப் போனால்
ஆட்டுக்கறி உரிப்பது போல
ஒரு பெண்ணின் அங்க அவயங்களை
பாட்டில் பச்சையாக உரித்துக் கொண்டிருந்தான்
" என்னடா இப்படி" என்றால்
சினிமாவில் சேர்ந்துவிட்டேன் என
சிரிக்கிறான் கோரமாக.
"இலக்கியவாதிகளுக்கே உரிய அடையாளம் கிடைப்பதில்லை....
கட்சிகள் வாகனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன" என
காட்டமாகப் பேசிய இலக்கியவாதியை தேடிப் போனால்
" ஓ அந்த ஆம்வே (AMMY) ஏஜெண்ட்டா" என
அடையாளம் காட்டிகிறார்கள் தெருவாசிகள்.
"எனக்கு இலக்கியம் பண்ணத் தெரியும்
அரசியல் பண்ணத் தெரியாது" என்று
இரட்டுற மொழிந்து
விலகிச் சென்ற நண்பனை விசாரித்தால்
இப்போது பத்திரிக்கையாளர் குடியிருப்பில் வீடாம்.
எப்படியெனக் கேட்டால்
கனிமொழியின் இலக்கியச் சந்திப்பால் வந்த கோட்டா
என்கிறார்கள் கூட இருப்பவர்கள்.
..
"வீரமிக்க தமிழ்மணம்
இப்போது ஈழத்திலிருக்கிறது" என்று
கவியரங்குகளில் கைதட்டல்களை எழுப்பும்
அண்ணணைத் தேடினேன்,
'வாடி வாடி நாட்டுக்கட்டை' க்கு அடுத்த வரிகளைத் தேடி
அவர் ஆத்துப் பக்கம் போயிருப்பதாய்த் தம்பிகள் சொன்னார்கள்.
மலம் உருட்டும் வண்டுகள் கூட
வெளிப்படையாய் இறங்குகின்றன
மனங்கரத் துடிக்கும் இலக்கியவாதிகளே
நீங்கள் மட்டும் ஏன் இப்படி?
..
துரை.சண்முகம்

..
புதிய கலாச்சாரம் ஜூலை 2003 இருந்து
************************************************
(குறிப்பு: நெல்லுமிரட்டி என்பது நெல்லுடன் சேர்ந்து வாழும் நெற்பயிரைப் போலவே தோற்றமளிக்கும் களை)

 

ஓடு! ஓடு!
கடித்துக் குதறிவிடும்
ஓடு !
உயிர் பிழைக்கும் ஆசையில்லையா?
ஓடு ! ஓடு ! ஓடிவிடு !
நீ நினைப்பதுபோல்
அது சைவமில்லை
'இவர்களை' நம்பி நிற்காதே! ஓடு !
.
'வெள்ளைப் புறா'
சமாதான சின்னமில்லை
அதன் கூட்டுக்குள்
எப்போதும் சதைத்துணுக்குகள்
ஓடு ! ஓடு ! ஓடிவிடு !
.
புற்றுகளிலிருந்து
எறும்பு பிடித்துண்ணும்
குரங்குகளைக் கண்டதுண்டா?
கையில் ஒரு குச்சி
அதுதானிந்த அரசு
ஓடு ! ஓடு !
.உன் தலைமயிருக்கு
அவனிடம் இருக்கிறது
காப்புரிமை.
மொட்டையடிக்க முயற்சி செய்யாதே!
கத்தியும்
அவனிடமே இருக்கிறது.
ஓடு ! ஓடு ! ஓடிவிடு !
.
இனியெல்லாம் தனியார்மயம்தான்
வலதுகை ஒருவருக்கு
இடதுகை ஒருவருக்கு
விரல்கள் பத்தும்
வேறொருவருக்கு
சரி!
நகங்களுக்கு ஆயுள் காப்பீடு எடுத்துவிட்டாயா?
நகங்களில் அழுக்கெடுக்க
'புதிதாய்' அறிமுகமாகியிருக்கிறது.
ஐ.எஸ்.ஐ ம் முத்திரையுடன்
விலை வெறும்
ஐம்பதே ரூபாய்தான்!
வாங்கிவிட்டாயா?
.ஏய்? இதென்ன?
காதுகளை அறுத்துப் போட்டுவிட்டு
ஓடுகிறாய்!
ஓடு ! ஓடு !
.எங்கேதான் போகமுடியும்?
பூமியின் விளிம்புக்கு?
பிரபஞ்சத்தின் எல்லைக்கு?
ஓடு ! ஓடு !
.எல்லா வழிகளும்
அடைத்து விட்டன.
தவிர்க்க முடியாதினி!
.
மூடிய அறைக்குள்
மாட்டிய பூனை
என்ன செய்யும்?
..
அதுகூடவா
நம்மால் முடியாது?
சொல்! தொழிலாலர் வர்க்கமே!.
-தீபன்
புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2000

 


Load More