புதிய கலாச்சாரம்

06_2006.jpg

"எந்தச் சாதியில் பிறந்தவராக இருப்பினும் தகுதியும், பயிற்சியும் இருந்தால், இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோயில்களில் அர்ச்சகராகலாம்'' என்ற சட்டத்தை தி.மு.க. அரசு மீண்டும் இயற்றியுள்ளது. 1972இல் இதே சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்தபோது அதற்கெதிராக உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்து அரசியல் சட்டம் தங்களுக்கு வழங்கியிருக்கும் பிறப்புரிமையை நிலைநாட்டிக் கொண்டார்கள் பார்ப்பனர்கள். ""நமது பிறவி இழிவை பூதக்கண்ணாடியால் பெருக்கிக் காட்டுவது போல வந்திருக்கிறது உச்சநீதி மன்றத் தீர்ப்பு'' என்று சாடினார் பெரியார்.

மேலும் படிக்க …

06_2006.jpg

தமிழ் சினிமாவில் தாதா ஃபார்முலா படங்கள் ஓடும் காலமிது. வாழ்க்கையில் நாடோடிகளாக ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மட்டும் திரையரங்கிற்கு வருவதால் அவர்களைக் கவர விறுவிறுப்பான திரைக்கதை தேவைப்படுகிறதாம். விறுவிறுப்பிற்கு வேறு எந்த ஃபார்முலாவையும் விட தாதாயிசம் பொருத்தமாக இருப்பதால் சித்திரம் பேசுதடி தொடங்கி, பட்டியல், தலைநகரம், கொக்கி, ஆறு வரை நீளும் பட்டியலில் தற்போது புதுப்பேட்டை.

மேலும் படிக்க …

06_2006.jpg

காடுகளின் மணமும் மலைப் பச்சைகளின் மணமும் கலந்து இரவு கனத்திருக்கிறது.

 

தகத்தகவென ஒளி வீசியவாறு அற்புத ஜாலம் செய்தபடி சலசலவெனச் சிற்றலைகளோடு ஓடுகிறது கர்னாலி ஆறு.

 

இடம்: நேபாள நாட்டின் மேற்கு மூலை.

மேலும் படிக்க …

06_2006.jpg

""நான் டெல்லியின் பிரபலமானதொரு பள்ளியில் படித்தேன். 12ஆம் வகுப்பு முடியும் வரை எனக்கு, நாம் நம்முடைய சாதியினால் அடையாளம் காணப்படுகிறோம் எனத் தெரியாது. மருத்துவக் கல்லூரியில்தான் சாதி எனும் நச்சுப் பாதையில் நான் நுழைக்கப்பட்டேன். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். அதன்பிறகு திறமை அனைத்தையும் தீர்மானிக்கும். நலிந்த பிரிவினருக்குத் தேவைப்படுவது நல்ல பள்ளிகள்தானேயன்றி, இடஒதுக்கீடு போன்ற சலுகைகளல்ல.

மேலும் படிக்க …

06_2006.jpg

 "2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெர்மனியில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன?'' என்று ஒரு விநாடி வினா நிகழ்ச்சியில் கேள்வி கேட்பதாக வைத்துக் கொண்டால் உங்கள் பதில் என்ன? உலகக் கோப்பைக் கால்பந்து என பளிச்சென்று பதிலளித்து விடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை.

மேலும் படிக்க …

06_2006.jpg

"ஜெனிஃபரின் இந்த புதிய பெர்ப்ஃயூம் உங்கள் ஆளுமையை கூட்டி, சுத்தமாகவும், செக்ஸியாகவும் வைத்திருக்கும் வேறு எதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?'' என்று குழுமியிருக்கும் கூட்டத்தினரை கேட்கிறார் சென்ட் விற்பனை பிரதிநிதி. இது இந்து நாளேடு சென்னையில் நடத்திய ""மெட்ரோ பிளஸ் லைப் ஸ்டைல் ஷோ''வில் ஒரு காட்சி.

மேலும் படிக்க …

ஜெயலலிதா நீண்டகாலம் ஆள்வதற்கு ஜோதிட ஆலோசனைகள் தந்து பரிகாரம் செய்ய வைத்தவர் கேரள ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர். கண்ணகி சிலை இடிப்பு, பழனி முருகன் சிலை மாற்றம், முதுமலை யானைகள் முகாம் முதலியவை பணிக்கர் மூலம் நடந்த கைங்கரியங்கள் என்று கூறப்படுகின்றது. நாடறிந்த ஒரு ஊழல் தலைவியின் ஆட்சியை நீட்டிப்பதற்கு "மந்திர' ஆலோசனை வழங்கிய பணிக்கரின் யோக்கியதை எத்தகையதாக இருக்கும் என்பதை வாசகர்கள் அதிக விளக்கமின்றியே புரிந்து கொள்ளலாம். அப்பேற்பட்ட பணிக்கர் சபரிமலை குறித்து ஒரு பிரச்சினையை எழுப்பியிருக்கிறார்.

மேலும் படிக்க …

06_2006.jpg வரைபடத்தை உற்றுப் பார்த்தால் நாதியற்று நடுக்கடலில் வெட்டி வீசியெறியப்பட்ட இதயத்துண்டாய் நம் கண்ணில் படுகிறது இலங்கைத் தீவு.

 

""விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் சண்டை, புலிகள் தமிழகத்தில் ஊடுருவல்'' என்ற பூச்சாண்டியைத்தவிர செய்தித்தாள்கள் வேறு எதையும் சொல்வதில்லை.

மேலும் படிக்க …

04_2006.jpg

"என்னடா பசங்கல்லாம் தெருப்பக்கம் விடுவிடுன்னு ஓடுறானுவ. சாமி கௌம்பிடுச்சா?''

 

""இல்லியே. மாரியம்மன் கோயிலுட்ட வேட்டு சத்தத்தையும் காணோம், பூசாரியும் கத்தக் காணோம்.''

 

""பசங்க கூட்டமாகப் போறத பாத்தா சந்தேகமா இருக்கு, ஒருவேள கொறவன் கொறத்தி செட்டு போயிருக்குமோ!''.

மேலும் படிக்க …

04_2006.jpg

அரசியல் என்றால் என்னவென்று நேர்மறையில் விளக்குவதை விட எதிலெல்லாம் அரசியல் ஒளிந்து கொண்டு என்னவாக இருக்கிறது என்று விளக்குவது சிரமமானது. அதுவே ஒரு சினிமா எனும் போது காட்சிக் கலையின் உணர்ச்சி வெள்ளத்தில் பார்வையாளர்கள் கட்டுண்டே இருக்க முடியும் என்பதால் கூரிய விமரிசனப் பார்வையை ஏற்படுத்தும் முயற்சி இன்னும் கடினமாக மாறிவிடுகிறது.

மேலும் படிக்க …

04_2006.jpg

ஒரு நிழப்படம் - சில கேள்விகள்

            தோ, இங்கே நீங்கள் பார்க்கும் நிழற்படத்தில் ஓர் ஆப்பிரிக்கப் பெண்  ஒரு சின்னஞ்சிறு கை அவள் வாயை வருடிப் பொத்தியபடி இருக்கிறது. அந்தக் கை சொல்லாமல் சொல்கிறது ""பால் கொடு அம்மா.'' அவன் அவளது மகன். ""என்னைக் கவனி'' என்று கை அசைவில் ஊமைச் சொல்லை உதிர்க்கும் இந்தக் குழந்தையைக் கவனியுங்கள். தாய்தான் அதன் உலகம்.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More