புதிய கலாச்சாரம்

oct_2007_pk.jpgஇங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்ற வெள்ளையர் இலண்டனில் துறைமுக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து தரும் ஒரு தரகு நிறுவனத்தை நடத்தி வந்தார். ஓரிரு வருடங்களாக தொழிலில் நட்டத்தைச் சந்தித்து வந்த வில்லியம்ஸ் அதிலிருந்து மீள தனது நண்பரொருவரின் ஆலோசனைப்படி கேரளாவிலிருக்கும் ஒரு சாமியாரைச் சந்திக்க முடிவு செய்கிறார். ஆலோசனை தந்தவர் இலண்டனில் வாழும் ஒரு என்.ஆர்.ஐ மலையாளி. கேரளாவின் கோட்டக்கல்லில் சிவா சிரிங்க ஆஸ்ரமத்தை நடத்தி வந்த ஞானசைதன்யா என்ற சாமியாரை வில்லியம்ஸ் குடும்பத்துடன் சந்திக்கிறார்.

மேலும் படிக்க …

oct_2007_pk.jpg"ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற பழமொழிக்கு இது புதுமொழி. கோகோ கோலாவைப் போலவே "கென்டகி வறுத்த கோழிக்கறி' என்பது அமெரிக்க மேலாதிக்கத்தின் முக்கியமானதொரு பண்பாட்டுக் குறியீடு. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் என்ற தகுதியில் அமெரிக்கச் சட்டியில் விழுந்து புரண்ட ரோனேன் சென் என்ற கோழி, அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது கேள்வி எழுப்பும் எல்லாக் கட்சிகளையும் "தலையறுந்த கோழிகள்' என்று எள்ளி நகையாடியிருக்கிறது. "தலையறுந்த கோழிகளோ' தம் பெயருக்கேற்பத் துள்ளினவேயன்றி அந்தத் தூதரைத் தூக்கியெறிய இயலவில்லை.

மேலும் படிக்க …

oct_2007_pk.jpg

முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். ""அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?'' என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக் கிழவன்.

மேலும் படிக்க …

oct_2007_pk.jpg

உலகெங்கும் உள்ள மார்க்சிய லெனினியவாதிகள் கற்றுத் தேறவேண்டிய முக்கியமான பாடத்தை ஆசான் லெனினது வாழ்வும் நடைமுறையும் கொண்டிருக்கிறது. சோசலிசப் புரட்சி குறித்த நம்பிக்கையும் நடைமுறையும் கொண்டிருக்கும் பொதுவுடைமையாளர்களுக்கு லெனின் எப்போதும் உறுதுணையாக இருந்து வழிகாட்டுகிறார். அவருடைய கையைப் பற்றிக் கொண்டுதான் எதிர்காலத்திற்கான பணியை நிகழ்காலத்தில் துடிப்புடன் செய்கிறோம்.

மேலும் படிக்க …

ஒளிபுகாத
அடர்காட்டின் நடுவில்
அரிவாள்களைக் கூராக்கி
பாதை செய்கிறோம்

 

ஏளனச் சிரிப்புகளும்,
வன்மம் பொங்கும்
ஊளைச் சத்தங்களும்,
முற்றும் அறிந்த
மேதாவித்தனங்களும்,
திரும்பும் திசைகளிலெல்லாம்
எதிரொலிக்கின்றன.

மேலும் படிக்க …

05_2007.jpg

நக்கீரனில் ஒரு செய்தி படித்தேன். ஆந்திர எல்லையிலிருக்கும் திருவள்ளூர் மாவட்டக் கிராமங்களில் வாழும் ஏழைப்பெண்கள் அதிலும் தலித் பெண்கள், சிலர் வறுமை காரணமாக தம் முடியை விற்று வருகின்றனராம். ஒரு அடி கூந்தலின் விலை 100 ரூபாய். பெண்களிடம் முடி கொள்முதல் செய்து சென்னைக்கு அனுப்பும் தரகர்கள் கிராமங்களில் அலைகிறார்களாம். சென்னையில் இம்முடிகளுக்கு சாயம் தீட்டி வெளிநாடுகளுக்கு அழகான சவரிகளாக ஏற்றுமதி செய்கிறார்களாம். அடர்த்தியான ஒரு கிலோ கூந்தலின் விலை 5000 ரூபாயாம்.

மேலும் படிக்க …

05_2007.jpg

வந்து சேர்ந்தது வீட்டுக்கு
வண்ணத் தொலைக்காட்சி
வைத்துப் பார்ப்பதற்கேற்ற
வாட்டமான இடம்
விவாதத்துக்கிடையில்
ஒருவழியாக முடிவானது.
கூடத்து மூலையில் கிடந்த
கிழவியின் படுக்கை
திண்ணைக்குப் போனது
கேட்க ஆளின்றி
பாட்டியின் கதைகளும், அனுபவமும்
பேச்சு மறந்து வீணாய்ப் போனது.

 

ஆட்டிவிடும்போது
தொலைக்காட்சிக்கு
அடிபட்டுவிடும் என்று
குழந்தையின் தொட்டிலும்
கழட்டப்பட்டது.
முன்வாசலில்,
கேபிள் கொடி படர்வதற்கு
இணங்காத
முருங்கையின் கிளை
முறிக்கப்பட்டது.

 

ஆறுமணி தொடர் பார்ப்பதற்கு
ஊறு நேராதவாறு
ஐந்து மணிக்கெல்லாம்
கோழியின் கூடை கவிழ்க்கப்பட்டது.
தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த
சினையாடு
கண்டு கொள்ள ஆளில்லாமல்
வேலிதாண்டி கர்ப்பம் கலைந்தது.

 

படாத இடத்தில்
தொலைக்காட்சிக்குப்
பட்டுவிட்டால் வருமா எனப்பயந்து
பையனின் "ஒளிந்து பிடித்து'
விளையாட்டும்
வீட்டை விட்டு விரட்டப்பட்டது.

 

விளம்பர இடைவேளைக்கிடையே
கொஞ்சம் விசாரிப்பு பின்பு
வெடுக்கென்று முகத்தை திருப்பி
"கோலங்கள்'.
குடும்பத்தின் "கவனிப்பு' தாங்காமல்
சொல்லாமலே ஓடிப்போனான்
சொந்தக்காரன்.
தொலைக்காட்சிப் பூவில்
தேனெடுக்கத் தவித்து
சுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து
பரிதாபத்தோடு
"இச்சு' கொட்டியது பல்லி.

 

மனிதக்குரலற்று வெறிச்சோடிய
வீதியைப் பார்த்து
பீதியுற்று அலறியது தெருநாய்.
கதவைத் திறந்து கொண்டு
வந்தவனின்
மனிதக்குரைப்பைக் கேட்டு
நடுங்கிப் போனது நாய்.
""ச்சீ... நல்ல நாடகம் ஓடுறப்ப
இங்க வந்தா கத்துற நாயே...!'' என
அடிக்கப் பாய்ந்து வந்த
குடும்பத்தலைவனின் விழிகளில்
இதற்கு முன் இப்படியொரு
வெறித்தனத்தைப்
பார்த்திராத தெருநாய்
உயிர்ப்பிழைத்தால் போதுமென்று ஊரை விட்டே ஓடியது.

 

· துரை. சண்முகம்

02_2007_puja.jpg

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளர் சாய்நாத் இந்திய விவசாய வர்க்கம் நொறுங்கிச் சிதறுவதை உயிருள்ள சாட்சிகளாக தமது ஆங்கிலக் கட்டுரைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பன்னாட்டு உரக் கம்பெனிகள், விதைக் கம்பெனிகளின் படையெடுப்பின் விளைவாகவும், அவர்களது காலை நக்கி விவசாயிகளின் கழுத்தறுக்க துணை நின்ற அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளின் துரோகத்தின் விளைவாகவும், மென்னி முறிக்கும் கந்துவட்டிக் கொடுமையின் விளைவாகவும் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட அவ்விவசாயிகளின் வாழ்க்கையை ஆதாரபூர்வமாக அக்கட்டுரைகளில் நாம் காண முடியும்.

மேலும் படிக்க …

05_2007.jpg

"தெகல்கா' ஆங்கில வார இதழுக்கு (31.3.07) எழுத்தாளர் அருந்ததி ராய் அளித்துள்ள பேட்டியை அளவு கருதி சற்றே சுருக்கித் தருகிறோம். அமைதி வழியிலான மக்கள் போராட்டங்கள் அனைத்தும் அலட்சியப் படுத்தப் படும் சூழலில், நக்சல்பாரிகளுடைய ஆயுதப் போராட்டத்தின் நியாயத்தை அங்கீகரிக்கிறார் ராய்.

மேலும் படிக்க …

05_2007.jpgவசூலில் வெற்றியடைந்திருக்கும் பருத்தி வீரனை மண்வாசனை கமழும் கதை, அசலான பாத்திரங்கள், தெற்கத்தியப் பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டும் காட்சிகள் என எல்லா அம்சங்களிலும் போற்றும் இரசிகர்கள் திரைப்படத்தின் இறுதியில் வரும் கற்பழிப்புக் காட்சி குறித்து மட்டும் வருத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க …

05_2007.jpg

ஆண்டுக்கொருமுறை நடக்கும் கோவில் திருவிழாக்களில் முத்தாய்ப்பான இறுதி நிகழ்ச்சி வாணவேடிக்கை. சாதிப்பற்றைப் போல ஊர் அபிமானத்தையும் வரித்திருக்கும் நாட்டுப்புறமக்கள் எந்த ஊர் அதிகம் செலவு செய்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணவேடிக்கையை நடத்துவார்கள். கஞ்சிக்கு வழியில்லாத இடங்களில் கூட இந்த வேடிக்கைக்கான வசூல் மும்முரமாக நடக்கும். ஏழைகள் என்பதால் வறட்டு ஜம்பம் குறைந்து விடுகிறதா என்ன? அறியாப் பாமர மக்களை விடுங்கள்.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More