புதிய கலாச்சாரம்

வியர்வை நாற்றம்; அழுகிய குப்பைகளிலிருந்து கிளம்பும் நெடி; கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் ஒலி; அருகிலேயே அடுப்பில் மீன் வறுக்கும் வாசம்; தலை மேலே குறட்டைச் சத்தம்; இன்னொரு மூலையில் தொலைக்காட்சியின் இரைச்சல்; எங்கும் கவிந்திருக்கும் சிகரெட் புகை; சாராய நெடி.

பத்தடிக்குப் பத்தடி அளவுள்ள இந்த அறையினுள் 8 பேர்; அறைக்கு சன்னலில்லை; சுவரின் உச்சியில் அரை அடி விட்டத்தில் ஒரு ஓட்டை – காற்று வெளியே போகவும் உள்ளே வரவும் அவ்வளவுதான் இடம்.

மேலும் படிக்க …

”தயவு செய்து கணவனே கண்கண்ட தெய்வமென்று உங்கள் மகள்களுக்குக் கற்றுக் கொடுக்காதீர்கள். சிறுமிகளை வளர்ப்பதை நீங்கள் அளவுக்கதிகமாக வெறுக்கிறீர்கள் என்றால், அவர்களைப் பிறப்பதற்கு அனுமதிக்காதீர்கள். அப்போதுதான் பல சிறுமிகள் கொல்லப்படுவதற்குப் பதில் ஒரேயொரு பெண் மட்டும் இறந்து போவாள்!”

என்று நீண்ட நெடிய பெண் வாழ்வின் அவலத்தை நான்கு வரியில் சொல்கிறார் ஷகீலா. ஷகீலாவின் கதை என்ன?

மேலும் படிக்க …

பாலுறவு வாழ்க்கையில் (காதலில்) மனிதனுக்கு இயற்கையால் தரப்பட்டவை மட்டும் வெளியாகவில்லை. கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்டவையும் (அவை உயர்ந்த மட்டமோ, தாழ்ந்த மட்டமோ) வெளியாகின்றன என்றார் லெனின்.

‘ஆதிமுதல் காதலர்கள்’ என அறியப்படும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயற்கை அளித்த உணர்ச்சி காதல் அல்ல; ஏவாளுக்குப் பதிலாக ஓவாள் என்றொரு பெண்ணை ஏதேன் தோட்டத்தில் காண நேர்ந்திருந்தாலும் ஆதாம் அவளுடன் சேர்ந்திருப்பான்; அவர்கள் விலக்கப்பட்ட கனியைப் புசித்திருப்பார்கள்; ஏனென்றால் அது வெறும் பாலுணர்வு – விலங்குணர்வு. அழகு, அறிவு, அந்தஸ்து, ரசனை ஆகியவற்றையெல்லாம் பார்த்து இவற்றில் ஏதோவொரு விதமாக ஈர்க்கப்படும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்புவதைத்தான் நாம் காதல் என்று அழைக்கிறோம்.

மேலும் படிக்க …

“நான் தேசத்தை நேசிக்கிறேன். பணத்தையும் நேசிக்கிறேன்” என்று விசாரணை நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஹன்சி குரோனியே. “நாட்டை நேசிக்கிறேன் நோட்டையும் நேசிக்கிறேன்.” அடடா, இது ஒரு கவிதை! லட்சோப லட்சம் மனச்சாட்சிகள் குரோனியேவின் இந்தக் கவிதை மூலம் பேசுகின்றன. “நான் மனைவியை நேசிக்கிறேன், காதலியையும் நேசிக்கிறேன்.”, “நேர்மையை நேசிக்கிறேன், லஞ்சத்தையும் நேசிக்கிறேன்.”, “புரட்சியை நேசிக்கிறேன், சொத்தையும் நேசிக்கிறேன்.”, “சேவையை நேசிக்கிறேன், சன்மானத்தையும் நேசிக்கிறேன்” என்று பலவாறாக நம் காதில் ஒலிக்கிறது இந்தக் கவிதை!

மேலும் படிக்க …

அவைகளை பயணிகள் இரயில்

என்றுதான் சொல்கிறார்கள்.

திணித்துக் கொண்டு வரும்  பெட்டிகளுக்குள்ளிருந்து

பிதுக்கித் தள்ளப்படும் பைகளுக்குப் பின்னே,

வெளுத்துச் சிவந்த விழிகள் முளைக்கின்றன.

இறக்கித் தள்ளப்பட்ட வேகத்தில்

எந்தத் திசை என்று தெரியாமல்

கால்கள் மரத்துப் பாதை மறக்கின்றன.

மேலும் படிக்க …

எட்டு மணி நேரம் என் உடலைத் தனக்குள் வைத்து சவைத்துக் கசக்கித் துப்பியது அதி விரைவுப் பேருந்து. மணி மூன்று முப்பது. சேலத்தின் அதிகாலை ஒரு சொர்க்கம். உடன் படித்தநண்பன் ஒருவனின் திருமணத்தை முன்னிட்டு தான் இந்த பயணம். அப்படியே வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து பழைய நட்புகளைப் பார்த்துச் செல்வதாக திட்டம்.

மேலும் படிக்க …

''Its my life" - இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? Its mone of your business..."

21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது எனும் டெல்லி அரசின் முடிவுக்கெதிராக "போராடும்' டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இயக்க முழக்கம்!

மேலும் படிக்க …

"முன்னாள் விமானப்படை அதிகாரியான அஞ்சலி குப்தா தற்கொலை செய்து கொண்டார்...' என்ற செய்தி ஆங்கில நாளிதழ்களின் துணுக்குச் செய்தியாக வந்திருந்ததை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். தற்கொலை செய்து கொள்ளும் காரணுங்களுக்கு நம் நாட்டிலா பஞ்சம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், இந்தத் தற்கொலைக்கு பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. போராடி வாழ முயன்ற அஞ்சலி குப்தா, பெண் என்ற காரணத்தினாலேயே தனது போராட்டத்தையும் தொடர முடியாமல், வாழவும் முடியாமல் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். அந்தப் பெண்ணின் கதையை படியுங்கள்.

மேலும் படிக்க …

"கண், இது நாள் காண விரும்பிய காட்சி இதுவோ!' எனுமாறு அந்த நூற் குவியலைப் பார்க்கப் பார்க்க விழிகள் வியப்பிலும், மலைப்பிலும், விருப்பிலும் மலர்ந்து போனது. அத்தனையும் சோவியத் ரசியாவில் அச்சிடப்பட்ட நூல்கள். மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தாரால் தயாரிக்கப்பட்ட நூல்கள். நான் பார்த்தபோது ஏறக்குறைய இரு நூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழும் ஆங்கிலமுமாக புத்தகங்கள் குவிந்துக் கிடந்தன.

மேலும் படிக்க …

ஆகஸ்டு புரட்சி  அண்ணா ஹசாரே கடந்த ஆகஸ்டு மாதம் தில்லி ராம் லீலா மைதானத்தில் நடத்திக் காட்டிய உண்ணாவிரதக் கூத்தினை ஆங்கில ஊடகங்கள் இப்படித்தான் வருணிக்கின்றன. காந்தியத்தை நெம்பித் தூக்கி வந்து இந்திய அரசியல் அரங்கின் மையத்தில் வைத்தார் அண்ணா ஹசாரே என்று அனைத்திந்திய ஊடகங்கள் தொடங்கி இலக்கிய பிரிண்டிங் மிசின் ஜெயமோகன் வரை மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள்.

மேலும் படிக்க …

சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கச் சொல்லி

உச்சநீதிமன்றம் உத்திரவிட்டபிறகும்,

கோர்ட்டு தீர்ப்பு என் கொண்டை ஊசிக்கு சமம்,

என இறுமாந்திருந்த ஜெயலலிதாவின் தலையில்

இடியென இறங்கியது

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின்

போராட்டம்!

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More