Language Selection

புதிய கலாச்சாரம்

"இந்து தேசிய காங்கிரசு' குறிப்பாக போலிச் சுதந்திர ஆண்டுகளுக்குப் பின்னால், நேரு பாரம்பரியத்தின் கீழ் தனிநபர் சர்வாதிகாரத் தலைமையும், அடக்குமுறைத் தன்மையும் கொண்ட பாசிஸ்ட் கட்சியாக மாறிவிட்டது. எழுபதுகளில் தொடங்கிய இந்த பாசிசத் தன்மை இன்று அதன் உச்சநிலையை எட்டியுள்ளது. காங்கிரசுத் தலைமையின் தனிநபர் சர்வாதிகாரத் தன்மை இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல. 1939ஆம் ஆண்டு பட்டாபி சீத்தாராமையா என்பவரை காங்கிரசுத் தலைவராக்க விரும்பினார் காந்தி. ஆனால் சுபாஷ் போஸ் காந்தியின் விருப்பத்திற்கு எதிராக கட்சித் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்டார்.

இங்ஙனம் கிஞ்சித்தும் விஞ்ஞானக் கண்ணோட்டம் இல்லையெனில் நடைமுறையில் காங்கிரசின் நோக்கு என்ன? ஐயமின்றி அஞ்ஞானப் பார்வைதான்!
மதச்சார்பின்மை என மூ­ச்சுக்கு முன்னூறு தடவை கொட்டி முழக்கும் காங்கிரசின் எல்லாக் கிளர்ச்சிகளிலும் பிரச்சாரத்திலும் அன்றும் இன்றும் அஞ்ஞான இந்துமத போதனையே பிரபலமாக இருந்து வந்துள்ளது. "தீவிரவாதிகள்' எனப் பட்டம் சூட்டப்பெற்ற திலகர், அரவிந்த கோஷ் முதல் பண்டாரக் கவிஞன் பாரதிவரை இவர்கள் உயர்த்திப் பிடித்த தேசியம் இந்து தேசியமே.

1947இல் "சுதந்திரம்' வழங்குவது பற்றிக்கூட எச்சில் பொறுக்கும் காங்கிரசுக்கு அதன் எஜமானன்தான் வழிகாட்ட வேண்டியிருந்தது. இந்தக் கேடுகெட்ட சுதந்திரம் எப்படியிருக்கும் என்பது பற்றியோ, எதிர்காலம் பற்றியோ இவர்களால் ஊகிக்கக்கூட முடியவில்லை. இது ஒருபுறமிருக்கட்டும். இதுவரை காந்தியும் காங்கிரசும் முழங்கிவந்த சுயராஜ்ஜியம், சுதந்திரம், இதில் எதிலுமே, என்றுமே அவர்களுக்கு ஒருங்கிணைந்த உலகக் கண்ணோட்டமோ, தெளிவோ இருந்தது கிடையாது. காங்கிரசின் போர் முறை தெளிவற்று இருந்தது என்பதை அதிகாரபூர்வமான இந்திய தேசியக் காங்கிரசு வரலாறே உரைக்கிறது:

காங்கிரசும் அதன் தலைமையும் ஒருபோதும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தீர்மானகரமான வெற்றியை விரும்பவில்லை என்பது தெளிவு. "காலிகளுக்கு'' பரந்துபட்ட மக்களுக்கு எதிராகச் செலுத்தப்படும் நூற்றாண்டுகால வெள்ளை ஏகாதிபத்திய ஒடுக்குமுறைச் சுரண்டலின் போது கட்டி வளர்க்கப்பட்ட அதிகாரவர்க்க நிர்வாக எந்திரம், போலீசு, இராணுவம் ஆகியவைகளை அப்படியே எடுத்துக் கொள்ள பெரிதும் விரும்பினர். இந்த அரசு எந்திரம் தகர்க்கப்படுவதை அவர்கள் சிறிதும் விரும்பவில்லை.

1946 கப்பற்படை எழுச்சியைக் காங்கிரசுத் துரோகிகள் காட்டிக் கொடுத்து இந்திய விடுதலையின் முதுகெலும்பையே முறித்துவிட்டனர். தொழிலாளர்களும், மாணவர்களுமாக 30,000 பேர் பம்பாய் கப்பற்படைக் கலகத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். வேலை நிறுத்தம் செய்தனர். ஏறத்தாழ 20,000 கப்பற்படை வீரர்கள் செங்கொடி ஏந்தி பம்பாய் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர். "புரட்சி ஓங்குக! பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இறந்து படுக!' என விண்ணதிர முழங்கினர். ராயல் இந்தியக் கப்பற்படையின் 20 கப்பல்களை அவர்கள் கையகப்படுத்தி விட்டனர். எல்லா கப்பல்களிலும் காங்கிரசு, முசுலீம் லீக் மற்றும் செங்கொடிகள் இணைந்து பறந்தன. கப்பற்படை வீரர்களை இந்திய இராணுவத்தினர் சுட மறுத்துவிட்டனர்.

இரண்டாம் உலகப் போரின் போது வெள்ளை ஏகாதிபத்தியம் தனது போர் நடவடிக்கைக்கு எதிராகக் கிளம்பிய ஒவ்வொரு எதிர்ப்பையும் நசுக்கியது. ஒடுக்குமுறையை மட்டுமே நம்பியிருக்காமல் போருக்குப் பின் அரசியலதிகாரத்தை இந்தியர்களின் கைகளுக்கே மாற்றி விடுவது என்ற மாயையை மக்களுக்கு ஏற்படுத்தும் பொருட்டு கிரிப்ஸ் கமிசன் போன்ற தூதுக்குழுக்கள் ­மூலம் அரசியல் மோசடி ­மூட்டைகளை அவிழ்த்து விட்டது.

லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. (காந்தி இர்வின் ஒப்பந்தம்)

வடகிழக்கில் சிட்டகாங் நகரிலும், மேற்கில் பெஷாவரிலும் போர்க் குணமிக்க போராட்டங்கள் இந்நாட்களில் (1930) தோன்றின. சிட்டகாங்கில் புரட்சிகர மாணவர் இயக்கங்களைச் சார்ந்த இந்துஸ்தான் குடியரசுப் படையினர் பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கைச் சூறையாடினர். பெஷாவரில் பத்தானியர்களுக்கும் போலீசாருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மக்கள் போராட்டங்கள் வளரத் துவங்கியதும் காங்கிரசு மீண்டும் ஒத்துழையாமை எனக் கூச்சலிடத் துவங்கியது; அகிம்சைவழி என அரற்றியது. உண்மையிலேயே காந்தியினுடைய அகிம்சைத் தத்துவத்தின் நோக்கம் என்ன? கத்தியின்றி ரத்தமின்றிப் போராடுவதன் உள்ளடக்கக் கூறுகள் என்ன?

பிரிட்டிஷாரின் ஒத்துழைப்போடு எவ்வளவுதான் காங்கிரசு துரோகமிழைத்த போதும் புரட்சிகரமான நிலைமைகள் முன்னேறுவதைத் தடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நேரத்தில் காந்தியும் காங்கிரசும் "அமைதியான வேலைகளை'க் கவனிப் பதற்குப் பதிலாகச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் எப்போதுமே காலனியாட்சியாளர்களுக்கு உதவி வந்துள்ளனர். 1920களில் புரட்சிகர நிலைமைகள் திடீரென முன்னேறிய போது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த காந்தி கூரை மேல் நின்று கொக்கரிக்கும் சேவலாக மாறிவிட்டார். "1921 இறுதிக்குள் சுயராச்சியம் அடைந்தே தீருவேன்... சுயராச்சியத்தை அடையாமல் டிசம்பர் 31, 1921க்குப் பிறகு வாழ்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.''

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE