புதிய கலாச்சாரம்

 உலகின்  மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நடக்கும் தேர்தல், பல்வேறு மொழி, இன, மத, சாதி, பிரதேச வேறு பாடுகளால் சூழப்பட்டிருக்கும் நாட்டில் நடக்கும் பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் என்றெல்லாம் இந்தியாவின் ஜனநாயக மாண்பைப் பார்த்து வெளி நாட்டினர் வியப்படைவதுண்டு.

மேலும் படிக்க …

""புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடைந்தால் அவர்களுடைய உயிர்களையும், மக்களின் உயிர்களையும் காப்பாற்றிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அனைவருமே வேரோடு அழித்து ஒழிக்கப்படுவார்கள்'' என்று இனப்படுகொலயைப் பகிரங்கமாகப் பிரகடனம் செய்த ராஜபக்சே, தற்போது இரண்டு நாள் போர் நிறுத்தம் அறிவித்திருக்கிறார். சிங்கள இராணுவத் தாக்குதலில் உற்றார் உறவினரை இழந்து அநாதையாகி, கை கால்களை இழந்து முடமாகி, சோறும் தண்ணீரும் இன்றி நடைபிணமாகித் தவித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு ராஜபக்சே வழங்கியிருக்கும் வெளியேற்ற நோட்டீசுதான் இந்தப் போர் நிறுத்தம்.

மேலும் படிக்க …

சும்மாவா சொன்னாங்க ஆண அடிச்சு வளர்க்கணும்; பொண்ண புடிச்சு வளர்க்கணும்னு, ஒரு குடும்பம் நடத்துற பயலா இவன்? மணி ஆறாகுது.. இன்னும் தூங்கிட்டு கெடக்கான்… மாமியார் மரகதம்மாள் குரல் ஊடுருவ திடுக்கிட்டு எழுந்தான் மூர்த்தி.

மேலும் படிக்க …

தில்லைக் கோவிலை அரசு மேற்கொண்டதை அடுத்து அதிர்ச்சியடைந்த இந்து மதவெறி அமைப்புக்கள் அரசு நிர்வாகத்தால் அந்தக் கோவில் சீரழியும் என அரற்றினார்கள். அதையே தினமணி தலையங்கம் எழுதி வழிமொழிந்தது.

மேலும் படிக்க …

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம். சமையலறையிலும், குழந்தைப் பேறுவளர்ப்பிலும், பாலியல் இச்சைக்காகப் படுக்கையறையிலும் காலங்காலமாகக் கட்டிப் போடப்பட்ட பெண்கள், மனித குல வரலாற்றில் தங்களுக்கும் சரிபாதிப் பங்குண்டு என வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு செந்நீர் சிந்தி, சில உயிர்களைப் பலிதானமிட்டு உணர்ந்த நாள் மார்ச் 8. ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் மனித சமூகம் அடியெடுத்து வைத்திருக்கும் இக்காலத்திலும், நவீன வாழ்க்கையின் அடையாளமாக எத்தனையோ வசதிகள் சகஜமாகிவிட்ட இச்சூழ்நிலையிலும் பெண்கள் தங்கள் தளைகளை அறுக்க முடியாமல் அடிமைகளாக நீடித்திருக்கும் நிலையே தொடர்கின்றது.

மேலும் படிக்க …

இந்தியாவின் கிறித்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்தை அளிக்கும் கேரளாவில் அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகம் கிறித்தவ உலகில் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு என்ற அந்த நூல், 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து பின்னர் சபையிலிருந்து விலகிய ஜெஸ்மி என்ற 53 வயது சகோதரியால் எழுதப்பட்டது.

மேலும் படிக்க …

அபுகிரைப் சிறைச்சாலையில் ஈராக் மக்கள் மீது அமெரிக்கத் துருப்புக்கள் நடத்திய வக்கிரமான சித்திரவதைகள் குறித்த புகைப்படங்களும் ஒளிநாடாக்களும் சென்ற மே மாதம் முதன்முதலாகச் செய்தி ஊடகங்களின் வெளிவந்தன. உலகெங்கும் எழுந்த கண்டனங்களின் விளைவாக இந்த ஒளிநாடாக்களையும் புகைப்படங்களையும் பார்ப்பதற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதித்தது புஷ் அரசு. ஓரு கண்துடைப்பு விசாரணையும் நடக்கின்றது.

மேலும் படிக்க …

தமழக மக்களது சமூக அறிவுத் தரத்தை குமுதம் பத்திரிகை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. தற்போது இந்தப் பணியினை தமிழ் சேனல்கள் செய்து வருகிறது என்றாலும் இவையும் குமுதத்தின் பாணியினையே பின்பற்றி செயல்படுகின்றன. அரசியலோ,

மேலும் படிக்க …

லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணத்தை விளக்கினார். அதை ஒரு புரட்சியின் மூலம் மாற்றும் சக்தி தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு என்றார்.

மேலும் படிக்க …

1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்கு ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க …

லெனினுடைய கருத்துக்களை ஆதரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்திரிக்கையை நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்தனர் தொழிலாளர்கள்.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More