புதிய ஜனநாயகம்

03_2005.jpgநிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழனின் வீர விளையாட்டாகச் சித்தரித்து பல வண்ணத்தில் அட்டை; ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மலர்க்குழுவில் அங்கம் வகிக்க, தாமே தயாரித்த பொங்கல் சிறப்பிதழுக்கு தமக்குத்தாமே நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்ளும் சுயதம்பட்டம்; சுனாமியால் பல லட்சம் தமிழர்கள் வாழ்விழந்து வேதனையில் பரிதவிக்கும் போது, எவன் செத்தாலென்ன? என்று கோலம் போட்டு பானையை அடுப்பிலேற்றி பொங்கல் வைத்துக் கொண்டாடச் சொல்லும் காசி ஆனந்தனின் வக்கிர உணர்ச்சிக் கவிதை; தமிழ் தேசியப் புரட்சிக்கு வழிகாட்ட ஒரு குறிப்பிட்ட தத்துவமோ, சித்தாந்தமோ, ஒரே கொள்கைக்கான அமைப்போ சாத்தியமில்லை, பல தரப்பட்ட சித்தாந்தங்களும் பலதரப்பட்ட அமைப்புகளும் கொண்ட பன்மைத்துவமாகவே தமிழ் தேசியம் இருக்கும் என்று நவீன

மேலும் படிக்க …

03_2005.jpgவேலையில்லாத் திண்டாட்டம், ஆட்குறைப்பு ஆலைமூடல், விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக நகர்ப்புற வர்க்கத்திடம் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக சந்தையின் அளவு விரிவடையவில்லை. இந்தப் பின்னணியில், நகர்ப்புறத்தில் புதிய நுகர்வோர்களை கவர்ந்திழுக்க முடியாமல் பன்னாட்டு நிறுவனங்கள் திணறுகின்றன. பழைய வாடிக்கையாளர்களையே மீண்டும் குறிவைத்து விற்பனைக்கான தாக்குதலைத் தொடுக்கின்றன. பல்வேறு விளம்பரங்கள் மேற்குறிப்பிட்ட விசயத்தை உறுதிப்படுத்துகிறது.

மேலும் படிக்க …

03_2005.jpgஇந்தியா உலக வர்த்தகக் கழகத்தில் இணைந்த பொழுது, நமது நாட்டின் 1970ஆம் ஆண்டு வடிவுரிமைச் சட்டத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, அதற்குப் பதிலாக அமெரிக்காவில் இருப்பது போன்ற வடிவுரிமைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. சனவரி 1, 2005க்குள் புதிய வடிவுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட வேண்டும் என்றும் உலக வர்த்தகக் கழகம் காலக்கெடு விதித்திருந்தது.

 

நமது நாட்டின் 1970ஆம் ஆண்டு வடிவுரிமைச் சட்டத்தின்படி, மருந்துப் பொருட்கள், விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், தாவரங்கள், நுண்ணுயிர்கள், விதைகள் ஆகியவற்றின் மீது வடிவுரிமை கோர முடியாது.

மேலும் படிக்க …

03_2005.jpgஆந்திர மாநில அரசாங்கத்துக்கும், இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சிக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் நீடிக்கும் என்றோ, அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறும் என்றோ எந்தத் தரப்புக்கும் நம்பிக்கை இருந்ததில்லை.

 

இரு தரப்பும் சண்டை நிறுத்தம் அறிவித்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அது ஒரு குறுகிய காலமே அமலில் இருந்தது. பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் நடக்கும்போதே சண்டை நிறுத்தத்தை மீறி, நக்சலைட்டுப் புரட்சியாளர்களைப் படுகொலை செய்வதில் போலீசும், இரகசியக் கொலைபடைக் குழுக்களும் இறங்கிவிட்டன. பதிலடி கொடுக்கும் முகமாக, இ.க.க. (மாவோயிஸ்ட்)களும் போலீசு உளவாளிகளையும், துரோகிகளையும் அழித்தொழிப்பதைத் தொடங்கிவிட்டனர்.

மேலும் படிக்க …

03_2005.jpgசுனாமி பேரலை ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஏழை நாடுகளைத் தாக்கிய பொழுது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் 1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனது பண்ணையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். உலகையே உலுக்கிப் போட்ட இந்தத் துயரமான சம்பவத்தைக் கேள்விப்பட்ட பிறகும்கூட, புஷ் தனது ஓய்வை ரத்து செய்யவில்லை. மூன்று நாட்கள் கழித்துதான் இரங்கல் செய்தியொன்றை வாசித்துவிட்டு, ஒன்றரை கோடி அமெரிக்க டாலரை (ஏறத்தாழ 75 கோடி ரூபாய்) நிவாரண நிதியாகக் கொடுப்பதாக அறிவித்தார், புஷ்.

மேலும் படிக்க …

03_2005.jpgஅரசு அலுவலகத்தில் அலுவலக வேலை மட்டுமே பார்க்க வேண்டும்! சாமி படங்களை மாட்டிக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலக நேரத்தில் பூஜை, புனஸ்காரம் என்று புரோகிதர்கள் போல் திரியக்கூடாது" என்று ஒரு அரசு ஊழியர், தனது சக ஊழியர்களை வலியுறுத்துவதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

 

'ஆமாம் தவறுதான்! அதுவும் மாபெரும் தவறு!" என்று அவ்வூழியரைச் சித்திரவதை செய்து, சிறை பிடித்தது அரசு எந்திரம்!

மேலும் படிக்க …

Load More