Language Selection

புதிய ஜனநாயகம்

06_2005.jpg இசுலாமிய மகளிர் அமைப்புகள், முசுலீம் தனிநபர் சட்டத்தில் சீர்திருத்தங்களைக் கோரும் சில அறிவுஜீவிகள் ஆகியோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததற்கு இணங்க, அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம், ""நிக்காஹ்நாமா'' என்றழைக்கப்படும் திருமண ஒப்பந்தமொன்றைப் புதிதாகத் தயாரித்து, கடந்த மே 1 அன்று வெளியிட்டு இருக்கிறது. திருமணத்தை நடத்தி வைக்கவும்; மணவிலக்கு உள்ளிட்டு கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் இப்புதிய திருமண ஒப்பந்தத்தையே மாதிரியாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி, அவ்வாரியம் முசுலீம் மதத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

06_2005.jpgமே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வரின் ஒப்புதல் வாக்குமூலம் ""டாடா பிர்லா கூட்டாளி; பாட்டாளிக்குப் பகையாளி'' என்று முன்னொரு காலத்தில் முழங்கிய சி.பி.எம். கட்சி இப்போது, ""டாடாவும் பிர்லாவும் எங்கள் பங்காளி; பாட்டாளிகளே பகையாளி'' என்று முழக்கமிடத் தயாராகிவிட்டது. தொழிலாளர் போராட்டங்களுக்குத் தடைவிதித்துவிட்டு, அன்னிய நேரடி முதலீடுகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இப்போலி கம்யூனிஸ்டுகள், மாவீரன் பகத்சிங், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தரகுப் பெருமுதலாளி டாடாவையும் சேர்த்து மாபெரும் நாட்டுப் பற்றாளனாகச் சித்தரித்து புகழாரம் சூட்டுகிறார்கள். கொள்ளைக்கார மோசடி தரகுப் பெருமுதலாளி முகேஷ் அம்பானிக்கு

06_2005.jpgநிலத்தடி நீர் வளமிக்க கேரளத்தின் பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகா, பிளாச்சிமடா கிராமத்தின் நீர் வளத்தை இரண்டே ஆண்டுகளில் சூறையாடி யதோடு, விளைநிலங்களையும் தனது கழிவு நீரால் நாசமாக்கியிருக்கிறது கொக்கோ கோலா ஆலை. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நீரை உறிஞ்சக் கூடாதென்று கேரள உயர்நீதி மன்றத்தின் நீதிபதி பாலகிருஷ்ணன் நாயர் டிசம்பர் 13, 2003 அன்று விதித்திருந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்த கொக்கோ கோலா நிறுவனம், கடந்த ஏப்ரல் 7ம் தேதியன்று தனக்குச் சாதகமான தீர்ப்பை வாங்கி விட்டது.

06_2005.jpgநாட்டை மீண்டும் காலனியாக்குவதில் போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது, காங்கிரசு கூட்டணி ஆட்சி. காப்புரிமைச் சட்டத் திருத்தம், மதிப்புக் கூட்டு வரி விதிப்பு, ஜவுளி பின்னலாடை ஏற்றுமதிக்கு இருந்து வந்த ""கோட்டா'' முறை ரத்து, புதிய ஓய்வூதியச் சட்டம், புதிய விதைச் சட்டம், புதிய சந்தைச் சட்டம் என உலக வர்த்தகக் கழக ஒப்பந்தப்படி இந்தியப் பொருளாதாரத்தை இந்த ஆண்டிற்குள் முற்றிலுமாக மாற்றியமைக்கும் வேகத்தோடு அடுத்தடுத்து தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.

06_2005.jpgமதுரை மாவட்டம், உசிலை வட்டத்திலுள்ள ரிசர்வ் தொகுதியான கீரிப்பட்டியில் 1996 முதல் 19 முறை பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டும், அந்த பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலியில் ஒரு தலித் அமர முடியவில்லை. பாப்பாபட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நின்ற நரசிங்கம் என்ற தலித் வேட்பாளர் மர்மமான முறையில் இறந்துள்ளார். நாட்டார்மங்கலம் தொகுதியில் யாரும் வேட்பு மனுக் கூடத் தாக்கல் செய்யவில்லை.