அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்டவாரியத்தின் மாதிரி திருமண ஒபபந்தம்: புதிய மொத்தை பழை பள்ளு
இசுலாமிய மகளிர் அமைப்புகள், முசுலீம் தனிநபர் சட்டத்தில் சீர்திருத்தங்களைக் கோரும் சில அறிவுஜீவிகள் ஆகியோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததற்கு இணங்க, அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம், ""நிக்காஹ்நாமா'' என்றழைக்கப்படும் திருமண ஒப்பந்தமொன்றைப் புதிதாகத் தயாரித்து, கடந்த மே 1 அன்று வெளியிட்டு இருக்கிறது. திருமணத்தை நடத்தி வைக்கவும்; மணவிலக்கு உள்ளிட்டு கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் இப்புதிய திருமண ஒப்பந்தத்தையே மாதிரியாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி, அவ்வாரியம் முசுலீம் மதத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.