டீசல்-எரிவாயு உருளை விலையேற்றம்: தாராளமயத்தின் கோரவிளைவு!
கடந்த ஜூன் 24ஆம் தேதி நள்ளிரவிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயஇ, மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2ரூபாய் என விலையேற்றத்தை அறிவித்து நாட்டு மக்களின் மீது மீண்டும் பொருளாதாரச் சுமையைத் திணித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்தை விலைக்குக் குறைவாக பெட்ரோலியப் பொருட்களை விற்பதால் ஏற்படும் நட்டம், சமையல் எரிவாயு முதலான வற்றுக்கு அரசு அளிக்கும் மானியத்தால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறை என்ற வழக்கமான பொய்களைக் கூறி விலையேற்றத்தை நியாயப்படுத்தி வருகிறது.