Language Selection

விருந்தினர்

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் சுட்டுக் கொல்லப்படுவதோ அன்றி தாக்கி துன்புறுத்தப்படுவதோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. சாதாரண உழைக்கும் தொழிலாளர்களான மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். அத்தகைய சம்பவங்கள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்தியப் பெரும் படகுகள் அத்துமீறிப் பிரவேசித்து குறிப்பாக வடபுலத்து மீன் வளங்களை வாரி அள்ளிச் செல்வதை எவ்வகையிலும் அனுமதிக்கவும் முடியாது. மேற்படி சம்பவங்களால் இரு நாடுகளினதும் சாதாரண உழைப்பாளர்களான மீனவர்களே கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆதலால் தொடரும் இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளுக்கு இலங்கை இந்திய அரசாங்கங்கள் உரிய பேச்சு வார்த்தையை எவ்வித உள்நோக்கங்கள் இன்றியும் முன்னெடுத்து தீர்வு காண முன்வரல் வேண்டும் என எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி வற்புறுத்துகிறது.

இவ்வாறு இலங்கை இந்திய மீனவர்களிடையே உச்சமடைந்துள்ள பிரச்சினை பற்றி புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் இதழ்களை அவற்றின் முதலாவது இதழ்களில் இருந்து இன்று வரை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகன் நான். சில விடயங்களில் இவற்றில் வரும் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருந்திருக்கின்றது. ஆனால் அக்கடடுரைகளில் அவர்களின் பக்கத்து, நியாயமும் நேர்மையும் தர்க்க ரீதியாக இருந்திருக்கின்றது. ஆனால் குகநாதன் கடத்தல் விவகாரத்தில் அவர்கள் தீர்ப்பை மாற்றிச் சொல்லும்  நாட்டாமைகளாக ஒரு அறிக்கை எழுதியிருப்பதனை வாசித்த போது இவ்வளவு காலமும் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும் மண்ணாகிப் போய் விட்டது. இந்த அறிக்கை எழுதுவதற்காக தேசம்நெற்றினை அடிக்கடி பார்த்திதிருப்பார்களோ?. ஏனெனில் ம க இ க இன் வினவில் வந்த அறிக்கை தேசம்நெற்றில் வெளிவரும் கட்டுரைகள் போல் வந்திருக்கின்றது.

தாயகத்தின் வெளியாகிய இக்கட்டுரை, புலியெதிர்ப்பு அரசிலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் புலிகளின் சதிகளையும் அதன் மனித விரோத பம்மாத்து கூறுகளையும் இக்கட்டுரை தர்க்கங்கள் மற்றும் தகவல்கள் மூலம் அம்பலமாகின்றது. அந்த வகையில், படிக்க வேண்டிய கட்டுரை இது.

இதேயொத்த அரசின் சதிகளையும் பம்மாத்துகளையும், அதன் பாசிச பயங்கரவாதத்தையும் புலியெதிர்ப்பு கண்டு கொள்வதில்லை. அதை இவர்கள் இப்படி பேசுவது கிடையாது. இந்த உண்மையை கருத்தில் எடுத்துக் கொண்டு, நீண்ட இக்கட்டுரையை விமர்சன கண்ணோட்டத்துடன் படிக்கக் கோருகின்றோம்.

தமிழரங்கம்

‘மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி!’ ஏன்று ஆரம்பித்த இனியொரு இணையம் தற்போது டான் தொலைக்காட்சி ஊடக உரிமையாளரும் வர்த்தகருமான எஸ் எஸ் குகநாதன் கைது செய்யப்பட்டாரா? அல்லது கடத்தப்பட்டாரா?: என்ற விவாதத்திற்கான வெளியாகி நிற்கின்றது. தான் கைது செய்யப்பட்டதாகவும் சொல்ல முடியாது, கடத்தப்பட்டதாகவும் சொல்லிவிட முடியாது. இது கைது பாதி, கடத்தல் பாதி இரண்டும் சேர்ந்து ‘சட்டப்படி கடத்தப்பட்டேன்’ என்று தெரிவிக்கிறார். மேற்படி கைதை அல்லது கடத்தலை முன்னின்று மேற்கொண்ட அருள் சகோதரர்கள் (அருள்செழியன் - அருள்எழிலன்) இது முற்றிலும் சட்டப்படி மேற்கொண்ட நடவடிக்கை என்றும் எஸ் எஸ் குகநாதன் தங்களால் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு பொலிஸாரினால் சட்டப்படி கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

மாபெரும் தோழர் ஸ்டாலின் அவர்களை மறுதலித்து சவக்கிடங்கில் இருந்த டிரட்ஸ்கியவாதிகளுக்கு குருசேவ் உயிரூட்டினார். அன்று குருசேவ் கும்பல்களும் டிராட்ஸ்கியவாதிகளும் ஸ்டாலின் மீது எவ்வளவுதான் அவதூறுகளை அள்ளி வீசியபோதும் உலகெங்குமுள்ள உண்மையான மார்க்சிய-லெனினியவாதிகளின் மனங்களில் இருந்து தோழர் ஸ்டாலின் அவர்களை அகற்ற முடியவில்லை.

மக்கள்திரள் பங்கேற்பை மறுக்கும் எந்தவொரு போராட்டமும் ஒழிக்கப்பட்டுவிடும் என்பதற்கு அண்மைய எடுத்துக்காட்டுகள் கண்ணெதிரே இருக்கின்றன. ஒன்று ஈழம், மற்றொன்று லால்கர்.

மார்க்ஸ் சுட்டிக்காட்டியவாறு அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கும் கருவியாகும். அரசின் பிரதான பணி சுரண்டலைப் பாதுகாப்பதும் அடக்கப்பட்ட வர்க்கங்கள் சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக எழுவதைத் தடுப்பதும் ஆகும்.

தொலைந்து போகும் அடையாளங்களை
தூக்கிநிறுத்துவதற்கு
புலிப்பிரமுகர்கட்கும் புலிஎதிர்ப்பு பிரமுகர்கட்கும்
மகிந்த வள்ளலானார்
இரும்பும் கரும்பாய் இனிக்குமடா இனி….

செயலிறங்கத் துடிக்கும்
புலத்து இளையோரை பொறிக்குள் வீழ்த்திட
தூதுவராலயத்து தூதுவர்கள்
அபிவிருத்திக் குச்சிகளோடு
ஊரோடு உறவாட வருகிறார்கள்

சொற்களை வீணாக்காத, தட்டச்சுச் செய்யப்பட்டு உறையில் இடப்பட்ட அக்கடிதம் என் வீட்டின் முன் கதவுக்குக் கீழேயுள்ள சிறுசந்து வழியே வீட்டினுள் தள்ளப்பட்டிருந்தது. இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர்களுடனான என் சந்திப்பு அக்கடிதத்தில் உறுதிசெய்யப்பட்டிருந்தது. இதற்காக நான் பல மாதங்கள் பொறுமையாகக் காத்திருந்தேன். எங்கள் சந்திப்புக்கென இரண்டு நாட்களில் நான்கு நேரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. அந்நான்கில் ஏதாவதொன்றில் சத்தீசுகட் மாநிலம் தாந்தெவாடா நகரில் உள்ள தாந்தேசுவரி அம்மன் கோவிலில் நான் இருக்கவேண்டும்.

சுவாமி.அக்னிவேஷ் கடந்த மே,2010லிருந்து இந்திய அரசிற்கும், மாவோயிசுட்டுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி வருபவர்.இது வரை இரண்டு தரப்புகளும் இரண்டு கடிதங்களை இவர் மூலம் அனுப்பி உள்ளனர். சூன் 26 அன்று இவர் அரசு தரப்பிலிருந்து வந்த மூன்றாவது கடிதத்தை மாவோயிசுட்டுகளின் தலைமைக்குழுவில் உள்ள சேருகுரி இராஜ்குமார் என்ற ஆசாத்திடம் கொடுத்து விட்டு, அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார். அக்னிவேஷ் கூறுகையில் “நான் அவர்களிடம் (மாவோயிசுட்டுகளிடம்) இருந்து அமைதி பேச்சு வார்த்தை துவங்குவதற்கான தேதியை எதிர்பார்த்து காத்திருந்தேன்”. ஆனால் அவருக்கு வந்த செய்தியோ வேறு. மாவோயிசுட்டு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்திவரும் ஆசாத் ஆந்திராவின் காட்டுப் பகுதியில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதே அந்த செய்தி.

“எந்த மண்ணின் விடுதலைக்காக, எந்த மக்களின் சுதந்திரத்திற்காக இங்கு போராடத்துடங்கினோமோ, அந்த மக்களிற்கு ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது. அவர்களது அரசியல் உரிமைகள் கொச்சைப்படுத்தப்பட்டு நசுக்கப்படுகின்றன. கடந்தகால அடிமைத் தளையிலிருந்து மீளத் துடித்த எம் மக்களது வாய்களிலும் கரங்களிலும் பெரிய விலங்குகள் போடப்படுகின்றன. இது தவறு. இது நியாயமல்ல. இது நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கின்றோம் நாங்கள்.”

***

முன்னேறுங்கள்
போர் முனையில் !
மூளையை சலவை செய்து
முகங்களில் மூர்க்கத்தோடு
விழிகளை மேலே தூக்கி
கால்களில் வலிமையோடு
போர் முனையில்
முன்னேறுங்கள் !

நெருப்புக் கொள்ளியுடன்
என் அப்பன் சொல்கிறான்
”ஆமி சுடுகிறான்
அடுப்புச் சுடுவதையிட்டு
அலட்டிக் கொள்ளாதே”
எதிர்த்துப் போரிடுவதைத் தவிர
என் தாய்க்கு
வேறு வழியில்லை!

1992களில் இங்கிலாந்தில் இயங்கிய தீப்பொறி குழுவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது.  அவர்களுடன் சிலகாலம் வேலை செய்த அனுபவங்களை இங்கு பகிர்வதன் மூலம், இன்று அதன் தொடர்ச்சியென கூறி இயங்கும் மே-18 இயக்கத்தினரிடம் கடந்த காலத்தின் செயல்பாடுகளிற்கான பதில்களை எதிர்பார்க்கின்றேன். இதற்கான பதில்கள் கிடைக்குமா?

ஊர் கூடி தேர் இழுக்க முயன்றோம்.....
அவர் எவரோ தலமைச் சாரதி என்றோம்...
தலைவன் என்றோம், தெசியத் தலைவன் என்றோம்...
அப்பாலும் போய் தொழுதோம்... சூரியத்தேவன் என்றோம்...
துதி பாடினோம்... அன்று!

 தோழர் மார்க் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் லண்டன் வந்தபோது  என்னை சந்தித்து தோழர் சிவம் அவர்கள் கனடாவில் இருப்பதையும் அவர் தொடர்ந்தும் புரட்சிகரப் பணிகளை முன்னெடுத்து வருவதையும் தெரிவித்தபோது நான் உண்மையிலே மிகவும் மகிழ்வு கொண்டேன்.

இலங்கையின் தமிழ்த் தேசியம் எப்போதும் மக்கள் விடுதலை நாட்டம் அற்றதாகவே இருந்தது-மதுரைக் கருத்தரங்கில் ந. இரவீந்திரன்

நோர்வேயில் நடைபெறும் தமிழ் அரசியலைப் பார்த்தால் மேலே சொன்ன நகைச்சுவை வசனம் தான் நினைவுக்கு வருகிறது


தாங்கள் ஜனநாயகத்திற்கு வந்துவிட்டதாக தம்பட்டம் அடித்த மக்களவைத் தேர்தலில் 20% இற்கு குறைந்த மக்களே வாக்களித்தார்கள். 

"ஒரு தொழிலாளியை ஊதியம் கேட்டதற்காக அடித்தேன் என்பது என் அடிப்படை அரசியல் அறத்தையே புரட்டிப்போடும் குற்றச்சாட்டு. ஒரு கம்யூனிஸ்டாக எனக்குப் பெருத்த அவமானத்தைத் தரக்கூடிய குற்றச்சாட்டு அது.”

எண்ணிம நூலகம், ஆவணக்காப்பகம், மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், ஆய்வுச் செயற்பாடு மற்றும் கல்வி மேம்பாடு விழிப்புணர்வுச் செயற்றிட்டம். (டபிக்ரே செயற்றிட்டம்)

 

Digital Library, Archive, Preserve Heritage Knowledge, Information Literacy, Knowledge Share, Research Activity AND Education Devolopment Awarenes Programme. (DAPIKREA Programme)

ஜென்னியின் வாழ்க்கைக் குறிப்பு


ஜென்னி 1814-ம் வருடம் மாசிமாதம் 12-ந் திததி பிறந்தார். ஜென்னியின் பெற்றோரும், கார்ல் மார்க்சின் பெற்றோரும் பக்கத்துப் பக்கத்து வீட்டிலேயே வசித்து வந்தனர். இதன் விளைவு இருவரும் காதலர் ஆகினர்.