Language Selection

விருந்தினர்

எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை

இலங்கையில் வாழும் 'தமிழர்கள்' எல்லோரும் தமிழர்கள் அல்லர். இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் பிறந்து வளர்ந்த சிலர் தமிழரல்லாதோராக மாறியிருந்தனர். பெரும்பாலும் தமிழைப் பேசவோ எழுதவோ முடியாதவர்கள் அவர்கள். ஆனால், சிங்கள மொழியை அந்த மொழியின் அன்றாடப் பேச்சு வழக்கில் சரளமாகப் பேசக்கூடியவர்கள். அவர்கள் சிங்களம் பேசினால் அவர்களைத் தமிழர் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இனக்கலவரங்களின்போது உயிர்பிழைக்க இத்தகைய ஆற்றல் ஒரு முக்கியமான தேவையாகும். மொழி, அதனுடைய தொனி, பேச்சு வழக்கு போன்ற இயல்புகள் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கக்கூடியதாக மாற்றம் பெற்றுவிடுகிற கணங்கள் அவை.

கொள்கைக்காக தன் ஆட்சியை, தன் கட்சியைக் கூட தியாகம் செய்யத் தயாராகிவிட்டார் மன்மோகன்சிங். தன் கொள்கையோடு ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்ள உதவுமானால் திரை மறைவு பேர அரசியலுக்கும் அவர் தயார்.இதுதான் மிடில் க்ளாஸின் மிஸ்டர் க்ளீன் மன்மோகன்சிங்கின் அசல் முகம்.

அப்படி என்ன கொள்கை அது ? புஷ்ஷுக்கு அளித்த வாக்குறுதியை அவர் காப்பாற்றியாக வேண்டுமாம். இதில் அவருக்கு இப்போது பிரிட்டனின் முன்னாள் பிரதமர் பிளேய்ருடன் போட்டி. இருவரில் யார் புஷ்ஷுக்கு அதிக விஸ்வாசம் காட்டியவர்கள் என்று பட்டி மன்றமே நடத்தலாம். பிளேய்ருக்கும் சரி, மன்மோகனுக்கும் சரி, தங்கள் தேச மக்களை விட புஷ்தான் முக்கியமானவர்.

 ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய, பெட்ரோல் விலை பற்றிய விஷயங்களை இங்கே பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அப்படி தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியமும் ஆகிவருகிற நேரமிது. ஏனெனில், ஆசியாவிலேயே நாம் தான் மிக அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறோம். உலக அளவில் இதில் நாம் இரண்டாம் இடம்!

 
இந்த எரிபொருள் விலை உயர்வு எங்கெல்லாம் நடுத்தர மக்களை பாதிக்கும்:
1. காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவையான பொருட்களில் விலையும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது. ஏனெனில், இந்த சரக்குகளின் போக்குவரத்துக்கு எரிபொருள் இன்றியமைதாத தேவையாகிவிட்டது.

கற்றது தமிழ் - தமிழ் எம்.ஏ.,எனும் தமிழ்ச்சினிமாவனது பிரபாகர் எனும் பெயர் கொண்ட, 26 வருடங்கள் வாழ்ந்து தானாகவே இறந்து போகிற ஒரு தமிழ் முதுகலைப்பட்டதாரி இளைஞன் எதிர் கொள்ளும் பிரச்சனைகளையும், அடையும் பாதிப்புகளையும், பற்றியதாகும். அதாவது பிரபாகர், தன் கதையைத் தானே சொல்லும் சுயசரிதைதான் ‘கற்றது தமிழ்’

 

பிரபாகர் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கிறான். அதனால், பாதிப்படைகிறான். அவ்வாறு பாதிப்படையும் போது சில காரியங்களைச் செய்கிறான். அவைகளில் பிறமனிதர்களின் உயிரைப் பறிப்பதும் ஒன்று. தான் செய்கிற காரியங்கள் குறித்து வருத்தமும் கவலையும் கொண்டாலும், அவைகளைப் ‘பாவம்’ என நினைத்தாலும். அச்செயல்களைக் குற்றம் என்று அவன் அக்கறை கொள்வதில்லை. இவ்வாறு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளினால் பாதிப்புகளைச் சந்திக்கும் பிரபாகருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இன்னொரு காரியமும் செய்ய வேண்டியதாகிறது. அது அவனது உயிரை விடுவதுதான். அதையும் அவன் செய்கிறான்.

 துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஓர் நாள்.


இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந்தார் அந்த மனிதர். வகை,வகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு ரெண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன்.

அடித்துத் துவைத்து, பிய்ந்து போன வெளக்குமாறு போல ஆகிவிட்ட நம்ம போலி ஜனநாயகத்தை, சற்றே துலக்கி, அதற்கு 'ஜனநாயகம்' என்ற பட்டுக் குஞ்சலங்களை அணிவித்து மக்களை ஏமாற்றி வளையவருகிறது, காங்கிரஸ் முதல் நம்ம 'காமரேடு'கம்பெனிவரை.

 


அப்பேர்ப்பட்ட 'ஜனநாயக'த்த போற்றிப் பாதுகாக்கிற நிறுவனங்களில் தலையாய நிறுவனம்தான் நம்ம நீதித்துறை. இது யாருக்கான ஜனநாயகம் என்பதும், இந்த உச்சநீதிமன்றத்தின் தலைமையில் உள்ள நீதிநிறுவனம் யாருடைய பிரதிநிதி என்பதையும் நாம் புதிதாக எதுவும் விளக்கிச் சொல்

ஞானேந்திரா புரட்சி செய்வான் என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு தூய‌ உண்மை CPM கட்சி புரட்சி செய்யும் என்பதும்.இருந்தும் ஏன் இன்னும் மக்கள் நலனையும்,புரட்சியையும் நேசிக்கும் உண்மையான தோழர்கள் அதிலிருந்து வெளியேறாமலிருக்கிறார்கள்? ஒருவேளை CPM என்றைக்காவது புரட்சி செய்யும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்களா? இருக்கலாம்.ஆனால் வெளியிலிருக்கிற யாரும் அப்படி நம்பவில்லை. குறிப்பாக CPM மோடு சாக்கடையில் புரண்டெளும் எந்த ஒட்டுப்பொறுக்கியும் அப்படி நம்பவே இல்லை.ஒருவன் தன்னைப்பற்றி தானே கொண்டுள்ள அகரீதியான மதிப்பீடுகள் சரியானவை அல்ல மாறாக புற நிலை மதிப்பீடுகள் தான் துல்லியமானவை. தான் புரட்சி செய்யப்போவதாக எந்த கட்சி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்,ஆனால் அந்த கட்சி குறித்து எதிரி என்ன மதிப்பீடு வைத்துள்ளான் என்பது தான் முக்கியமானது. அந்த வகையில் எந்த எதிரிகளாலும் அவனுடைய ஆபத்தான எதிரியாக கருதப்படாத‌,அவ்வளவு ஏன் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாத கட்சியாகத்தான் CPM உள்ளது.அதாவது எதிரிகளுடைய மதிப்பீட்டின் படி CPM ஒரு கோமாளிக் கட்சி மட்டுமே. இவையெல்லாம் அந்த கட்சியிலிருக்கும் உண்மையான‌ தோழர்களுக்கு தெரியாதா? உணர்வுப்பூர்வமான தோழர்கள் ஏன் இன்னும் அதில் இருக்கிறார்கள்?

-சில குறிப்புகள்:சிந்திப்பதற்கு.


அன்பு வாசகர்களே,

தேசம் இணையவிதழில் திரு.சபா நாவலன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

 

"பின்னூட்டம் மக்கள் ஊடகவியலின் புதியபரிமாணம்."என்று எழுதத்தொடங்கிய அந்தக்கட்டுரையானது இணைய ஊடகத்தளத்தில் "தேசம்நெற்"எனும் வலைஞ்சிகையைத் தூக்கி நிறுத்தும் முயற்சியாகவே நாவலனால் மேற்கொள்ளப்பட்டது.இன்றைய எதிர்க்கருத்தாடலுக்கும்,மாற்றுக்கருத்துக்குமான திறந்தவெளி விவாதத்தளத்தை மிக உயரிய நோக்கில் தேசம் செய்துவருவதாக அவரது கட்டுரை பறையடித்துக்கூறுகிறது.இத்தகைய பாதையில் தேசம்நெற்றே முதன்மையாகப் பின்னூட்ட முறைமையையும்,வாசகர்களின் கருத்தை உடனடியாக வெளிப்படுத்தும் உத்தியை மக்களின் நலனினது அடியொற்றி மாற்றுக் கருத்தாடலுக்கு வழி திறந்ததாகவும் கூறுகின்ற அபாண்டமான மிகைப்படுத்தலை, கேள்விக்குள்ளாக்கின்றார் சுவிஸ் மனிதம் ரவி.

Anonymous said...

இரயாகரனுக்கு ஆதரவளிக்கும் நீ விடுதலைப்புலிகளுக்கு எதிராளி என்பதை நிருபித்துவிட்டாய். நீயும் இரயாகரனைப் போல் தேசத்துரோகிதான்!

27 May, 2008 9:23 AM

 

தமிழச்சி said...

ஷட் அப் நாயே!
எங்களை துரோகி என்று சொல்லும் உரிமையை உனக்கு யாரடா நாயே கொடுத்தது?

27 May, 2008 9:32 AM

தேசியம் என்னும் சமஸ்கிருத மொழிச் சொல்லக்கு தமிழில் மிகச் சரியான விளக்கம் இருக்கிறதா என்னும் என் கேள்விக்கு நன்னில ஞானமுள்ள நான்குபேர் இல்லை என்கின்றனர். சரியானதும் நூறு வீதம் உண்மையானது என்றும், தேசியம் என்னும் சொல்லுக்கு விளக்கம் இருப்பின் அது பம்மாத்து என்றும் சொல்கின்றனர். ஓரளவுக்கு விளக்கம் சொல்வதாயின் இறைமையுள்ள நாட்டினது, அல்லது தேசத்தினது கலை, பண்பாடு, சட்டம், சமூகவியல் கோட்பாடுகள்.. மொழி, கலாச்சாரரம் போன்றவற்றை கட்டமைத்தலும், இவற்றிற்கு ஒப்புரவ ஒழுகுதலும், வாழ்தலும் எனலாம்.

தேசியம், தேசம் என்னும் கதையாடலும் கட்டமைப்பும் கூட ஐரோப்பிய வழித்தோன்றல்கள்தான். தேசக்கட்டமைப்பென்பதே கிழைத்தேசங்களில் மிக அண்மைக்கால வரவுதான். திணை சார்ந்த அரசுகளை கொண்ட தமிழர்களிடம் ஒழுங்கும் நேர்த்தியுமாக கட்டமைக்கப்பட்ட திணையிசம் கூட இருந்ததில்லை என்பதை அறிய முடிகிறது, தமிழர்களின் பண்பாட்டசைவுகள் என்னும் ஆய்வு நூலினூடாக.

“நான் சந்தைக்குச் செல்லும்போது, பூச்சி துளைத்த கத்தரிக்காயைத்தான் வாங்குவேன். பூச்சி துளைத்துள்ளதால் அக்கத்தரியை நஞ்சு மருந்துகள் தெளிக்கப்படாதது என்றும், மரபணு மாற்றம் ஏற்படாதது என்றும் அறிய முடிகிறது. எனக்கு தேவையற்ற புழு நுழைந்த பகுதியை வெட்டி வீசிவிட முடியும். நச்சை மரபிலோ முதுகிலோ சுமந்திருந்தால் அதை நீக்க முடியாதவல்லவா?'' என்று சமீபத்தில் ஒரு உழவியல் பேராசியர் பேசியிருக்கிறார் (நன்றி: விழிப்புணர்வு, தினமணி கதிர்). சிந்திக்க வைக்கும் உண்மை!

 

வேளாண்மைக்குப் பெருத்த சவாலாக, விளைபொருளின் சந்ததியை சந்தைக்காகச் சிதைக்கும் மரபணு மாற்றப் பயிர்களைப் பற்றி தெந்து கொள்ள, அதன் அறிவியலை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

காய்கறி கடைகளுக்குப் போனால், நாட்டுத் தக்காளி அளவுக்கு பெங்களூர் தக்காளிகளும் காட்சியளிப்பதைப் பார்த்திருப்பீர்கள். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று, ஒரு நாளாவது உங்கள் மனதிற்குள் கேள்வி எழுந்திருக்கும். அதற்கான பதில் இதோ....


நாட்டுத் தக்காளியின் தோல் மென்மையானது. பழுத்த ஒரு சில நாட்களிலேயே அழுகிப் போய்விடும்.

பங்குச்சந்தையைப் பற்றி அதன் தகிடு தத்தங்களை எளிய முறையில் பதிவில் விளக்கி எழுத வேண்டுமென்று, நிறைய நாள் ஆசைப்பட்டிருக்கிறேன்.

பாமரன் சொன்ன இந்த குட்டிக்கதை பங்குச்சந்தையை அதன் தன்மையை சிறிய அறிமுகமாக தருகிறது. உங்களோடு பகிர்ந்து கொள்ள பதிவிடுகிறேன். பாமரனுக்கு என் நன்றி. இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கும் நன்றி.

2000 புள்ளிகள் சரிந்தன... சதுரங்கள் சிரித்தன...என பங்குச் சந்தையைப் பற்றி வரும் தகவல்கள் எதுவும் என் மர மண்டைக்கு எட்டியதேயில்லை. வாரச் சந்தையையே புரிந்து கொள்ளாத எனக்கு பங்குச் சந்தையைப் பற்றி எப்படிப் புரியப் போகிறது என்றிருந்த வேளையில்... அது ஒன்றும் சிரமமில்லை என்று ஒரு கதை.

கட்டுகின்ற பாலங்கள் இடிந்து விழும்போதும் கட்டிடத்தூண்களை எழுப்புவதற்கு அடித்தளம் அமைக்கும்போதும் வெள்ளைக்காரர்களுக்குக் கங்காணிகள் ஒரு "மந்திரம்" சொல்லிக்கொடுத்தார்கள். கொடிய வெள்ளைக்காரர்கள் முதலில் அந்த மந்திரம் மூட நம்பிக்கை என்று சொன்னார்கள். பின்னர் தமது நோக்கங்கள் நிறைவேற எதையும் செய்வதற்கு தயாராகினார்கள்.


மலேஷியத்தமிழர்களை பலவந்தமாக ஜப்பானியர்கள் இழுத்துச்சென்று ரயில் பாதை அமைத்தார்கள். மிகக்கொடூரங்களைச் சந்தித்த அந்த மக்கள், மலைக்காடுகளில் அகால மரணங்களால், ஆயிரமாயிரம் பேர் புதையுண்டுபோன வரலாறுகள், இன்று மெல்ல மெல்ல மனிதாபிமானிகளால் வெளிவரத்தொடங்குகின்றன.

ராஜேஸ் அக்கா உங்களின் கருத்துப்படி அங்கு ஒன்றும் நடைபெறவில்லை எனக் கூற வருகிறீர்கள் அப்படித்தானே? நாங்கள் பல பெண்கள் அமைப்பினருடன் தொடர்பு கொண்ட போது இப்படியான பல சம்பவங்கள் அங்கு நடைபெறுவதாகவும் அதற்கு பொலிசும், இராணுவமும் குறிப்பாக அதிரடிப்படையினரும் ஒத்துழைப்பதாகவும் கூறுகிறார்கள்.

இரு இளவயது பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுதிய குற்றச் செயலையோ, மறுநாள் மீண்டும் வந்து மூத்த பிள்ளையை வெள்ளைவானில் கடத்திச் சென்ற கடத்தல் சம்பவத்தையோ பதிவுசெய்ய மறுத்தது பொலிஸ். அதுசம்பந்தமான எந்த நடவடிக்கைக்கும் தயாரற்று வாளாவிருந்தது பொலிஸ். கல்முனையில் 10,11 மே 2008 இல் நடந்தேறிய இந்தச் சம்பவத்தை ஆசிய மனித உரிமைகள் குழு (AHRC) பதிவுசெய்திருக்கிறது.

 

"தமிழீழமே தீர்வு" என்று முடிந்த முடிவாகப் பேசி மறுத்த எல்லாருக்கும் துரோகிப்பட்டஞ் சூட்டியவர்களிற் பெரும்பாலானோர் இன்று தமிழ் மக்களின் உரிமையை மறுக்கிறவர்களது எடுபிடிகளாகிவிட்டனர். இது ஏன் நடந்தது என்றுநாம் கவனமாக ஆராயவேண்டும். எங்களுக்கு எல்லாந்தெரியும் என்கிற விதமாகவும் யாரிடம்இருந்தும், உலக வரலாற்றில் இருந்தும் கூட எதையுமே கற்க அவசியமில்லை என்று திமிர்த்தனமாகவும் பேசியும் எழுதியும் வந்த ஒரு மரபு இன்னமும் தொடருகிறது. "

டாடாவுக்காகவும், சலீம் குருப் என்ற பன்னாட்டு கம்பெனிக்காகவும் நந்திகிராம், சிங்கூரில் ஆளும் போலிக் கம்யூனிஸ்ட்களின் குண்டர் படை '30க்கும் மேற்பட்ட மக்களை கொன்றும், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும்' தனது பாசிசத்தை வெளிப்படுத்தியது.

 
ஏழை எளிய நாடுகள் முழுவதும் இன்று விலைவாசி உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காக அந்நாடுகளில் உணவு உற்பத்தி திருப்பிவிடப்பட்டது, ஊக வணிகம் என்ற பெயரில் உணவில் சூதாடிகளை நுழைத்தது என பல காரணங்கள்.

Image உலக அளவில் உணவுப் பொருட்களின் விலைவாசி கூடியதற்கு இந்தியர்களும் சீனர்களும் அதிகமாய் சாப்பிடுவதால்தான் என்று அமெரிக்க அதிபர் புஷ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியத் தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.உண்மையிலேயே? என்ற பொருளாதார புள்ளி விவர ஆய்வில் பல்வேறு நிஜங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.