Language Selection

விருந்தினர்

காலில் மிதிக்கும்

அந்த‌ இர‌ண்டு செருப்புக‌ளுக்கு

புனித‌ம் முழைத்துவிட்ட‌து.

பாதிப்புனிதம்..

இல‌க்கை அடைய‌வில்லையே

ஆனாலும் அது

செருப்பின் குற்ற‌ம‌ல்ல‌

செருப்பும்

வெளிவந்து 160 ஆண்டுகள் கழிந்துவிட்டன. என்றாலும் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. எதிர்க்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. முதலில் வெளிவந்தது 1848ம் ஆண்டில். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த அறிக்கை பெர்லினில் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கு பிறகு பல்வேறு மொழிகளில் பல்வேறு பதிப்புகள் வந்துவிட்டன. தேவை இன்னமும் குறைந்தபாடில்லை.

கேரள மாநிலம் காசர்கோடு, இன்னும் அந்த சாபத்தில் இருந்து மீளவில்லை. இன்று வரையிலும் காலோ, கையோ, இதயமோ, மூளையோ, உயிரோ..., ஏதோ ஒன்று இல்லாமல் தான் அங்கு குழந்தைகள் பிறக்கின்றன. சில பெரியவர்கள் திடீரென ரத்தம் கக்கி சாகின்றனர். புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, மூளை வளர்ச்சியின்மை.. என ஏதேனும் ஒரு நோய்கள் அண்டாத மனிதர்களே அங்கு இல்லை.

காற்று வெளியெங்கும் அவரது மூச்சு கலந்து விட்டிருந்தது. எழுதி எழுதி மேற்செல்லும் விதியின் கைகளாகி விட்டிருந்தார் மார்க்ஸ். அவர் இறக்கவில்லை.  காலமாகி இருக்கிறார்.

''முடிந்துவிட்டது எல்லாம். எந்த பொன்னுலகமும் இங்கு வரவில்லை. ஐரோப்பா முழுவதும் எழுந்த மக்கள் கிளர்ச்சிகள் கணநேரத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டன. ஆயுதங்கள் வீழ்த்தப்பட்டு விட்டன. மலைப்பாம்பு போல பிசாசுமரம் எல்லாவற்றையும் விழுங்கி நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்தாயா? மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. நம்பிக்கை இருக்கிறது?"

"உன்னிடம் ஆழமான அறிவுச் செல்வம் இருக்கிறது. கலைகளின் நுட்பம் உன்னைத் தழுவிக்கொண்டு இருக்கிறது. விடாப்பிடியாக முன்னேறி விடும் வைராக்கியம் இருக்கிறது. உனது தந்தை, நீ ஒரு கௌரவமான கனவானாக மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். உனது தாய், நீ நிறைய சம்பாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.

அது ஒன்றும் தானாக இங்கு வளரவில்லை. எல்லாம் இந்த மனிதர்கள் வினைகள்தான். இன்று பார். பெரும் இராட்சசனாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஸ்பார்ட்டகஸைப் போல எத்தனையோ வீரர்கள் மின்னலாய் வாளேந்தி இதை சாய்க்க வரத்தான் செய்தார்கள்.

பிரச்சினை உருவான விதம்


1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் பாதித்திருக்கும் இந்தப் பொருளாதாரத் தேக்கம் யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் ஜவுளித் தொழிலில் பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. உலக போலிஸான அமெரிக்காவிலோ நிலைமை படுமோசம். லேஹ்மான் பிரதர்ஸில் ஆரம்பித்த திவால் புயல் , இப்போது அமெரிக்க பத்திரிகையுலகையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.

நியாயமாகப் பார்த்தால் பிபிசி ஒளிபரப்பியிருக்கவேண்டும். நாங்கள் எந்த விதச் சார்பு நிலையையும் எடுக்கமாட்டோம். நடுநிலையுடன் செய்திகளை அளிப்போம் என்றெல்லாம் வாய் கொள்ளாமல் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அந்நிறுவனம் அப்படி ஒரு சம்பவமே நடக்காதததுபோல் அமைதியாக இருந்துவிட்டது.

"அவரது பெயர் காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும்" லண்டன் ஹைகேட்டில்,1883, மார்ச் 17ம் தேதி காரல் மார்க்ஸின் சிதையருகே நின்று ஏங்கெல்ஸ் ஆற்றிய உரையின் கடைசி வாக்கியம் இது. அப்போது அங்கிருந்தவர்கள் பனிரெண்டு மனிதர்கள். அந்த உண்மை நூற்றுப் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான குரல்களாக திரும்பிவந்து அதே லண்டனில் எதிரொலித்திருக்கிறது.

தீவிரவாதம் என்ற தீம்புயல் மதங்களில் மையம் கொண்டிருப்பது ஒப்புக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை அனைவருமே புரிந்து கொள்வது நல்லது. மதத்தை மையப்படுத்தி தீவினையாற்றும் தீவிரவாதிகள் எவரும் சாத்தானின் பிள்ளைகளாக மேலுலகத்தில் இருந்து குதித்து வந்துவிடுவதில்லை. இங்கே பூமியில் தாய்களின் மார்பில் பாலறுந்தியவர்களே.

பருவநிலை மாறுதல் (Climate Change) குறித்து பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றுவரும் நிலையில் பருவநிலை மாறுதலையும் தாக்குப்பிடிக்கும் மரபணுவின் காப்புரிமையை பதிவு முயற்சியும் நடைபெறுகிறது.

பருவநிலை மாறுதல் (Climate Change)

குறித்து பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றுவரும் நிலையில் பருவநிலை மாறுதலையும் தாக்குப்பிடிக்கும் மரபணுவின் காப்புரிமையை பதிவு முயற்சியும் நடைபெறுகிறது.

பருவநிலை மாறுதல் காரணமாக வழக்கத்திற்கு மாறான, அசாதாரண மழை, வெள்ளம், வறட்சி போன்றவை ஏற்படலாம் என்று அறிவியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். பருவநிலையில் மேலும் மாறுதல் ஏற்படாமல் தடுப்பது குறித்து ஏறக்குறைய அனைத்து அரசுகளும், மற்ற நிறுவனங்களும் ஆலோசனை செய்து வருகின்றன.

உணவே மருந்து மருந்தே உணவு தமிழர்களின் பாரம்பரீய உணவுக் கலாசரத்தை மூலைகைகளோடு பின்னி வகுத்திருந்தார்கள். நம் முன்னோர்கள். ஆனால் உணவும் மருந்தும் இப்போது அமெரிக்க மான்சாண்டோவிடம் பறிபோகும் நிலையை உருவாக்கியிருக்கிறது மத்திய அரசும் மாநில அரசும்.

கேளாதே கண்டு கொள்ளாதே,பேசவும் நினையாதே

 

தமிழ் மக்களின் விடுதலைக்கு மக்கள் போராட்டமும் மக்கள் அரசியலும் பற்றிய பூரண நம்பிக்கை முக்கியமானது

தலித்துக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட மிக மோசமான தக்குதல் ஒன்றை ஊடகங்களும் அரசதிகார ஆதிக்க சாதி சக்திகளும் இணைந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த மோதல் மத்யமரின் மனதில் தலித் மாணவர்களுக்கு எதிரான மிக மோசமான பிம்பத்தைக் கட்டமைத்து விட்டது.

“காலேஜுல படிக்கறவனுங்க மாதிரியா நடந்துக்கிறானுங்க, ரவுடிமாதிரியில்ல நடந்துக்கிறானுங்க”,பாவம் அந்த பையன் கீழ விழுந்துட்டான்,ஒரு மனுசாள அத்தன பேரு அடிச்சாங்களே மிருகம் மாதிரியில்ல யஇருக்கு” இதெல்லாம்   நேற்று  சென்னை சட்டக்கல்லூரியில்  நடந்த அடிதடி குறித்து வெளியில் மக்கள் பேசிக்கொண்டு ஏன் எதற்காக இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது  என்பதை அறியவோதீர்வை சொல்லவோ அவசியமின்றி திரிகிறர்கள்.

யாழ். விதவைகள்: கவனிக்கப்படாமலே உருவாகிவரும் மற்றுமொரு சமூகம்

மதியம் தாண்டியும் அந்த வரிசை அசையாது நின்ற இடத்திலேயே நிற்கிறது. பெரும்பாலான பெண்களின் முகங்களில் இனி ஏதுமில்லையென்ற வெறுமை மட்டுமே பரவிக்கிடக்கிறது.