Sat05252013

Last update01:16:00 PM

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

  • PDF

ஈழ விடுதலைப் போராட்டம்: "துரோகிகளும் இனவிரோதிகளும்"

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில் முதன்முதலில் "துரோகி" என்ற சொல்லை அறிமுகப்படுத்தி வைத்தவர்கள், முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த "அகிம்சை" தமிழ் பாராளுமன்றத் தலைமைகளே ஆவர். "சமூகவிரோதி" என்ற சொல்லை தமிழ் மக்களின் அரசியலில் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் ஈழவிடுதலைப் போராட்ட ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்களாவர். இலங்கை அரசியலில் முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த சிங்கள பாராளுமன்ற தலைமைகள் தமது குறுகிய பாராளுமன்ற நலன்களுக்காக சிங்கள பேரினவாதத்தை வளர்த்து மக்களின் வாக்குகளை பெறுவதில் வெற்றி கண்டிருந்தனர். ஆனால் பாராளுமன்ற ஆசனங்களைக் குறிவைத்து அரசியலை மேற்கொண்ட முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த தமிழ்த் தலைமைகளோ அவர்களின் ஆரம்பகாலங்களில் தமிழ் குறுந்தேசியவாதத்தை வளர்ப்பதில் வெற்றி பெற்றிருந்தபோதும் கூட, பெரும்பான்மையான தமிழ்மக்களின் ஆதரவையோ பெரும்பான்மை தமிழ் மக்களின் வாக்குகளையோ அவ்வளவு இலகுவாகப் பெற்று பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற முடிந்திருக்கவில்லை.

 

 

 

சிங்கள பெரும்பான்மை இனக்கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட தமிழர்கள் பலர் வடக்கு கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில் வெற்றியீட்டிக் கொண்டிருந்தனர். இவர்கள் குறுந்தேசியவாத தமிழ்த் தலைமைகளுக்கு பெரும் சவாலாக விளங்கினர். இதனால் தம்மை "ஜனநாயக" வாதிகளாகவும் "அகிம்சா" வாதிகளாவும் காட்டிக் கொண்ட தமிழ்த் தலைமை தமக்கெதிரான அரசியல் கருத்துக்கொண்டோரை தமது கருத்துக்கள் மூலம் ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது எனக் கண்டதால், தமக்கெதிரான கருத்துடையோரையும், தமக்கெதிரான அரசியல் பார்வை கொண்டோரையும் "துரோகிகள்" என்றும் தமிழ்மக்களின் இனவிரோதிகள் என்றும் பிரச்சார மேடைகளில் பேசி "துரோகி" அரசியலை தமிழ்மக்கள் மத்தியில் ஆரம்பித்து வைத்தனர்.

இந்தத் "துரோகி" அரசியல், நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களுடன் கூடிய " பிற்பட்ட" பொருளாதார, சமூக, அரசியல், கலாச்சாரத்தைக் கொண்ட தமிழ்மக்கள் மத்தியில் இலகுவாகப் பற்றிக் கொண்டதில் வியப்பேதும் இல்லை. குறிப்பாக, தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் தேர்தல் பிரச்சாரமேடைகள் குறுந்தேசியவெறியை வளர்ப்பதற்கான பாசறைகளாக மாறியிருந்தன. தமிழ் இனம் பற்றிய "ஆண்ட பரம்பரை" ப் பெருமைப் பேச்சுக்களும், சிங்கள இனம் பற்றிய ("சிங்களவரின் தோலில் செருப்புத் தைத்துப் போடும்", "சிங்களவரின் இரத்தத்தில் நீந்தித் தமிழீழம் காணுவோம்") கீழ்த்தரமான வெறியூட்டும் பேச்சுக்களும் தமிழ் இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றியது மட்டுமல்லாமல் அவர்களை கூட்டணியினர் "துரோகி" என்று சுட்டிக்காட்டியவர்களுக்கெதிராக செயற்படவும் வைத்தது. இதில் இளைஞர்கள் தனிநபர்களாகவும், சிறுகுழுக்களாகவும், செயற்படலாயினர். தமிழ் மக்கள் குறுந்தேசிய வெறியூட்டப்பட்டு மாற்றுக்கருத்துள்ளோரையும் மாற்று அரசியல் சிந்தனையுடையோரையும் " துரோகி" என முத்திரைகுத்தும் "துரோகி" அரசியலில் வளர்க்கப்பட்டனர். தமிழர் விடுதலைக்கூட்டணியினரின் கருத்துக்களல்லாத, கொள்கைகளல்லாத அனைத்துமே தமிழ்மக்களின் நலன்களுக்கு எதிரானவை, துரோகத்தனமானவை என தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கற்பித்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் இந்தக் கற்பித்தல் பெரும்பலனை தமிழ்மக்களுக்கு கொடுக்காமல் விட்டிருந்த போதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு பெரும்பலனைக் கொடுத்திருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் "துரோகி" களாக சித்தரிக்கப்பட்டவர்கள், காண்பிக்கப்பட்டவர்கள், தமிழ் இளைஞர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்தத் "துரோகிகள்" கொலைக் கலாச்சாரம் - "துரோகி" அரசியல் கலாச்சாரம் - யாழ்ப்பாண மேயரும், யாழ்ப்பாணப்பிரதேசத்துக்கான சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான அல்பிரட் தம்பிராஜா துரையப்பாவை 27-07-1975 இல், அன்று "மீசை கூட முளைத்திராத" சிறுவனாகிய வேலுப்பிள்ளை பிரபாகரன் சுட்டுக்கொலை செய்ததிலிருந்து ஆரம்பமாகியது. வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற "மீசை கூட முளைத்திராத" ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றியதில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வெற்றி பெற்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் "துரோகி" யாக சித்தரிக்கப்பட்ட யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொலையால் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் புளகாங்கிதம் அடைந்தனர். தமது "ஜனநாயக" வழியிலான பாராளுமன்ற ஆசன அரசியல் பாதையை "துரோகி" அரசியல் அகலத்திறந்து விடுவதைக் கண்டனர். யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவிடம் காணப்பட்ட மாற்று அரசியல் கருத்து மட்டுமே அவர் "துரோகி" எனச் சித்தரிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு ஒரே காரணமாய் அமைந்திருந்தது. அல்பிரட் துரையப்பா கொலையால் விளைந்த பயன்களை அறுவடை செய்த தமிழர் விடுதலைக் கூட்டணியினர் " துரோகி" அரசியல் தமது எதிர்காலத்துக்கு – தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு அல்ல – அத்தியாவசியமானதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதொன்றும் என உணர்ந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தொடர்ச்சியாக "துரோகிகள்" சுட்டிக்காட்டப்பட்டு அவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர் அல்லது துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்சி அரசியல் அரங்கிலிருந்து வெளியேறினர். ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பொத்துவில் எம்.பி கனகரட்ணம், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வட்டுக்கோட்டை எம்.பி தியாகராசா, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நல்லூர் எம்.பி அருளம்பலத்தின் காரியதரிசி தங்கராசா(கோண்டாவில்), ஜக்கிய தேசியக் கட்சியின் வவுனியா அமைப்பாளர் புலேந்திரன், ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் ராஜசூரியர் ஆகியோர் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் "துரோகி" அரசியலில் பலி கொள்ளப்பட்டனர். சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நல்லூர் எம்.பி அருளம்பலம் கொலைமுயற்சியிலிருந்து தப்பியபின்னர் அரசியல் அரங்கிலிருந்து வெளியேறினார்.

மேயர் அல்பிரட் துரையப்பாவும், கொலை செய்யப்பட்ட ஏனைய பாராளுமன்ற அரசியல்வாதிகளும் துரோகிகளா?

மேயர் அல்பிரட் துரையப்பா

வட்டுக்கோட்டை எம்.பி தியாகராசா

இந்தக் கேள்வி, இன்றைய காலகட்டத்தில் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் தோல்வியைத் தழுவிய பின்னான காலகட்டத்தில் - தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பப்பட வேண்டியதொன்றாகும், விவாதிக்கப்பட வேண்டியதொன்றாகும், விடைகாணப்பட வேண்டியதொன்றாகும். இத்தகையதொரு கேள்வி தமிழ் மக்களிடத்தில் எழுப்பப்படாவிடில், விவாதத்துக்கு உள்ளாக்கப்படாவிடில், இதற்கான விடை காணப்படாவிடில், தமிழ்மக்கள் தமது அரசியலில் கானல் நீரை நோக்கி ஓடுபவர்களாகவே இருப்பர் என்பதில் சிறிதும் ஜயமில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதன் பின்னரான தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் "தமிழீழமே தமிழர்களுக்கான ஒரே தீர்வு" என்ற எழுச்சிப் பிரச்சாரங்களும் தென்றலுடன் கலந்துவந்து எமது காதுகளில் தேனாக இனித்திருந்த காலமது. "உதய சூரியன் கிழக்கில் உதிக்கும், தமிழீழம் நாளை மலரும்" என தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வானதிர முழங்கிய காலமது. தமது கருத்துக்களுக்கு மாற்றான கருத்துள்ளவர்கள், தமது அரசியலுக்கு மாற்றான அரசியல் வழிமுறை கொண்டவர்கள் அனைவரும் "துரோகிகள்" எனவும், தமிழ் சமூகத்திலிருந்து பிடுங்கி எறியப்படவேண்டிய களைகள் எனவும் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாகப் பேசி "துரோகிகள்" பட்டியல் போட்ட காலமது. தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் உணர்ச்சி பொங்கும் " தமிழீழம்" குறித்த மேடைப் பேச்சுக்களை முன்வரிசையிலமர்ந்து ஆவலுடன் செவிமடுத்து வந்த பாடசாலை மாணவனான நானும் என் போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் "துரோகி" களாக சுட்டிக்காட்டப்பட்டவர்கள் தமிழ் சமூகத்திலிருந்து களையெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உடன்பாடு கொண்டவர்களாகக் காணப்பட்டோம்.

அன்றைய காலகட்டத்தில் அரசியல் என்றாலே தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் மேடைப்பேச்சே அரசியல் என்றறிந்திருந்த எமக்கு கூட்டணியினரின் மேடைப் பேச்சுக்கள் தமிழ்மக்களின் உண்மையான விடுதலையின்பாலான விமோசனத்தின்பாலான பேச்சுக்களாகவே இனம் கண்டோம். யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்டபோது "தமிழர்களின் துரோகி கொல்லப்பட்டு விட்டான்" என மாணவர்கள், இளைஞர்கள் உட்பட தமிழ் மக்களில் பெரும்பான்மையோர் பெருமைப்பட்டுக் கொண்டனர். தொடர்ச்சியாக "துரோகிகள்" கொன்றொழிக்கப்பட்டனர். தமிழ் சமூகத்தில் இருந்து களைகள் பிடுங்கி எறியப்படுவதாக மகிழ்ச்சி அடைந்தோம். இந்த "துரோகி" ஒழிப்பை அல்பிரட் துரையப்பாவில் ஆரம்பித்து வைத்த வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட இது போன்ற செயல்களில் ஈடுபட்ட தனி நபர்களும் "ஹீரோ"க்களாக தமிழ் சமூகத்தாலும் இளைஞர்களாலும் பார்க்கப்பட்டனர். அல்பிரட் துரையப்பாவில் கருவுற்ற "துரோகி" ஒழிப்பு அரசியல் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள் மாற்று கருத்துடையோரை "துரோகி"களாக்கி அழிப்பதிலும், பின்னாட்களில் தமிழீழ விடுதலைப்புலிகளால் தாமல்லாத, தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்களை "துரோகி"களாகக் காட்டி அழிப்பதென முள்ளிவாய்க்கால் வரை நீண்டு சென்ற வரலாறாகியது. எழுபதுகளிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் நாம் பாடசாலை மாணவர்களாக, இளைஞர்களாக இருந்தோம். தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பேச்சுக்கள் எமக்கு வேத வாக்காக இருந்தன. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இளமையின் துடிப்பும், வேகமும், அரசியல் என்றால் என்ன வென்று தெரியாத நிலை, அனுபவ முதிர்ச்சியின்மை என்பவை இதற்கு காரணமாக இருந்தன

ஆனால் கடந்தகால எமது ஈழவிடுதலைப் போராட்ட அனுபவங்களுக்குப் பின்பும், தமிழ் மக்கள் அதிகளவில் புலம் பெயர்ந்து வாழும் மேற்கு ஜரோப்பிய, வட அமெரிக்க நாகரீக சமுதாயத்தின் அரசியல், சமூக, கலாச்சார விழுமியங்களை நாம் நடைமுறையில் கண்டுணர்ந்த பிற்பாடும், தம்மை "முன்னேறிய பிரிவினர்" என அழைத்துக் கொள்வோரில் ஒரு பகுதியினர் - ஒரு பகுதியினர் மட்டுமே – தமது இரத்தத்துடனும் சுவாசத்துடனும் கலந்துவிட்ட "துரோகி" அரசியலிலிருந்து துண்டித்துக்கொள்ள முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர் என்பது கசப்பான ஒரு உண்மையாகும்.

"துரோகி" அரசியல்: மேற்கு ஜரோப்பிய, வட அமெரிக்க நாகரீக சமுதாயத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதென்ன?

மேற்கு ஜரோப்பிய, வட அமெரிக்க நாகரீக சமுதாயத்தின் அரசியல், சமூக, கலாச்சார விழுமியங்களைப் பற்றிய புரிதலைப் பெறுவதற்கு வட அமெரிக்க நாடான கனடாவின் உதாரணத்தை எடுத்துக்கொள்வது போதுமானதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

கனடாவில் "செவ்விந்தியர்" அல்லது "பூர்வீகக் குடிகள்" என அறியப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக வசித்துவந்திருந்த போதும் கனடா ஒரு குடியேற்ற நாடாகவே உலக அரங்கில் அறியப்பட்டுள்ளது. ஜரோப்பிய குடியேற்ற வாசிகளின் வருகையைத் தொடர்ந்து (1497 முதல் ஆயிரக்கணக்கில் ஆங்கிலேயரின் வருகை; 1790 முதல் ஆயிரக்கணக்கில் பிரஞ்சுக்காரரின் வருகை) இன்றைக்கு நாமறிந்த கனடா எனும் நாட்டின் பல்வேறு மாகாணங்களும் வளர்ச்சியடையத் தொடங்கின. இதில் கியூபெக் மாகாணம் பிரெஞ்சு மொழிபேசும் மக்களை பெரும்பான்மையாகக் கொண்டதாகவும், நியூபிரன்ஸ்விக் மாகாணம் ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளையும் பேசும் மாகாணமாகவும், ஏனைய மாகாணங்கள் ஆங்கில மொழியை பேசுவோரை பெரும்பான்மையாகக் கொண்டதாகவும் விளங்கின. ஜரோப்பிய குடியேற்றவாசிகளின் வருகையிலிருந்தே இன்றைய ஒவ்வொரு மாகாணங்களும் தனித்தனியான, சுயாட்சியுடைய அரசுகளாக, நிர்வாக அலகுகளைக் கொண்டதாகவே செயற்பட்டுவந்த அதேவேளை பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பலம் பெற்று வளர்ந்து வந்தன. மாகாணங்களின் முதலாளித்துவ வளர்ச்சியும், அவற்றின் முன்னேற்றமும் உறுதியானதும் பலமானதுமான ஒரு மத்தியப்படுத்தப்பட்ட அரசை வேண்டி நின்றது.

இதனால் ஏற்கனவே தனித்தனியே நிலவிய சுயாட்சி கொண்ட மாகாண அரசுகளான ஒன்றாறியோ, கியூபெக், நியூபிரன்சுவிக், நோவாகொசியா ஆகிய நான்கு மாகாணங்களும் எந்தவித நிர்ப்பந்தமுமின்றி, மக்களின் சுயவிருப்பின் அடிப்படையில் DOMINION OF CANADA என 1867 இல் ஒன்றிணைந்து இன்றைய கனடாவுக்கு அடிக்கல் நாட்டி வைத்தனர். இந்த நான்கு மாகாணங்களும் ஒன்றிணைந்ததால் மக்களுக்கு ஏற்பட்ட அனுகூலங்களைக் கண்ட ஏனைய மாகாணங்களும் தமது சுயவிருப்பின் பேரில் DOMINION OF CANADA வில் ஒன்றிணையத் தொடங்கின. 1905 ம் ஆண்டு சஸ்கச்சுவான், அல்பேட்டா மாகாணங்கள் ஒன்றிணைந்தபோது அனைத்து மாகாணங்களும் ஒன்றிணைந்த ஒரு பலமான கனடா நாடு உருவானது. ஆனால் 1869 இல் தமது சுயவிருப்பில் DOMINION OF CANADA வில் இணைந்துகொண்ட பிரெஞ்சு மொழியைப் பேசும் கியூபெக் மக்கள் தாம் தாம் பெரும்பான்மையான ஆங்கிலம் பேசும் மக்களைக் கொண்ட கனடாவிற்குள் மொழிரீதியாக, பொருளாதாரரீதியாக, அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக நசுக்கப்படுவதாக உணரத்தலைப்பட்டனர்.

இதனால் "கியூபெக் கட்சி" என்ற கட்சியை உருவாக்கி தாம் கனடாவில் இருந்து பிரிந்து போவதற்கான வேலைத்திட்டங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். கனடாவில் உள்ள ஜந்து பிரதான கட்சிகளான கன்சர்வேட்டிவ் கட்சி, லிபரல் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி, கியூபெக் கட்சி, கிறீன் கட்சி போன்ற ஜந்து கட்சிகளிலும் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் மக்கள் அங்கம் வகிக்கின்றனர். கனடாவின் மிகவும் பிரபல்யம் வாய்ந்த பிரதம மந்திரிகளும் அமைச்சர்களும் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக்காரர்களாக இருந்துள்ளனர், இருந்தும் வருகின்றனர். பாராளுமன்றத்துக்கான தேர்தல்களின் போது கட்சிகள் தமது அரசியல் கொள்கைகள், வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் கியூபெக்கர்களையோ, கனேடிய அரசில் அங்கம் வகிக்கும் கியூபெக்கர்களையோ அரசியல் கருத்துக்கள் மூலமும், கொள்கைகள் வேலைத்திட்டங்கள் மூலமே எதிர்கொள்கின்றனர். அனைத்துக் கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் கியூபெக்கர்கள், அவர்களின் தலைவர்கள் ஒரே மேடையில் பகிரங்கமாக தமது கருத்துக்களை முன்வைத்து வாதிடுகின்றனர். பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்டவர்கள் தமது தோல்வியை ஒப்புக் கொண்டு வெற்றி பெற்றவரை வாழ்த்தி வழிவிடுகின்றனர். கனடாவில் இருந்து பிரிந்து சென்று தனியரசு அமைக்க கியூபெக் மக்கள் ஜனநாயகரீதியில் இரண்டு தடவை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தினர். 1980 ம் ஆண்டில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக 40 வீத வாக்குகளைப் பெற்றும், 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்துக்கணிப்பில் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக 49 வீத வாக்குகளைப் பெற்றும் தோல்வியடைந்தனர். ஆனால் இந்தத் தோல்விகளுக்குப் பின்பும் கியூபெக் அரசியல்வாதிகளோ, அல்லது கியூபெக் மக்களோ இதுவரை யாரையும் சுட்டுவிரலைக்காட்டி "துரோகி" என குறிப்பிட்டது கிடையாது. ஏன்? இதுதான் கல்வியில் வளர்ச்சியடைந்த, கலாச்சாரரீதியில் வளர்ச்சிபெற்ற, அரசியலில் முதிர்ச்சியடைந்த, ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றுகின்ற கலாச்சாரத்தை கொண்ட பிரெஞ்சு மொழிபேசும் கியூபெக் மக்களின் பண்பாடும், இவர்களிடமிருந்து தமிழ் சமுதாயமும், தமிழ் அரசியல்வாதிகளும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே உண்டு.

 

தொடரும்.

 

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

Last Updated on Friday, 15 July 2011 22:11

Comments  

 
#15 அழகையா வேல்மாணிக்கம் 2012-03-17 00:52
அல்வாயில் பிறந்த போஸ்ட் மாஸ்டர் காங்கேசரின் மகன் ஜி ஜி பொன்னம்பலமோ மிக ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு புலைமைபரிசு கிடைத்து லண்டனுக்கு இயற்கை விஞ்ஞானம் படிக்க போனவர். படிக்க லண்டனுக்கு போறதுக்கு கொழும்பில் இருந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் பணத்தில்தான் போனார். அங்கே இருக்கும் போதும் இடைக்கிடை பணம் அனுப்ப சொல்லி பணம் பெற்றவர். படித்து முடித்து வந்து அந்த வர்த்தகரின் மகளை கலியாணம் செய்வதாகவும் உறுதி கொடுத்திருந்தார ். இயற்கை விஞ்ஞானம் படித்துவிட்டு பின்னர் சட்டம் பயின்று சட்டவல்லுனராக கப்பலில் கொழும்பு திரும்பிய ஜி ஜி பொன்னம்பலத்தை வரவேற்க அந்த வர்த்தகர் குடும்பத்தோடு துறைமுகத்துக்கு போனால் கூடவே ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் ஜி ஜி பொன்னம்பலம் வந்திறங்கினார் அன்றிரவே வர்த்தகரின் மகள் தற்கொலை செய்து கொண்டாள். இதனால் அடுத்த கப்பலில் அந்த வெள்ளைகார பெண்ணை ஜி ஜி பொன்னம்பலம் திருப்பி அனுப்பினார்.
பின்னர் பெருமளவு சீதனத்துக்காக அல்பிரட் துரையப்பாவின் உறவுக்காரரான மலேசியாவில் ரப்பர் தோட்டங்கள் வைத்திருந்த ஒரு கிறீஸ்தவ வெள்ளாள பெண்ணை ஜி ஜி.பொன்னம்பலம் கலியாணம் முடித்தார். அல்பிரட் துரையப்பாவின் குடும்பமும் ஜி ஜி பொன்னம்பலத்தின் குடும்பமும் மலேசியாவில்தான் இருந்தனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி ஜி .பொன்னம்பலம் 1956ஆண்டு மலேசியாவுக்கு குடிபெயர்ந்து அங்கு சட்ட தொழில் புரிந்து ரப்பர் தோட்டங்களை வாங்கி மலேசிய பிரஜை ஆனவர்.
இலங்கை தமிழரசு கட்சி தலைவர் வேலுப்பிள்ளை (எஸ் ஜே வீ ) செல்வநாயகம் மலேசியாவில் பிறந்த மலேசியபிரஜை. பின்னர் இலங்கையில் குடியேறியவர்.
வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை யும்
மலேசியாவில் பிறந்த மலேசியப் பிரஜை. பின்னர் இலங்கைக்கு குடி பெயர்ந்தவர்.
Quote
 
 
#14 அழகையா வேல்மாணிக்கம் 2012-03-17 00:42
பஸ்தியாம்பிள்ளை கொலை நடந்த போது கதிர்காமபிள்ளை நல்லைநாதன் (உமாமகேஸ்வரன் , முகுந்தன்) , செல்லப்பா நாகராஜா(வாத்தி) , இருவரும் மரத்தில் மேல் காவலுக்கு நின்றவர்கள். சதாசிவம் செல்வநாயகம்(செல ்லகிளி)தான் பஸ்தியாம்பிள்ளை யின் இயந்திரத்துப்பா க்கியை டக்கென்று எடுத்து திடீர் தாக்குகள் செய்தவர். இன்ஸ்பெக்டர் பேரம்பலம் கிணத்தடியில் வைத்து கொல்லப்பட்டார். பொலிஸ் கார் சாரதி தப்பி ஓடும்போது ஒழுங்கைக்குள் வைத்து கொல்லப்பட்டார்.
பஸ்தியாம்பிள்ளை எதுவித துப்பும்மிலாமல் அந்த இடத்துக்கு வந்தே இருக்க முடியாது என்பது அந்த பிரதேசத்தை நன்கு தெரிந்தவர்கள் தெளிவாக புரிவார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் பஸ்தியாம்பிள்ளை வர முன்னரே அன்று காலை வெளியில் சும்மா அலுவலாக போய் விட்டார்.
இதே மாதிரி நீர்வேலி வங்கிக் கொள்ளைக்கு பின்னர் தங்கதுரை. குட்டிமணி. தேவன் ஆகியோருக்கு மணல்காட்டில் இந்த இடத்தில் இத்தனை மணிக்கு காத்திருங்கள் இந்தியா போக வள்ளத்துடன் வாறன் என்று சொன்ன வேலுப்பிள்ளை பிரபாகரன் வள்ளமும் அனுப்பவில்லை தானும் வரவில்லை பொலிஸ்தான் கால்நடையாக வந்து மூவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அநியாயம் செய்தவர்கள் எல்லாம் எம் கண் முன்னே அவலமாக செத்ததை காண்கிறோம்.
Quote
 
 
#13 akilan 2011-08-25 00:38
புளட்டினுள் நடந்த அராஜகங்களை வெளிக்கொண்டு வந்த இவர்கள், தாம் சேர்ந்து இயங்கிய காலத்தில் மாற்று இயக்கத்தினர்களை கொலை செய்ததைப் பற்றி எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை அதாவது 06.12.84 அன்று உச் என்பவரும், 14.12.84 சேகர் என்ற ரெலா உறுப்பினர்கள் கழகத்தினரால் படுகொலை செய்யப்பட்;டனர் . இதைப் பற்றியோ அல்லது சுழிபுரம் படுகொலை பற்றியோ, கொட்டடி இளைஞர்கள் கொலை பற்றியோ ஏன் மணியம் தோட்டப் படுகொலை பற்றியோ எதையும் இவர்கள் கூறவில்லை. ஏன் என்றால், இவர்கள் இவைகளைப் பற்றி வாய்திறந்தால் இவர்களின் பொட்டுக்கட்டு அம்பலமாகிவிடும் அல்லவா? இதனால் அரசியல் படுகொலைகள் மவுனமாக பாதுகாக்கப்படுக ின்றது
Quote
 
 
#12 நல்லரூபன் தர்மபாலன் 2011-07-20 14:28
நோண்டல்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கனடாவில் துரோகத்திற்காக தூக்கிலிடப்பட்ட லூயி ரீல் போன்ற நடப்புகளை இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் நீ இன்னமும் வேலை இல்லாமல் வெளி நாட்டில் இருந்து கொண்டு நோண்டிக் கொண்டிரு! ஆயுத கலாச்சாரத்துக்க ு அடிபணிந்து பயந்து போன இலங்கை தமிழ் சமூகத்தின் பிரதான,மையசிந்த னையோட்டமே முப்பது வருடமாக வெளிநாட்டுக்குப ் போய் வெள்ளைக்காரனுக் கு குண்டி கழுவுதல் என்றாகிவிட்டது. மூன்று தசாப்தமாக இலங்கை தமிழ் சமூகத்தின் அசைவியக்கமும் அதுதான். நாடோடிகளின் திரவியம் தேடும் சிந்தனையின் விளைவே இந்த அடிமைப் புத்தி!! பூர்வீகம் பூர்வீகமாக ஒரே இடத்தில் இருந்து வாழ்ந்தவர்கள் பிரச்சனைகளை விட்டு தப்பி ஓடுவதை விட்டு பிரச்சனைகளை தீர்க்க சிந்திப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்!!
Quote
 
 
#11 நோண்டல் 2011-07-19 21:02
" மேற்கு ஜரோப்பிய, வட அமெரிக்க நாகரீக சமுதாயத்திலிருந ்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதென்ன?"
வெள்ளையனுக்கு குண்டி கழுவிற எழுத்து எழுத முதல், "துரோகி" பற்றி கனடாவில இருக்கிறதை படியுங்கோ.துரோகத்திற்காக தூக்கிலிடப்பட்ட லூயி ரீல்
law2.umkc.edu/faculty/projects/ftrials/riel/indictment.html
Quote
 
 
#10 ரகு 2011-07-16 15:14
1971 ஆண்டு இந்திய உபகண்டத்தில் நடந்த இரு நிகழ்வுகள்தான் நாங்களும் தனி ஈழம் இலகுவாக அடையலாம் என அன்றைய தமிழ் வாலிபரை எண்ண வைத்தது.
(1)1971 ஆண்டு இந்தோ பாகிஸ்தான் யுத்தத்தின் இறுதியில் பங்களாதேஷ் என்ற தனி நாடு உருவாகியது.
(2)1971 ஆண்டு வெறும் வெடி குண்டுகள் மூலம் JVPயினர் தென்இலங்கையையும ் கொழும்பு அரசையும் ஒரு கலக்கு கலக்கியது.
1971ல் சிறிமாவோ DMK திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்பாடுகளை இலங்கையில் தடைசெய்ததை நாங்கள் மறக்கமுடியாது.
அல்பிரட் துரையப்பாவின் கொலைக்கு முன்னரே 1973இல அனுராதபுரம் சிறையில் இருந்து தப்பிய செட்டி பூநகரியில் வைத்து கண்ணாடி கண்ணாடி பத்மநாதனை கொலை செய்ததுதான் முதன்முதலாக நடந்த உட்கட்சி கொலையாகும். குட்டிமணியை விட பெரும் விசுவாசத்தை செட்டியில் வைத்திருந்தார் பிரபாகரன்.
வீட்டுக்கு நேரே புள்ளடி போடத்தொடங்கி வீடுகளிற்கு செல்லடி வாங்கிக் கொடுத்தவர்கள் உதய சூரியனுக்கு புள்ளடி போட்டு சூரியதேவனை உருவாக்கியவர்கள ் தமிழரை ஆள நினைத்தவர்கள் ஆள ஆசைப்பட்டவர்கள் மக்களின் தலையில் அழிவினைச் சுமத்தி விட்டு தாமும் அழிந்துவிட்டனர் .
தமிழர் தம்மைதாமே ஆழ்வதற்கு எவ்வளவு தகைமையுடன் வாழ்ந்தார்கள். படித்தால் டாக்டர், என்சினியர் அக்கவுன்டன் பணம் தேடுவதானால் வெளிநாட்டுப் பயணம். இந்த நிலமை இன்னமும் மாறவில்லை. இவையெல்லாம் அடிமை வாழ்வை விரும்புபவர்களு க்கே பொருந்தும். இவர்கள் தனிநாடு, விடுதலை, உரிமை என்ற சொற்களை வாயால் சொல்லவே தகுதி இல்லாதவர்கள் உண்மையான நாட்டுபற்று தேசப்பற்று மொழிப்பற்று எதுவுமே இல்லாமல் தமிழர்கள் இன்னமும் அடிமை விசுவாசத்தோடு எசமானர்களை தேடி நாடு நாடாக அலைகிறார்கள்!
நாங்கள் அடிமைப் புத்தியில் ஆங்கில மோகத்தில் ஆங்கிலத்தில் கையெழுத்தும் வைத்து கோட்டும் சூட்டும் போட்டு சிவாஸ்றீகலுடன் எங்கள் எஜமானர்களை தேடி நாடு நாடாக் எஜமானர்களிடம் இருந்து கிடைக்கும் யூரோகளுக்கும் பவுன்களுக்கும் டாலர்களுக்குமாக அலைகிறோம்.
எங்களுக்கு தெரிந்த மனித வாழ்க்கை பணம் தேடுவதுதான் பணத்தால் எதையும் வாங்கலாம் என்பதுதான் எமது சிந்தனை. நாலு பேரை சுத்தினால் அவனை சுழியன் என்போம். நாலு பேரை சுட்டால் அவனை தலைவன் என்போம். தமிழர் கனவு கண்டு கனவில் வாழும் பணப் பேய்கள்.
ஈழ விடுதலை என்பதே ஒரு மாயமான்!! நாங்கள் நடக்க முடியாத விடயங்களை பற்றி அதீதமாக கனவு காண்கிறோம்!!
எங்களுக்குள் இருக்கும் அடிமை புத்தி ஒழியும் வரை விடுதலை என்ற சொல்லை சொல்லக் கூட எங்களுக்கு அருகதை கிடையாது.
துர்ப்பாக்கியமா க துப்பாக்கி கலாசாரமும் வன்முறைக் கலாசாரமும் என்று வடக்கு கிழக்கில் தலை தூக்கியதோ, அன்றிலிருந்து வாழ்வு என்பது மகிழ்ச்சிக்குரி யது அல்ல, துயரத்துக்குரிய து, அவமானத்துக்கு உரியது, ஏமாற்றத்துக்கு உரியது, வெறுமைக்கு உரியது, இழப்புக்கு உரியது என்பதை ஆயுதம் தரித்த அத்தனை ஈழவிடுதலை இயக்கங்களும் மக்கள் மீது ஓர் எழுதாத விதிபோல விதித்திருந்தார ்கள். விதியை நொந்தபடி வாழ்வதற்கு மக்கள், ஆயுதக்கலாசார சூழலுக்கு தம்மை பழக்கப்படுத்திக ்கொண்டார்கள்.
தமிழர்களுடைய போராட்டம் 50க்கு 50 என்றும் சமஷ்டி என்றும் தனிநாடு என்றும் இறுதியாக தாயகம், தன்னாட்சி, தேசியம், சுயநிர்ணயம், உள்ளக சுயநிர்ணயம் என்று கூறிக்கொண்டு சுதந்திர தமிழ் ஈழத்துக்கு எந்தக் குறைவான தீர்வையும் பரிசீலித்து பார்க்காது, வந்த அருமையான வாய்ப்புக்களையு ம் தவறவிட்டதுடன், ஒட்டு மொத்த சமூகத்தையும் ‘மனநோய்க்கு’க்க ு உள்படுத்தியதுடன ், அவமான குற்ற உணர்வுடன் வாழும் நிலைக்குத்தள்ளி யது.
அடிப்படையிலேயே எதிரிகள் உருவமாகத் தோற்றுவிக்கப்பட ்டு, விலை மதிப்பற்ற தமிழ் சமூகத்தின் சிந்தனைத் திறன் பாரம்பரியம் அழிக்கப்பட்டது. இங்கு ஒரு விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் அதாவது புலிகளது சுதந்திர தாக போராட்டமானது பல இலட்சம் மக்களது நலனையும் சுதந்திரத்தையும ் இருப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியதுடன் , சக சமூகத்தினது சகமனிதனது வாழ்வின் சுதந்திரத்தையும ் அடித்து நொறுக்கியதுடன் சுவடுகளே இல்லாமல் செய்துவிட்டது.
அரசியலை அரசியலாலேயே சந்தித்து சவால்விட்டு வெற்றிகரமாக கொண்டு செல்வதே அரசியலாகும். அப்பாவிமக்களை பலிகொடுத்து குறுக்கு வழியால் அரசியலை நாட நினைப்பதுவும் தூண்டிவிட எண்னுவதும் அரசியல் அல்ல மாறாக பயங்கரவாதமே!
ஒரு அரசியல் விபரீதமாக மாறும் பொழுது பொறுப்பு ஏற்கவேண்டியவர்க ள் அரசியல் தலைவர்களே ஒழிய அந்தநாட்டின் அப்பாவிமக்கள் அல்ல. கடந்துவந்த துன்பமான வரலாற்றுக்கு சிங்களத் தலைமைகளுக்கு எவ்வளவு பங்கு இருந்ததோ அதேயளவு பங்கு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் உண்டு.
உலகத்தின் ஒவ்வொரு நாடுகளிலும் ஏதோ ஒரு காரணத்தால் குடியேறி அந்த நாடுகளின் பாஷைகளையும் கலாச்சாரங்களையு ம் சட்ட திட்டங்களையும் கற்று தேர்ந்து பழகிவிட்ட தமிழனுக்கு ஒட்டுண்ணி வாழ்கை நடத்தாது பிறரின் நலனுக்காக தன்னையே தியாகம் செய்கிற சுயநலமற்ற இனம் இலங்கையிலுள்ள சிங்கள இனத்தோடு கூட்டுவாழ்கை வாழமுடியவில்லை என்றால் அது அந்த இனத்தின் குறைபாடாக இருக்க வேண்டிதில்லை. எம்மினத்தின் குறைபாடாகவும் இருக்கலாம்!!
தமிழ் வெறி!! புலி வெறி!!! கொலை வெறி!! முட்டாள்களின் முட்டாள்தனமான போராட்டம்!!
சாமர்த்தியம் சாதுரியம் சாணக்கியம் எதுவும் அறவே கிடையாது!!!
அரசியல் போக்கு என்றவகையில், இலங்கை அரசுகள் பின்பற்றி வந்த சிங்கள பேரினவாத போக்குகள் மிக மோசமானவையாயினும ், அதைவிட தமிழினத்துள்ளிர ுந்தே உருவான புலிகளின் பாசிசப்போக்கு மிகவும் ஆபத்தானது என்பதைக் குறிப்பிடுவது அவசியமானது. ஏனெனில் இந்த பாசிசப் போக்கு தமிழ்மக்களின் உள்ளார்ந்த வாழ்வை இருள் சூழ்ந்த அந்தகாரத்துக்கு ள் இட்டுச் சென்றுள்ளது.
இதுவரை அதிகளவில் தமிழரை கொன்று குவித்தது புலிதான். அதிகமான புலியை கொன்றதும் பிரபாகரன்தான். தமிழருக்கு கிடைத்த அரசியல் உரிமைகளையும் இல்லாமல் செய்து இன்று உலக அரங்கில் ஒருத்தருமே தமிழருக்கு உண்மையாக ஆதரவு வழங்காத நிலவரத்தை உருவாக்கியதும் புலிகளே!!
முப்பது வருசமாக புலி சாதித்து இன்று தமிழருக்கு மிஞ்சி இருப்பது என்ன? மண்டையில் போட்டோ காசுகுடுத்தோ ஈழம் வாங்க முடியாது. இது குருட்டுதனம் பிரபாவுக்கும் விளங்கவில்லை. அவருக்கு நாலு காசு கொடுத்துவிட்டு அவரின் கலண்டரை வைத்திருந்த அறிவுப் பூச்சியங்களுக்க ும் விளங்கவில்லை
ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லீம் மக்களை ஒரு இரவில் காசு நகை எல்லாம் பறித்து அநாதவராக அவர்களின் பூர்வீக பூமியில் இருந்து பிரபாகரன் கலைத்த போது ஒரு தமிழ் பேசும் இந்துக்களோ அன்றி கிறிஸ்தவரோ ஒரு வார்த்தை பிரபாகரனின் இன சுத்திகரிப்புக் கு எதிராக சொல்லவில்லை
பிரபாகரனின் தமிழ் ஈழத்தில் பிரபாகரனுக்கு ஆமா போடா மட்டும் வாயை திறந்தவர்கள் மக்கள். எங்கு போவது என்றாலும் பிணைவைத்து பாஸ்எடுத்து தான் நடமாட முடிந்த சுதந்திரத்தைதான ் பிரபாகரன் கொடுத்திருந்தார ். இத்தகைய பிரபாகரனை காப்பாத்த புலன் பெயர்ந்த தமிழர் “வீ வோன்ட் தமிழ் ஈழம் அவர் லீடர் பிரபாகரன்” என்று தெரு தெருவாக கத்தி திரிந்தார்கள்!! !
பிரபாகரன் கடத்தின அத்தனை எங்கள் பிள்ளைகளையும் புதை குழிக்குள் அனுப்பி விட்டு புலன்பெயர்ந்தவர ்களின் பிழைப்பில் வாங்கிய SAM7னை எல்லாம் மண்ணிற்குள் தாட்டுவிட்டு “முடிந்தால் கிளிநொச்சியை ராணுவம் பிடித்து காட்டட்டும்” என்றெல்லாம் பீலா பிலிம் காட்டிவிட்டு இந்த அரசியல் ராணுவ சூனியம் கையில் வைத்திருந்த ஒரே திட்டம் கடைசியாக கையை விரித்து வெள்ளைக் கொடி பிடித்து தன் உயிரை காப்பாத்த சரண் அடைவதே.
புலிகளோ யுத்தம் இல்லாத போது மக்கள் சலிப்படைந்து போவார்கள் என்றும் போராளிகள் மன மாற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அடுத்த இயக்கத்தவரையாவத ு போட்டுத் தள்ளுவதில் ஊக்கம் கொடுத்து. அந்த போர் மூடில் போராளிகளை வைத்திருக்க முயன்றார்கள். சொறிந்தவன் கை சும்மா இருக்காது என்பது போல போரையும் வலிந்து தொடுத்தனர்.
புலிகளது ஆயுதத்துக்கு பயந்தே புலி வாலை விட முடியாமல் அநேகர் இருந்தனர். அவர்கள் 30 வருடத்தில் பட்ட துன்பம் ஏராளம். ஆனால் அதுக்கு அவர்களுக்கு பட்டதோ அல்லது கிடைத்த நின்மதியோ ஒரு துளி கூட கிடையாது. ஆயுதம் மக்களின் உனர்வுகளையும் உரிமைகளையும் அடக்கியதே தவிர, அதை மக்களுக்கு எதுவும் பெற்று தரவில்லை. இறுதி நேரத்தில் கூட மக்களில் எந்தவித அக்கறையும் இல்லாமல் ஆயுதத்தையும் பிள்ளை பிடிகார பிண்ணாக்கு பிரபாகரனையும் காப்பாற்றவே புலிகளின் வியாபாரிகள் உலகம் முளுவதும் ஓலமிட்டனர். ஒட்டுமொத்தமாக சொல்லப் போனால் எமது மண்ணை விட்டு, எமது மக்களை கோவணத்துடன் தள்ளி விட்டு, தங்கள் தங்கள் குடும்பத்துடன் கோழைகளாக, தங்களின் சுயனலத்திக்கு, தங்கள் பிழைப்புகளுக்கு பொய், புரட்டு, களவு செய்து, தமிழனின் மானத்தை விற்று, மரியாதை இழந்து, போலி வாழ்க்கை வாழ்கிறார்கள் .
சற்று யோசித்து பாருங்கள் நாளை பிறக்கும் தமிழ் ஈழம் என்று நம்பி நடுத்தெருவில் நிற்கும் தமிழினத்தின் கதியை.
அமெரிக்க ஜப்பான் போரின் பின்னும் , ஜெர்மன் ஐரோப்பிய போரின் பின்னும் சமாதானம் வந்தது. மக்கள் வெறுத்து விட்டால் அடுத்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று JVP மற்றொரு புரட்சிக்குத் தயாரில்லை. இலங்கை வாழ் தமிழரும் இன்னொரு இழப்புக்கு தயாரில்லை.
Quote
 
 
#9 ரகு 2011-07-16 13:04
துரோகி என்று முதல் முதலாக கொல்லப்பட்டவர் துரையப்பா எனினும், அதற்கு முதல் அமிர்தலிங்கத்தை தேர்தலில் தோற்கடித்த தியாகராசா மீதுதான் கொலை முயற்சி முதலில் நடைபெற்றது. தமிழ் மாணவர் பேரவையை சேர்ந்த பொன் சத்தியசீலன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தி ன் ஆணைப்படி தியாகராசாவை கொலைசெய்ய திசவீரசிங்கத்தை யும் ஜீவராசாவையும் அனுப்பியிருந்தா ர். குறிதவறியதால் தியாகராசா தப்பினார்.
1972 இல் உரும்பிராய் இந்துக்கல்லூரிக ்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் சோமவீர சந்திரசிறியின் காருக்கு உரும்பிராயை சேர்ந்த பொன்னுத்துரை சிவகுமார் கைக்குண்டு வீசியதை அடுத்து சிவகுமார் கைதானார். சிவகுமாருக்காக மல்லாகம் நீதிமன்றில் ஆஜரான உரும்பிராயை சேர்ந்த அடங்காத்தமிழர் சுந்தரலிங்கம் பணம் கேட்டு சிவகுமாரின் அன்னலட்சுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் அன்னலட்சுமி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை சந்தித்து உதவிசெய்யுமாறு கேட்டார். அமிர்தலிங்கம், யூஎன்பீ அரசில் உள்ளூராட்சி அரசுக்கு அமைச்சராக இருந்த முருகேசன் திருச்செல்வத்தை போய் பார்க்குமாறு கடிதம் கொடுத்து அனுப்பினார். திருசெல்வமோ என்னைக் கேட்டோ குண்டெறிந்தவர் எனக் கேட்டு ஆஜராக மறுத்தார்.
பிணையில் வெளிவந்த சிவகுமார், இந்தியாவுக்கு தப்பியோட கோப்பாய் எம்பி சிவசுப்பிரமணியம ் கதிரவேலுப்பிள்ள ையிடம் ஐயாயிரம் ரூபா கடன் கேட்டார். கடன் கொடுக்க கதிரவேலுப்பிள்ள ை மறுத்தார். இதனால் 1974 ஜூலை சிவகுமார் கோப்பாய் வங்கியை கொள்ளையிட சென்று, தப்பியோடும்போது பிடிபட்டு சயனைட் அருந்தி தற்கொலை செய்தார். தற்கொலை கலாச்சாரத்துக்க ு கால்கோள் நாட்டியவர் சிவகுமார்தான்.
சிவகுமாரின் இறுதிச் சடங்கில் கதிரவேலுப்பிள்ள ை கலந்து கொண்டு ஆவேசமாக இரங்கலுரை நிகழ்த்தினார். கொழும்பில் ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்த சிவகுமார் நினைவுதின கூட்டத்தில் திருச்செல்வம் "சிவகுமார் எங்கள் எல்லோருக்கும் வழிகாட்டிவிட்டா ர்" என்று இரங்கலுரை நிகழ்த்தினார்.
Quote
 
 
#8 ரகு 2011-07-15 18:42
எதுவுமின்றி நிர்வாணமாக பிறந்தோம். மரணத்தின் பின் மண்ணுக்குள் மண்ணாக உக்கி போய்விடுவோம். யாரையும் கொன்று அரசியல் நடத்த வேண்டிய தேவை உண்மையில் எவருக்கும் கிடையாது. உலகத்தை குலுக்கிய ரஷ்ய ஒக்டோபர் புரட்சியே ஆறே ஆறு பேரை பலிகொடுத்துதான ் நடத்தி முடிக்கப்பட்டது
Quote
 
 
#7 கண்ணாடிப் பத்தன் 2011-07-11 12:15
"வவேக்" அவர்களே
புலிகளில் இருந்த ஐயர் என்பவரிடம் நாவலன் என்பவர் கேட்டு எழுதிய தொடரில் "யாழ்ப்பாண மேயர் துரையப்பாவைக் கொலைசெய்திருந்த காரணத்தால் இலங்கை அரச படைகள் எப்போதும் அவரைக் கைது செய்யலாம் என்ற நிலையே காணப்பட்டது. தவிர, மீசை கூட அரும்பாத பதினேழு வயது இளைஞனான பிரபாகரன் இலங்கை அரச படைகளுக்கு எதிராக இன்னும் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற துடிப்புடன் காணப்பட்டார்" என குறிப்பிட்டிருந ்தார்.

அதில் அல்பிரட் துரையப்பாவை கொலை செய்யும்போது இருபது வயதை தாண்டியிருந்த பிரபாகரனை "மீசை கூட அரும்பாத பதினேழு வயது இளைஞனான பிரபாகரன்" என ஐயர் சொன்னதாக நாவலன் எழுதி இருந்தார்.

இவ்வாறு இன்னும் பலர் பிரபாகரனை மீசை முளைக்காத வயதில் இயக்கத்துக்கு வந்தவர் என புகழ்ந்து எழுதியிருக்கிறா ர்கள். இதைத்தான் கிண்டலாக நேசன் என்பவர் எழுதியிருக்கிறா ர் என நான் எண்ணுகிறேன்.

ஒரு தவறான எழுத்துப்பிழையை வைத்து "எழுத்துப் பிழைகளோ ஏராளம்" என எழுதும் விவேக் உங்கள் பெயரை நீங்கள் எழுதும்போது "வவக்" என் எழுதியது உங்கள் "பிழை"களை தேடும் "யாழ்ப்பாணத்து பூதக்கண்ணாடி"க்கு தெரியவில்லை.

சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும். நேசனும் சரி வவக்கும் சரி தங்கள் எழுத்துகள் மூலம் தங்கள் நிலைப்பாட்டை ஊருக்கு சொல்கிறார்கள்
Quote
 
 
#6 விவேக் 2011-07-10 17:28
"இந்தத் "துரோகிகள்" கொலைக் கலாச்சாரம் - "துரோகி" அரசியல் கலாச்சாரம் - யாழ்ப்பாண மேயரும்இ யூழ்ப்பாணப்பிரத ேசத்துக்கான சுதந்திரக்கட்சி அமைப்பாளமான அல்பிரட் தம்பிராஜா துரையப்பாவை 27-07-1975 இல்இ அன்று "மீசை கூட முளைத்திராத" சிறுவனாகிய வேலுப்பிள்ளை பிரபாகரன் சுட்டுக்கொலை செய்ததிலிருந்து ஆரம்பமாகியது. வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்ற "மீசை கூட முளைத்திராத" ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் இரத்தத்தை சூடேற்றியதில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வெற்றி பெற்றனர்."
நேசன் மீசைக்கும் அரசியற் தெளிவிற்கும் என்ன சம்பந்தம்? தயவு செய்து தெளிவு படுத்துங்கள். இது பிற்போக்கு வாதமில்லையோ? எழுத்துப் பிழைகளோ ஏராளம் சொற் தெளிவுகளோ இன்றி இயற்றப்படும் இத்தொடர் ஆசிரியர் உண்மையில் தமிழர் விடுதலைக்குப் போராடியவரா? அல்லது ஒரு விளம்பர விரும்பியா? - வவேக்.
Quote
 

Add comment


Security code
Refresh