ருகுணு பல்கலைக்கழக மாணவர்களிற்கு உயர்கல்வி அமைச்சரின் அச்சுறுத்தல்!

எதிர்வரும் நாட்களில் ருகுணு பல்கலைக்கழகத்தில் “தேசத்தின் மகுடம்” கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாணவர் எவராது இடையூறு விளைவித்தால் கடும் தண்டனையினை அனுபவிக்க வேண்டியிருக்கும். இடையூறு விளைவிக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினரும் இந்த நாட்டில் இடம் கிடையாது. வேறு நாட்டில் தான் வாழ வேண்டியிருக்கும் என உயர்கல்வி அமைச்சர் S. B. திஸ்சநாயக்கா எச்சரித்துள்ளார்.

பதவிக்காகவும் சிறைத்தண்டனையில் இருந்து தப்புவதற்க்காகவும் கட்சி தாவிய கிரிமினல், சண்டித்தனப் பாணியில் மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் மிரட்டுகின்றார். மக்களை மிரட்டி, அடக்கி, அச்சுறுத்தி ஆட்சியில் நீண்ட காலத்திற்கு யாரும் நிலைத்ததாக வரலாறு கிடையாது என்பதனை இவருக்கு யாராவது ஞாபகப்படுத்துவது நன்று.

Last Updated on Wednesday, 14 May 2014 11:12