31-12--1993 இரவு பரிஸில் லாச்சப்பல் எனும் இடத்தில் எம்மவர்களுக்கிடையில் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றது. இதில் ஒருவரின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. தமிழ் மக்களின் கூடிய கடைகளைக் கொண்ட லாச்சப்பலில் லுண் கடைக்கு முன்பே இத் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

 

லுண் கடையினரே இத் துப்பாக்கி பிரயோகத்தை செய்ததுடன் இவர்கள் புலி உறுப்பினருமாவார். எம்மண்ணில் நடந்த ஒரு கொலை தொடர்பாக 2 மாதத்துக்கு முன்பு நடந்த வாக்குவாதத்தில் புலிகள் ஒருவருக்கு கத்திக்குத்தை நிகழ்த்தினர். இதன் தொடர்ச்சியாக நடந்து வந்த வாக்குவாதம் 31-12-1993 துப்பாக்கிப் பிரயோகம் வரை சென்றது.

 

இத் துப்பாக்கிப் பிரயோகத்தின் முன்பு மாத்தையா தொடர்பாகவும் வாக்குவாதப்பட்டவர்கள் பின் கைகலப்பில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதுபோன்ற வன்முறைகளை வாடிக்கையாகக் கொண்ட புலிகள் ஜரோப்பா முழுக்க இதுவே தொடர் கதையாக்க முனைகின்றனர். புலிகள் எந்த தரப்பினரும் சரி கேள்வி கேட்கும் போது பதில் அளிக்க முடியாது வன்முறையையே பதிலாக கொடுத்து வருகின்றனர்.

 

இக் கைகலப்பில் புலிக்கு எதிராக பல்வேறு சக்திகள் எதிர்த்து நின்றதைக் காணக் கூடியதாக இருந்தது. 1-11994 லாச்சப்பலின் மக்களிடம் நியாயம் கேட்டு சுவரொட்டிகள் காணப்பட்டன. எம்மண்ணின் அராஜகம் இங்குமா என்ற கருத்துப்பட இருந்த சுவரொட்டிகள் மக்கள் பார்க்க முன்பே அவசரம் அவசரமாக அகற்றப்பட்டது. நடந்த உண்மை நிலையை மறைக்க பல பொய்யான பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இம்மோதல் அரசியல் ரீதியானதாக இருந்தபோதும் இக் கைகலப்பில் வேறு பல சக்திகள் பங்கு பற்றியது பிரச்சனையை வேறு பக்கம் இனம் காணக்கூடியதாகவுள்ளது.

 

அரசியல் ரீதியில் புலிகள் உடன் முரண்படுபவர்கள் அரசியல் ரீதியில் தெளிவு கொண்டு மக்களைச் சார்ந்து இருக்க வேண்டும். மாறாக இப்படி சிறு வாக்குவாதம், மோதல் இப்பிரச்சனையை இல்லாது ஒழித்து விடாது. மாறாக அதே இயக்க அரசியலையே தொடரும்.