"வந்தே மாதரம்'' வேலை நிறுத்தம்

இவ்வியக்கங்களின் முன்னேற்றத்தின் பயனாக ஹைதராபாத் மாணவர்கள் "வந்தே மாதரம்'' பாடலைப் பாடும் உரிமைக்காக வேலை நிறுத்தம் செய்தனர். கல்லூரி விடுதி அதிகாரிகளால் தடை செய்யப்பட்டிருந்தும் விடுதி மாணவர்கள் "வந்தே மாதரம்'' தேசியப் பாடலைப் பாடத் தொடங்கினர். விடுதியிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மாணவர்கள் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்தனர். வேலை நிறுத்தம் ஹைதராபாத் நகரக் கல்லூரிகளுக்கு மட்டுமின்றி, வெளியேயுள்ள இதர கல்லூரிகளுக்கும் பரவியது. இவ்வேலை நிறுத்தத்தில் சுமார் 600 மாணவர்கள் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டனர்.


மாநிலக் காங்கிரஸ் சத்தியாக்கிரகம், ஆரிய சமாஜ சத்தியாக்கிரகம், வந்தே மாதரம் வேலை நிறுத்தம் ஆகியவை ஓரளவிற்கு அமைப்பு ரீதியிலான இயக்கங்களாக இருந்தன. ஆனால்மூன்றுமே தங்கள் குறிக்கோளை அடைவதில் தோல்வியுற்றன. ஏனெனில் இவ்வியக்கங்களில், ஏழை மக்களைத் திரட்டுவதை அந்தந்த அமைப்புகள் செய்யத் தவறின. சிறிது சிறிதாக இவ்வியக்கங்களில் நம்பிக்கையின்மை படர்ந்தது.