போலிப் பெண்ணியல் வாதிகளும் "பெண்ணியம்" பேசும் மயூரனும்
"திருமணம் செய்வதாக எவருக்கும் நான் வாக்களித்ததில்லை" என்று கூறும் மயூரன், தனது பாலியல் நடத்தையை "பெண்ணியம்" என்கின்றார். இவர் பெண்ணியம் குறித்து கட்சி சார்பாக பெண்களுக்கு போதித்தது, இத்தகைய பாலியல் நடத்தையையே. தனது பாலியல் வேட்டைக்கு கட்சியையும், கட்சிக்கு வந்த பெண்களையும் பயன்படுத்தி இருக்கின்றார் என்பது வெளிப்படையான உண்மை. இதை மறுத்து "பெண்ணியம் - தனிமனித சுதந்திரத்தின்" பெயரில் நியாயப்படுத்த "பெண்ணியல்வாதிகளின்" ஒரு பகுதியினர் தயாராகவே இருக்கின்றனர்.
