இனவொடுக்குமுறையை விட்டுவிட்டு, தமிழனின் அதிகாரத்திற்கான போராட்டமாக இனவொடுக்குமுறையை குறுக்குவதும் - கோருவதுமே நடக்கின்றது. 1980 களில் தோன்றிய ஆயுதப் போராட்டமானது இறுதியில் புலியின் அதிகாரத்துக்கான போராட்டமாகவும் - படிப்படியாக தனிநபர்களின் அதிகார போராட்டமாகவும் சீரழிந்தது தொடங்கி அதிகார பரவலைக் கோரும் முரண்பட்ட தேர்தல் அரசியல் வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான ஒடுக்குமுறையை இனம் கண்டு அதற்கு எதிராக போராடுவதை மறுதளித்ததும் - மறுதளிப்பதுமே தொடர்ந்து நடந்தேறி வருகின்றது.