Language Selection

பி.இரயாகரன் - சமர்

ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை முன்வைக்காது முன்வைக்கப்படும் எத்தகைய பிரிவினைவாதமும், எப்போதும் எங்கும் மக்களை ஒடுக்குகின்ற அரசியலே. ஒடுக்குமுறைகளைக் காட்டி முன்வைக்கும் பிரிவினைவாதம் ஊடாக, ஒடுக்கும் தங்கள் முகத்தை மூடிமறைக்க பயன்படுத்துகின்றனரே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான அரசியலை முன்வைப்பதில்லை. வடக்குக்கு எதிராக கிழக்குப் பிரிவினையை முன்வைக்கும் பிள்ளையான் - ஸ்ராலின், ஒடுக்கும் தங்கள் தேர்தல் அரசியல் வெற்றிக்காகவே அதை முன்வைக்கின்றனரே ஒழிய, ஓடுக்கப்பட்ட கிழக்கு மக்களின் விடுதலைக்காகவல்ல. தமிழினவாதம் போன்று கிழக்கு வாதமும், வாக்குகளுக்காகவே பிரிவினைவாதத்தை முன்வைக்கின்றனர்.


பௌத்த மதம் என்பது சிங்கள இனமும் - சிங்கள மொழியும் என்று கருதும் நேர்கோட்டு கண்ணோட்டம் தவறானது. அதே போல் சைவமும் (இன்று இந்து மதம்) தமிழ் இனமும் தமிழும் ஒன்று என்ற அதே நேர்கோட்டு கண்ணோட்டத்தையும் மறுதளிக்க வேண்டும். மதம், மத நம்பிக்கை என்பது இனம், மொழி, பிரதேசம், நாடு என்ற எல்லை கடந்தது. தனிமனிதன் நம்பிக்கை சம்மந்தபட்டது. இந்தப் புரிதல் அவசியமானது.

தமிழினவாதம் தன் சொந்த இனவாத அரசியலை, அதன் ஜனநாயக மறுப்பை, அதன் பாசிசப் போக்கை விமர்சிப்பதில்லை. மக்களின் விடுதலைக்காக தனது கடந்தகால மக்கள் விரோத அரசியலை சுயவிமர்சனம் செய்வதில்லை. தமிழினவாத அரசியல் பின்னணியில் புலியின் கடந்தகால மக்கள் விரோத அரசியலையும், அதன் பாசிச ஆட்சியமைப்பு முறையையும் கொண்டாடுகின்றவர்களே. இவர்கள் தான் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை பயணிக்கின்றனர்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான தமிழினவாத பாதயாத்திரையாகட்டும், யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்பிற்கு பொங்கிய தமிழினவாதிகளின் அரசியல் பின்னணியில் இருப்பது, தொடரும் பேரினவாத பௌத்த ஒடுக்குமுறைகளே. இப்படி இனவாதங்கள் - மதவாதங்கள் ஒன்றையொன்று சார்ந்து இயங்குவதுடன், மக்களை அதன் பெயரில் பிளக்கின்றது. மக்கள் ஐக்கியப்பட்டு வாழ்வதை பிளப்பதற்கே, இனவாதங்களும் - இனவாதப் போராட்டங்களும், அரசியலில் கூட்டாக முன்வைக்கப்படுகின்றது. இது தேர்தல் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல, நாட்டை விற்பதற்குமே. இலங்கை மக்களின் உழைப்பை வட்டியாக நிதிமூலதனத்திற்கு கொடுப்பதற்குமே.

இந்த யாழ் பல்கலைக்கழகத்தை தமக்கு வேண்டாம் என்று, தமிழினவாதிகள் எதிர்த்தனர். சிவகுமாரன் போன்ற தனிநபர் பயங்கரவாதிகளே, பல்கலைக்கழகம் வருவதற்காக முன்னின்று உழைத்த கைலாசபதி, யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பதவி ஏற்கக் கூடாது என்று கூறி குண்டுகளை வீசினான். இப்படி இலங்கையின் போலி சுதந்தரத்தின் பின் உருவான முதல் இரு பல்கலைக்கழகங்களுக்கும், 1979 இல் பல்கலைக்கழக அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

 

 

 

1986 இல் யாழ் பல்கலைக்கழக போராட்டத்தில் அரசியல் உந்துசக்தியாக இருந்தது தேசியக்கூறல்ல, சர்வதேசியக் கூறே. அதாவது தேசியவாத இடதுசாரியக் கூறு, 1986 இல் யாழ் பல்கலைக்கழக போராட்டத்தின் புரட்சிகர அரசியலை தீர்மானிக்கவில்லை, மாறாக அதில் பங்குபற்றிய சர்வதேசிய கூறுதான், போராட்டத்தில் புரட்சிகர அரசியலைக் கொண்டு வந்தது. புலிகள் அன்று தங்களுக்கு எதிரான "தீயசக்திகளே" போராட்டத்தைத் தவறாக வழி நடத்துவதாக கூறியது, இந்த சர்வதேசியக் கூறைத்தான். இதனால் தான் புலிகள் 1987 இல் இரயாகரனைக் கடத்தி காணாமலாக்கினர். 1988 இல் விமலேஸ்வரனை சுட்டுக் கொன்றனர். இந்தப் போராட்டத்தில் இணைந்து போராடிய தில்லை, செல்வி, மனோகரன்.. முதல், பலரைக் கடத்திச் சென்று சித்திரவதைகள் செய்து பின்னர் கொன்றனர்.

1970 களில் சண் தலைமையிலான மார்க்கிய-லெனினிய கட்சியில் ஏற்பட்ட பிளவுகளின் பின்னான, அரசியலின் நீட்சியே தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி. கார்த்திகேசன் மாஸ்ரரின் முன் முயற்சியால், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்தி உருவானதே இந்த தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி. ஒரு சர்வதேசிய கட்சியின் பின்னணியில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்திப் போராடவென 1975 செப்டம்பரில் உருவாக்கப்பட்ட முன்னணி தான், தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியாகும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுத் தூபி, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை குறிக்கின்றதா எனின் இல்லை. அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் முரணற்ற ஜனநாயக அரசியலையோ, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலையோ, முரணற்ற சுயநிர்ணயத்தை முன்னிறுத்தும் முரணற்ற ஜனநாயக அரசியலையோ.. எந்த நினைவுத் தூபியும் குறிக்கவில்லை. மாறாக நிறுவப்பட்ட நினைவுத் தூபி, ஒடுக்கும் வலதுசாரிய இனவாத அரசியலின் உள்ளடக்கத்தைக் கொண்டது. அது மக்களையே பிளக்கின்றது.

தமிழனைத் தமிழனாய் நின்று ஒடுக்கியவனின் - ஒடுக்குகின்றவனின் சுய அடையாளங்களையே, இடிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக நினைவுத் தூபிகள் குறிக்கின்றது. அதைப் பாதுகாக்கவே வெள்ளாளிய தமிழ் இனவாதம், பேரினவாதம் குறித்து கூச்சல் இடுகின்றது. பேரினவாதமானது இதை முன்னின்று இடிக்கின்றது என்பதால், நினைவுத் தூபிகள் எதுவும் ஒடுக்கப்பட்ட தமிழனைக் குறிப்பதல்ல. மாறாக தமிழனைத் தமிழன் ஒடுக்கியதையே குறிக்கின்றது.

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கிய இயக்க அதிகாரங்களையும், பாசிசமயமாக்கலையும் கேள்விக்குள்ளாக்கியது – 1986 இல் நடந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம். இந்தப் போராட்டங்கள் தன்னெழுச்சியானவையல்ல. திடீரென ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்திய அற்புதங்கள் எதுவும், இனவாதம் பேசிய யாழ் வெள்ளாளிய வலதுசாரிய தமிழ் சமூகத்தில் சாத்தியமற்றது. தன்னெழுச்சியாக போராட இடதுசாரியத்தை முன்வைத்து போராடும் பாரம்பரிய சமூகமாக – யாழ் சமூகம் இருந்ததில்லை.

 

கடந்த இயக்க வரலாற்றில் என்.எல்.எப்.ரி என்ற தமிழ் தேசியவாத இடதுசாரிய இயக்கத்துக்கு வெளியில், வலதுசாரிய தமிழ் இயக்கங்களில் இருந்து பெருமளவில் தமிழ் தேசியவாத இடதுசாரியத்துக்கு வந்தவர்கள் புளட்டிலிருந்தே. பிற வலதுசாரிய இயக்கங்களில் இருந்து மிகச் சிறியளவிலேயே, அதுவும் விரல்விட்டு எண்ணக் கூடிய தமிழ் தேசியவாத இடதுசாரிகளையே வரலாற்றில் காணமுடியும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE