பி.இரயாகரன் - சமர்

"களம்7" தமிழ் கலைகளின் தன்னம்பிக்கை தொடர்பாக எனத் தலைப்பிட்ட சிவசேகரத்தின் கட்டுரையை விமர்சனத்துக்குட்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

மேலும் படிக்க: களவாடிய இசையே கர்நாடக இசை

 பாரிஸில் உள்ள பலர் அண்மைக் காலமாக பல திரைப்படங்களை தயாரித்து வருவது அதிகரித்துச் செல்கிறது. இப்படத் தயாரிப்புகளில் 12.5.96 இல் வெளியாகிய அருந்ததியின் முகம் திரைப்படம் பலத்த பரபரப்பையும்,

மேலும் படிக்க: "முகம்" படம் ஒரு அகதியின் முகம் அல்ல

நீண்ட நெடிய பல துயரம் நிறைந்த எமது தேசிய விடுதலைப் போராட்டம் முன்னேப்போதையையும் விட ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆயிரம், ஆயிரம் மக்களும், இளைஞர்களும் விடுதலைக்காக தம்மை தியாகம் செய்ய, அதேவிடுதலையின் பேயரால் ஆயிரம்,

மேலும் படிக்க: எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க இராணுவ வாத அரசியலைக் கைவிடவேண்டும்!

புலம் பெயர்ந்த நாடுகளில் பல சிறுவர்கள் தமிழ் கல்வி நிறுவனங்களையும், சிறு சஞ்சிகைகளையும், ஒலி, ஒளி நாடாக்களையும் வெளியிட்டு தமிழ் கல்வியை நோக்கிய கவனத்தைச் செலுத்துகின்றனர். இந்த முயற்சியில் சிலர் இதை வியாபாரமாகவும், சிலர் தமது குறுகிய நோக்கிலும், பலர் பரந்த நோக்கிலும் செயற்படுகின்றனர்.

மேலும் படிக்க: புலம் பெயர்ந்த நாடுகளில் கற்பிக்கும் தமிழ் கல்வி தொடர்பாக.....

தேசவிடுதலைப் போராட்டம் அதன் போக்குகளில் மக்களின் துன்பங்கள் முடிவற்றுத் தொடர்கின்றது. பாசிச சிங்கள இனவெறி அரசு தமிழ் தேசிய இனத்தின் உயிர் மூச்சையே நசுக்கி அழித்துவிட கங்கனம் கட்டி பாரிய யுத்த முன்னெடுப்புக்களை முன்னெடுத்து வருகின்றது.

மேலும் படிக்க: இனவாதகோரமும், சிறுபாண்மைமக்களின் பாதையும்

வேலனை மத்திய மகாவித்தியாலைய பிரான்ஸ் பழைய மாணவர் சங்க 13.2.2000 இல் நடத்திய வருடந்த நிகழ்ச்சியில், "விஞ்ஞான வளர்ச்சி மனிதனின் அமைதியான வாழ்க்கையை பாதிக்கின்றதா?"

மேலும் படிக்க: விஞ்ஞானத்தை சமூகம் சரியாக கையளுகின்றதா?

மனித வராலாறு 60 லட்சம் வருடத்துக்குட்பட்டவை. ஆனால் மனித வரலாற்றை 2000 ஆண்டுகளாக காட்டுவது கிறிஸ்தவ ஆதிக்க பண்பாட்டு தொடர்ச்சியாகும். இயற்கையின் வரலாற்றை மறுத்த மனிதன்,

மேலும் படிக்க: 2000ம் ஆண்டு உலகம் அழிகிறது!

புலம் பெயாந்த இலக்கியம் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு கீழ்நிலைப் பாத்திரத்தை அடைகின்றதோ அந்தளவுக்கு மனித நடத்தைகளும் கேவலமாகின்றன. இலக்கியம் பேசுவதாக காட்டிக் கொள்ளும் இரண்டுநபர்கள் சந்திக்கும் போது அவர்கள் இலக்கியம் பேசுவதற்க்கு எதுவுமற்றவராகி விட்டதால்,

மேலும் படிக்க: கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை கோரி...

உலகப்பத்திரிகைகள், மக்கள் முன் டயானாவின் மரணம் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. இந்த வகையில் வீரகேசரி, ஈழநாடு, ஈழமுரசு, சரிநிகர், வெளி என அனைத்துப் பத்திரிகைகளும் ஒரே விதமான ஆறுதல் ஒப்பாரிகளை முன்வைத்தபோது தான்,

மேலும் படிக்க: யார் இந்த டயானா? ஒரு கவர்ச்சிக்கன்னி, ஒரு மொடலிஸ்ட், ஒரு பணக்கார சீமாட்டி, ஏகாதிபத்திய கலாச்சாரத்தைக் கோரிய பெண்

"தேசியம் ஒரு கற்பிதம்" என்ற நூலில் நிறப்பரிகை, அ.மார்க்ஸின் கருத்துக்களை வெளியில் எடுத்து இந்த சிறு நூல் மூலம் விமர்சித்துள்ளேன். அ.மார்க்சை தலைமையாகக் கொண்ட நிறப்பிரிகைக்குழுவால் முன்தள்ளப்படும் நவீன திரிபுவாதம், மற்றும் மார்க்சிய விரோதப் போக்குகளை நான் இப்புத்தகம் மூலம் கேள்விக்குள்ளாக்க முனைகின்றேன். அ.மார்க்சை அடிப்படையாகக் கொண்ட உயிர்ப்பு, மனிதம், அன்மைக்காலமாக சரிநிகர், மற்றும் ஐரோப்பாவில் வெளிவரும் சஞ்சிகைகள், மலர்களில் வெளியிடப்படும் அடிப்படை தேசியக் கருத்துகளுக்கும் இப்புத்தகம் பதிலளிக்கின்றது. அ.மார்க்சை தாண்டியது அல்ல இவர்களின் கோட்பாடு அ.மார்க்சை பின்பற்றி அதில் இருந்து கோட்பாட்டை முன்வைக்கும் இப்பிரிவுகள், தமது அன்னிய வாழ்நிலையுடன், எம்மண்ணிலும், புலம் பெயர்ந்த நாட்டிலும் உள்ள சூழ்நிலையில், மக்களுக்காகப் போராடுவதை விட்டு கலைந்து செல்ல முன்வைக்கும் கோட்பாடுகளே இவை.


எம்மண்ணிலும், புலம் பெயர்ந்த நாட்டிலும், இயக்கங்களால் சந்தித்த அனைத்து இழப்புக்கள், அழித்தொழிப்புகள், தோல்விகளை விட, நாம் இந்த மார்க்சிய விரோதத் திரிபுகளால் சந்தித்த சேதம் தான் தமிழ் ஈழப் போராட்டத்தினதும், இலங்கையின் வர்க்கப் போராட்டத்தினதும் மிகப் பெரிய இழப்பாகும்.


அ.மார்க்சை தலைமையாகக் கொண்ட இந்த திரிபு வாதிகளால் இந்தியாவைவிட அதிகம் இலங்கையில்தான் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று உளள் இலங்கை நிலையில் அ.மார்க்சையும், அவரின் சீடர்களின் செயற்பாடுகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செய்த துரோகத் தனத்தின் செயற்பாடுகள் மட்டும் இன்றி, ஏகாதிபத்திய தலையீட்டுக்குத் தேவையான கோட்பாட்டு உருவாக்கத்தை முன்னணி சக்திகளுக்குள் முன் வைத்து அதன் மூலம் ஏகாதிபததியத்துக்கு சார்பாக பிரச்சாரம் செய்வது என்பது இலங்கை மக்களால் பொறுத்து கொள்ளக் கூடியது அல்ல. அதை எதிர்த்துப் போராடும் பணியில் தான் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று ஒரு இடது சாரிக் கட்சி சரியான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து தமிழ், சிங்கள,முஸ்லீம், மலையக மக்கள் பற்றிய சரியான நிலைப்பாட்டை முன்வைத்திருப்பின், ஒருக்காலும் இன்று நடக்கும் தேசிய இன முரண்பாடு ஏற்பட்டிருக்காது. மாறாக வர்க்கப் போராட்டம் நடந்திருக்கும். இதற்கு யாரும் வெளிச்சம் போட்டுக் காட்டத் தேவையில்லை. இனவாதச் சக்திகளின் சொந்த நலன்களைப் பாதுகாக்கவும், ஏகாதிபத்தியச் சுரண்பலை மூடிமறைத்துப் பாதுகாக்கவும் தேவைப்பட்டதே இலங்கை இன முரண்பாடு.

மேலும் படிக்க: ஏன் ஒரு சோசலிச நாட்டை எடுப்பான் இன்று உலகில் தேசிய இன முரண்பாட்டின் இருப்பிடமாக உள்ள ஒரு இலங்கையை ஆராய்வோம்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More