பி.இரயாகரன் - சமர்

book _5.jpgஎதார்த்தத்தில் இன்று நிலவிவரும் நிலப்பிரபுத்துவக் குடும்பம் மற்றும் ஏகாதிபத்தியக் குடும்பம் மற்றும் அவற்றின் சிதைவுகளையே வரலாற்றின் தொடர்ச்சியாகப் பார்த்தல், விளக்குதல் தொடர்கின்றது. சாதாரண மக்களிடம் இப்படிப்பட்ட விளக்கம் இருந்தால் அதைப் போராட்டத்தினூடாக மாற்ற முடியும். ஆனால் சமூக அக்கறையை வெளியிடுபவர்களும் இதன் பாதிப்பில் நீடிக்கின்றனர். புரட்சிக்காக இயங்கும் புரட்சிகரக் கட்சிகளில் கூட பின்தங்கிய மக்கள் கூட்டங்களுக்குள் வேலை செய்ய செல்கின்றபோது, அங்கு இன்னும் நிலவிவரும் குழுமணங்கள் போன்ற அல்லது அதன் எச்சச் சொச்சத்தை அநாகரிகமாகப் பார்ப்பதும், அதன் நல்ல பண்புகளை ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தில் திருத்த முற்படுவது காணமுடிகின்றது.

மேலும் படிக்க: புணர்ச்சியும் குடும்பமும்

book _5.jpgபெண்கள் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தைப் பெண் ஒடுக்குமுறையில் இருந்தே தொடங்கினர். முதல் வேலைப்பிரிவினை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டபோது பெண் அடிமைத்தனமும், முதல் வர்க்கச் சுரண்டலும் பெண்ணுக்கு எதிராக ஏற்பட்டது. அந்த நாள்முதலே பெண்ணின் போராட்டம் ஆணாதிக்கத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்டது.


ஆரம்பத்தில் பெண் - ஆண் சார்ந்த சமுதாயப் போராட்டம் என்பது இயற்கைக்கும், மற்றைய உயிரினத்துடனும் உயிர் வாழ்வதற்கானதாகப் பெண்ணின் தலைமையிலான போராட்டமாக இருந்தது. இதன் பின்னால் குழந்தையின் உயிர் வாழ்தலின் பாதுகாப்பு கருதி, பெண்கள் தமது குழந்தைகளுடன் பாதுகாப்பு இடத்தில் தங்கி தற்காப்பில் நிற்க, பெண் மற்றும் குழந்தைகள் அற்ற ஆண்கள் வேட்டையாடவும் உணவு சேகரிக்கச் சென்ற வரலாற்றில், உணவின் உரிமையையும், உபரியையும் தனதாகக் கண்ட ஆண், அதைப் பெண்ணுக்கு நிபந்தனைக்கு உள்ளாக்கி கொடுக்கத் தொடங்கினான். அத்துடன் வேட்டைக்குச் சென்ற ஆண் தனது பொருளாதார ஆதிக்கத்தாலும், பொருளாதார, பண்பாட்டுக் கலாச்சாரத்தாலும், பெண்ணின் பணிகளை ஆண் வரையறுக்கத் தொடங்கினான்.

மேலும் படிக்க: பெண் எப்படி அடிமையானாள்?

book _5.jpgமனித முரண்பாடுகள் இயற்கை தோற்றுவித்தவையல்ல. இயற்கையில் நீ சிறியவன் - நான் பெரியவன் என்றோ, ஏழை, பணக்காரன் என்றோ, ஆண் - பெண் என்றோ... பிளவுகள் அற்ற பரிணாமத்தின் தேர்வில்; மனிதன் இயற்கையைத் தனது உழைப்பைக் கொண்டு மாற்றத் தொடங்கியவுடன், உற்பத்தியின் வேறுபட்ட தன்மையுடன் கூடிய வேலைப் பிரிவினையும், பிளவும், மனித வளர்ச்சியை ஒட்டிய இயற்கைப் பிளவுகளும் வளர்ச்சி பெற்றது. இந்த இயற்கையின் மீதான உழைப்பினால் ஏற்பட்ட, உற்பத்தியின் வளர்ச்சியினால் ஏற்பட்ட பிளவுகள், இயற்கையையும் மனிதனையும் அடிமைப்படுத்த, சமுதாயத்தின் இயற்கைப் பிளவுகள் மனிதப் பிளவுகளாகி அடிமைத்தனத்துக்கும், சுரண்டலுக்கும் வித்தி;ட்டன.

மேலும் படிக்க: பெண் அடிமைத்தனமும் ஆணாதிக்கத்தின் வளர்ச்சியும்

book _5.jpgபெண் மீதான ஆணின் அடக்குமுறையே முதல் வர்க்க ஒடுக்குமுறை என்பதை முதலில் கூறியது ஏங்கெல்ஸ்சே! எல்லா மனித அடக்குமுறையின் முதல் மூலம் இந்த வர்க்க அடக்குமுறையில் தோற்றம் பெற்றது. இதை முதன் முதலில் கூறியதும், இதற்கு எதிராக முதலில் போராடியதும், மார்க்சியம் மட்டும்தான். தொடர்ந்து இதற்கு எதிராகப் போராடும் ஓர் அரசியல் பொருளாதார, பண்பாட்டு வடிவமாக உள்ளதும் மார்க்சியம் மட்டும்தான். பெண்ணின் உழைப்பு, வேலைப் பிரிவினையூடாக ஆண்களால் சூறையாடப்பட்ட நிலையில், அந்த வர்க்கப் பகையை உள்ளடக்கிய ஒரு வர்க்கப் போராட்டத்தை, ஆண் சார்ந்து சமூகமயமாகியுள்ள ஆணாதிக்கத்துக்கு எதிராக நடத்தப்படாமல் பெண் விடுதலையடைய முடியாது. ஆணாதிக்கத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டம் பெண்ணின் விடுதலைக்கான முன் நிபந்தனையாகும்.

மேலும் படிக்க: முதல் வர்க்க ஒடுக்குமுறை மீது மார்க்சியம்...

book _5.jpgஆணாதிக்கத்துக்கு எதிராக மார்க்சியம் போராடவில்லை அல்லது கவனமெடுக்கவில்லை என்று கூறும் மார்க்சியம் அல்லாத பெண்ணியவாதிகளின் பெண்ணியத்தையும், மார்க்சியத்தின் போராட்ட வரலாற்றையும் இந்த நூல் ஆய்வு செய்கின்றது. மார்க்சியம் பெண்களின் பிரச்சனையை ஒட்டி கவனம் எடுக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை என்பதைத் தகர்ப்பதிலும், பெண்ணியத்தின் பின், அரங்கேறும் ஆணாதிக்கச் சலுகைகளையும் இந்த நூல் அம்பலப்படுத்துகின்றது. இதேபோல் தேசியம், மதம், நிறம், காலனித்துவம் போன்றவற்றிலும் அதாவது நேரடி வர்க்கப் போராட்டம் தவிர்ந்தவற்றில் மார்க்சியம் கவனம் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எப்படி வெறும் அபத்தங்களோ, அதேபோலத்தான் பெண்ணியமும். வர்க்கப் போராட்டம் என்பது சமூக இயக்கத்தின் அனைத்துத் துறையிலும் உள்ளடங்கியது என்பதை மார்க்சியம் உட்கிரகித்தமையால்தான் அது வெல்ல முடியாத மக்களின் போராட்டத் தத்துவமாகவுள்ளது.

மேலும் படிக்க: முன்னுரை : ஆணாதிக்கமும் பெண்ணியமும்

இலண்டன் தமிழர் நலன்புரிச்சங்க கிழக்கும் மேற்கும் மலரிலுள்ள சிறுகதைகள் பற்றி சுருக்கமாக சில வரிகள்.....

மேலும் படிக்க: கிழக்கும் மேற்கும்

ஜெர்மனில் பெர்லின் நகரில் நடந்த (2000-08-05) பெண்கள் சந்திப்பில், பெண்கள் தொடர்பான விவாதம் ஆர்வம் ஊட்டும் வகையில் ஒரு விவாதமாக மாறியது. இங்கு வைக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான கருத்துகளை ஒட்டிய விவாதத்தை வளர்த்து எடுக்கும் வகையில்,

மேலும் படிக்க: மார்க்சிய பெண்ணிய மீதான கேள்விகள் மேல்

இன்று திரைப்படம், வீடியோ படம் முதல் ஆவணப்படங்கள் வரை ஆளும் வர்க்க கருத்துகளை பாதுகாக்கும் வரையறைக்குள் இயங்குகின்றன. இந்த ஒரு நிலையில் இதை மறுத்து உலகளவில் சமுதாயத்தின் விடுதலையை நோக்கிய வெளியீடுகள் அற்ற நிலையில்,

மேலும் படிக்க: தீக்கொழுந்து திரைமுழக்கம் பற்றிய சில கருத்துக்கள்

இயற்கையை நாம் புரிந்து கொள்ளாமல் நாம் உயிர் வாழ முடியாது. உயிர் வாழ்தலுக்கு இயற்கை அவசியமாகின்றது. இன்றைய நவீன அறிவியல் மனித வாழ்வையே இயற்கை வாழ்வாக விளக்குகின்றது. இதை அடிப்படையாக கொண்டு உயிர் வாழ்வதற்கான இயற்கையை அழிப்பதன் மூலம்,

மேலும் படிக்க: இயற்கையும் உயிர்வாழ்தலும்

 தேசியத்தை ஒடுக்கி அழிக்க முனையும் உலகமயமாதல் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட, எமது போராட்டத்தை சனநாயகப்படுத்துவது நிபந்தனையாகும்.

 

புலிகளின்

 

மேலும் படிக்க: யுத்தம் சமாதானம் எதை நோக்கி செல்கிறது

"துயரம் மலையளவுதான், ஆனால் மௌனம் காத்தல் சாத்தியம் இல்லை"" என தலைப்பிட்டு ராதிகா குமாரசாமி சரிந.pகர் 118இல் எழுதியுள்ள விமர்சனம் தலையங்கத்திற்கு எதிராகவே உள்ளது.

மேலும் படிக்க: பெண்கள் ஆண்களின் அடிமை அல்ல, பெண்கள் போராடவும் தலைமை தாங்கவும் தகுதியுடையவர்களே.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More