பி.இரயாகரன் - சமர்

book _5.jpgஜனநாயகம் மறுக்கப்பட்ட மண்ணில் இருந்து வந்தோரும், வராதோரும் இணைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் பிரச்சனையில் இருந்து நழுவிய, அதேநேரம் அதற்கு எதிரான புலம் பெயர் இலக்கியத்தைப் படைப்பாக்கினர், படைப்பாக்குகின்றனர். இதேபோல் நாட்டிலும் எந்தவிதத்திலும் முரண்படாத போக்குகளைக் கொண்டு சமமாகவே வளர்ச்சி பெற்றன. இதன் போக்கில் பல இலக்கியங்களை, சில எழுத்தாளர்கள் பாலியல் பிரச்சனை மீது அதிகளவு எழுதத் தொடங்கினர். இன்று அதுவே இலக்கியம் என்றளவுக்கு விடயம் மாறிச் செல்கின்றது. பாலியல் பிரச்சனைகளை இவர்கள் எப்படி புரிந்து கொள்கின்றனர் என்பது முதல், பாலியல் சிக்கல்களை ஆராய்வதும் முக்கியமானதாகின்றது.

மேலும் படிக்க: இலக்கியமும் பாலியலும்

book _5.jpgபுற உலகின் வெளிப்பாடான இயக்கத்துக்கு வெளியில் மனிதச் சிந்தனை தனக்குள், தன்னளவில் வெளிப்படுவதில்லை. புற உலகில் நடக்கும் மாற்றத்தையொட்டி மனிதச் சிந்தனை அனைத்துத் துறைகளிலும், புற உலகு மீதான வெளிப்பாடுகளைப் புரிந்து கொண்ட விதத்தில் மனிதன் வெளிப்படுத்துகின்றான், சிந்திக்கின்றான்;. இதைத் தாண்டிய சிந்தனைத் தளம் கிடையவே கிடையாது.


இந்த வகையில் பாலியல் பற்றிய அறிவும், அதன் வெளிப்படுத்துதலும் புற உலகின் வெளிப்பாடாகவே மனிதனுக்குள் வெளிப்படுகின்றது. இது மாறுபட்ட சமுதாயத்தின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப மனிதச் சிந்தனையில் வெளிப்படுகின்றது. இந்த வெளிப்பாடுகளின் விளைவுகள், குறித்த பாலியல் நடத்தை மீது மட்டும் தொழிற்படுவதில்லை. மனிதனின் புறச் சூழல் பாதிப்பின் விளைவாக வெளிப்படும் பாலியல் நடத்தைகள் எல்லாம் மாறிக் கொண்டிருப்பதுபோல் மாறிய வண்ணம் நீடிக்கின்றது.

மேலும் படிக்க: பாலியலை ஒட்டிய மனித முரண்பாடுகள்

book _5.jpgபெண்ணை அடிமைப்படுத்திய தனிச்சொத்துரிமை ஆணாதிக்கப் போக்கில் பழமொழிகள் உருவாகின்றன. இவை சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகின்றன. இந்தப் பழமொழிகள் ஆணாதிக்க அமைப்பின் ஒழுக்கமாகின்றது. இதை ஆராய்வோம்.


''விதவை எதிரே வருவது அபச குணம்."37


இந்த ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் திருமணமே அவளின் உயிர் வாழும் தகுதியை அங்கீகரிக்கின்றது. சாதிய ரீதியாக, தாழ்ந்த சாதி மக்கள், உயர் சாதி தெருவில் நடப்பது எப்படி குற்றமோ, அதுபோல் விதவைக்கும் நிகழ்கின்றது. ஆண் அற்ற பெண், விதவை நிலையில் வீட்டில் அடைந்து வாழ வேண்டும் என்ற, ஆணாதிக்கச் சமூக ஒழுக்கத்தில் இருந்து இந்தப் பழமொழி சமூக நடைமுறை விளக்கமாகின்றது.

மேலும் படிக்க: ஆணாதிக்கப் பழமொழிகள்

book _5.jpgஆணாதிக்கம் சமூகப் பொருளாதார ரீதியாகப் பலம்பெறும்போது, மொழியிலும் அதன் செல்வாக்கு ஆழமாக ஊடுருவுகின்றது. இனவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு, பால்வேறுபாடு வேறு பிரிந்த ரீதியில் இனம் கண்டு விளக்குவதற்கு அப்பால், ஆணாதிக்க அடிமைத்தனத்தில் இருந்து விளக்குவதாக மொழியுள்ளது. மொழி பாலியல் ரீதியாக வரையறைக்கு உட்பட்டும், வரையறைகளை மீறியும் பால்தன்மையை வெளிப்படுத்துகின்றது. மொழியின் பயன்பாடு, அதன் உள்ளடக்கம், வெளிப்பாடு தொடர்பாக ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்.

மேலும் படிக்க: இலக்கியத்தில் ஆணாதிக்கமும் பெண்களின் போராட்டங்களும்

book _5.jpgஇந்து மதம் சார்ந்து உருவான ஆண் - பெண் உறவுகள் வக்கரித்தே கிடக்கின்றன. அவற்றில் சில அக்காலத்துக்கே உரிய எதார்த்தச் சமுதாயத்தைப் பிரதிபலித்து இருக்கும். அதேநேரம், கால்நடைகளை மேய்த்தபடி புலம்பெயர்ந்து, இந்தியா வந்த பார்ப்பனர்கள், தமது மிருக இனவிருத்தியில் பாலியல் உறுப்புகளை நலமடித்த வழியில், மனிதப் படைப்புகளை உருவாக்கினர். அப்போது இங்கு இருந்த சிறுவழிபாடுகள் மீது பார்ப்பனியமும், பின்னால் இந்து மதமும் ஊடுருவி அழித்தபோது, சிறுவழிபாட்டுக் கடவுள்களை உறவுமுறைக்குள் இந்து மதம் கொண்டுவந்தது. இந்த உறவுகள், பிறப்புகள் எல்லாம் வக்கரித்த ஆணாதிக்க எல்லைக்குள், பாலியலை விகாரப்படுத்தி, உருவாக்கப்பட்ட கடவுள்கள் எல்லாம், ஆணாதிக்க காமவிகாரத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பிறப்புகளின் பொய்மைகள் அறிவியல் முன்பு அருகதையற்ற நாற்றத்தைக் கொண்டவை. ஆனால் எதார்த்தம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சார்ந்த விகாரத்தை எல்லாம் மனிதனின் வழிபாடாக்கும் நிலையில், இதைத் தொகுத்து அம்பலப்படுத்துவதும், ஈவிரக்கமற்ற வகையில் நிர்வாணமாக்கவேண்டியதும் அவசியமாகிவிடுகின்றது.

மேலும் படிக்க: இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள்

book _5.jpgசாதி ஒடுக்குமுறை பற்றி இன்று பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், பாட்டாளிவர்க்கம் மட்டுமே இதைச் சரியாக இனம் காண்கின்றது. இதுபற்றி நாம் பிறிதொரு நூலில் ஆராய்வோம். ஆனால் சாதியை உருவாக்குவதில் குடும்பத்தின் பங்கு என்ன என்பது இப்புத்தகத்தின் குறிப்பான விடயமாகும். உயர்சாதி ஆண்களின் ஆணாதிக்கத்தை இந்துமதம் பாதுகாத்தபடிதான், சாதியமைப்பில் பாலியல் விளக்கத்தையும் கொடுத்தது.

மேலும் படிக்க: இந்து ஆணாதிக்கப் பார்ப்பனியத்தில், சாதி வடிவில் இறுகிய குடும்பத் தன்மைகள்

book _5.jpgநாம் பெண்ணின் உரிமை, கடமை, மற்றும் ஆணாதிக்கம் தொடர்பாக ஆராய வௌ;வேறு வரலாற்று, இருகட்டங்களின் ஆதாரங்களில் இருந்து பார்ப்போம்.


மனுதர்மத்தைப் பெண்கள் மீது ஆணாதிக்கப் பார்ப்பனியம் திணிக்கும்முன் சமுதாயம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பது எம்முன் கேள்வியாக உள்ளது அல்லவா? ~அதர்வண வேதம்| பெண்கள் உபநயனம் செய்யவும், சிரௌத்த சூத்திரங்களைக் கூறவும், வேத மந்திரங்களைப் பயின்றதையும் உறுதி செய்கின்றது. பாணினியின் ~அஷ்டாத்யாயில்| பெண் குருகுலத்தில் பயின்றதை உறுதி செய்கின்றது. பதஞ்சலியின் ~மகாபாஷ்யத்தில்| பெண்கள் பயிற்றுவிக்கும் குருவாக இருந்ததை உறுதி செய்கின்றது. பெண்கள் தத்துவவியல், சமயம் போன்றவற்றில் ஆண்களுடன் விவாதம் செய்ததை வரலாறு நிறுவுகின்றது.

மேலும் படிக்க: மனுவுக்கும், கௌடில்யர் காலத்துக்கும் இடையிலான ஆணாதிக்க வளர்ச்சியை ஒப்பிடல்

book _5.jpg2500 வருடம் பழமை வாய்ந்த புத்தமதம் பற்றிய மதம் சார்ந்த தமிழ் மூல நூல்கள் இன்மையால், கிடைத்த தரவுகளில் இருந்தே கூட புத்தமதம் ஓர் ஆணாதிக்க மதமாக இருப்பதைக் காணமுடியும். புத்தமதத்தை ஆணாதிக்கமற்ற மதமாகக் காட்ட முனையும் எல்லாப் போக்குகளின் பின்பும், பிழைப்புத்தனமே எஞ்சிக் கிடக்கின்றது.

மேலும் படிக்க: ஆணாதிக்கப் புத்த மதமும் பெண்ணும்

book _5.jpgஆணாதிக்கத்தின் இன்னுமொரு வடிவமே முஸ்லிம் மதமாகும். வரலாற்று ஓட்டத்தில் கிறிஸ்தவத்துக்குப்பின் முஸ்லிம் மதம் உருவான போது, அக்காலத்துக்கே உரிய கிறிஸ்தவத்தை விட முற்போக்கான பாத்திரத்தை முஸ்லிம் மதம் ஆற்றியது. இது இருந்த சமூகத்தின் சில மூடப்பழக்க வழக்கங்கள் மீதான மாற்றத்துடன் சமுதாயத்தில் சில முன்னேறிய சீர்திருத்தத்தை முன்தள்ளியது. இது அக்காலத்துக்கே உரிய பல தீர்வுகளைச் சீர்திருத்தத்தினூடாக முன்வைத்தது. இந்த வகையில் பெண்கள் மீது மதத்தை நிலைநிறுத்தும் வடிவில் சில சீர்திருத்தத்தையும் முன்வைத்தது. கிறிஸ்தவம் தோன்றிய போது உந்தப்பட்ட சமூக ஆற்றலைப் பின்னால் அவை இறுகிய இயங்கியல் அற்ற இறுக்கமான ஒழுக்கமாக மாறிய போது, வளர்ச்சி இறுகி ஜடமானது.

மேலும் படிக்க: ஆணாதிக்க முஸ்லிம் மதமும் பெண்ணும்

book _5.jpgசமுதாயம் உற்பத்தி என்ற அடிக்கட்டுமானம் சார்ந்து ஆணாதிக்கமாக மாறிய போதே, பெண்ணின் அனைத்து அடிப்படைக் கூறுகளும் அதையொட்டி மாறின, மாறிச் செல்கின்றன. இதில் சிறுவழிபாடு முதல் பெரு வழிபாடு வரை ஏற்றத்தாழ்வான ஆணாதிக்க வடிவத்தைக் கொண்டு கடவுள்கள் புனர் உற்பத்தி செய்யப்பட்டன. பெண் தெய்வங்கள் மனிதச் சமுதாயம் போல், ஆண் தெய்வங்களின் மனைவிமாராக மாற்றப்பட்டனர் அல்லது உறவுமுறை ஏற்படுத்தப்பட்டு ஆண் - பெண் உறவு வழியில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் படிக்க: மதங்களும் பெண்ணும்

book _5.jpgஎதார்த்தத்தில் இன்று நிலவிவரும் நிலப்பிரபுத்துவக் குடும்பம் மற்றும் ஏகாதிபத்தியக் குடும்பம் மற்றும் அவற்றின் சிதைவுகளையே வரலாற்றின் தொடர்ச்சியாகப் பார்த்தல், விளக்குதல் தொடர்கின்றது. சாதாரண மக்களிடம் இப்படிப்பட்ட விளக்கம் இருந்தால் அதைப் போராட்டத்தினூடாக மாற்ற முடியும். ஆனால் சமூக அக்கறையை வெளியிடுபவர்களும் இதன் பாதிப்பில் நீடிக்கின்றனர். புரட்சிக்காக இயங்கும் புரட்சிகரக் கட்சிகளில் கூட பின்தங்கிய மக்கள் கூட்டங்களுக்குள் வேலை செய்ய செல்கின்றபோது, அங்கு இன்னும் நிலவிவரும் குழுமணங்கள் போன்ற அல்லது அதன் எச்சச் சொச்சத்தை அநாகரிகமாகப் பார்ப்பதும், அதன் நல்ல பண்புகளை ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தில் திருத்த முற்படுவது காணமுடிகின்றது.

மேலும் படிக்க: புணர்ச்சியும் குடும்பமும்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More