பி.இரயாகரன் - சமர்

ஒடுக்கப்படும் இனங்களுக்கும், ஒடுக்கப்படும் சாதிகளுக்கும் சம்மந்தமில்லாத இன்றைய யாழ்ப்பாணத்து அரசியல் நிகழ்ச்சிநிரலானது, ஒடுக்கும் தரப்புக்காக ஒடுக்கப்பட்ட மக்களை பலியிடுகின்றது.

அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள - தமிழ் மக்களின் விடுதலைக்குப் பதில், பிளவுவாதமும் பிரிவினைவாதமும் தொடர்ந்து விதைக்கப்படுகின்றது. சாதியவாதங்கள், பிரதேசவாதங்கள், இனவாதங்கள், மதவாதங்கள்.. அனைத்தும், மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கான ஆயுதங்களே.

மேலும் படிக்க: மணிவண்ணனும் அருண் சித்தார்த்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே

பெண்ணினது பாலியல் சுதந்திரமே "பெண்ணியம்" என்று கூறக் கூடிய "பெண்ணியக்" கோட்பாடுகள் இருக்கின்றது. கட்டற்ற பாலியல் சுதந்திரம், காதல் செய்யும் சுதந்திரம். உட்பட அனைத்தையும், ஆணுக்கு நிகராக பெண் பெற்றுவிடுவதால் அது "பெண்ணியமாகி" விடாது. ஆணாதிக்கமானது ஆணுக்கு ஏற்றாற் போல் பெண்ணையும் தகவமைத்துக் கொண்டு இயங்கக் கூடியது. தனிச்சொத்துடமையிலான ஆணாதிக்கமானது, பெணணியப் பெயரிலும் நீடிக்கக் கூடியது.

மேலும் படிக்க: "பெண்ணியம்" கட்டற்ற பாலியல் சுதந்திரத்தையா முன்வைக்கின்றது!?

எந்தவொரு தனிப்பட்ட ஆண், பெண் உறவு குறித்தும், ஒழுக்கம் குறித்துமானதல்ல, "பெண்ணியத்தின்" பெயரிலான ஆணாதிக்க விவகாரம். அது "பெண்ணியத்தின்" பெயரிலான முதலாளித்துவ கோட்பாடு சார்ந்தது.

யாரும் தனிப்பட்ட ஒருவரின் பாலியல் "நடத்தையை" கேள்வி கேட்ட முடியாது. "ஒழுக்கம்" குறித்து பேசவும் முடியாது. இவை அனைத்தும் இந்தச் சமூகத்தில் இருப்பவையே. அதாவது ஆணாதிக்க குடும்ப அமைப்பில் தனிப்பட்ட ஆணின், பெண்ணின் "நடத்தையை" எப்படி கேள்வி கேட்கவும் விமர்சிக்கவும் முடியாதோ, அதே போல் தான் எல்லா வகையான மனித உறவுகளுக்கும் இது பொருந்தும்;. இங்கு கேள்வி கேட்பது தொடங்கி அதை பாதுகாப்பது வரை, இத்தகைய முதலாளித்துவ ஆணாதிக்க உறவுக் கோட்பாடுகளின் மீதேயொழிய, தனிப்பட்ட நபர்களின் நடத்தை மீதல்ல.

மேலும் படிக்க: "குரல் கொடுக்கும் பெண்களே குறிவைத்துத் தாக்கப்படுகிறார்களா"!?

2009 இற்குப் பின் அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டங்களுக்கும், போராட்டங்களில் முன்னின்றவர்களின் வீடுகளுக்கும் கழிவு ஓயில் ஊற்றப்பட்டது. இதையடுத்து திடீர் "கிறிஸ்" மனிதன் தோன்றி, குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. இதன்பின் காணாமல் போன கழிவு ஒயில் இன்று, இந்து வெள்ளாளியக் கலாச்சாரமாக நல்லூரில் காட்சி அளித்திருக்கின்றது.

குறிப்பாக நல்லூருக்கு வழிபட வரும் முதியவர்கள் தங்கள் உடல் இயலாமையால் அமருகின்ற, சாய்கின்ற இடங்களை குறிவைத்து, கழிவு ஒயில்களை ஊற்றி இருக்கின்றார்கள் கலாச்சாரக் காவலர்கள்.

மேலும் படிக்க: நல்லூர் கோயிலில் ஊற்றிய கழிவு ஒயிலும் - இந்துத்துவ வெள்ளாளிய மனப்பாங்கும்

வாக்களிக்கும் தேர்தல் முறை என்பது, அரசுகளை யார் ஆள்வது என்பதைத் தீர்மானிப்பதற்கே. அதற்காக மக்களை வாக்குபோட வைத்து தேர்ந்தெடுக்கும் முறைமையையே "ஜனநாயகம்" என்கின்றனர். மக்கள் வாக்குகள் போட்டு ஆள்பவரை தேர்ந்தெடுத்தாலும், அரசு என்பது மாற்ற முடியாத வர்க்க சர்வாதிகாரத்திலானது. தேர்தல் மூலம் ஆள்பவர்களை (முகத்தை) மாற்றலாம், வர்க்கங்களுக்கு இடையில் சமரசத்தை (சீர்திருத்தத்தைச்) செய்யலாம், வர்க்க சர்வாதிகாரத்தை தேர்தல் வழியில் மாற்ற முடியாது.

அரசு குறித்த இந்தக் கண்ணோட்டம் மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஓன்று. இதனால் தான் வர்க்கப் போராட்டம் மூலமே வர்க்க சர்வாதிகாரத்தை மாற்ற முடியும் என்று, மார்ச்சியம் முன்வைக்கின்றது.

மேலும் படிக்க: இந்திய கம்யூனிஸ்டுகளும் தேர்தலும்

"குடும்ப வரையறைக்குள் தான் ஆண் பெண் உறவு இருக்க வேண்டும்" என்று நான் (இரயாகரன்)  சொன்னதாக, கற்பனையில் "பெண்ணியம்" பேசும் சில பெண்கள் கதையளக்கின்றனர். எனது விமர்சனம் இதற்கு எதிராக "நிலவும் ஆணாதிக்க குடும்ப அமைப்பையே கேள்விக்குள்ளாக்கும் போது", தன்னோடு பாலியல் உறவில் பெண்கள் இருந்ததாக மயூரனாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட "பெண்ணிய" கண்ணோட்டத்தையும் கேள்விக்குள்ளாக்கி விமர்சிக்கின்றது. 

இப்படி இருக்க "குடும்ப வரையறைக்குள் தான் ஓர் ஆண் பெண் உறவு இருக்க வேண்டும் என்று நீங்கள் (இரயாகரன்) கூறுவதே மிகப்பெரிய தவறு" என்று நான் சொல்லாத ஒன்றைச் சொல்லி கருத்தை திரிப்பதன் மூலம், "பெண்ணியத்தின்" பெயரில் மயூரனும் - இதில் சம்மந்தமாக்கப்படும் பெண்களின் பாலியல் உறவு முறையை மறைமுகமாக ஆதரிக்க முற்படுகின்றார்.

இதற்கு "லைக்குகள்" போட்டு எழுதும் "பெண்ணியல்வாதிகள்", எதை வைத்து எதற்கு லைக்குகளை போடுகின்றனர்?!

எனது விமர்சனத்தில் "குடும்பம் என்ற ஆணாதிக்க அமைப்புமுறையில் பாலியல் எப்படி நோக்கப்படுகின்றதோ, அதேபோன்றதே. பெண் பாலியலுக்கு இணங்கிவிட்டால், ஆண் பெண் நடத்தையில் கேள்விக்கு இடமில்லை. அதை சமூக நோக்கில் கூட கேள்வி கேட்கக் கூடாது. இது தான் "முற்போக்கு பெண்ணியம்" என்று கூறுமளவுக்கு நடைமுறையற்ற அரசியலும் இலக்கியமும் சீரழிந்து இருக்கின்றது" என்று கூறி, நிலவும் ஆணாதிக்க குடும்ப அமைப்பையும் சேர்த்து விமர்சித்து இருக்கின்றேன்.

மேலும் படிக்க: "குடும்ப வரையறைக்குள் தான் ஆண் பெண் உறவு.." இருக்க முடியுமா?

"திருமணம் செய்வதாக எவருக்கும் நான் வாக்களித்ததில்லை" என்று கூறும் மயூரன், தனது பாலியல் நடத்தையை "பெண்ணியம்" என்கின்றார். இவர் பெண்ணியம் குறித்து கட்சி சார்பாக பெண்களுக்கு போதித்தது, இத்தகைய பாலியல் நடத்தையையே. தனது பாலியல் வேட்டைக்கு கட்சியையும், கட்சிக்கு வந்த பெண்களையும் பயன்படுத்தி இருக்கின்றார் என்பது வெளிப்படையான உண்மை. இதை மறுத்து "பெண்ணியம் - தனிமனித சுதந்திரத்தின்" பெயரில்  நியாயப்படுத்த "பெண்ணியல்வாதிகளின்" ஒரு பகுதியினர் தயாராகவே இருக்கின்றனர்.

மேலும் படிக்க: போலிப் பெண்ணியல் வாதிகளும் "பெண்ணியம்" பேசும் மயூரனும்

அண்மைக் காலங்களில் செய்திகளில் பரபரப்பாகும் ஒடுக்கும் இரு தரப்புகளின் முரண் அரசியல், ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்தை மீண்டும் படுகுழிக்குள் இட்டுச் செல்ல முனைகின்றது. குறிப்பாக அருண்; சித்தார்த்தன் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் ஒரு தரப்புக்கு சார்பாக முன்னிறுத்தி, மற்றொரு ஒடுக்கும் தரப்பை எதிர்கின்ற அரசியல், எந்த வகையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பானதல்ல.

இதை அரசியல் ரீதியாக விமர்சிப்பது, போராடுவது அவசியமானது. குறிப்பாக அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களினதும் விடுதலையை முன்னிறுத்தி, அனைத்து ஓடுக்கும் தரப்பை எதிரத்;தாக வேண்டும். இதற்கு மாறாக ஒடுக்கும் தமிழினவாதமானது ஜனநாயக மறுப்பிலும் - அடாவடித்தனத்திலும் இறங்கி இருக்கின்றது.

அனுமதி பெறாத இடத்தில் போராட்டம் என்று, அதிகாரத்தை தூக்கிக் கொண்டு களத்தில் இறங்குகின்றது. இதைத்தான் இலங்கை அரசு பல்வேறு போராட்டங்களின் போது செய்தது, செய்கின்றது.

மேலும் படிக்க: தமிழினவாதிகளினதும் - அருண் சித்தார்த்தனினதும் அரசியல் யாருக்கானது?

மறைமுகமாகவோ, நேரடியாகவோ தி.மு.கவை வெல்ல வைத்தல் பற்றி, பாசிச எதிர்ப்புச் சக்திகள் மத்தியில் பேசப்படுகின்றது. இதே போன்று நேரடியாகவும், மறைமுகமாகவோ பாசிச பா.ஜ.கவை தேர்தல் அரசியல் மூலம் பலப்படுத்தும், தமிழகத்தில் பா.ஜ.க.வை அதிகாரத்துக்கு கொண்டுவரும் பல்வேறு புறநிலைச் சக்திகளையும், தேர்தலின் மூலம் தோற்கடிக்க வேண்டும் என்று பாசிச எதிர்ப்பு சக்திகளால் கோரப்படுகின்றது.

மேலும் படிக்க: பாசிச பா.ஜ.கவை தேர்தல் மூலம் தோற்கடிக்க முடியுமா!?

இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்வைக்காது, கடந்தகாலம் குறித்த இன்றைய கண்ணோட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்திருப்பதில்லை. இது போன்று கடந்தகால சாதிய மரபு மீறல்களை இன்று முன்வைக்கும் போது, முன்வைப்பவர்கள் எத்தகைய சிந்தனைமுறையில் இருந்து ஏன் எதற்காக முன்வைக்கின்றனர்? வெள்ளாளிய சமூக அமைப்புக்கு எதிரான சாதியொழிப்புப் போராட்டத்திலா எனின், இல்லை.

இப்படி "நாங்கள்" "அவர்களின்" ஊர்களில் கூடியுண்டு வாழ்ந்தது முதல் "நாங்களும் - அவர்களும்;" எந்த வேறுபாடுமின்றி கூடி உண்டு வாழ்ந்த கதைகளை இன்று முன்வைக்கின்றனர்;. சாதிய சமூக அமைப்பில் தனிப்பட்ட அல்லது குழுவின் 'சாதிய மரபு மீறல்கள்" என்பது, வெள்ளாளிய சமூக அமைப்பின் வளர்ச்சியின் அகக்கூறு தான். சாதியம் ஓரே வடிவில் இருப்பதுமில்லை, இயங்குவதுமில்லை. பல வடிவங்களில் தன்னை தகவமைக்கின்றது. தமிழினவாதமாக, "முற்போக்காக", "மார்க்சியமாக" .. எங்கும் அது மரபு மீறல்களுடன் இயங்கக் கூடியது.

சாதிய சமூக அமைப்பில் தனிப்பட்ட அல்லது குழுவின் சமூக மீறல்களை, சுய பெருமை பீற்றும் பின்னணியில் இருந்தே இன்று அதை முன்வைக்கின்றனர். இப்படிப் பெருமை பேசும் சிந்தனைமுறை என்ன என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க: வெள்ளாளியப் பெருமைகளுக்காக "சாதி மரபு மீறல்கள்" பற்றி

ஐ.பி.துரைரத்தினம் அதிபராக இருந்த காலத்தில் தான், அதாவது 1940 இல் «யூனியன் கல்லூரி» என்ற காரணப் பெயரை யூனியன் கல்லூரி பெற்றுக் கொண்டது. அதற்காக அவர் உழைத்தார்.

தெல்லிப்பழையில் அமைந்துள்ள இக் கல்லூரிக்கு, 200 வருட வரலாறு உண்டு. 1816 நவம்பர் 9 ஆம் திகதி "பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடம்" நிறுவப்பட்டதன் மூலம், அதுவே இன்று இலங்கை வரலாற்றில், யூனியன் கல்லூரியானது ஐந்தாவது கல்லூரியாக வர ஏதுவாகியது.

வடக்கிலே முதலாவது பாடசாலையானது, ஆசியாவில் முதல் கலவன் பாடசாலையாகவும், இலங்கையில் முதலாவது மாணவர் விடுதியைக் கொண்ட பாடசாலையாகவும், வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றது.

மேலும் படிக்க: யூனியன் கல்லூரியின் அதிபரான ஐ.பி.துரைரத்தினமும் - அமெரிக்கன் மிசனும்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More