பி.இரயாகரன் - சமர்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மேலும் படிக்க: மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மேலும் படிக்க: வெள்ளாளியம் குறிப்பது எதை?

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

மேலும் படிக்க: முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

இது இயற்கையை புரிந்து கொள்ள மறுப்பதில் இருந்து ஏற்படுகின்றது. இயற்கை ஆண், பெண் வேறுபாட்டை பாலியல் சார்ந்து ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர ஆண் பெண் வேறுபாடு பற்றிய விளக்கங்கள், ஆணாதிக்கம் சார்ந்தவை. பாலியல் வேறுபாடு பெண்ணை ஆணின் அடிமையாக்கிவிடவில்லை. இயற்கை சார்ந்த பாலியல் வேறுபாடு, அதற்கே உரிய உறவு விதியைக் கூட இயற்கை சார்ந்து உருவாக்கியது. இயற்கையை மனித வராலாற்றில் பாதுகாக்காதவரை, அவை மக்கள் விரோதத் தன்மை கொண்டவை.

மேலும் படிக்க: ஒரினச்சேர்க்கை இயற்கையானவை என்ற வாதங்கள் மீது பார்ப்போம்.

வெகுஜன இயக்கங்களின் அடிப்படை என்பது, ஒடுக்கப்பட்ட பவ்வேறு வர்க்கங்களின் முரணற்ற பொதுக் கோரிக்கையை இணைக்கும் பொதுத் தளம். இது பரந்துபட்ட வெகுஜனங்கள் பங்கு கொள்ளக் கூடிய, சமூக இயக்கத்துக்கு வழிகாட்டுகின்றது. இதில் பல்வேறு கட்சிகள், சமூக இயக்கங்கங்கள் கூட முரணற்ற (இந்த) ஜனநாயகக் கோரிக்கைளுடன், தங்களை இணைத்துக் கொண்டு போராடுவதற்கான வெளியும் கூட.

அதேநேரம் அவ் வெகுஜன இயக்கத்தில் பங்கு கொள்ளும் ஒரு கட்சி கொண்டிருக்கக் கூடிய அரசியல் நிலைப்பாடுகளை உள் நுழைப்பது அல்;லது அதன் அடிப்படையில் வெகுஜன அமைப்புடன் முரண்படுவது, வெகுஜன இயக்க செயற்பாட்டையும் அதன் நோக்கத்தை அழிக்கின்ற அரசியல் முன்முயற்சியாகவே இருக்கும். ஒரு கட்சி கொண்டு இருக்கக் கூடிய உயர்ந்தபட்சத் திட்டங்களை, வெகுஜன இயக்கத்தில் தேடுவதும், அதன் அடிப்படையில் இந்த வெகுஜன இயக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குவதும் வெகுஜன இயக்கத்தின் அவசியத்தை மறுப்பதும், அந்த அரசியல் செயற்பாட்டை இல்லாதாக்குகின்ற அரசியல் முயற்சியுமாகும்.

மேலும் படிக்க: சமவுரிமை இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமே

இன்று போல் 1980 களில் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாணவர்கள் எதிர் கொண்டனர். இதன் போது 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அடங்கி, ஒடுங்கி உறைந்து கிடந்த தமிழ் சமூகம், மாணவர் போராட்டத்துடன் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பியதால், தன்னையும் கூட இணைத்துக் கொண்டது.

மேலும் படிக்க: ஒடுங்கி, ஒதுங்கி வாழ்வதா மாணவர் இயல்பு! - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

அரச பாசிசப் பயங்கரவாதம் வெலிவேரியவில் நடத்திய துப்பாக்கிச் சூடும் படுகொலையும், அரசு பற்றிய மாயையை அம்பலமாக்கி இருக்கின்றது. இந்த வகையில்

1.இன்று இலங்கையில் இருப்பது பௌத்த சிங்கள அரசும் இராணுவமும் என்ற புனித விம்பங்களையும், அதன் அடிப்படையிலான எதிர்ப்பு அரசியலையும் முழுமையாக அம்பலமாக்கி இருக்கின்றது.

2.மூலதனத்தின் சுரண்டல் செயற்பாட்டை நாட்டின் அபிவிருத்தியாகவும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் மக்களுக்கான அரசின் அர்ப்பணிப்பு என்ற போலியான மாயையும் கலைத்திருக்கின்றது.

3.சுற்றுச்சூழலில் நச்சுக் கழிவை கலப்பது தேசபக்த செயலா அல்லது இதற்கு எதிரான மக்களின் செயற்பாடு தேசபக்த செயற்பாடா என்ற கேள்வியை எழுப்பி, அரசை அம்பலமாக்கி இருக்கின்றது. அரசின் நிலை இதில் என்ன என்பதையும், அது யாருடன் நிற்கின்றது என்ற உண்மையையும் போட்டுடைத்து இருக்கின்றது.

4.மக்களை மதத்தின் பெயரால், இனத்தில் பெயரால் ... எதிரியாகவும், நண்பனாகவும் சித்தரிக்கின்ற இலங்கையின் அனைத்து அரசியல் பித்தலாட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

மேலும் படிக்க: சிங்கள இராணுவமல்ல, மக்களை ஒடுக்கும் இராணுவம்

யூலைப் படுகொலைகள் முடிந்து 30 வருடங்கள் கடந்துவிட்டது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடத்து 4 வருடங்கள் கடந்துவிட்டது. இதற்குள் இனம் மதம் கடந்த  எத்தனையோ படுகொலைகளும், மனித அவலங்களும். நீதி மறுக்கப்பட்ட இனவாத சமூக அமைப்பில், உளவியல் அவலங்களுடன் மனிதன் நடைப்பிணமாகவே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றான். இன்னமும் இன மத மோதல்கள் அரசால் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. இதனால் பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் இனங்கள் இன ரீதியாக சிந்திப்பதும், செயற்படுவதும் தொடருகின்றது. சிந்தனை செயல் தொடங்கி, வாக்குப் போடுவது வரை, அரசின் இன மத வாதத்திற்கு எதிரான அரசியலாகவே இருக்கின்றது. இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் எதார்த்தம்;. புலம்பெயர் சமூகமே, புலிகளின் கனவுலகில் வாழ்ந்தபடி முடிவுகளை இலங்கையில் வாழும் மக்கள் மேல் திணிக்க முனைகின்றது.

மேலும் படிக்க: இலங்கை அரசியலும் புலம்பெயர் சமூகமும்

பல வருடங்களாக எந்த நீதி விசாரணைகளுமின்றி அடைத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பேரினவாத அரசும், தமிழ் தேசியமும் கண்டுகொள்வது கிடையாது. இன்று குறைந்தபட்சம் 17 சிறைகளில், 954 பேர் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதில் 40 பேர் மட்டுமே தண்டனை பெற்றவர்கள். மிகுதி அனைவரும் நீண்ட பல வருடமாக விசாரணைகள் எதுவுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இனப்பிரச்சனைக்கான தீர்வு போல் தான், கைதிகள் விவகாரமும். பேரினவாத அரச நிர்வாகத்தின் கீழ் சட்டவிரோதமாக சிறைகளில் அடைத்து வைத்திருக்கும் அதே நேரம், இவர்களை தீண்டத்தகாதவராகவே தமிழ் தேசியம் அணுகுகின்றது.

மேலும் படிக்க: இலங்கை சிறைகளும் தமிழ் அரசியல் கைதிகளும்

சாதி வெறியார்களின் பயங்கரவாதம் இளவரசனைக் கொன்று இருக்கிறது. திவியா நடைப்பிணமாகப்பட்டு இருக்கின்றாள.; தன் தந்தை போல், தன் காதலன் போல், நாளை அவளும் கூடக் கொல்லப்படலாம். அவர்கள் தங்கள் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை சாதியம் தடுத்து நிறுத்தி இருக்கின்றது. தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மாணிக்க முடியாதவாறும், மரணித்து போகுமாறு சாதிய வக்கிரமும், சாதியப் பயங்கரவாதமும் கோரியிருக்கின்றது.

மேலும் படிக்க: சாதிய பயங்கரவாதத்துக்கு பலியானது இளவரசன் மட்டுமல்ல காதலும் தான்

இலங்கையில் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணங்களும், அதன் சமூக விளைவுகளும் பாரியது. மின் பாவனையாளர்களின் அன்றாட பயன்பாட்டை மட்டுமல்ல, இலங்கையில் தேசிய உற்பத்தியை இது தகர்த்து விடுகின்றது. உள்ளுர் உற்பத்தி சார்ந்த தேசிய பொருளாதாரத்தின் மீது பொது நெருக்கட்டியை உருவாக்கி அதை அழிக்கவும், உலக பொருளாதாரம் தன் பொது நெருக்கடியில் இருந்து மீளவும் திணிக்கப்பட்டது தான் இந்த மின்கட்டண அதிகரிப்பு. உலகம் முழுக்க கடன் கொடுக்கும் வங்கிகளும், நாடுகளும், இதைத்தான் தங்கள் கொள்கையாகக் கொண்டு உலகெங்கும் செயற்படுகின்றன.

அன்றாட மின்சாரத்தின் பாவனையில் கட்டண அதிகரிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு நேரடியானது. மறைமுக பாதிப்பு தான் மிக மிக அதிகமானது. அன்றாட உள்ளுர் உற்பத்தி சார்ந்த பொருள் பயன்பாடுகள் அனைத்தும், பெரும்பாலும் மின்சாரத்துடன் தொடர்புடையது. பொருள் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் கூட மின்சாரத்துடன் தொடர்புடையது. இதனால் மின்கட்டண அதிகாரிப்பு, உள்ளுர் உற்பத்திக்கான செலவை அபரிதமாக அதிகரிக்க வைத்துள்ளது.

மேலும் படிக்க: மின் கட்டண உயர்வு, யாருடைய நலனுக்கானது!

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More