குளோபல் பார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை! ஒத்தூதும் தமிழக அரசு !!
ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கிவரும் குளோபல் பார்மாடெக் எனும் ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் என சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாகத் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது, இந்நிறுவனம். பல்வேறு சங்கங்களில் திரண்டு நீண்டகாலமாகப் போராடியும் பலனில்லாத நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம் என்ற பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கத்தில் சங்கத்தில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அணிதிரண்டு, ஊதிய உயர்வு கோரியும் நிர்வாகத்தின் அடக்குமுறை பழிவாங்கலுக்கு எதிராகவும் போர்க்குணத்துடன் போராடி வருகின்றனர்.