01242021ஞா
Last updateச, 16 ஜன 2021 11am

தமிழ் மக்களையே குதறித் தின்னும் குள்ளநரி

எல்லாம் வெளிச்சத்துக்கு வருகின்றன. ஏகாதிபத்தியதுடனும் பேரினவாதத்துடன் சேர்ந்து தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மீட்கப் புறப்பட்ட ஆனந்தசங்கரி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் குள்ளநரியாகி தமிழ் மக்களையே குதற ஆரம்பித்துள்ளார்.


கிழக்குப் பாசிட்டுகள், வடக்கைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கு விடுத்த படுகொலை மிரட்டல்

கருணா தலைமையிலான பாசிச கும்பல், கிழக்கில் புதிய கொலைக்களத்தை உருவாக்கி வருகின்றது. பேரினவாதிகளின் கூலிக்கும்பலாகவே மாரடிக்கும் இந்தக் கும்பல், தமது அரசியல் நக்குண்ணித்தனத்தை, வடக்கு மக்களுக்கு எதிராக வெளிப்படுத்துகின்றது.

தமிழ் மக்களுக்கு எதிரான இரண்டு துரோகக் கும்பல்கள்

தமிழ் மக்களின் முதன்மை எதிரியான சிங்களப் பேரினவாதம், தமிழ் இனத்தின் இருப்புக்கே வேட்டுவைக்கின்றது. அதை வெறுமனே புலிப் பயங்கரவாதமாக காட்டுகின்றது. தமிழ் இனத்துக்கு எந்த அரசியல் உரிமையும்

அரசு சாராத அமைப்புகள் யுத்தத்துக்கு துணைபோகும் கிரிமினல்களே

அரசுசாராத அமைப்புக்கள் எப்படிப்பட்ட யுத்த கிரிமினல்கள் என்பதற்கு, இலங்கை யுத்தம் சிறப்பான எடுத்துக்காட்டாகி வருகின்றது. மனித விரோத யுத்தத்தை நடத்துபவன் மட்டுமல்ல, அதற்கு துணையாக அதன் பின்னணி தளத்தில் செயற்படுபவனும் குற்றவாளி தான்.

புலம்பெயர் சமூகத்தில் தொடர்ச்சியாக நடக்கும் வாள் வெட்டுகள் கோடாலி கொத்துகள்

தமிழ் சமூகத்தினை நாடி பிடித்து பார்க்கும் அளவுக்கு, இதன் விளைவு வக்கிரமாகவே வெளிப்படுகின்றது. ஒரு மனிதனை கோடாலி கொண்டு கொத்தவும், வாள் கொண்டு கண்ட துண்டமாக வெட்டவும் முடியும் என்பதை, தமிழ் சமூகம் மீண்டும் மீண்டும் தனது சொந்த வாழ்வியலில் நிறுவி வருகின்றது.