01242021ஞா
Last updateச, 16 ஜன 2021 11am

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?

புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுயவிமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர்.


தமிழன் என்றால் எதிரியா? தமிழன் என்றால் புலியா?

இப்படித்தான் குரூரமாக பேரினவாதம் கருதுகின்றது. தமிழன் என்ற அடையாளத்தின் மேல் பாய்கின்றது. இதில் அது சாதி பார்ப்பதில்லை. பால் பார்ப்பதில்லை, பிரதேச வேறுபாடு பார்பதில்லை. வர்க்க அiடாளம் கூட பார்ப்பதில்லை. தமிழைப் பேசுவதால் தமிழனாக பார்க்கின்றது. அதனால் ஒடுக்குகின்றது.

தமிழ் தேசியம் என்பது வேறு, புலித்தேசியம் என்பது வேறு

புலியெதிர்ப்போ இதை ஒன்றாகவே பார்க்கின்றது. புலிகளும் கூட இதை ஒன்றாகவே காட்டுகின்றனர். மார்க்சியவாதிகள் இதை வேறுவேறாக காண்கின்றனர். இதனால் மட்டும் தான், மார்க்சியவாதிகள் மக்களைச் சாhந்து நிற்க முடிகின்றது.

தமிழ் தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமல்ல

தேசியம் என்பது தமிழன் ஒருவன் ஆளும் போராட்டமாக வரையறுப்பது தான், போராட்டம் பற்றி புலி மற்றும் புலியெதிர்ப்பு தரப்பின் மனிதவிரோத கூறுகளுக்கான அடிப்படையாக உள்ளது. இதனாலேயே மனிதர்கள் தங்களைத்தாமே ஆள்வதற்கும், தமது சமூகத் தேவைகளை அடிப்படையாக கொண்ட போராட்டமாக தேசியத்தை காண மறுப்பதும், இன்று அரசியல் எதார்த்தமாகவுள்ளது.

தவறாக வழிநடத்தப்படும் போராட்டம் தோற்கடிக்கப்படும்

மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது மனித வரலாறு. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டம் என்பது மறுக்கப்பட்டு, அது சிலருக்கான சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது, அது தோற்கடிக்கப்படுகின்றது.