01182021தி
Last updateச, 16 ஜன 2021 11am

ஏகாதிபத்தியங்களும் புலிகளும்

book _4.jpgபுலிகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான அரசியல் பொருளாதார உறவு என்பது, இனவாத அரசு கையாளும் உறவுக்கு முரணானது அல்ல. உலகமயமாதல் நிகழ்ச்சியில் அக்கம்பக்கமாக, வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் ஒருவரையொருவர் தூக்கிவிடும் கொள்கையையே புலிகளும், இனவாதச் சிங்கள அரசும் கைக்கொள்கின்றன. இவர்களுக்கு இடையில் அடிப்படையில் என்ன முரண்பாடு உண்டு? தமிழனை அடக்கியாண்டு உலகமயமாக்கத்துக்கு மேலும் விசுவாசமாக யார் இருப்பது என்பதே. இந்த  இடத்தில் ஏகாதிபத்தியம் தனக்கு விசுவசமான இந்த இரண்டு நாய்களையும் எப்படி சமாதானப்படுத்தி, ஒரேவீட்டில் காவல் காக்க வைக்கலாம் என்ற தனது நரித்தனத்தற்காக சமாதானம் அமைதி என்று கூறி ஒற்றுமைப்படுத்தும் களத்தில் இறங்கியுள்ளன. கடந்த இரண்டு வருடத்துக்கும் அதிகமாக நடக்கும் இழுபறியான நீடித்த நிகழ்ச்சி நிரலில், ஏகாதிபத்திய நலனைக் கடந்து வெளியில் எதுவும் நடக்கவில்லை.


வக்கரித்த அரசியலும், ஏகப்பிரதிநிதிக் கோட்பாடும்

book _4.jpgபுலிகள் தம்மைத் தாம் ஏகப்பிரதிநிதியாக்க, இயக்கம் தொடங்கியது முதலே தணியாத தாகமாகக் கொண்டே அலைகின்றனர். படுகொலை அரசியல் மூலம் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக இருக்க, கடந்த 25 வருடமாக எடுத்த எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. அவை அனைத்தும் தோல்வி மேல் தோல்வியாகவே முடிந்தது. சில ஆயிரம் பேரைப் படுகொலை செய்த இரத்த வேள்வியால் கூட, ஏகப்பிரதிநிதித்துவக் கோட்பாட்டு அரசியல் தோல்வியேபெற்றது. மாறாக இதற்கு எதிரான குழுக்கள், கட்சிகள் இரத்த வேள்வியின் தொடர்ச்சியிலும் பிறப்பெடுத்தது. எதிரி இதைத் தனக்குச் சாதகமாக்கி தனக்கான குழுக்களை உருவாக்கும் கொள்கைக்கு, புலிகளது ஏகப்பிரநிதித்துவ அழித்தொழிப்புக் கொள்கை உதவத் தொடங்கியது. தொடர் படுகொலைகள் மூலம் ஒழித்துக்கட்டும் இராணுவ அரசியல், படுதோல்வி அடைந்ததைத் தவிர எதையும் சாதிக்கவில்லை. இதை உலகளவில் உள்ள மக்களின் அனைத்து எதிரிகளும் பயன்படுத்திக் கொண்டனர், கொள்கின்றனர். தமிழ் மக்களை அடக்கியொடுக்கக் கூடிய எந்த ஒரு நிலையிலும், ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுக் குழுக்களைப் புலிகள் ஏகாதிபத்திய நலனுக்கு இசைவாக உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

புரிந்துணர்வில் நேர்மை என்பது வக்கிரமாகவே அரங்கேறுகின்றது

book _4.jpgபுரிந்துணர்வு ஒப்பந்தத்தை புலிகள் கையெழுத்திட்ட நிலையில், அதை அவர்கள் கடைப்பிடிப்பதில் உள்ள நேர்மை வழமை போல் சந்திக்கு வருகின்றது. இதன் மூலம் சர்வதேச அழுத்தத்தை வலிய உருவாக்கியதுடன், அதை சொந்தக் கழுத்தில் கைவைக்கும் அளவுக்கு பலதடவை உலக ஏகாதிபத்தியங்களை இலங்கைப் பிரச்சினையில் தலையிட வைத்தன. வழமை போல் மக்களின் பெயரால், இனம் தெரியாத நபர்களின் பெயரால், முகவரியற்ற அமைப்புகளின் பெயரால், மூன்றாவது குழுவின் பெயரால் பல நூறு சம்பவங்கள் நடத்தினர். மோதல்கள்;, படுகொலைகள் என்று தொடரும் ஒவ்வொரு முரண்பாடும், புலிகளால் யுத்தத்திலிருந்து மீண்டு விட விரும்பும் முடிவுக்கு சென்று விட முடியவில்லை. மாறாக யுத்தத்துக்குள், மீண்டு விட முடியாத புதைகுழியில் புதைந்து செல்வதையே ஆழமாக்கியது.

வக்கற்ற அரசியல் புதைகுழியில் புலிகள்

book _4.jpgபுலிகளின் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து கடுமையான தொடர்ச்சியான சில நெருக்கடிகளை, சமாதானம் மற்றும் அமைதி மீது ஏற்படுத்தியது. இந்தக் கப்பல்கள் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றி இறக்குவது தெரிந்ததே. ஆனால் பிரபாகரன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இதைத் தடுக்கின்ற போதும், இதை அடிக்கடி அவர்களே மீறினர். 

முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையும், அதற்கு அடிப்படை புலிகளின் வரி விதிப்பும்!

book _4.jpgகிழக்கில் அன்றாடம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான புலிகளின் வரி விதிப்பு பதற்றத்தை உருவாக்கின்றது. புலிகள் கேட்பதைக் கொடுக்கத் தயாரற்றவர்கள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்படுகின்றனர். இனம் காணப்படும் நபர்கள் மேலான குண்டு வீச்சுகள், பொருட்கள் மீதான குண்டு வீச்சுகள், தீர்த்துக் கட்டுதல், இனம் காணப்பட்ட நபர்களை கடத்திச் செல்லல், பொருட்களைக் கடத்துதல் என்று புலிகளின் அன்றாட நிகழ்வுகள் மேலான பதற்றத்தின் முடிவும், சமூகம் மேலான வன்முறையாகின்றது. வழமை போல் புலிகள் இதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று வெள்ளையாகவே அறிக்கை விட்டபோதும் உண்மை இதற்கு நேர்மாறானது.