10012020Thu
Last updateMon, 28 Sep 2020 8pm

மெய்நிகரது மேன்மை : விடுதலையெனுங் கருத்தால் விடு பேயர்களாக்கப்பட்ட தமிழினம்

சிவசேகரம் குறித்துத் தமிழரங்கத்தில்-இனியொருவில்பின்னூட்டு இடுபவர்கள்- கருத்தாடுபவர்கள் மிக நீண்ட புலியினது அரசியற் பாத்திரத்தை மிக இலகுவான தெரிவுகளோடு விவாதிக்கின்றனர். விட்டால்,புலியை ஸ்ரீரங்கனா அழித்ததெனக் குதர்க்கஞ் செய்கின்றனர்.இதுவரையான புலிவழித் தேசியப் போராட்டமானது தகவமைத்த அரசியலானது ஒரு தலைமுறையையே பாழடித்துக்கொண்டது மட்டுமல்ல அத்தத் தலைமுறையில் எஞ்சியவர்களையே"காயடித்து"தன் முனைப்புடைய நபர்களாக்கி விட்டுள்ளது.


இனியொரு திசையில்சிவசேகரம்கவிமழை பொழிய...

 

"முற்றத்து வாழை குலையீன
முத்தனும் பெண்டிலுங் கூத்தாட"னியொரு இணையத்தின் அரசியல்இளித்த வாயர்களுக்கானதா, இல்லை,மக்களது அவலத்தைப் போக்குவதற்கானதாவென நான் எனக்குள் புரிய முனைகிறேன்.எல்லாம், சிவசேகரம் அவர்களது கவிமழைப் பொழிவினது காரணகாரியத் தொடர்ச்சியின் வினைதாம்.

இன்றைய காலத்தில் எவரது கருத்தையும் "எங்கேயும்" தடை செய்ய முடியாது!இவ்வளவு வளர்ச்சியடைத்த தகவற் தொழிற்நுட்பப் புரட்சியில் கரையொதுங்கியுள்ள இன்றைய தகவற் பரிமாற்றத்தைப் புரியாதவர்கள், புரட்சியை கட்டி வளர்ப்பதென்பது எந்தவுலகத்திலிருந்தென்றுதாம் எனக்குப் புரியவில்லை!

முள்ளி வாய்க்காலைப் பிரபலப்படுத்திய கொலைக்களம்

டந்த வருடம் 15.05.09 இல் இருந்து 18.05.09 வரையான ஏதோவொரு தினத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட அவரைக்குறித்துத் தமிழ்மக்கள் இன்னும் உயிர்வாழ்வதெனக்கொள்ளும் பரப்புரைகளைப் புலத்துப் புலிகள் செய்ய முனைவதில் நாளை மீளவொரு ஈழத்தைக் காணலாம்.

நாடு கடத்தப்பட்ட தமிழீழமும், ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:கருத்தின்பால் காரணந் தேடுதல்!

வீழ்த்தப்பட்ட பிரபாகரனும்,கற்பனைத் தமிழீழமும் சுடுகாட்டுக்குப் போயினும் புலத்தப் புரட்சிப் புலிகளோ, புதுப் புதுத் தொனிகளில் ஊடகங்களை ஆக்கிரமித்தும்,காட்சிவழிக் கருத்தாடல்களின் துணையுடன் மக்களை முட்டாளாக்குவதில் இந்தப்புலத்துப் பினாமிப் புலிகளது தவிப்போ பெருந்தொல்லையாகும்.

புரட்சிகரச்சக்தியாக நடிக்கும் …ஒடுக்குமுறையாளர்களது உறுப்புகள்.

„குருதியின் உலர்ந்த கறை கண்களில் பட்டு
கொடிய நெடிலாக மூக்கைத் துளைக்கும்போதும்
மரணத்தின் நீண்ட வலி நெஞ்சைப் பிழிந்த போதும்
தத்தம் வீடுகளில் இவையெட்டாதவரை
தேசமே விருப்புறுதியாகி
இவையனைத்தும் தியாகமென மெட்டமைத்துப் பாடப்பட்டது!