09222023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm
அதிகம் வாசிக்கப்பட்டவை

ஒடுக்கியவரின் வரலாறும் – ஒடுக்கப்பட்டவரின் வரலாறும்

நியூட்டன் மரியநாயகம்

வரலாற்றுப் புரிதலும் நானும்

“இன்று சமூகத்தில் ஆளுமை /ஆதிக்கம் செலுத்தும் கடந்த காலம் பற்றிய கதைகளையும், அது சார்ந்த, ஆதிக்க சக்திகளின் வரலாற்று உருவங்களையும்/ வேடங்களையும்/ பாத்திரங்களையும், கலையின் குரூரமான பக்கங்களையும் அம்பலப்படுத்தி – ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறை வெளிக்கொணர்வதே உண்மையான வரலாற்றுப் பதிவாளனின் கடைமையாகும்…”

இந்த வரிகள் பல வருடங்களுக்கு முன் எங்கோ வாசித்ததாக நினைவு. இந்த வரிகள் வரலாற்றைப் பதிவதை “தொழிலாக” கொண்ட ஒருவரின் கடைமையைப் பற்றியே சொல்லப் படுகிறதென்பதே எனது விளக்கம். இந்த வகையில் நான் தொழில் முறை சார் வரலாற்று ஆய்வாளன் அல்லன்.


இலங்கை வடக்கில் வாழும் வறிய மீனவர்கள் கடல் அட்டைப் பண்ணைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பற்றி பேசுகின்றனர்.

இன்று வடக்கின் கடல்வளம் பற்றி தனிமனிதர்களாக பேசுவது உயிராபத்தான, தனிமனித பாதுகாப்பு இல்லா நிலையை ஏற்படுத்தும் நிலையுள்ளது. அதேவேளை, யாராவது இதைப் பேசியே ஆகவேண்டியும் உள்ளது. அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து, சுயதேவைக்காக “சுயநலனுக்காக மேலோட்டமாக அரசியல் செய்வதை விடுத்து, எல்லோரும் கடலின் அவலநிலையைப் பேசவேண்டும்” என்பதனையும் கூறி கொண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலக இணையத்தில் 01.11.2021 இல் வெளியான இக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி நன்றியுடன் பிரசுரிக்கின்றோம்.

வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தனியார் மற்றும் சீன முதலீடுகள் மூலம் அமைக்கப்பட்டு வரும் கடல் அட்டைப் பண்ணைகளால் இந்தப் பிரதேசங்களில் சிறு கடற்தொழில்களில் ஈடுபடும் குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை தேடுவதில் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.

"பிறகு" - With you , without you - திரையிடலைத் தடுத்து நிறுத்திய தமிழினவாதிகள்.

இப்படத்தை தமிழ் நாட்டில் வெளியிட முயற்சிகள் வெற்றியடைந்து சில காட்சிகள் சென்னையில் நடைபெற்றது. ஆனாலும் - தமிழ் இனவாத சக்திகள் இப்படத்தை சிங்களப் படம் என்று கூறி திரையிட்ட அரங்கங்களுக்கு கொலை மிரட்டல், தீ வைப்பதான மிரட்டல்கள் மூலம் திரையிடுவதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.


தமிழ் நாட்டின் முற்போக்கு இயக்கங்கள், தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டோர், மேற்படி இனவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வரவுமில்ல. அதற்கு அவர்களுக்கு திடனுமில்லை. மாறாக, இனவாதிகளுக்கு எதிரானவர்கள் எனத் தம்மைக் காட்டிக் கொள்ளும் சிலர் சென்னையில் இருந்து கொண்டு, எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றுகின்றனர். கண்டது, நிண்டதுக்கெல்லாம் தமிழ் நாட்டு இலக்கிய வாதிகளுடன் இணைந்து அறிக்கை விடும் கும்பல்கள் இப்போ எங்கே போனது!

கனவுலகிலிருந்து நனவுலகிற்கு! அதைப்பற்றிப் பேசுவோம்!

இந்நாட்களில் பிரபலமான தொனிப்பொருள் எது?

சமீபகாலமாக நாட்டில் பேசப்பட்ட தொனிப்பொருட்களில் முக்கிய இடத்தை வகித்தது போதைப் பொருள் பாவனை. நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்யும் பொது வேட்பாளர் குறித்த பிரச்சினை. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சி கொண்டு வந்தாலும், அதையும் கடந்து, அதிகாரமாற்றம், ஆட்சிமாற்றம் குறித்துப் பேச்சுக்களும் அடிபடுகின்றன. சிலர் அதற்காக பொதுவேட்பாளரைத் தேடுகின்றனர். இவற்றுக்கிடையில் எந்த வித்தி;யாசமுமில்லை.

போதைப் பொருளுக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்குமிடையில் எந்த மாற்றமும் கிடையாது?

தேசியம் கொலை செய்யும்

அய்ரோப்பாவில் நிலபிரபுத்துவ பொருளாதார முறையின் கீழ் அரசுகள் இருந்தன. நாடு, தேசம் என்ற ஒன்று அந்த பொருளாதார முறையின் கீழ் இருக்கவில்லை. அரசுகள் ஒன்றுடன் ஒன்று போர் செய்தன. மக்கள் பெரும் நிலப்பிரபுக்களின் விவசாய பண்ணைகளில் அடிமைகளாக இருந்தனர். நிலப்பிரபுக்களின் நிலங்களில் வேலை செய்தனர். நிலப்பிரபுக்களிற்கு சொந்தமான வீடுகளில் வசித்தனர். கத்தோலிக்க திருச்சபை, பால சிங்கமும் பசுவின் கன்றும் பக்கம் பக்கம் நின்று நீர் பருகும் காலம் வரும். அதுவரை ஒரு கன்னத்தில் அடித்தால் மறுபேச்சின்றி மற்றக்கன்னத்தை காட்டுங்கள் என்று நிலப்பிரபுக்களின் அடக்குமுறைகளிற்கு, பொருளாதார சுரண்டல்களிற்கு பணிந்து போகச் சொல்லி மூளைச்சலவை செய்தது.

லலித் மற்றும் குகனை இராணுவ புலனாய்வாளர்களே கடத்தினர்! நீதிமன்றில் சாட்சியம்

முதலில் இடம் பெற்ற அரச சட்டத்தரணிகளின் குறுக்கு விசாரணையின் போது, மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களான லலித் மற்றும் குகன் கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கில் ஊடக துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெலவையும் சாட்சியாக பதியுமாறு முறைபாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகே மன்றில் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் இருவரும் கடத்தப்பட்டுள்ளதாக முதலில் செய்தி வெளியிட்டுள்ள தனியார் ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் இருவரையும் சாட்சிகளாக பதியுமாறும் கோரிநின்றார். அதேவேளை, அவ்விருவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல தகவல் வெளியிட்டுள்ளார் என்பதனால் அவரையும் சாட்சியாக பதியுமாறு சட்டத்தரணி கோரி நின்றார்.

லண்டன் வானொலியில் சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும்

FIRSTAUDIO.NET இணைய வானொலியில், காற்றலையின் அனுமதியோடு, "சம உரிமை இயக்கம்" பற்றிய அறிமுகமும்  அதன் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும் நிகழவுள்ளது. புதிய திசைகள்  பாலன் அவர்கள் இந்த சந்திப்பை நடத்தவுள்ளார்.

இந்நிகழ்வில் ஜரோப்பிய சமவுரிமை இயக்க உறுப்பினர்களுடன், இலங்கையிலிருந்து தோழர் பழ.ரிச்சார்ட் (இணை ஏற்ப்பாட்டாளர், சமஉரிமை இயக்கம்) மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாட்டின் முதலாவது நிறைபேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பொது வேலைத் திட்டம்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 5வது அனைத்து இலங்கை மாநாட்டின் முதலாவது நிறைபேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பொது வேலைத் திட்டம்

23.07.2011 கொழும்பு

1. இலங்கை ஒரு நவ கொலனித்துவ நாடாகும். அதற்குரிய பொருளாதார அரசியல் சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பானது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனைப் பாதுகாக்கும் வகையில் நிலவுடைமை முதலாளித்துவக் கருத்தியல், சிந்தனை, நடைமுறைகளைக் கொண்ட ஆளும் வர்க்கம் பலமுடையதாகக் காணப்படுகிறது. அதுவே இலங்கையின் தரகு- பெரு முதலாளித்துவமாக ஆட்சியதிகாரத்தைக் கொண்டதாகக் காணப்படுகிறது. அதன் காரணமாக வர்க்கம், இனம், சாதி, பெண்கள் ஆகிய நான்கு தளங்களில் முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் நீடித்து நிலைத்தும் வருகின்றன. இவற்றில் வர்க்க முரண்பாடு அடிப்படையானதாகவும் இன முரண்பாடு பிரதானமானதாகவும் இருந்து வருகின்றன. அடிப்படை முரண்பாடு காரணமாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய இனங்கள், பெண்கள், அரசாங்க- தனியார் துறை ஊழியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 90 சதவீதத்தினரான சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் என்போர் சுரண்டப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அதே வேளை தரகு- பெரு முதலாளித்துவ சக்திகள், சொத்து சுகம் உடையோர், அந்நிய ஏகாதிபத்திய பல்தேசியக் கம்பனிகள், இவர்களுடன் கைகோர்த்து நிற்கும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோர் சுரண்டுவோராக இருந்து வருகின்றனர். அவர்களது ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளே ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமாம்.

 

தமிழ்சேக்கிள் இணையம் மீதான தாக்குதல்

ஞாயிறு காலை முதல் தமிழ்சேக்கிள் முற்றாக முடக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால்களுக்கு பின்பாக இந்த இணையத்தளத்தை முடக்குவதில், அதைக் கைப்பற்றி அழிப்பதற்கும் பெருமெடுப்பிலான பாரிய முயற்சி நடந்து இருப்பது இன்று அம்பலமாகியுள்ளது.

அதற்கான முயற்சியில் ஈடுபட்ட கம்பியூட்டர் இலக்கம் (ஐபி இலக்கம்) மூலம் எந்த நாட்டில் இருந்து, எந்த திகதிகளில் என்ற விபரம் அடங்கிய பட்டியலை இதில் இணைத்துள்ளோம். அதை அடையாளம் காணவும், இனம் காணவும், இது உதவும்.

 


உட்பிரிவுகள்

கட்டுரையாளர்களின் அண்மைய இடுகைகள்

உரைகள் -பாடல்கள் -நாட்டுப்பாடல்கள்

Categories Accordion
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
...
  • «
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • »
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
சொற்பொழிவுகள்-இலங்கை(ஒலி)
  • «
  • 1
  • 2
  • »
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
நாட்டுப்பாடல்கள் (ஒலி)
Hits: 5275
17 September 2008
Hits: 5539
17 September 2008
Hits: 6269
17 September 2008
Hits: 5590
17 September 2008
Hits: 5698
17 September 2008
Hits: 5379
17 September 2008
Hits: 6992
17 September 2008
  • «
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • »
cache/resized/fbe1b4bac2166c46196b840039e2aa05.jpg
பாடல்கள்(ஒலி)
  • «
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • »