07262021தி
Last updateசெ, 20 ஜூலை 2021 1pm

என்னையே குற்றவாளி ஆக்கி அவமானப்டுபடுத்தினார்கள்-கொற்றவை

என் குழந்தை பருவத்திலிருந்து நான் கடைசியாக இந்த வேலையே வேணாம் “மானத்தோட” பொழைச்சா போதும் என்று முடிவெடுத்து என் வேலையை ராஜினாமா செய்த 42,43 வயது வரை நான் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டே தான் இருந்தேன். (வேலையிடத்தில் நீ கொற்றவையா என்றா பார்க்கப் போகிறார்கள்? அங்கு நான் வெறும் கூலிக்கு என் உழைப்புச் சக்தியை விற்க வந்த ஒரு பண்டம்… அவ்வளவே).
 
எனக்கு 10,11 வயது இருக்கும் போது என் நெருங்கிய உறவினர் ஒருவரால் நான் மிகவும் மோசமான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். அந்த உறவினரை நான் திருமணத்திற்கு அழைக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்தேன். காரணம் “உறவுகளை” விட்டுக்கொடுக்க இயலாது என்னும் “குடும்ப விதி”.
அம்மா அப்பா கடுமையான உழைப்பாளிகள். படிப்பு சொல்லிக் கொடுக்க நேரமில்லை. 13 வயது வரை நான் அவர்கள் வீட்டிலிருந்து படிக்க வேண்டிய நிலை! ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் போக இயலாது என்று சொல்லி நின்று விட்டேன் . அந்தாளுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு காரணத்தினால் வன்மம் பெருகியது . ஒரு கட்டத்தில் என்னை “தேவடியா” என்று திட்டி ஃபோனை வைத்தான்.
 
என் திருமணத்திற்கு வந்த அந்த ஆளை நான் மதிக்கவில்லை என்பதால் என் திருமணத்தின் போது அவரின் மனைவி பெரிய தகராறு செய்தார். 24 வயது அப்போது. உண்மையான காரணத்தை அப்போதும் என்னால் சொல்ல இயலவில்லை. அதற்கு பதிலாக அவர் என்னை வசைபாடினார்.. தப்பாக பேசினார் என்று சொல்லி சமாளித்தேன்.

இந்திய தா - காதரீன் மேயோமா

காதரீன் மேயோ எழுதிய இந்திய மாதா என்ற புத்தகம் 1928 இல் வெளியிடப்பட்டது. அமெரிக்கப் பெண்மணியான அவர் இந்தியாவை சுற்றிப் பார்த்து , தான் பார்த்ததையும் , கேட்டதையும் புத்தகமாய் எழுதி வெளியிட்டார். இந்தியத் துணைக்கண்டத்தின் பார்ப்பனிய முகத்தை புத்தகம் தொட்டுக் காட்டியதால் உலகம் அதிர்ச்சியுற்றது. அதில் அப்போது நடப்பில் இருந்த மகப்பேறு முறைகள் குறித்து அறியும் போது யாராலும் அதிர்ச்சியுறாமல் இருக்க முடியாது.

அறம்

தோழர் ஏசு சிலுவையில் அறையபடுவதற்க்காக இழுத்துச் செல்லப்படுகிறார். அந்த காட்சியை பார்த்த ஜெருசலேமின் பெண்கள் கண்ணீர் சிந்தி அழுகின்றனர். அப்பொழுது தோழர் ஏசு அவர்களை பார்த்து " நீங்கள் எனக்காக அழவேண்டாம், மாறாக உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" என்றார்.

கிறிஸ்தவ மதத்தில் இதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும் என்னை பொறுத்தவரை ஒரே அர்த்தம்தான். ஏசு பெண்களை நம்பினார். சமூகநீதிக்கு பெண்களால் மட்டுமே எந்த வித பாரபட்சமில்லாமல் தைரியமாகவும், தெளிவாகவும் போராட முடியும் என்பதுதான் அவரின் கூற்று.

சாதி ஒழிப்பு போராளி தங்கை கௌசல்யா - 2016-ல் அளித்த போட்டி..?

என் பெயர் கௌசல்யா. எனக்கு வயது 19. என்னுடைய பெற்றோர் சின்னசாமி – அன்னலெட்சுமி. உடன்பிறந்த தம்பி ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் கௌதம். நாங்கள் பிரமலை கள்ளர் சாதியை சேர்ந்தவர்கள். என் அப்பாவின் பூர்வீகம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம். அம்மாவின் பூர்வீகம் குப்பன்பாளையம். நாங்கள் குடியிருக்கும் பழனிக்கு அருகில் உள்ளது. என் அப்பா டிராவல்ஸ் நடத்தி வருகிறார். வட்டி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். என் குடும்பத்தினர் என் மீது உயிராக இருந்தனர். அவர்களுக்கு நான் செல்ல மகள். எது கேட்டாலும் என் அப்பா வாங்கிக் கொடுப்பார்.

அறம்

தோழர் ஏசு சிலுவையில் அறையபடுவதற்க்காக இழுத்துச் செல்லப்படுகிறார். அந்த காட்சியை பார்த்த ஜெருசலேமின் பெண்கள் கண்ணீர் சிந்தி அழுகின்றனர். அப்பொழுது தோழர் ஏசு அவர்களை பார்த்து " நீங்கள் எனக்காக அழவேண்டாம், மாறாக உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்" என்றார்.

கிறிஸ்தவ மதத்தில் இதற்கு பல அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும் என்னை பொறுத்தவரை ஒரே அர்த்தம்தான். ஏசு பெண்களை நம்பினார். சமூகநீதிக்கு பெண்களால் மட்டுமே எந்த வித பாரபட்சமில்லாமல் தைரியமாகவும், தெளிவாகவும் போராட முடியும் என்பதுதான் அவரின் கூற்று.